32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 33 / 34
செய்திகள் வரிசை (பக்கம் 33)
கோப்ரா விமர்சனம் இது புதிது

கோப்ரா விமர்சனம்

டார்கெட்டைக் குறி வைத்துவிட்டால், அதற்காக எவ்வாறாயினும் உருமாறி, கணித ஞானத்தைக் கொண்டு இலக்கைக் கச்சிதமாகத் தாக்கும் கான்ட்ராக்ட் கொலையாளிக்கு ‘கோப்ரா’ எனக் காரணப் பெயர் சூட்டப்படுகிறது. அதி ரகசியமாகச் செயற்படும் கோப்ராவின் திட்டங்கள் ஒரு ஹேக்கரால் இன்டர்போலுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. யார் அந்த ஹேக்கர், ஹேக்கருக்கும் கோப்ராவிற்கும் இடையே என்ன பிரச்சனை, ஹேக்கர் – கோப்ரா இருவரையும் ஏன் தொழிலதிபர் வேட்டையாட நினைக்கிறான் போன்ற கேள்விகளுக்கான பதிலே படத்தின் முடிவு. படத்தில் மூன்று கதாநாயகிகள். பாடல் காட்சிகளுக்கென்று நேர்ந்து […]

31/08/2022 Dinesh R
இறைவி – 5 ஆம் ஆண்டு விழா இது புதிது

இறைவி – 5 ஆம் ஆண்டு விழா

சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது. […]

27/08/2022 Dinesh R
டைரி விமர்சனம் இது புதிது

டைரி விமர்சனம்

டி-பிளாக், தேஜாவு போன்ற த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, ஒரு சூப்பர் நேட்சுரல் த்ரில்லரில் நடித்துள்ளார் அருள்நிதி. பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை – கொள்ளைச் சம்பவத்தை விசாரிக்க ஊட்டி வருகிறார் உதவி ஆய்வாளர் பயிற்சியில் இருக்கும் வரதன். வழக்கு சம்பந்தமாக மிகச் சிறிய துப்பு கிடைக்கும் பொழுது, அவரது கார் காணாமல் போகிறது. காரைத் திருடியவனைத் தேடும் வரதன், ஒரு பேருந்தில் ஏறுகிறார். பேருந்தில், அவர் விசாரிக்கும் வழக்கு சம்பந்தமான நகைகள் கிடைப்பதோடு, அமானுஷ்யமாகப் […]

26/08/2022 Dinesh R
லைகர் விமர்சனம் அயல் சினிமா

லைகர் விமர்சனம்

கலப்பு தற்காப்பு கலைகளில் (MMA) சாம்பியன்ஷிப் பெறவேண்டுமென நினைக்கிறான் ராயபுரத்தைச் சேர்ந்த லைகர். நேஷ்னல் சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்ட ஆண் சிங்கமான பலராமிற்கும், அவரது மனைவி பெண் புலியான பாலாமணிக்கும் பிறந்தவன் என்பதால் லைகர் என காரணப் பெயரைச் சூட்டுகின்றனர். மும்பையிலுள்ள JKD எனும் பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சியைத் தொடங்குகிறான். முதலில் அங்கு வேலை செய்பவனாகச் சேர்க்கப்பட்டு, பின் பயிற்சி அளிக்கிறார் அவனது பயிற்சியாளர். இடையில், லைகருக்குத் தானியாவுடன் காதல் வருகிறது. காதலி ஏமாற்ற, அதிலிருந்து மீண்டு […]

26/08/2022 Dinesh R
கோப்ரா டூர் @ மதுரை | விக்ரம் இது புதிது

கோப்ரா டூர் @ மதுரை | விக்ரம்

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ்-பிக்சன் கதையில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களைச் சந்தித்தனர். கோலகலமாக ரசிகர்களின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது. நடிகை மீனாட்சி, “இப்படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் […]

23/08/2022 Dinesh R
மேதகு – 2 விமர்சனம் OTT

மேதகு – 2 விமர்சனம்

மேதகு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். மேதகு எனும் சங்கச்சொல்லுக்கு, மேன்மையான, மேன்மை பொருந்திய எனப் பொருள் கொள்ளலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன், மேன்மை பொருந்திய ஒப்பற்ற தலைவர் என்பதைச் சுட்டவே மேதகு எனத் தலைப்பிட்டிருந்தார் இயக்குநர் தி. கிட்டு. அப்படத்தின் தொடர்ச்சியாக, மேதகு 2 படத்தை இரா.கோ.யோகேந்திரன் இயக்கியுள்ளார். முதற்பாகமான மேதகு, 2021 ஆம் ஆண்டு ஜூன் 25 இல், ஓடிடி […]

20/08/2022 Dinesh R
எமோஜி விமர்சனம் OTT

எமோஜி விமர்சனம்

ஆஹாவில், மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஷ், மானஸா செளத்ரி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இணைய தொடர் வெளியாகியுள்ளது. எமோஷ்னலான காதல் கதை என்பதால் ‘எமோஜி’ எனத் தலைப்பிட்டுள்ளனர். எமோஷன்ஸை (உணர்ச்சிகள்) வரைபடங்களாகச் சித்தரிக்கப்படுவதை எமோட்டிகான் என்றோ, எமோஜி என்றோ அழைப்பார்கள். எமோஜி என்பது இரண்டு ஜப்பானிய சொற்களின் (E + moji) சேர்க்கையில் உருவான வார்த்தை. பிரார்த்தனா எனும் பெண்ணைக் காதலித்து, தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்யும் ஆதவ், விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறான். பிரார்த்தனாவுடன் எப்படி காதல் மலர்கிறது, […]

12/08/2022 Dinesh R
விருமன் விமர்சனம் இது புதிது

விருமன் விமர்சனம்

ஏழு வருடங்களிற்குப் பிறகு, கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் இயக்குநர் முத்தையா. அடித்து வெளுக்கும் நாயகன், குலச்சாமியாக ஒரு பெண் கதாபாத்திரம், தறிகெட்டு திரியும் வில்லன் என்ற தனது டெம்ப்ளட்டிற்குள் விருமனையும் அடைத்துள்ளார். தனது தாயின் மரணத்திற்குத் தந்தை முனியாண்டி தான் காரணமென்ற எண்ணம், சிறுவன் விருமனின் மனதிலே ஆழமாகப் பதிகிறது. சாகும் முன், விருமனிடம், பணத்தை விட உறவுகள் புடை சூழ வாழ்வதே சிறந்தது என தந்தைக்கு உணர்த்தும்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார் அவனது அம்மா முத்துலக்ஷ்மி. […]

12/08/2022 Dinesh R
“சூரியை ஓட விட்ட அதிதி” – கார்த்தி | விருமன் இது புதிது

“சூரியை ஓட விட்ட அதிதி” – கார்த்தி | விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் பேசிய விருமன் பட நாயகன் கார்த்தி, “இப்படத்தின் ட்ரைலர் வரும்வரை […]

09/08/2022 Dinesh R
காட்டேரி விமர்சனம் இது புதிது

காட்டேரி விமர்சனம்

திருவிழாவில் கலந்து கொள்ளும் கிராமத்தினர் அனைவரையும் யாரோ ஒருவர் மின்கம்பத்தை அறுத்துக் கொள்வதில் படம் தொடங்குகிறது. நிகழ்காலத்தில், காமினி எனும் இளம்பெண்ணைப் பணத்திற்காகக் கிரணின் குழு கடத்த, அவள் புதையல் இருக்கும் கிராமத்தைப் பற்றிச் சொல்ல, காமினியுடன் அந்தக் குழு அந்தக் கிராமத்திற்குப் புறப்படுகின்றனர். அந்த பேய்க் கிராமத்தில் மாட்டிக் கொள்ளும் அந்தக் குழுவிற்கு நடக்கும் வினோதமான நிகழ்வுகளே படத்தின் கதை. புதையலைத் தேடி ஏழு பேர் குழு புறப்படுகிறது. கிரணாக வைபவ், வைபவின் மனைவி ஸ்வேதாவாக […]

08/08/2022 Dinesh R
சீதா ராமம் விமர்சனம் இது புதிது

சீதா ராமம் விமர்சனம்

கதை, திரைக்கதை, நடிப்பு, மேக்கிங், ஒளிப்பதிவு, இசை, உடை வடிவமைப்பு, நடனம் என எல்லா வகையிலும் நிறைவைத் தருகிறது சீதா ராமம். காஷ்மீர், காதல் என மனதைக் குளிர வைக்கும் படம். பாகிஸ்தான் பிரிகேடியர் தாரிக்கின் பேத்தி அஃப்ரீன், 1965 இல் இந்தியன் லெஃப்டினென்ட் ராம் எழுதிய கடிதத்தை அவரது காதலி சீதா மகாலக்‌ஷ்மியிடம் ஒப்படைக்க, 1985 ஆம் ஆண்டு இந்தியா வருகிறார். அஃப்ரீனின் தேடல் படலத்தில், ராம் – சீதாவின் காதல் அழகாய் மொட்டவிழ்த்து மலரத் […]

06/08/2022 Dinesh R
எண்ணித்துணிக விமர்சனம் இது புதிது

எண்ணித்துணிக விமர்சனம்

ஒரு நகைக்கடைக் கொள்ளையில் மூன்று பேர் கொல்லப்பட, நாயகன் கொள்ளைக்காரர்களைத் தேடி அவர்கள் முன் நிற்கத் துணிகிறான். குற்றவாளிகளைத் தப்ப விடாமல் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பதை மீறி நாயகனிடம் ஒரு சாகச உணர்வு தொற்றிக் கொள்கிறது. ‘அவங்க முன்னாடி போய் நிற்கணும்’ என்ற தீர்மானத்துடன் உள்ளார். அப்பொழுது போலீஸ்? ஐடியில் வேலை செய்யும் நாயகன் அளவிற்குக் கூட விசாரணையை மேற்கொள்ளாமல் சுதாரிப்பின்றி உள்ளனர். அதிலும் அமைச்சர் ஒருவர், போலீஸுக்குப் பயங்கர குடைச்சல் தருகிறார். அமைச்சராக வைபவின் […]

05/08/2022 Dinesh R
பொய்க்கால் குதிரை விமர்சனம் இது புதிது

பொய்க்கால் குதிரை விமர்சனம்

கதிரவன் எனும் மையக் கதாபாத்திரத்திற்கு, ஒரு விபத்தில் முட்டி வரை இடது கால் போய்விடுகிறது. அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. தலைப்பு, அந்தச் செயற்கைக் காலைக் குறிக்கிறதே அன்றி, பொய்க்கால் குதிரை ஆட்டம் எனும் கலைக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. ஒரு தந்தை தன் மகளின் உயிரைக் காப்பதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார். அதனால் ஒரு கோடீஸ்வரியின் மகளைக் கடத்தி, தனது மகள் மகிழ்க்கு ஆப்ரேஷன் செய்யலாம் என முடிவெடுக்கிறார் கதிரவன். அவர் கடத்தும் முன், […]

05/08/2022 Dinesh R
குலுகுலு விமர்சனம் இசை விமர்சனம்

குலுகுலு விமர்சனம்

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படைப்பு. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட ஜானராகவே தன் படங்களைக் கொடுத்து வருகிறார். இம்முறை, மிகவும் மாறுபட்ட நகைச்சுவைப் படத்தை இயக்கி அசத்தியுள்ளார். அமேசான காடுகளில் வசிக்கும் ஓர் இனக்குழுவில் பிறந்த மாரியோ, பல நாடுகள் பயணித்து, பதிமூன்று மொழிகள் கற்று தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கை முழுவதும் பயணமும், அதனால பலவற்றைப் பற்றிய ஞானத்தினையுடைய மாரியோ, அனைத்தும் தெரிந்தவர் என்ற பெயரில் கூகுள் என அழைக்கப்படுகிறார். அதுவும் […]

29/07/2022 Dinesh R