Shadow

OTT Movie Review

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
விக்ருதி எனும் மலையாளப் படத்தைத் தமிழில், 'பயணிகள் கவனிக்கவும்' என மீள் உருவாக்கம் செய்துள்ளனர். விக்ருதி என்ற மலையாளச் சொல்லிற்கு சில்மிஷம் எனப் பொருள் கொள்ளலாம். சோர்வில் தன்னை மறந்து தூங்கும் எழிலனைக் குடிக்காரர் எனக் கருதும் ஆண்டனி, தூங்கிக் கொண்டிருக்கும் நபரைப் புகைப்படமெடுத்து, போதையில் கிடக்கிறாரென மீம்ஸ் உருவாக்கி சமூக ஊடகத்தில் உலாவ விடுகிறார். ஆண்டனியின் சில்மிஷம், வாய் பேசவும் காது கேட்கவும் இயலாத எழிலனையும், அவனது குடும்பத்தையும் எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. எழிலனான விதார்த் அசத்தியுள்ளார். கலங்க வைக்கும் விதார்த், க்ளைமேக்ஸில் விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சியை அளிக்கிறார். மலையாளப் படங்களுக்கே உரிய மென்மையான கவிதையோட்டமாகப் படம் நகர்கிறது. யாரோ ஒருவன் போகிற போக்கில் செய்த ஒரு விஷயம், எழிலனை நிலைகுலைய வைக்கிறது. போராட்டமான வாழ்க்கையிலுள்ள ஆறுதலே அவனது குடும்ப...
ஓ மை டாக் விமர்சனம்

ஓ மை டாக் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அருண் விஜயின் மகன், மாஸ்டர் அர்னவ் விஜய் நாயகனாக அறிமுகமாகும் குழந்தைகளுக்கான படம். கண் தெரியா நாய்க்கும், சிறுவன் ஒருவனுக்குமான பந்தத்தை மையமாகக் கொண்டது படத்தின் கதைக்களம். சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை படம் உணர்த்தினாலும், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளினை அழுத்தம் திருத்தமாகப் படத்தின் இறுதியில் சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் முடித்துள்ளனர். வீட்டிலுள்ள சுட்டீஸ் குட்டீஸோடு பார்க்க வேண்டிய 'டிஸ்னி' பாணி கதை. வினயை டெம்ப்ளேட் வில்லனாக உபயோகிக்கத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. ஒரு நாயின் வரவு, எமோஷ்னலாக ஒரு குடும்பத்தை எப்படிப் பிணைக்கிறது என்றில்லாமல், சிறுவனுக்கும் நாயுக்குமான பந்தத்திலேயே நிலைகொண்டுள்ளது படம். அந்த பந்தம், ஹார்ஸ் ட்ரெயினரான அருண் விஜயின் சாமர்த்தியங்களையும் விஞ்சுவதாக உள்ளது. இயல்பு வாழ்க்கையில் சாத்தியமே இல்லாத பல விஷயங்கள்...
Bro Daddy விமர்சனம்

Bro Daddy விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில் இந்தப் படத்துக்காக ஒதுக்குங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பொச்சடிப்பை நாக்குத் தருவது போல Bro Daddy பார்த்து முடித்ததும் இதே நினைப்பில் என்னைப் போல நீங்களும் சுற்றக் கூடும். மகனின் தோளில் கை போட்டுக் கலாய்த்துப் பேசும் நண்பனின் தந்தையைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த ரம்மியமான நினைவுகளையும் கிளப்பியது. லூசிபர் படைப்பு எப்படி பிருதிவிராஜ் சுகுமாரனை ஒரு அற்புதமான படைப்பாளியாக அடையாளப்படுத்தியதோ, அதற்கு நேர் மாறான கும்மாளம் கொட்டும் இன்னொரு பிரிவிலும் கூடத் தன்னால் சாதிக்க முடியும் என்று இங்கே நிரூபித்திருக்கிறார். அண்மையில் "சாய் வித் சித்ரா" பேட்டியில் இயக்குநர் ராதாமோகன் பிருதிவிராஜ் தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு வலுவான சினிமா...
அன்பறிவு விமர்சனம்

அன்பறிவு விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம். அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். அன்பழகனும் அறிவழகனும் இரட்டையர்கள். மனைவியிடம் அன்பை விட்டுவிட்டு, தன்னுடன் அறிவை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார் இரட்டையர்களின் தந்தை. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. இரட்டையர்கள் ஒருநாள் சந்தித்துக் கொண்டு படம் சுபமாக முடியும் என்பது வி.எஸ்.ராகவன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் சினிமா ஃபார்முலா. ஆக, எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதில் மட்டுமே சுவாரசியம் காட்ட இயலும். ஆனால் சுவாரசியம் ஒரு பொருட்டே இல்லை என்ற ரீதியில் திரைக்கதை பயணிக்கிறது. படம் தொடங்கியதும் வில்லன் விதார்த் மைண்ட் வாய்ஸில், குடும்பம் எப்படிப் பிரிகிறது, ஊர் ஒன்றுபடாமல் ஏன் இருக்கிறது என சுருக்கமாக ஃப்ளாஷ்-பேக்கை முடித்து விடுகிறார்கள். பிறகு கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சுமார்...
மதுரம் – அன்பும், அன்பு தரும் நம்பிக்கையும்

மதுரம் – அன்பும், அன்பு தரும் நம்பிக்கையும்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வலி மிகுந்த வாழ்க்கை யாருக்குத்தான் இல்லை? ஆனாலும் வலிகளை இல்லாமல் ஆகச் செய்யும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள்தான் அந்த நம்பிக்கையை உணராமல் தங்களையும் தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள் . ஆனால் எல்லா வலிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாக அன்பு இருக்கிறது என்று நம்புகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தனை சோதனைகளைச் சந்திக்கின்ற போதும் அவற்றை நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து போய்விடவே விரும்புகிறார்கள் எத்தனை வலிகள் இருந்தபோதும் அன்பிலும் அது தரும் நம்பிக்கையிலுமே வாழ்க்கையின் மதுரம் இருக்கிறது என்பதுதான் மதுரம் திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை. மிகச் சாதாரணமான இந்தக் கதையை தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் மூலமாக அன்றாடம் நாம் சந்திக்கின்ற எளிய மனிதர்களின் சின்னச் சின்ன உணர்வுகளைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக ஓர் அபாரமான அனுபவத்திற்குத் தயார்படுத்தி இருக்க...
மதுரம் விமர்சனம்

மதுரம் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு இனிமை (Sweetness) என்று பொருள். தலைப்பிற்குத் தகுந்தாற்போல், அகமது கபீர் இயக்கிய இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது. கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக உள்ள ஒரு பெரிய அறையில் தான் கதை நிகழ்கிறது. மருத்துவமனை என்றாலே, மனதிற்குள் ஓர் இருண்மை, பதற்றம் தன்னிச்சையாக உருவாகும். ஆனால் படத்தில், ரவி எனும் முதியவர், தாஜுதின் எனும் இளைஞனிடம், எப்படி மருத்துவமனை ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று விவரிப்பார். மருத்துவமனையின் பரபரப்பு மெல்ல அடங்கி, ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் க்யூட்டான ஷாட்களில், மருத்துவமனையின் அழகு மிளிரத் தொடங்குகிறது. மலையாளப் படங்களுக்கே உரிய பிரத்தியேக அழகுகளில் ஒன்று, உணவினையும், அது சமைக்கப்படும் நேர்த்தியையும் மிக அற்புதமான ஷாட்களில...
மின்னல் முரளி விமர்சனம்

மின்னல் முரளி விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்கு சூப்பர் ஹீரோ தேவையா? எழுநூறு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிற முக்கோண கிரக அமைப்பில் ஏற்படும் மின்னல் தாக்கி, குறுக்கன்மூலா எனும் கிராமத்தில் இருக்கும் ஜெய்ஸன் வர்கீஸ், ஷிபு ஆகிய இருவருக்கு சில அதிசய சக்திகள் கிடைக்கின்றன. குறுக்கன்மூலா கிராமத்திற்கு அதனால் என்ன பாதிப்புகள் நேருகின்றன என்பதே பட்த்தின் கதை. எதார்த்த படங்களுக்குப் பெயர் போனது மல்லுவுட். அங்கிருந்து ஒரு சூப்பர் ஹீரோ படமென்பதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்களது பாணியில் இருந்து பெரிதும் விளங்காமல் சூப்பர் ஹீரோ படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவைப் போல் உலகையே அழிக்கத் துடிக்கும் வில்லன்கள் இல்லாத கிராமத்தில் யார் வில்லன்? சக்தி கிடைத்த இருவரில் ஒருவர் வில்லன், மற்றொருவர் ஹீரோ என்று சேஃப் ஜோன்க்குள் கதையைக் கட்டமைத்துள்ளனர். மனித மனம் மிகவும் சிக்கலானது. கிராமத்தையே அழிக்க நினைக்கும் ஷிபுவி...
ஜெய் பீம் விமர்சனம்

ஜெய் பீம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
'ஆர்ட்டிகிள் 15' போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன. காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் எனும் குரூரமான உண்மையைத் தொட்டு படம் தொடங்குகிறது. அப்படி கைது செய்யப்படும் ராசாகண்ணு எனும் இருளர் இளைஞனைப் போலீஸ் அடித்து நையப்புடைக்கிறது. அவரது மனைவி செங்கேணி, வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். மனித உரிமை வழக்குகளுக்காகா ஆஜாராகும் வக்கீல் சந்துரு, காவ...
வினோதய சித்தம் விமர்சனம்

வினோதய சித்தம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
விபத்தில் சிக்கும் பரசுராமிடம், 'தொண்ணூறு நாட்கள் தான் நீ உயிருடன் இருக்கப் போகும் காலம்' என காலன் ஓர் ஒப்பந்தம் போடுகிறான். சாகும் நாள் தெரிந்துவிடும் பரசுராம், தந்தையாக தன் கடமைகளை முடிக்க ஆசைப்படுகிறார். "சாகுற நாள் தெரிந்து விட்டால் வாழுற நாள் நரகமாகிவிடும்" என்றொரு வசனத்தை 'சிவாஜி' படத்தில் பேசியிருப்பார் ரஜினிகாந்த். அப்படி, சாகும் நாளைப் பற்றி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது செய்து முடிப்பதைத் துரிதப்படுத்த அளிக்கப்படும் கிரேஸ் டைம் ஆகும். அதை வரமாக்கிக் கொள்வதும், நரகமாக்கிக் கொள்வதும், ஒவ்வொரு தனி மனிதனின் மனோநிலையைப் பொறுத்ததே! பரசுராம், அதை வரமாக்கிக் கொள்கிறாரா, நரகமாக உணர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. காலையில் உடற்பயிற்சி செய்யும் தம்பி ராமையா லேசாகப் பயமுறுத்தினாலும், அவர் சமுத்திரக்கனியைப் பார்த்ததில் இருந்து படம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. காலனாகச் சமுத்திரக்கனியும்,...
உடன்பிறப்பே விமர்சனம்

உடன்பிறப்பே விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஜோதிகாவின் 50 ஆவது படம். தனது இரண்டாவது இன்னிங்ஸில், நாயகியை மையப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து அசத்தி வருகிறார். எல்லா வயதினருக்கும் இங்கே ஒரு வாழ்க்கையும் கதையும் உண்டு என்பதைத் தமிழ் சினிமா பொருட்படுத்துவதில்லை. நாயகனுக்கு எத்தனை வயதானாலும், நாயகியைச் சுற்றியோ, சுற்றி வர வைத்தோ காதல் செய்யும் கதாபாத்திரங்களையே ஆண் நடிகர்கள் விரும்ப, கதையின் நாயகியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு தனக்கென்றொரு தனிப்பாதையை உருவாக்கி, அனைவருக்கும் முன்மாதிரியாக உருமாறியுள்ளார் ஜோதிகா. இவையெல்லாம், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட்டாலே சாத்தியமாகியுள்ளது. இம்முறை, சசிகுமார், சமுத்திரக்கனி என இரண்டு நாயகர்களுடன் திரையேறியுள்ளார் ஜோதிகா. சசிகுமார், ஜோதிகாவின் அண்ணனாகவும், சமுத்திரக்கனி, ஜோதிகாவின் கணவராகவும் நடித்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் அகிம்சை கணவருக்கும், சத்தியத்தை மதிக்கும் அடிதடி அண்ணனுக்கும் இ...
லிஃப்ட் விமர்சனம்

லிஃப்ட் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
விஜய் டிவியின் 'பிக் பாஸ்' புகழ் கவின் நாயகனாக நடித்துள்ள 'லிஃப்ட்' திரைப்படத்தினை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அலுவலகத்தில் தனது முதல் நாள் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் குரு பிரசாத், லிஃப்டில் மாட்டிக் கொள்கிறான். அமானுஷ்ய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகித் தப்பிக்க வழியின்றித் திணறிக் கொண்டிருக்கும் குரு பிரசாத்துடன், மனிதவள மேலாளரான ஹரினியும் சேர்ந்து சிக்கிக் கொள்கிறாள். இருவரையும் பாடாய்ப்படுத்தும் அமானுஷ்ய சக்தி எது, அதிலிருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. ஒரு லிஃப்ட்க்குள் நடக்கும் கதையைப் பார்ப்பவர்கள் சலிப்படையாதவாறு மிகச் சிறப்பான பணியினைப் புரிந்துள்ளார் ஒளிப்பதிவாளர் யுவா. கவினின் வெளிறிய முகம், லிஃப்ட், லிஃப்ட் பட்டனைக் கொண்டே படத்தொகுப்பாளர் G.மதன், காட்சிகளை விறுவிறுப்பாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பா...
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
யார் ஆண்டாலும் கவலையில்லாமல் வாழ கெட்டப் பய காளியால் 1978 இல் முடிந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில், யார் ஆண்டாலும் அவர்களால் ஒரு பயனும் இல்லையென்ற விரக்தியிலேயே மக்கள் வாழ்கின்றனர். படத்தின் மையப்பகுதியாக அந்த விரக்தியே உழல்கிறது. பூச்சேரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த குன்னிமுத்து என்பவர் வளர்க்கும் காளை மாடுகளான வெள்ளையனும் கருப்பனும் காணாமல் போய் விடுகிறது. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் சலசலப்பைப் பற்றியும், அச்சலசலப்பு, மாடுகள் கிடைக்க எந்த அளவு உதவின என்பதாகப் பயணிக்கிறது படத்தின் திரைக்கதை. அரசியல் நையாண்டி தான் படத்தின் ஜானர். 'இன்ஜினியரிங் படித்த பரோட்ட மாஸ்டர்கள் தேவை' என ஒரு போர்டின் மூலம் போகிற போக்கில் சமூக அவலத்தை நையாண்டி செய்திருந்தாலும், சில காட்சிகளை வலிந்து திணித்துள்ளனர். உதாரணத்திற்கு, பெட்ரோல் விலை ஏற்றிக் கொண்டே உள்ளனர் என்பதால் மண்திண்ணி என்பவர் தனது டிவிஎஸ் 50...
அனபெல் சேதுபதி விமர்சனம்

அனபெல் சேதுபதி விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஒரு மிகப் பெரிய அரண்மனை. பெளர்ணமி அன்று அங்கு யாரேனும் தங்கினால், அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். அத்தகைய அரண்மனைக்குள், திருட்டைத் தொழிலாகக் கொண்ட ஓர் ஏமாற்றுக்காரக் குடும்பம் நுழைகிறது. பின் என்னாகிறது என்பதை, பேய்ப்படத்திற்கான டெம்ப்ளேட்டில் இருந்து மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார் தீபக் சுந்தர்ராஜன். இயக்குநர் சுந்தர்.சி-இன் அரண்மனை, அரண்மனை 2, ஜாக்ஸன் துரை, பெட்ரோமேக்ஸ் என தமிழில் வரிசை கட்டிக் கொண்டு, அண்மையில் வந்த பேய்ப்படங்களின் வரிசையே மிக நீளம். பார்த்துப் பழகி அலுத்துவிட்ட ஒரு ஜானரில், கொஞ்சம் சுவாரசியமான மாற்றத்தை வழங்கினால் கூட பார்வையாளர்களால் படத்தோடு ஒன்ற இயலும். படம் அப்புள்ளியைத் தொடுவதற்கு பதில், பார்வையாளர்களுக்கு அரண்மனையைச் சுற்றிக் காட்டுவதில் அலாதி இன்பம் காட்டுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், பல காலமாக அடைப்பட்டுக் கிடக்கும் வில்லன் பேயும், நாயகியோடு சேர்ந்து ...
துக்ளக் தர்பார் விமர்சனம்

துக்ளக் தர்பார் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அமாவாசைகளால் நிரம்பியது அரசியல்களம். சிங்கம் என்றழைக்கப்படும் சிங்காரவேலன் அப்படியொரு நபர். எதிர்பாராத விதமாக அவருக்குத் தலையில் அடிபட, சிங்கத்துக்குள் இருந்து ஒரு நல்ல மனம் படைத்த ஆளுமை பெளர்ணமி போல் உருவாகிறான். சிங்கத்துக்குள் இருக்கும் பெளர்ணமி மக்களுக்கு நல்லது செய்யப் பார்க்க, அமாவாசையோ மக்களை வஞ்சித்துச் சம்பாதிக்கப் பார்க்கிறான். துக்ளக் தர்பார் போல், சிங்கத்திற்குள் இருக்கும் ஆளுமைகள் சிங்கத்தைத் தன்வயப்படுத்த அவனை ஒரு வழி செய்கின்றனர். சிங்கத்தை எந்த ஆளுமை வசப்படுத்தியது என்பதே படத்தின் கதை. கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மங்களமாக பகவதி பெருமாள் நடித்துள்ளார். தன்னிடத்தை நேற்று வந்தவன் பிடித்து விடுவான் என்ற பதற்றத்திலேயே இருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சிங்காரவேலனின் நண்பன் வாசுவாகக் கருணாகரன் நடித்துள்ளார். உற்ற துணையாக இருக்கும் நண்பன் கதாபாத்...
டெடி விமர்சனம்

டெடி விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனின் ஐந்தாவது படம் டெடி. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்: டிக்: டிக் என அவரது அனைத்துப் படங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வித்தியாசமான கரு கொண்ட படங்கள். டெடியும் அப்படியே! OBE – Out of Body Experience. உடலுக்கு வெளியே நிகழும் அனுபவத்தை அழகான புனைவுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார் சக்தி செளந்தர் ராஜன். அவ்வனுபவத்தில் உடலை விட்டு உயிர் வெளியேறி விடும். அவ்வுயிருக்கு ஏற்படும் அனுபவங்களையே OBE என அழைப்பார்கள். புனைவின் சுவாரசியத்திற்காக, கோமாவில் உள்ள ஸ்ரீயின் உயிர், டெடி எனும் கரடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அதாவது ஸ்ரீயின் உயிர் ஒரே சமயம் அவரது உடலிலும் இழையோடுகிறது, கரடியின் உடலிலும் இருக்கிறது. மாயாஜாலம் போல! அது புனைவிற்கு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. அழகான சயிஷா, படத்தில் டெடியாக மட்டும் வலம் வருவது சற்றே வருத்தமான விஷயம். எனினும் டெடியி...