Shadow

Tag: நிகில்

RRR விமர்சனம்

RRR விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் - ரணம் - ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே ஆச்சரியப்பட வைக்கிறார். 186 நிமிடங்கள் நீள படம் என்பதெல்லாம், இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறை. ஆனால், ராஜமெளலியின் மேஜிக் ஷோவில் நேரம் போவதே தெரியவில்லை. The StoRy - The FiRe - The WateR என...
நாய்சேகர் விமர்சனம்

நாய்சேகர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான படங்கள் பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் வெளியாவது மக்களின் மனதிற்கும் ஆரோக்கியம். சினிமாவிற்கும் ஆரோக்கியம். அந்த வகையில் இந்தப் பொங்கலுக்கு ஒரு ஆரோக்கிய வரவு நாய்சேகர். மனிதனிடம் மிருகங்களின் குணம் உண்டு என்பார்கள். ஒருவேளை முழுக்க முழுக்க ஒரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தின் நடவடிக்கைகள் கலந்து விட்டால் என்னவாகும்? இப்படியான ஆர்வம் எழும் ஒரு கருவைக் கதையாகப் பிடித்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். ஹீரோ சதீஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர். அவருக்கு சிறு வயது முதலே நாய் என்றால் அலர்ஜி. அவரது வீட்டருகே ஒரு விஞ்ஞானி நாயின் டி.என்.ஏவை மனிதனுக்குள் கடத்தும் பரிசோதனை செய்துவருகிறார். அதற்காகவே ஒரு நாயை அடைத்துப் போட்டு அவர் வளர்த்து வருகிறார். ஒருநாள் அந்த நாய் வெளியில் வந்து சதீஷைக் கடித்து விடுகிறது. நாய் கடி...
மிருகா விமர்சனம்

மிருகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருகமாகிவிட்ட ஒரு மனிதனைப் பற்றிய படம். பணக்கார விதவைகளைக் குறி வைத்து, அவர்களை அணுகி நற்பெயர் எடுத்து, பணத்திற்காக அவர்களைக் கல்யாணம் செய்து, அவர்களைக் கொன்றுவிடும் சைக்கோ தான் படத்தின் எதிர்நாயகன். அவனிடமிருந்து நாயகி தப்பினாரா என்பதுதான் படத்தின் கதை. கதை ஊட்டியில் நடக்கிறது. எஸ்டேட்டில், man-eater ஆக மாறிவிடும் புலி ஒன்று முக்கிய ரோலில் வருகிறது. புலி வரும் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கணினி வரையியல் (CG) காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. க்ளைமேக்ஸின் த்ரில்லிங் அனுபவத்திற்குப் புலி பொறுப்பெடுத்துக் கொள்கிறது. படத்தின் எதிர்நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். படம் இவரது வில்லத்தனத்தைச் சுற்றியே நகர்கிறது. ஆனால், ஸ்ரீகாந்தின் மிதமான நடிப்பு, கதாபாத்திரத்தின் சீரியஸ்தன்மையை நீர்த்துப் போகச் செய்கிறது. பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிய கதாபாத்திரத்திலும், பாந்தமாகத் தோ...
க/பெ. ரணசிங்கம் விமர்சனம்

க/பெ. ரணசிங்கம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கால சக்கரம் போல் அரசு இயந்திரமும் சுழன்று கொண்டே இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாதகால சக்கரம் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாது; மனிதர்களால் இயக்கப்படும் அரசு இயந்திரமோ ஆட்களுக்குத் தக்கவாறு தன் ஓட்டத்தை மாற்றிக் கொள்ளும். புகழ்மிகு நடிகை ஸ்ரீதேவியின் உடல் ராஜ மரியாதையோடு கொண்டு வர உதவ இயங்கும் அரசு இயந்திரம், ரணசிங்கத்தின் இறந்த உடலைக் கொண்டு வர இல்லாத நொறுநாட்டியமெல்லாம் பேசுகிறது. அரசு இயந்திரம் சாமானியனுக்குக் காட்டும் முகமும், அதிகாரத்திற்கும் பணத்திற்கும் காட்டும் முகமும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைப் போன்றது. இப்படம், அதைத் தோலுரித்துக் காட்டுகிறது. இது அரசுடனான அரியநாச்சியின் தனிப்பட்ட போராட்டம். ஆனால் படத்தின் தலைப்பில் இருந்தே ரணசிங்கத்தின் ஆதிக்கம்தான். எவரையும் நம்பி வாழ முடியாது எனத் துணிந்து போராடத் தொடங்கும் அரியநாச்சி, கணவனின் சட்டையை அணிந்தே போராடுகிறார். இ...
பெண்குயின் விமர்சனம்

பெண்குயின் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. “ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த கொலைகாரன். அதோடு படம் சரி” என பெண்குயின் பார்வையாளர்களைத் தெறிக்க விட்டுள்ளது. படத்தோடு ஒன்ற முடியாமல், தொடக்கத்தில் இருந்தே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. என்ன தான் விஷூவல்ஸில் அசத்தியிருந்தாலும், தட்டையான கதாபாத்திரங்களை மீறிப் படத்தில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது. சுமார் ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த மகனைத் தனி அறையில் படுக்க வைப்பதெனும் கலாச்சாரமே ப...
தாராள பிரபு விமர்சனம்

தாராள பிரபு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘விக்கி டோனர்’ என 2012இல் வெளிவந்த ஹிந்திப் படத்தின் ரீமேக்காக இப்படம் வெளிவந்துள்ளது. ஜுஹி சதுர்வேதியின் கதையை, விவேக்கை உள்ளே கொண்டு வந்து மேலும் நகைச்சுவையாகப் படத்தை எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. ‘என்னது நீ ஸ்பேர்ம் டோனரா?’ என நாயகி கேட்கும் பொழுது கேவலமாகத் தெரியும் தொழில், விவேக் ஸ்பேர்ம் (விந்து) பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ரசிக்க முடிகிறது. படத்தின் நாயகனே விவேக் தான் எனச் சொல்லுமளவு, முதல் ஃப்ரேமில் இருந்து கடைசி வரை அதகளம் புரிந்துள்ளார். தன் வசன உச்சரிப்பாலும், கண்ணை உருட்டும் நடிப்பாலும் படத்திற்குக் கலகல டோன் கொடுத்துள்ளார் விவேக். ஜாலியான படத்திற்குத் தனியொரு நபராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தடம் படத்து நாயகி தான்யா ஹோப், நிதி மந்தனா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதிகம் பேசாதவராக அறிமுகமாகி, மெல்ல நாயகன் மேல் விருப்பம் கொண்டு, மிக மெச்சூர்டாக த...
ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்

ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓம் எனத் தொடங்கப்பட்ட படத்தை, 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளனர். மகனால், லண்டன் ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்க்கப்படுகிறார் பாரதிராஜா. அங்கே அவரது நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரளிக்கும் உயிலை உரியவரிடம் சேர்க்க ஸ்காட்லாந்திற்குக் கிளம்புகிறார். இடையில், தற்கொலைக்கு முயலும் ராசி நட்சத்திராவிடம் ஆதரவாகப் பேசி, அவரைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கிறார். தன்னுடன் ஸ்காட்லாந்து வரை பயணித்தால், தற்கொலை எண்ணம் விலகும் எனக் கூறி ராசி நட்சத்திராவுடன் பயணிக்கிறார். பயணத்தின் முடிவில் என்னாகிறது என்பதே படத்தின் கதை. OM (ஓம்) என்றால் ஓல்ட் மேன். ராசி நட்சத்திரா பாரதிராஜாவை, ஓல்ட் மேன் என்றே படம் முழுவதும் அழைக்கிறார். ஆனால், அவரை யாராவது அப்படி அழைத்தால் ராசி நட்சத்திராவிற்குக் கோபம் வந்துவிடுகிறது. 'நம் வீட்டுக் குழந்தையை நாம் விருப்பப்பட்ட பெயரில் கூப்பிடலாம். ஆனால் இன்னொரு...
காட் ஃபாதர் விமர்சனம்

காட் ஃபாதர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிமையில் எண்ணற்ற வலிமையுண்டு என்பதை நிரூபித்து இருக்கிறது காட்ஃபாதர். ஒரு சாதாரண அப்பாவிற்கும், மற்றொரு தாதா அப்பாவிற்கும் முட்டல் வந்தால் முடிவு என்னாகும் என்பதைத் தான் காட்ஃபாதர் பேசி இருக்கிறது. திரைக்கதை அமைப்பில் வலுவாக இருக்கிறார் காட்ஃபாதர். அமைதியை விரும்பும் நட்டிக்கு மகன் என்றால் உயிர். அந்த மகனின் உயிரைத் தன் மகனுக்காக வாங்க நினைக்கிறார் வில்லன் லால். நட்டி தன் மகனைக் காப்பாற்ற அப்பார்ட்மென்ட் உள்ளிருந்தே எடுக்கும் முயற்சிகள், அதற்கு லால் எதிர்வினையாற்றும் செயல்கள் என படம் நெடுக பரபரப்பிற்குக் குறைவேயில்லை. நடிகர் நட்டிக்கு இந்தப் படம் நல்லதொரு அடையாளம். எல்லாக் காட்சிகளையும் சரியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். அவரின் மனைவியாக வரும் அனன்யாவும் குறை காண முடியாதளவில் தன் பங்களிப்பைக் கொடுத்துள்ளார். வில்லன் லானின் நடிப்பில் வீரியம் அதிகம். குட்டிப்பையன் அஸ்வந்த் அட...
பிழை விமர்சனம்

பிழை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்களில், கதையினூடாக மறைமுகமாகவோ, நேராகவோ பாடம் புகட்டுதலும் இருக்கும். பிழை படமும் அப்படியான ஒரு முயற்சி தான். ஆனால் பிழை ஒரு நல்ல பாடத்தைத் தாங்கி வந்திருந்தாலும் ஒரு நல்லபடமாக உருபெற சற்றே திணறுகிறது. வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கல்வி என்பது கசப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால், அக்குழந்தை மாணவர்கள் மட்டம் தட்டப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சென்னை வர, அதன் பின் அவர்களுக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை. படத்தில் நடித்துள்ளவர்கள் எல்லாரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான பின்கதை ரைட்டிங் மிகவும் பின் தங்கி இருப்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களின் பொறுமையை மிகவுமே சோதித்து விடுகின்றனர். படிக்காமல் தனது உழைப்பால் முன்னேறியவர்களை மட்டும் கணக்கில் எடுத்...
“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

சினிமா, திரைத் துளி
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தைத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கிறது. படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி, “எனது அம்மா ஒரு சிறந்த திரைப்பட ரசிகை. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு தென்னகத்து மொழிப் படங்களையும் பார்த்து ரசிப்பார். அதிலும் குறிப்பாக அவருக்கு பாலசந்தர் மற்றும் கமல் ஹாசனின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். அவரோடு சேர்ந்து தமிழ்ப் படங்களின் மீது எனக்கும் ஒரு பெரிய நன்மதிப்பும் மரியாதையும் உண்டு. மேலும் தமிழ்ப் படங்களில் கதையும், திரைக்கதையும் பலமாக இருப...
மலையாள இயக்குநரின் “அல்லி”

மலையாள இயக்குநரின் “அல்லி”

சினிமா, திரைச் செய்தி
‘செக்ஸி துர்கா’ எனும் படத்தை இயக்கிய சனல் குமார் சசிதரனின் ‘சோலா’ எனும் மலையாளப் படத்தை, “அல்லி” என்ற பெயரில் தனது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். நகர வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியும், அவரது காதலனும் யாருக்கும் தெரியாமல், ஒரு நாள் நகரத்திற்குச் சென்று வர விரும்புகிறார்கள். அவர்களின் பயணத்தில், மூன்றாவதாய் ஒரு நபர் இணைந்து கொள்கிறார். இந்தப் பயணத்தால், பள்ளி மாணவியின் வாழ்க்கை என்னானது என்பது தான் இப்படத்தின் கதை. “இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது. ஆனால் படவிழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் மட்டுமே வெளியாகும். இப்படத்தில் பாடல்கள், நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் என்று எந்த ஒரு விசயமும் இருக்காது. படம் முழுவதும் மிக எதார்த்தமாக தான் இருக்கும். இந்த படம் எடுக்க எந்த ஒரு வியாபார நோக்கமும...
அடுத்த சாட்டை விமர்சனம்

அடுத்த சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே வேலையாகப் போய்விட்டதென அவர் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை. ஆனால், நாயகியான போதும்பொண்ணு, “நான் அந்த சாதியைச் சேர்ந்த பையனைக் காதலிக்கவில்லை. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். அவனைக் கூடப் பிறந்தவனா நினைச்சுத்தான் பழகுறேன்” என்று நாயகனிடம் சொன்னதும், ஒட்டுமொத்த கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கும் சாத...
கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோமாவில் உள்ள கருப்புதுரை எனும் முதியவரைத் தலைக்கு ஊத்திக் கொல்லப் பார்க்கின்றனர். கோமாவில் இருந்து எழும் கருப்புதுரை, பிள்ளைகளின் திட்டம் அறிந்து மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு கோயிலின் பிரகாரத்தில் சந்திக்கும் குட்டி எனும் அனாதை சிறுவனுடனான நட்பு, ஆவர் வாழ்வில் புது வசந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிறுவனுக்கும், பெரியவருக்குமான அழகான நட்பின் பயணம்தான் படத்தின் கதை. தலைக்கூத்தல் என்பதை கருணைக் கொலை (Euthansia) என்ற வகைமைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். விருப்ப மரணத்தினைத்தான் அப்படிச் சொல்லமுடியும். இங்கு தமிழகத்தில் நிலவும் இப்பழக்கம், சுமை எனக் கருதும் பெரியவர்களை அகற்ற நடக்கும் குடும்பத்தினரால் திட்டமிடப்பட்ட கொலைகள். படத்தின் தொடக்கத்தில், ஓர் ஆவணம் போல் ‘தலைக்கூத்தல் அவசியமா? ஏன் அவசியம்?’ என்ற கேள்விகளை அணுகியுள்ளனர். அந்த ஆவணம் அதற்கு ஆதரவான குரலைத் தர...