Shadow

Tag: நிகில்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2010 இல் வந்த தமிழ்படம், தமிழ்ப்படம் 2 ஆகப் புத்தும்புது பொலிவுடன் வந்துள்ளது. இந்த முறை, இயக்குநர் C.S.அமுதன் தமிழ்ப் படங்களின் பொதுத்தன்மையை மட்டும் பட்டும்படாமல் ஓட்டாமல், ஹாலிவுட் படங்கள், சம கால அரசியலின் அவலங்கள், மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகள், இயக்குநர்களின் படமெடுக்கும் பாணிகள், ரியாலிட்டி ஷோ அலப்பறைகள் எனத் தனது களத்தைப் பெரிதாக்கியுள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதையும் எங்கெங்கோ, எப்படியெப்படியோ பயணித்தாலும், ‘போலீஸ் அத்தியாயம்’ என்ற உப தலைப்பிற்கு ஏற்றவாறு திரைக்கதை ஊர்ந்து செல்கிறது. தேவர் மகன் கமல் ஹாசன் கெட்டப்பில் அறிமுகமாகும் ஷிவா, படத்தின் முடிவில் மீண்டும் தேவர் மகன் க்ளைமேக்ஸ்க்கே வந்துவிடுகின்றனர். இடையில், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, பிசாசு, ஸ்பீடு, டெர்மினேட்டர் என இஷ்டத்திற்கு வலம் வருகிறது. எவ்வளவு யோசித்தாலும், முதல் பாகத்தின் காட்சிகள் எதுவும்...
அனுமனும் மயில்ராவணனும் விமர்சனம்

அனுமனும் மயில்ராவணனும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல்முறையாக இந்தியாவில் தயாராகியுள்ள இதிகாசக் கதையம்சம் உள்ள 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம், ‘அனுமனும் மயில்ராவணனும்’ ஆகும். இராமாயண போரின் கடைசி நாளுக்கு முந்தைய நாளில், தரையில் வீழ்ந்து கிடக்கும் ராவணனைப் பார்த்த ராமன், "நிராயுதபாணிகளைத் தாக்குவது தர்மம் ஆகாது. நீ இன்று போய் நாளை வா" என்கிறார். அன்றிரவு அவமானத்தில் பொறுமிக் கொண்டிருக்கும் ராவணனுக்கு, அவன் தலைகளில் ஒன்று, மாயாவி மயில்ராவணனைக் கொண்டு ராமனைக் கொல்வதற்கான யோசனையைச் சொல்கிறது. அதற்கேற்ப மாயாவியான மயில்ராவணன், விபீஷ்ணனின் பலமான தற்காப்பை மீறி ராமனையும் லக்ஷ்மனனையும் கடத்தி விடுகிறான். தனியனாக அனுமன் எப்படி தன் பிரபுக்கள் இருவரையும் மீட்டார் என்பதே படத்தின் கதை. இப்படத்தின் இயக்குநர் டாக்டர் எழில்வேந்தன் ஒரு பல் மருத்துவர், அனிமேஷன் துறையில் உள்ள ஆர்வத்தால் அதைப் பயின்று, பின் இங்கிலாந்து சென்று வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட ...
நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகையர் திலகம் விமர்சனம்

அயல் சினிமா, கட்டுரை, சினிமா, திரை விமர்சனம்
சினிமா, இன்றளவும், ஆண்கள் மட்டுமே கோலேச்சி வரும் துறையாக உள்ளது. டி.பி.ராஜலட்சுமி, பானுமதி, சாவித்திரி போன்ற மிகச் சிலரே விதிவிலக்குகளாகத் தங்களுக்கான முத்திரையை அழுத்தமாகத் திரையுலகில் பதித்துள்ளனர். துடுக்கான உடற்மொழியாலும், துள்ளலான பாவனைகளாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற கலைஞர் சாவித்திரி. அவரைப் பற்றிய 'பையோ-பிக்' படமாகத் தெலுங்கில் "மகாநதி" என படம் எடுத்துள்ளார் நாக் அஷ்வின். மிக அற்புதமான ஒரு காண் அனுபவத்தைப் படம் தருகிறது. தமிழ் டப்பிங்கும் உறுத்தாமல், தேவையான இடத்தில் தெலுங்கு வசனங்களையே அப்படியே பயன்படுத்தியுள்ளது சிறப்பு. 'தொடரி' படத்தைப் பார்த்து விட்டு கீர்த்தி சுரேஷை, இந்தப் படத்தில் சாவித்திரியாக நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நாக் அஷ்வின். படத்தின் உயிராய் மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தின் இரண்டாம் பாதியில், கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மறைந்து சாவித்திர...
காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வெயிட்டிங் லிஸ்ட்' என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப் புரிந்து கொள்ளலாம். படம் இரயில்வே ஸ்டேஷனில், அதாவது இரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்கிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். காதலைச் சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் என்றும் தலைப்பிற்கு ஓர் உபப்பொருளை ஒரு பாடலின் வரியில் அளித்துள்ளனர். சத்யாவும் மேகலாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாளன்று தாம்பரம் இரயில்வே போலீஸாரினால் கைது செய்யப்படுகிறான் சத்யா. அவர்களின் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். புதுமையான கதைக்களன், கலவையான கதாபாத்திரங்கள் எனச் சுவாரசியமாகத் தொடங்குகிறது. எனினும் படம், 'தன்னைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும்' எ...
மெர்க்குரி விமர்சனம்

மெர்க்குரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நிசப்தம் தான் வலுமிகு அலறல்’ என்ற கேப்ஷனோடு படம் சத்தமின்றித் தொடங்குகிறது. வசனங்களற்று தொழில்நுட்பம் கோலேச்சும் அற்புதமான முயற்சி. அப்படியும் முதற்பாதியில் தமிழ் சப்-டைட்டில் வருகிறது. கதையைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு செய்கின்றனர். ஒருவழியாக ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து, இடைவேளைக்குப் பிறகு சப்-டைட்டிலுக்கும் குட்பை சொல்லிப் பெருமைப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கதைக்களனும், கதையின் மாந்தர்களும், திரையின் நிறமும் மிகவும் புதிது. ஃப்ரேமில் பரவி நிற்கும் பச்சை நிற பின்புலம் திகிலையும் அமானுஷ்யத்தன்மையையும் தருகிறது. பச்சை நிற பின்புலம் பசுமையின் செழுமையாக இல்லாமல், மெர்க்குரியின் நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. அதனால் ஒரு நகரமே எப்படிப் பாதிக்கப்படுகிறது என நடுக்கம் தருமளவு சித்தரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். காது கேளாதவர்களை நடித்திருக்கும் சனந்த், இந்துஜா...
தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இயக்குநர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிச்சுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் மிஷ்க...
கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

சமூகம், சினிமா
வரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது. “விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது நியாயமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு ‘ஸ்கீம்’என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது. கிளி என்றாலும் கிள்ளை என்றாலும் ஒன்றுதான். ‘ஸ்கீம்’ என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றத்த...
கூட்டாளி விமர்சனம்

கூட்டாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜீவா, அறிவு, தண்டு, விக்கி ஆகிய நால்வரும் நண்பர்கள். சேட் பிபி (BB)-யிடம், வட்டி கட்டாத வண்டிகளைத் தூக்கும் வேலை செய்து வருகின்றனர். அறிவு, ஜீவாவை வளர்த்த பீட்டர், சேட் பிபி என ஜீவாவைச் சுற்றி அனைவருமே கொல்லப்படுகின்றனர். யார், ஏன் அனைவரையும் கொல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. ஜீவாவாக நடித்துள்ள சதீஷின் முகம் மிகச் சுலபமாக மனதில் பதிகிறது. நாயகனாக தோன்றாமல் நமக்கு நன்கு தெரிந்த ஒரு பையன் என்ற உணர்வைத் தரும் முகம் அவருடையது. எந்த வாகனமாக இருந்தாலும், யாருடையது என்றாலும் தூக்கி விடுவார். நண்பர்களை எக்காரணம் கொண்டும் கைவிடாதவர். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மரணத்துக்குத் தனது காதலி தான் காரணமென அறிந்து, அவளைக் கொல்ல நாயகன் சபதமேற்பதில் இருந்தே படம் தொடங்குகிறது. திவ்யாவாக க்ரிஷா குரூப் நடித்துள்ளார். தனது தாயின் ஞாபகமார்த்தமாக வைத்திருக்கும் செயினை, வழிபறித் திருடனிடம் இருந்து மீட்பதா...
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்பது திருமாலைப் போற்றும் திருநாமங்களில் ஒன்று. பக்தியைச் சிலாகிக்கும் படமிது. திருப்பதி பெருமாளான பாலாஜிக்கும், அவரது பரம பக்தனான ஹாத்திராம் பாபாக்குமான பிணைப்பே படத்தின் கதை. 'கடவுளைக் காணும் வழி யாது?' என அழகு சிறுவனான ராமன் வினவுவதில் இருந்து படம் தொடங்குகிறது. 'ஓம்' என்ற ராமனின் கடுந்தவம் வைகுண்டத்தை அடைய, பெருமாள் ராமனைக் காண பாலகனாக வருகிறார். சிறுவனைக் கடவுளென உணராமல் துரத்தி விடுகிறார் இளைஞனான ராமன். பின் மீண்டும் எப்படி இறையை உணர்ந்து ஆத்ம பக்தனாகப் பெருமாளுக்கு மிகப் பிரியமானவராகப் பரிணமிக்கிறார் என நெகிழ்ச்சியாகப் பயணிக்கிறது படம். பக்தர் ஹாத்திராமாக நாகார்ஜுனா அசத்தியுள்ளார். அன்னம்மாச்சார்யாவாக முன்பே பக்திப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்த முன் அனுபவம் இதில் அநாயாசமாய் மிளிர்கிறது. பெருமாளுக்கு நித்ய கல்யாண பூஜ்சி செய்வதாகட்டும், அவருடன் பக...