32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

கவிதை

47 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 4
செய்திகள் வரிசை (பக்கம் 3)
தீராத விளையாட்டுப் பையன் கவிதை

தீராத விளையாட்டுப் பையன்

              கண்ணே, மணியே யென்றான் உன்னையல்ல என்னை உனக்காக தூதுபோக அரசமரப்பூக்கள் தலைகீழாய் தவமிருக்குமென்பான் அர்த்த ராத்திரியில் பசிக்கிறதென்பான் மொட்டை மாடியில் நிலா வசிக்கிறதுயென்பான் புரியாத கவிதைகளையெல்லாம் புரிந்த மாதிரிச் சிரிக்கிறான் தெரியாத தெருவுக்கெல்லாம் சென்றுத் தவிக்கிறான் அன்றொருநாள் நீ மறந்துவிட்டுப் போன கைக்குட்டையுடன் மாதக்கணக்கில் வாழ்ந்துவருகிறான் திருமணத்திற்குப் போனால் செருப்பைக் கழட்டிவிடாதே! அதைக்கூட அபகரித்துவிடுவான் நீ கிறுக்கிப்போட்ட காகிதத்தை கிறுக்கனாய் தேடுகிறான் கடைசியில் அதுதான் கவிதையென்று அடம்பிடிக்கிறான் […]

08/04/2010 Dinesh R
சாளரக் கண்கள் கவிதை

சாளரக் கண்கள்

சாளரக் கதவுகள் காத்துக் கொண்டிருக்கிறது திறக்கப்படும் நேரத்திற்காக காத்திருப்பின் முடிவில் வேகமாக வெளியேசெல்லும் அதுவரையில் அறையினுள் அடங்கிக் கிடந்தவை மீண்டும் அறையினுள் சிறைப்பட வரலாம் தூசும் துரும்பும். அதுபோலத்தான் மூடியிருக்கும் சிலரின் மனதில் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் – இராஜப்ரியன்

27/02/2010 Dinesh R
தீராத பசி கவிதை

தீராத பசி

நட்சத்திர உணவகத்தில் மிடுக்காக அமர்ந்து மெதுவாக சாப்பிட்டேன் அக்கம் பக்கம் உள்ளவர்களைப் பார்த்து நானும் அந்தஸ்து காரணமாக கொள்ள இடமிருந்தும் மீதி வைத்தேன் எதற்கென்று தெரியவில்லை அப்படித்தான் செய்கிறார்கள் அங்கு வந்த அனைவரும் என் எதிரிலேயே வேண்டுமென்றே நான் வைத்த மிச்சமுள்ள தட்டு அசுத்தமடைந்ததினால் சுத்தம் செய்ய எடுத்து செல்லப்படுகிறது மற்றவர்களின் பாத்திரத்துடன் கழுவப்பட்டு மறுபடியும் வரும் உணவேந்தி என் போன்றவர்களுக்காக டிப்ஸ் கொடுத்ததற்காக நன்றி ஒன்று கிடைத்தது என்னை விட வயதில் மூத்தவரும் ஏனோ அண்ணனென […]

08/02/2010 Dinesh R
கள்ளநோட்டு கவிதை

கள்ளநோட்டு

சூரியன் வரும் முன்பே சுருக்காகப் புறப்பட்டு அவிழ்த்துப்போட்ட அனைத்தையும் அவசரமாக அள்ளி போட்டுக்கொண்டே பொத்தானை மாற்றி மாற்றிப் பூட்டினான் மேலுக்குக் கீழ்.. கீழுக்குக் கீழென.. அடுத்து வேறொரு அறையில் மீண்டும் மற்றொன்றுடன் படுக்கையில் நான், விடுதியில் நுழைந்த காவல்காரர் கைதுசெய்தார் என்னைமட்டும் அன்று என்னுடன் இருந்ததை மறந்து, விட்டுவிடுகிறேன் “எனக்கு வேண்டியதை கொடு”வென சரியாகக் கேட்டார். சலித்துக்கொண்டே நேற்றிரவு வந்ததை இன்றிரவு பிடித்துவிடலாமென கொடுத்தால்.. ” இந்த வேலை என்றிலிருந்தென?” ஏதுமறியாத என்னை அறைந்தார். எந்த வேலையென […]

14/01/2010 Dinesh R
சூ.. தேசி கவிதை

சூ.. தேசி

ஒலிவாங்கியில் உரக்கப் பேசினார் கூட்டத்தை நோக்கி அந்நியப் பொருட்களை நாம் வெறுப்போம் நம் நாட்டுப் பொருட்களை மதிப்போம் முடித்தவுடன் குளிர்பானம் அருந்தினார் “கூலிங் கம்மியாயிருக்கு பெப்சி குடுங்க எனக் கேட்டார் கொக்க கோலாவைக் கொடுத்தபடி” – சே.ராஜப்ரியன்

11/01/2010 Dinesh R
ஓர் அழகியின் வரவு கவிதை

ஓர் அழகியின் வரவு

தன்வீட்டு மாடு பெண்கன்று ஈன்றதுக்கு புல்லரித்துப் போனான் மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு பொங்கல் வைத்துப் படைத்தான் தன் குலச் சாமிக்கு அவன் மனைவி பெற்ற பெண் குழந்தையை சனியனே என ஏசினான் தரித்திரம் பிடித்தவள் இந்தமுறையும் செலவைப் பெற்றெடுத்தாளென அவளுடைய புண் என்றாறும் மனத்திலும் கத்திக் கிழித்த இடத்திலும்? – சே.ராஜப்ரியன்

05/01/2010 Dinesh R
பயர்த்தனை கவிதை

பயர்த்தனை

குடையுமாம் காக்கி காவாக்கள் – அதனையும் குமையச் செய்யும் மாநரகப் பேரோட்டிகள் பால் ஊத்தும் தண்ணீர் லாரிகள் கிறீச்சிட்டு வழுக்கும் வழுக்கை பணக்கார்கள் மிதிவண்டி பிளவில் சர்க்கஸ் புரியும் பிள்ளைபொதி சுமக்கும் மூனுசக்கர ஆனைகள் விர்ரூமென சீறும் ரெண்டுகால் சாத்தான்கள் நாற்சந்தி கருஞ்சாலை கொண்டவெண் பட்டைமீது நேற்று கடந்தவனின் கறை படிந்த சொச்சங்களின் மீதேறிய சக்கர தடங்களென பச்சொளி கண்டும் ஓசோனைத் துளையிடும் புகைசூழ் வாகண அணிவகுப்பை நோக்குங்கால் நமனை நினையாமல் நடுக்க மின்றி கடக்கும் நாளும் […]

22/12/2009 Dinesh R
மாமனிதர் கவிதை

மாமனிதர்

நாதியற்று நின்றுகொண்டிருக்கும் அவரை யாரும் கண்டுகொள்ளவதில்லை வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பிறந்தநாள், நினைவுநாள் தவிர தினமும் நாங்கள் சென்று அன்பை பொழிகிறோம் எச்சங்களாய் இறந்தபிறகும் எங்களை சுமந்துகொண்டு உலகத்தை உயரமான இடத்திலிருந்து பார்த்து புரிந்துகொள்ள சொன்னார் காய்ந்துபோய் அவர்கழுத்தில் கிடக்கும் பூமாலை மூலம் – சே.ராஜப்ரியன்

12/12/2009 Dinesh R
இந்தநாள் நல்லநாள் கவிதை

இந்தநாள் நல்லநாள்

குறுக்கே போனது பூனை எதிரே வந்தால் விதவை புறப்பட்டது ராகுகாலம் எமகண்டம் வருவதற்குள் சீக்கிரம் போய்சேரவேண்டும் கீழ்நோக்கு நாள் போகின்ற காரியம் இன்று உருபட்டமாதிரிதான் மாலை திரும்பிவந்தார் சாலையில் அந்த பூனை விபத்தில் நசுங்கிக் கிடந்தது விதவை அவள் வீட்டினெதிரே அழுதுகொண்டிருந்தாள் திருடப்பட்ட தன் சேமிப்பினையெண்ணி யார் ராசிகெட்டவர்! யார் தரித்திரம் பிடித்தவர்? – சே.ராஜப்ரியன்

01/12/2009 Dinesh R
இன்னொரு பொட்டலம் கொடுங்கள் அவனுக்கு கவிதை

இன்னொரு பொட்டலம் கொடுங்கள் அவனுக்கு

தலைவனின் சின்ன வீட்டிற்கு பிறந்த பெரிய பையனின் பிறந்தநாள் ஊரெல்லாம் கொடி, பட்டாசு, தோரணம் தொண்டர்களின் காசில் அவன் வீட்டின் அடுப்பில் பூனை தூங்குகிறது தலைவர் வரும்பொழுது எதுவும் குறுக்கே வரக்கூடாது அதனால் இந்த பூனைப்படை சுவரொட்டிதனில் அவனைப்பார்த்து சிரிக்கிறார் விரைவில் உனக்கு வேலை வாங்கித்தருகிறேன் என பணத்தை வாங்கும்பொழுது சிரித்த அதேதங்கப்பல்லுடன் மேலே கையை தூக்கி காட்டும்பொழுதெல்லாம் நானிருக்கிறேன், உதவிசெய்கிறேன் உங்களுடன் நான் என பேசுவார் இப்பொழுதுதான் புரிகிறது எப்பொழுதுமே எனக்கு கீழேதான் நீங்கள் உங்களுக்கு […]

28/11/2009 Dinesh R
யாசகம் கவிதை

யாசகம்

பயணசீட்டு வாங்குவதற்கு மட்டுமிருக்கிறது என்னிடத்தில் கூட்டத்திடம் கையேந்திக் கும்பிடு வருபவருக்கு எப்படித் தெரியும் என்நிலைமை சில்லறை போட்டவரெல்லாம் என்னை இப்படிப் பார்ப்பது என்ன நியாயம்? – சே.ராஜப்ரியன்

28/11/2009 Dinesh R
இன்னுமின்னும் கவிதை

இன்னுமின்னும்

மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நாட்டின் எல்லையில் நடந்த துப்பாக்கிசூடு தலைநகரில் குண்டு வைத்து தகர்ப்பு தற்கொலைப்படை தலைவர் தப்பியோட்டம் தலைவரின் தலைமகன் நாளை வருகை திருவல்லிகேணியில் நேற்றிரவு திருட்டு வானூர்திநிலையத்தில் பிடிபட்டனர் போதைப்பொருள் கடத்தல் கள்ளக்காதலனுடன் கைது கணவன் கொலைவழக்கில் வன்கலவி சிறுமியிடம் வாலிபர் கைது விசாரணை நடந்துவருகிறது கையூட்டு வாங்கிய அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டார் இருவேறு சாலை விபத்தில் இரண்டுபேர் உயிரிழந்தனர் கவலைக்கிடமாக ஏழுபேர் மருத்துவமனையில் பிரபல அரசியல்வாதி கொலைவழக்கில் இன்று […]

24/11/2009 Dinesh R
ம-ர-ண-ம் கவிதை

ம-ர-ண-ம்

நிற்குமிடத்திலிருந்தே தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பிறருக்கு தந்துகொண்டும் எத்தனை உயிர்கள் வாழ்ந்துகொண்டிருந்தது அதன் உடம்பில் இதுவரையில் வாழ்வளித்துவந்தது வந்த புயலையெல்லாம் புறம் தள்ளி இன்று நெடுஞ்சாலைத்துறை நெடுகக்கிடத்தி வைத்திருக்கிறது துண்டு துண்டுகளாய் – சே.ராஜப்ரியன்

22/11/2009 Dinesh R
காலத்தின் மழையில் நனைகிறோம் கவிதை

காலத்தின் மழையில் நனைகிறோம்

கொட்டும் மழையில் குளிரும் நிலையில் இரவு பிறந்து பகல் மரிக்கும் வேளையில் தான் நிற்கும் இடத்திலிருந்து எதிர்த்திசையில் வந்துகொண்டு இருக்கும் ஒவ்வொரு பேருந்தாய் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் கழித்தாரோ தெரியவில்லை …… ! கையைக் காட்டி நிறுத்தினாலும் தன்னுடன் காத்திருந்தோர் வேகமாக ஓடி ஏறிக்கொண்டதும் அவரை மட்டும் தனிமைப்படுத்தி விட்டு சென்றுகொண்டே இருக்கின்றார்கள் அதுவும் ஏனோ ? அவர் ஏறி இறங்க நேரம் அதிகமாகும் என்பதுதானே உங்கள் கவலை உங்களுக்கும் இது பிரதிபலிக்கும் பின்னொருநாளில் ஓய்வூத்தியத்தைப் பெற […]

30/10/2009 Dinesh R
நானும் என் நிராசையும் கவிதை

நானும் என் நிராசையும்

ஊத ஊதப் பெரிதாகிக் கொண்டே போனது ஒரு அளவுக்கு மேல் வெடித்து முடித்து விடை கொடுத்தது என் ஆசைக்கு இன்னுமொரு ஆசை ஊதி பெரிதாக்கிய அதில் மிகச்சிறிய ஊசியின் முனையை உரசினால் எப்படி இருக்கும் என்று அதுபோலத்தான் நான் வளர்த்து வைத்திருக்கும் ஆசைகளை சிறு சொல் கொண்டு கொன்று விடுகிறார்கள் யார் யாரோ – சே.ராஜப்ரியன்

10/10/2009 Dinesh R