Shadow

Tag: சித்தார்த்

“இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு” – இயக்குநர் ஷங்கர்

“இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு” – இயக்குநர் ஷங்கர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2” ஆகும். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த் ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.நடிகர் சித்தார்த், "இது மிகப் பெரிய மேடை கமல்ஹாசன் சார், ஷங்கர் சார் இருவரும் அவர்களின் உழைப்பால் இந்த மேடையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மேடையில் நானும் இருப்பது பெருமை. 25 வருடம் கழித்து இரண்டாவது வாய்ப்பாக, என் குருவுடன் நடிக்கும் இந்த வாய்ப்பை ஷங்கர் சார் தந்துள்ளார். அவருக்கு நன்...
சித்தா விமர்சனம்

சித்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறு குழந்தைகள் கைகளில் போன் கொடுப்பதும், அவர்கள் போனில் இருக்கும் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தலாம் என்பதை பதைபதைப்புடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பேசி இருக்கிறது “சித்தா”  திரைப்படம்.  சித்தப்பா என்பதை சுருக்கி “சித்தா, சித்தா” என்று கூப்பிடுவதையே  படத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றனர்.அண்ணன் மறைவுக்குப் பின்னர் தன் அண்ணி மற்றும் அவர்களின் 8 வயது குழந்தையுடன் வாழும் ஈஸ்வரனாகிய சித்தார்த்தின் வாழ்க்கை இயல்பான மகிழ்ச்சியுடன் செல்கிறது. சிறுவயதில் தொலைத்த காதலியும் கூட எதிர்பாராவிதமாக மீண்டும் சித்தார்த் வாழ்க்கையில் வந்து ஐக்கியம் ஆகிறாள்.  சித்தார்த்திற்கு தன் அண்ணன் மகள் ஈஸ்வரி என்றால் உயிர்.  அது போல் சித்தார்த்தின் பள்ளிகாலத் தோழன் வடிவேலுவுக்கு அவனின் அக்கா மகள் வைஷ்ணவி என்றால் உயிர். இவர்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல் மகிழ்ச்சியாக ...
சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சித்தார்த் ட்ராஃபிக் போலீஸாக நடிக்கிறார் என்பதால், சிக்னல் கம்பத்தில் ஒளிரும் மூன்று வண்ணங்களை, நில், கவனி, செல் என்ற நேரடி குறியீட்டுத் தலைப்பாகக் கொள்ளலாம். உட்பொருளாக, மாமன் மச்சானுக்குள்ளான மோதலைச் சிவப்பாகவும், சமாதானம் ஆவதை மங்கலக்கரத்தைக் குறிக்கும் மஞ்சளாகவும், ஒன்று சேருவதைச் செழுமையின் நிறமான பச்சையோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். படத்தின் முதற்பாதி அசரடிக்கிறது. காரணம் குழந்தைகள். பெற்றோரை இழந்த ஒரு பள்ளிச் சிறுவன் தன் அக்காவின் வகுப்புக்குச் சென்று, அக்காவின் வகுப்பு ஆசிரியையிடம், 'பூனைக்கு நான் தான் அப்பா, அவ தான் எனக்கு அம்மா. இனி நான் தான் அவள் ரேங்க் கார்டில் சைன் போடுவேன்' எனச் சொல்லும் பொழுதே பார்வையாளர்கள் க்ளீன் போல்ட். ஒரே ஒரு காட்சியின் மூலம் முழுப் படத்துக்கும் ஜீவன் கொடுத்துவிடுகிறார் இயக்குநர் சசி. அச்சிறுவர்களின் அத்தையாக யூ-ட்யூப் நக்கலைட்ஸ் புகழ் தனம் ...
தி லயன் கிங் விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளியான 'தி லயன் கிங்' படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், 'ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)' எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் 'டிஸ்னி இந்தியா', நேரடியாகத் தமிழிலேயே 'டப்' செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு. வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொ...
தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். “1994 ஆம் ஆண்டு, 2டி அனிமேஷனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் 'தி லயன் கிங்'. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது குடும்ப உணர்வுகளைப் பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் ம...
கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். "காமெடியை எப்படிக் கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குநர் சாம் ஆண்டன். யோகி பாபு இரவு பகலாகத் தூங்கக் கூட நேரமே இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் இந்தப் படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய 'முகம்' இந்தப் படத்தைக் காப்பாற்றும்" என்றார் நடிகர் மனோபாலா. ட்ரெய்லரில் ஒரு காட்சி வரும். 'என் முகம் என...
அவள் விமர்சனம்

அவள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிறைவேறாத ஆசையுடன் இருக்கும் ஆவியொன்று, 80 வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குடி புகுபவர்கள் மூலமாகத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தக் கதைக்கு, 'அவள்' என்பதை விட இன்னும் பொருத்தமான தலைப்பைச் சூட்டியிருக்கலாம். பேய்கள் என்றாலே, அவை பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளட்டை வலுவாக்கும் விதம் உள்ளது தலைப்பு. ஆண்ட்ரியா சித்தார்த் முதல் சந்திப்பை, அது காதலாக மாறுவதை, அவர்களுக்கு இடையேயான அன்யோன்யத்தை எனப் படத்தின் தொடக்கம் க்யூட்டானதோர் அத்தியாயமாக எடுக்கப்பட்டுள்ளது. பேய்ப் படம் என்றால் காமெடிப் படமென அந்த ஜானருக்கே புது அடையாளம் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில். அதிலிருந்து விலகி, சீரியசனாதொரு படமாக இது உள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சித்தார்த்தாலும், இயக்குநர் மிலிந் ராவாலும் எழுதப்பட்ட கதை இது. கதாசிரியர்களாக இருவரின் கூட்டணி அபார வெற்றி பெற்றி...
“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்

“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்

சினிமா, திரைத் துளி
சித்தார்த்தின் சினிமா மீதான காதல் தான் அவரை ஏடாகி எண்டர்டெயின்மென்ட் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது. முதல் தயாரிப்பான ஜில் ஜங் ஜக் படத்திலேயே, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தைத் தொட்டுச் சோதனை முயற்சி செய்தார். அத்தகைய தைரியமான முயற்சி தான், நவம்பர் 3 வெளியாகவுள்ள "அவள்" திரைப்படமும்! இப்பட இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தில் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். 'வயாகாம் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார். விக்ரம் வேதா போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கெனப் பெரும் பெயரையும் மதிப்பையும் சம்பாதித்திருக்கும் 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் அவர்கள் 'அவள்' படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளார். 'அவள்' குறித்து சித்தார்த் பேசுகையில், ''திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உ...
ஜில் ஜங் ஜக் விமர்சனம்

ஜில் ஜங் ஜக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இது மெஸ்சேஜ் சொல்ற படமில்லைங்க. இரண்டு மணி நேரம் ஜாலியா தியேட்டர்ல போய் சிரிச்சுட்டு வர படம்' என்கிறார் படத் தயாரிப்பாளராகியுள்ள சித்தார்த். அவரது நிறுவனத்தின் பெயர் 'ஏடாகி எண்டர்டைன்மெண்ட்'. ஒரு சரக்கினை சீனர்களிடம் ஒப்படைக்கும்படி, ஜில் - ஜங் - ஜக் ஆகிய மூவருக்கும் வேலையொன்று தரப்படுகிறது. அம்மூவரும் அந்த வேலையைச் சொதப்பாமல் செய்தார்களா என்பதுதான் படத்தின் கதை. ஜக் - ஜாகுவார் ஜகனாக சனந்த். டீசல் என்ஜின் போல் மெதுவாகக் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி, படத்தின் முடிவில் தன் நடிப்பால் ஜில்லையும் ஜங்கையும் ஓரங்கட்டி விடுகிறார் சனந்த். 'டிமான்ட்டி காலனி' படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். ஒரு பொருளைக் காட்டி, இதென்ன நிறமெனக் கேட்டால், அவர் கவிதையாக பதில் சொல்லும் விதம் கலக்கல். ஜங் - ஜங்குலிங்கமாக அவினாஷ் ரகுதேவன். படத்தில் இவரது வேலை "வாட்ச்" சு. சரக்கைக் குறித்த நேரத்தில் டெ...
அரண்மனை 2 விமர்சனம்

அரண்மனை 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் பெயரைக் கூட மாற்றாமல் முரளி என்றே வைத்து, மிக மிகச் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் அரண்மனையையே அரண்மனை-2 ஆக்கி விட்டுள்ளார் சுந்தர்.சி. முரளியின் வீட்டில் அமானுஷ்யனான சம்பவங்கள் நிகழ்கின்றன. தனது மாமன் மகன் ரவியின் உதவியுடன் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. முந்தைய அரண்மனையை விட, இப்படம் சகல விதத்திலும் சிறப்பாய் உள்ளது. ஆனால், அதே திரைக்கதை என்பதால் பார்த்த படத்தையே பார்க்கும் அசுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. பழி வாங்க நினைக்கும் மாயா ஏன் இறக்கிறாள் என்ற கிளைக் கதை அச்சமூட்டுகிறது. அக்காட்சிகளில் ராதா ரவியின் நடிப்பும் அனுபவமும் அற்புதமாய் வெளிபட்டுள்ளது. கெளரவக் கொலைகளை முற்றிலுமாக இம்மண்ணிலிருந்து ஒழிக்க மாயா போல் நான்கு பேய்கள் நிஜமாகவே உலாவினால் உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். ஹன்சிகா முகத்தில் இன்னும் கோபம் காட்டியிருக்கலாம். சித்தார்த் ஆச்சரியப்படுத...
எனக்குள் ஒருவன் விமர்சனம்

எனக்குள் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லூசியா எனும் கன்னடப் படத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் ராமர். லூசியா, தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்கள் பெருமையாக காலரை உயர்த்திக் கொள்ள உதவிய படம். முறைப்படியாக உரிமை வாங்கி தமிழில் எடுத்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து திரைத்துறையில் நுழைந்த பவன் குமாரின் பெயரே திரைக்கதையில் வருகிறது. ஒருவன்தான் வாழ நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதுதான் எனக்குள் ஒருவன் படத்தின் கதை. சித்தார்த்தின் கேரியரில் கண்டிப்பாக இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழும், வாழ நினைக்கும் என இரண்டு வாழ்க்கையையும் நடிப்பில் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். ஜிகர்தண்டா, காவியத் தலைவன் எனும் படங்களுக்குப் பிறகு, படத்தின் தனியொரு பிரதான பாத்திரமாக அவர் நடிப்பில் வந்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர் ஓனராகவும், நடிகரின் மேனேஜராகவும் வழக்கம் போல் நரேன் அசத்தியுள்ளார...
காவியத் தலைவன் விமர்சனம்

காவியத் தலைவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரவானைத் தொடர்ந்து வசந்த பாலனிடமிருந்து மீண்டுமொரு பீரியட் ஃப்லிம். ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடத்தி வருகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். அவரது சீடர்களில் ஒருவனான கோமதி நாயகம் ராஜபார்ட்டாக நடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் மற்றொரு சீடரான காளியப்பனுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். பொறாமைக் கனல் கொழுந்து விட்டெறியும் கோமதி நாயகம், சதித் திட்டம் தீட்டி காளியப்பனை ஓரங்கட்டுகிறான். பின் என்னாகிறது என்பதுதான் கதை. படத்தின் நாயகன் காளியப்ப பாகவதராக சித்தார்த். சூரபத்மனாக நடித்துக் காட்டும்போது அசத்துகிறார். இரண்டாம் பாதியில், இதுநாள் வரை பார்த்துப் பழகிய சித்தார்த்தாகவே திரையில் தெரிகிறார். மலையாள நெடியுடன் வசனம் பேசும் ப்ரித்விராஜ், கோமதி நாயகமாக தன் பொறாமையையும் வன்மத்தையும் கண்களில் தேக்கியபடி படம் முழுவதும் வருகிறார். சித்தார்த் போலில்லாமல் கடைசி வரை கோமதி நாயகமாகவே தெரிகி...
ஜிகர்தண்டா விமர்சனம்

ஜிகர்தண்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. ...
“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

சினிமா, திரைச் செய்தி
“எனக்கு படத்தில் கொஞ்ச நாள்தான் ஷூட்டிங் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் ஹீரோக்களில் சித்தார்த்தும் ஒருவர். அவருக்கு ஹீரோயினாக நடிச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்ற லட்சுமி மேனனுக்கு ஒரு பெரிய வருத்தம். பதினோராம் வகுப்பு பரீட்சை தொடங்கியதால்.. ‘ஜிகர்தண்டா’ ஆடியோ லான்ச்க்கு வர முடியாமல் போய்விட்டதென லட்சுமி மேனன் ரொம்பவே ஃபீல் பண்ணார். அதற்கென்னச் செய்ய முடியும்? படிக்கிற பிள்ளைங்களுக்கு சினிமாவால் சோதனைகள் வருவது சகஜம்தானே! “லட்சுமி மேனன்.. லெவன்த்தான் படிக்கிறாங்க. நான் சொல்றதைப் புரிந்து கொண்டு நடிப்பாங்களான்னு சந்தேகமாகவே இருந்தது. அவங்க மெச்சூரிட்டி லெவல் எப்படியிருக்கணும் நினைச்சுட்டிருந்தேன். ஆனா நாம எதிர்பார்க்கிற எக்ஸ்ஃபிரஷன்ஸை அவங்க முகமும் கண்ணும் கொடுத்துடுது. சித்தார்த்துக்கும், லட்சுமி மேனனுக்கும் எமோஷனல் சீன்ஸ் வரும். பயந்துட்டே இருந்தேன். பார்க்க எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தத...