32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 31 / 34
செய்திகள் வரிசை (பக்கம் 31)
“வதந்தியின் சுற்றுலா” – இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி OTT

“வதந்தியின் சுற்றுலா” – இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’யின் ட்ரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாகச் சென்றடைந்துள்ளது. புஷ்கர் – காயத்ரி அவர்களின் வால்வாட்சர் ஃப்லிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8 அத்தியாயங்கள் கொண்ட […]

27/11/2022 Dinesh R
“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம் Songs

“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் பாலையா..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில், நந்தமூரி பாலகிருஷ்ணா திரையில் தோன்றிராத, மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பாலையா..’ எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், […]

26/11/2022 Dinesh R
பவுடர் விமர்சனம் இது புதிது

பவுடர் விமர்சனம்

பவுடர் என்பதைக் குறியீடான தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. பவுடர் போட்ட முகங்களுக்கும், அசலான முகங்களுக்கும் உள்ள வேறுபாடினைக் காட்ட முயற்சி செய்துள்ளார். படத்தின் நாயகன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான […]

26/11/2022 Dinesh R
சாதனை படைத்த ‘அவதார் – 2’ முன்பதிவு விற்பனை அயல் சினிமா

சாதனை படைத்த ‘அவதார் – 2’ முன்பதிவு விற்பனை

மிகப் பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை ‘அவதார்’ படம் மூலம் அனுபவம் இந்திய சினிமா தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பனிங் தற்போது தொடங்கி இருக்கிறது. கண்னைக் கவரும் வகையிலான அட்டகாசமான திரையனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் ‘அவதார்’ திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என இந்த ஆறு மொழிகளில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஜேம்ஸ் கேம்ரூனின் இயக்கத்திற்கு என ஏராளமான இந்திய ரசிகர்கள் உள்ளனர். தற்போது பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் ‘அவதார்’ […]

26/11/2022 Dinesh R
ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம் இது புதிது

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

வஞ்சகர் உலகம் எனும் படத்தை இயக்கிய மனோஜ் பீதா, ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ எனும் தெலுங்குப் படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். இரயில்வே பாதையின் ஓரமாகக் கிடைக்கும் அநாமதேய பிணங்களின் பின்னணியில் நிகழும் பகீர் குற்றங்களை டிடெக்டிவான ஏஜென்ட் கண்ணாயிரம் அவிழ்ப்பதுதான் படத்தின் கதை. சந்தானத்தை டிடெக்டிவாக அறிமுகப்படுத்தும் காட்சியே படுபயங்கர சொதப்பல். அங்கு தொடங்கும் சொதப்பலைப் படமெங்கும் பல காட்சிகளில் தொடர்கின்றன. தந்தையின் முதல் மனைவி வாரிசுகளுடன் சொத்துப் பிரச்சனை என ஊரில் தங்குபவர், […]

26/11/2022 Dinesh R
பட்டத்து அரசன் விமர்சனம் இது புதிது

பட்டத்து அரசன் விமர்சனம்

ஓர் அணியாக ஒரு குடும்பம், கபடி ஆட்டங்களில் பங்குபெறும் ஒற்றை வரிச்செய்தியைப் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சற்குணம். தனது ஊருக்காக நாப்பது வருடங்களாகக் கபடி ஆடி, ஊருக்கு மிகப் பெரும் பெருமையைச் சேர்த்தவர் பொத்தாரி. ஊரின் கபடிக் குழுவிற்கு அவரது பெயரை வைப்பதோடு, அவருக்குச் சிலையும் வைத்துக் கொண்டாடுகின்றனர் ஊர்மக்கள். அரசர்குளத்திற்கு எதிரான ஒரு போட்டியில், பொத்தாரியின் பேரன் பணம் வாங்கிவிட்டதாக ஊர்மக்களை நம்ப வைக்கிறான் பொறாமையில் பொங்கும் சக ஆட்டக்காரன் ஒருவன். அதனால் சுடுகாட்டு மாரியம்மன் […]

25/11/2022 Dinesh R
காரி விமர்சனம் இது புதிது

காரி விமர்சனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் என்ற கிராம மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த ஒரு கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். ரியலிஸ்டிக்கான மேக்கிங்கால் படத்தையும் நெருக்கமாக உணர முடிகிறது. குதிரை ஜாக்கியான சசிகுமார் சென்னையில் தன் தந்தை ஆடுகளம் நரேனோடு வசிக்கிறார். ஆடுகளம் நரேன் சிறு உயிர்களையும் தன் உயிரென நேசிக்கக் கூடியவர். சசிகுமார் வாழ்வையும் சமூகத்தையும் ஏனோதானோ என ஏற்பவர். சசிகுமாரின் சொந்தக் கிராமமான காரியூரில் கருப்பசாமியின் திருவிழாவை நடத்த வேண்டிய ஒரு சூழல் […]

25/11/2022 Dinesh R
சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல் Songs

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற ‘பாஸ் பார்ட்டி..’ எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான […]

24/11/2022 Dinesh R
வதந்தி – உண்மை நடக்கும் பொய் பறக்கும் OTT

வதந்தி – உண்மை நடக்கும் பொய் பறக்கும்

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ்த் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதளத் தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி […]

24/11/2022 Dinesh R
வதந்தி – உண்மையைத் தேடும் எஸ்.ஜே.சூர்யா OTT

வதந்தி – உண்மையைத் தேடும் எஸ்.ஜே.சூர்யா

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ்த் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதளத் தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி […]

24/11/2022 Dinesh R
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி | ஆவலும் எதிர்பார்ப்பும் இது புதிது

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி | ஆவலும் எதிர்பார்ப்பும்

அமேசான் ப்ரைம் வீடியோ, ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் நேரடி தமிழ்த் தொடரை டிசம்பர் 2 ஆம் தேதி அன்று வெளியிடுகிறது. புஷ்கரும் காயத்ரியும் தயாரித்திருக்கும், இருக்கையின் நுனியில் அமர வைக்கப் போகும் இந்த த்ரில்லர் தொடரை, ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவும், சஞ்சனாவும் இத்தொடரின் மூலம் ஓடிடியில் அறிமுகமாக உள்ளார்கள். இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு, திரைத்துறையினரிடமும் மக்களிடமும் அதிகமாகவே உள்ளது. அட்லீ, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், நடிகை கோபிகா ரமேஷ், […]

21/11/2022 Dinesh R
மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம் இது புதிது

மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகரும் தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் க்ளாப் அடித்துத் துவக்கி வைத்தார். தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் […]

21/11/2022 Dinesh R
நான் மிருகமாய் மாற விமர்சனம் இது புதிது

நான் மிருகமாய் மாற விமர்சனம்

தொழிலதிபர் தேவராஜனைக் கூலிப்படையினரிடம் இருந்து காப்பாற்றுகின்றான் பூமிநாதனின் தம்பி. தேவராஜனைக் கொல்ல முடியாத ஆத்திரத்தில், பூமிநாதனின் தம்பியைக் கொன்றுவிடுகின்றனர் கூலிப்படையினர். சட்டத்தை நம்பாமல், தன் கைகளாலேயே கூலிப்படையினரைக் கொன்று விடுகிறார் பூமிநாதன். பூமிநாதனின் குடும்பத்தைக் கொன்று விடுவதாக அச்சுறுத்துகிறான் தாஸ் எனும் கூலிப்படைத் தலைவன். பூமிநாதனின் குடும்பம் பிழைக்க வேண்டுமென்றால், தேவராஜனைக் கொலை செய்யும்படி பூமிநாதனை நெருக்குகிறான் தாஸ். தன் குடும்பத்திற்காக மிருகமாய் மாறும் பூமிநாதன் எப்படி தாஸிடமிருந்து காப்பாற்றுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. கொலைகளும், ரத்தத் […]

19/11/2022 Dinesh R
கலகத்தலைவன் விமர்சனம் இது புதிது

கலகத்தலைவன் விமர்சனம்

வஜ்ரா எனும் பன்னாட்டுப் பெருநிறுவனத்தின் ரகசியங்கள் கசிந்தவண்ணம் உள்ளன. தகவல் கசிவின் பின்னணியில் யார் உள்ளார்கள் என துப்பறிய, அர்ஜுன் எனும் வேட்டையாளைக் களம் இறக்குகிறது வஜ்ரா நிறுவனம். அர்ஜுன் ஒவ்வொரு நூலாகப் பிடித்து திருமாறனிடம் வந்து சேருகிறான். யார் இந்த திருமாறன், ஏன் வஜ்ராவை அழிக்க அவன் போராடுகிறான் என்பதே படத்தின் சுவாரசியமான கதை. வழமை போல் மகிழ் திருமேனியின் மாயம் செய்யும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது. எட்டு வருடத் திட்டமிடலுக்கான நோக்கம், ஒரு பழி […]

18/11/2022 Dinesh R
யூகி விமர்சனம் இது புதிது

யூகி விமர்சனம்

ஒரு மிஸ்ஸிங் கேஸை அடிப்படையாக வைத்து, அதோடு சிற்சில எமோஷ்னல் விசயங்களையும் தூவிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் துவக்கத்திலே கயல் ஆனந்தி காணமால் போனதிற்கான விசாரணை துவங்குகிறது. அடுத்த காட்சி ஜான்விஜய் கொலை செய்யப்படுகிறார். இவை சம்பந்தமான விசாரணைகளும் விபரிப்புகளும் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் மாலை போட்ட கெட்டப்போடு நட்டி விசாரணைகளை நடத்துகிறார். மறுபுறம் டிடெக்டிவான நரேன், கதிரோடு இணைந்து விசாரிக்கிறார். இந்த மூன்று விசாரணைகளின் பின்னணியிலும் ஒரே விசயம் தான் பின்னப்பட்டிருக்கிறது. மேலும் இவர்கள் மூவரில் […]

18/11/2022 Dinesh R