Shadow

Tag: ஆண்ட்ரியா

கா – The Forest விமர்சனம்

கா – The Forest விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கா என்றால் காடு அல்லது கானகம் என்பதாகப் பொருளென உருவகப்படுத்தியுள்ளனர். ஆனால், 'கா' என்றால் காத்தல் என்று பொருள் கொள்ளலாமே அன்றி காடு எனக் கொள்ளலாகாது. ஆதியும் காடே, அந்தமும் காடே என்ற பாடல் வரிகளுடன் அடர்ந்த காட்டின் அட்டகாசமான விஷுவல்ஸுடன் படம் தொடங்குகிறது. கடுகுபாறை வனக்காவல் நிலையத்தின் அருகே முகாமிட்டுள்ளார் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான வெண்பா சுப்பையா. மதி என்ற பயந்த சுபாவிக்கு அவரது தந்தையின் வேலை கிடைத்து, கடுகுபாறை வனக்காவல் நிலையத்தில் பணியில் சேருகிறார். அரசியல் பேசி வில்லங்கத்தை உண்டாக்கும் ஓர் இளம்பெண்ணைக் கொலை செய்ய, அம்மலை வனப்பகுதிக்கு வருகிறார் விக்டர் மகாதேவன். இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது. மதி பாறையிடுக்கில் கீழே சகதியில் விழுந்து, மேலே வெளிச்சத்தைப் பார்ப்பது மஞ்ஞுமள் பாய்ஸில் வரும் காட்சி போலவே உள்ளது. விழுந்து கிடக்கும் இடத்தில் இருந்து மேலே வர இயல...
‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் 75வது படமாக உருவாகி வரும்  திரைப்படம் “சைந்தவ்”. இப்படத்தை Hit  Series திரைப்படங்களை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்குகிறார்.  வெங்கட் போயனப் பள்ளி மற்றும் நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் உச்ச கட்ட காட்சியை எட்டு முக்கியமான நடிகர்கள் பங்கேற்க படப்பிடிப்பு நடத்தி முடித்திருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது.அதைத் தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு “சைந்தவ்” படக்குழுவினர் ஒரு காணொலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா,  ருஹானி சர்மா, சாரா, ஜெயப்பிரகாஷ் ஆகிய எட்டு பேரும் ஒரு பாலத்தில் இரவு நேரத்தில் நடந்து வருவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.  திரைப்படத்தில் இந்த எட்டு பேரைச் சுற்றித் தான் ...
வட்டம் – ஆண் பெண் உறவிற்கு இடையே!

வட்டம் – ஆண் பெண் உறவிற்கு இடையே!

சினிமா, திரைச் செய்தி
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குநர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையின் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். தயாரிப்பாளர் SR பிரபு, “கமலக்கண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும். அதை இந்தப் படம் பேசும். நடிகர் சிபி தான் இந்தக் கதையை எடுத்துச் செல்லச் சரியாக இருப்பார் என நினைத்து இந்தப் படத்திற்குள் அவரைக் கொண்டு வர நின...
சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினைப் பிரத்தியேகமாக நேரடித் திரைப்படமாக வெளியிடுகிறது சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'வட்டம்' படத்தினை நேரடித் திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ ஒரு த்ரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாபாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்தத் தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்...
“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

Songs, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் 'சுழல் தி வோர்டெக்ஸ்'-இற்காக சாம் சி.எஸ் இசையமைத்த 'துவா துவா..' எனத் தொடங்கும் பாடலில், பாடகர்கள் ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் 'ராப்பர்' அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் எழுதி உருவாக்கப்பட்ட தொடர் 'சுழல் -தி வோர்டெக்ஸ்'. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் உருவான 'சுழல்- தி வோர்டெக்ஸ்' அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் வலைதளத் தொடராகும். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளுடன், வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இட்டாலியன், ஜப்பானியம், போலந்து, போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ்...
வடசென்னை விமர்சனம்

வடசென்னை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை. இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், 'நிலம் எங்கள் உரிமை' என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் படத்தில் இழையோடும் அரசியலின் வீரியம் புரியும். அமீரின் பாத்திரம் தெறி! வெற்றிமாறன், மேக்கிங்கிலும் கதைசொல்லும் பாணியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து அசத்தியுள்ளார். ஒரு நேர்க்கோட்டுக் கதையை, பல அத்தியாயங்களாகப் பிரித்து, மூன்று கதாபாத்திரங்களுக்குள் உள்ள தொடர்பா...
விஸ்வரூபம்.. II விமர்சனம்

விஸ்வரூபம்.. II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ஃப்ரெஷாக இருக்கும் அப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் எதிர்பார்ப்பைக் கேட்கவேண்டுமா என்ன? ஓமரை உயிருடனோ, பிணமாகவோ விசாம் அகமது காஷ்மீரி பிடிப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதையென, முதற்பாகம் பார்த்த அனைவரும் இலகுவாக யூகித்துவிடுவர். அமெரிக்காவைக் காப்பாற்றிய கையோடு, விசாம் அகமது காஷ்மீரி நேராக இந்தியா வந்திருக்கலாம். ஆனால், சேகர் கபூரின் பிரிட்டிஷ் நண்பரின் சடலத்தைத் தர இங்கிலாந்து செல்கின்றனர். போன இடத்தில், இங்கிலாந்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கமலின் தோள்களில் விழுந்துவிடுகிறது. 'சீசியம் பாம்'-இன் மீதான காதலைப் புறந்தள்ள முடியாமல் இயக்குநர் கமல் தத்தளித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்தால், ஆண்ட்ரியாவையும் பூஜா குமாரையும் வில...
அவள் விமர்சனம்

அவள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிறைவேறாத ஆசையுடன் இருக்கும் ஆவியொன்று, 80 வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குடி புகுபவர்கள் மூலமாகத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தக் கதைக்கு, 'அவள்' என்பதை விட இன்னும் பொருத்தமான தலைப்பைச் சூட்டியிருக்கலாம். பேய்கள் என்றாலே, அவை பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளட்டை வலுவாக்கும் விதம் உள்ளது தலைப்பு. ஆண்ட்ரியா சித்தார்த் முதல் சந்திப்பை, அது காதலாக மாறுவதை, அவர்களுக்கு இடையேயான அன்யோன்யத்தை எனப் படத்தின் தொடக்கம் க்யூட்டானதோர் அத்தியாயமாக எடுக்கப்பட்டுள்ளது. பேய்ப் படம் என்றால் காமெடிப் படமென அந்த ஜானருக்கே புது அடையாளம் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில். அதிலிருந்து விலகி, சீரியசனாதொரு படமாக இது உள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சித்தார்த்தாலும், இயக்குநர் மிலிந் ராவாலும் எழுதப்பட்ட கதை இது. கதாசிரியர்களாக இருவரின் கூட்டணி அபார வெற்றி பெற்றி...
தரமணி விமர்சனம்

தரமணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தரமணி' எனும் தலைப்பை, ஓர் ஏரியா பெயராகவோ ஸ்டேஷன் பெயராகவோ கொள்ளாமல், சாதாரண மக்களையும் ஐ.டி. மக்களையும் இணைக்கும் காரிடாரின் குறியீடாகக் கொள்ளலாம். பொருளாதாரச் சுதந்திரமுள்ள பெண்ணின் நடவடிக்கைகள் அவளைச் சார்ந்து வாழத் தொடங்கும் ஆணுக்கு எந்தளவுக்குப் பாதுகாப்பாற்ற உணர்வை ஏற்படுத்துமெனப் படம் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது. படிச்ச முண்டை, தேவிடியா, பிட்ச் பிட்ச் பிட்ச், இங்க புழு பிடிச்சுடும் என இந்தப் படத்தில் வரும் வசனங்களுக்கு A செர்ட்டிஃபிகேட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் தான் இயக்குநர் ராம் நியாகமாகக் கோபப்பட்டிருக்க வேண்டும். ஐ.டி.யில்/பி.பி.ஓ.வில் வேலை செய்பவர்களே இப்படித்தான் எனக் குறை கூறும் மனோபாவத்தை இயக்குநர் ராமால் தவிர்த்துக் கொள்ளவே முடியவில்லை. நடனத்தில் விருப்பமுள்ள மனைவி வேறொருவருடன் நடனமாடுவதைப் பெரிய விஷயமாகக் கருதாத கணவனை எள்ளி நகையாடுகிறார் ராம். கார்ப்ரெட் கலாச்சார...
கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
நடிகர் ஜீவா காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது . ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே-வின் இயக்கத்தில் வரும் இரண்டாவது படமென்பதால் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வளர்ந்து வரும் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களை எழுதியவர் கோ சேஷா. 1. பாடல் -  காதல் இருந்தால் போதும் பாடியவர்கள்: அர்மான் மாலிக், ஷாஷா திருப்பதி அர்மான் மாலிக்கின் குரலில் ஒரு எனர்ஜெட்டிக் மெலடி. இப்பாடல் மூலம் அர்மான், தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஓர் இடத்தை நிச்சயம் பிடிப்பார். இளசுகளின் பல்ஸை லியோன் சரியாக புரிந்து வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். 2. பாடல் - என் பல்ஸை ஏத்திட்டுப் போறியே பாடியவர்கள்: இன்னொ கெங்கா, ஆண்ட்ரியா, தினேஷ் கனகரத்தினம் லியோன் இசையில் நம்மைத் துள்ள வைக்கும் ஒரு பாடல். லண்டனைச் சேர்ந்த இன்னொ கெங்காவின் குரல் புத...
இது நம்ம ஆளு விமர்சனம்

இது நம்ம ஆளு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிவாவிற்கு காதல் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவனால் ‘தன்னுடைய ஆள்’ எனக் காதலிக்க ஒருவரையும் தீர்மானம் செய்து கொள்ள முடியவில்லை. அவரது காதலின் ஸ்டார்ட்டிங் நல்லாயிருந்தாலும் ஃபினிஷிங்கில் சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது. சிவா தன்னுடைய ஆளைக் கண்டடைந்தானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ‘எனக்கு லவ் பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும்’ என்ற ஒற்றைப் பரிமாணக் கதைக் கருவை எடுத்துக் கொண்டு பேசிப் பேசியே மாய்கின்றனர் கதாபாத்திரங்கள். சூரி: அந்தப் பொண்ண பார்த்ததுமே உனக்குப் புடிச்சிப் போனதுக்கு என்ன காரணம் தெரியுமா? சிம்பு: என்ன? சூரி: ஒன்னு உன்னோட பருவம். இன்னொன்னு அந்த பொண்ணோட புருவம். நயன்தாராவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ஒரே மாதிரியான புருவங்கள் என்பதால் நயன்தாராவைப் பார்த்ததுமே சிலம்பரசனுக்குப் பிடித்துப் போய் விடுகிறதாம். அப்படின்னு சூரி சொல்றார். இப்படி இலக்கற்ற கதைப் போக்கினாலும், கடியான வசன...
அரண்மனை விமர்சனம்

அரண்மனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில் கதை என்று பார்த்தால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றே! கொலை செய்யப்பட்ட பெண் பேயாகி பழிவாங்குகிறார். தன் பரம்பரை சொத்தான அரண்மனையை விற்க கிராமத்திற்கு வருகிறான் முரளி. வந்த இடத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பேயின் பிடியில் இருந்து அந்தக் குடும்பம் எப்படித் தப்பிக்கிறது என்பதுடன் படம் முடிகிறது. சுந்தர்.சி படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ அதை அவர் ஏமாற்றாமல் வழங்கியுள்ளார். சந்தானம், கோவை சரளா, மனோபாலா, சாமிநாதன் ஆகிய நடிகர்களைக் கொண்டு நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறார். படத்தைக் காப்பாற்றுவது பேய் அல்ல. சந்தானமும் கோவை சரளாவுமே! அதுவும் மனோபாலா சந்தானம் வாயில் மாட்டும் பொழுதெல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. “முருங்கை காய் சாப்பிட்டா மூடு வரும்; இங்க முருங்கை காய்க்கே மூடு வந்துடுச்சே!” என மனோபாலாவைக் கலாய்க்கிறார். வெங்கட் ராகவனின் வசனங்களில், “மூடு (mood)” என்ற வார்த்தைய...