மூக்குத்தி அம்மன் விமர்சனம்
அமீர் கானின் PK படம் தான் இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்றாலும், ஆன்மிகத்தின் பெயரால் கற்பனைக்கு எட்டாத அளவு சம்பாதிப்பவர்களைக் கலாய்த்து ஒரு படத்தை உருவாக்கிவிட்டார் RJ பாலாஜி. NJ சரவணனோடு இணைந்து, முதல் முறையாக இயக்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் RJ பாலாஜி.
மூக்குத்தி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 11000 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த நினைக்கிறார் பகவதி பாபா எனும் கார்போரெட் சாமியார். அதை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லப் போராடும் நிருபரான எங்கல்ஸ் ராமசாமியின் முன் பிரசன்னமாகும் அவரது குலதெய்வமான மூக்குத்தி அம்மன், அவரது கோயிலை உலகப் புகழடையுமாறு செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். ராமசாமியால் பகவதி பாபாவைத் தடுக்க முடிந்ததா, அம்மனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
ஸ்னீக்-பீக்கில், ஏசுவை தனது நண்பரென மனோபாலாவிடம் சொல்லும் மூக்குத்தி அம்மன், திருப்பதி வெங்கடாசலப...