Shadow

Tag: நிகில்

ஏமாலி விமர்சனம்

ஏமாலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாலீஸ்வரனுக்கு ரித்து பிரேக்-அப் சொல்லிவிடுகிறாள். தன்னை ஏமாளியாக உணரும் மாலி, அவரது நண்பர் அரவிந்துடன் இணைந்து ரித்துவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த ஆப்ரேஷனின் பெயர் A.Maali (ஏமாலி), அதாவது A for அரவிந்தன் & Maali for மாலீஸ்வரன். அந்த ஆப்ரேஷனின் முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. மாலியாக சாம் ஜோன்ஸும், அரவிந்தாக கொலைக்கான திட்டமிடலைப் போலீஸின் விசாரணைக் கோணத்தில் இருந்து தொடங்குகின்றனர். எனவே திரைக்கதை நான்-லீனியராக, உண்மை - கற்பனை என இரண்டு கோணங்களில் நகர்கிறது. இந்தத் திரைக்கதை யுக்தியைக் குழப்பமில்லாமல் இயக்குநர் துரை கையாண்டிருந்தாலும், படத்தின் முடிவு ஒரு வகையான ஏமாற்றத்தைத் தருகிறது. ட்ரெண்டியாக, ஜாலியாக, யூத் ஃபுல்லாகச் சென்ற படம் அதற்கான நிறைவைத் தரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள் மொக்கையாகவோ, எல்லை தாண்டாமலோ இருப்பது ஆறுதல். 'கஸ்கா முஸ்கா' என்று ஜெயமோகன் தனது வசனங்களால்...
படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான். 'சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்' என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம். படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் பெண்கள் கூடிக் கொலை செய்யும் பொழுது, அந்த அண்ணனுக்கு எந்தப் பதற்றமும் எழுவதில்லை. சாதிப் பெருமையைக் காப்பது தான் தங்கள் தலையாயக் கடமையெனக் கருதிக் கொலை செய்யும் பெண்களுக்கோ எந்தக் குற்றயுணர்ச்சியுமில்லை! 'உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?' என்று தலைவராக வரும் கவிதா பாரதியின் கேள்வி...
பாகமதி விமர்சனம்

பாகமதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அருந்ததீ அனுஷ்காவை மனதில் கொண்டு பாகமதி உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஓர் அமைச்சரின் மீது பழி போட, அவரது பெர்ஸனல் செகரெட்டரியும், கொலைக் குற்றவாளியுமான ஐ.ஏ.எஸ். அனுஷ்காவை விசாரணைக்காகப் பாகமதிக் கோட்டையில் அடைக்கின்றனர். அக்கோட்டையில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அக்கோட்டையின் அமானுஷ்ய அச்சுறுத்தல்களில் இருந்தும், விசாரணையில் இருந்தும் பாகமதி எப்படித் தப்பினார் என்பது தான் படத்தின் கதை. படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர். மிகவும் நல்லவரான அமைச்சர் ஜெயராமை எந்த வழக்கிலாவது சிக்க வைக்க வேண்டுமென சி.பி.ஐ. முடுக்கி விடப்படுகிறது. 'பவர் பாலிடிக்ஸ்' என்றால் என்னவென்றும், அது எப்படி அதிகார வர்க்கத்திற்குச் சாத்தியமாகிறது என்பதையும் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அனுஷ்கா வழக்கம் போல் அசத்தியுள்ளார். அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் அல்லவா? ஆனால், ஃப்ளாஷ்பே...
குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில். இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபாத்...
குலேபகாவலி – பொங்கல் விருந்து

குலேபகாவலி – பொங்கல் விருந்து

சினிமா, திரைத் துளி
KJR ஸ்டுடியோஸ் சார்பாகக் கோட்டபாடி J.ராஜேஷ் தயாரிக்கும் படம் "குலேபகாவலி". இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகி பாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மொத்த படப்பிடிப்பு நாட்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாகப் படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் மட்டுமே 28 நாட்களும், வசனக் காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. அதிலும் இதில் வரும், "...
மாயவன் விமர்சனம்

மாயவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை செய்பவன் இறந்து விடுகிறான். ஆனாலும், ஒரே மாதிரியான கொலைகள், கொலையாளி இறந்த பின்னும் தொடர்ந்து நடக்கின்றன. யார் இக்கொலைகளைச் செய்வது, எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் மாயவன் படத்தின் கதை. மாயவன் – யார் கண்ணுக்கும் தெரிவதில்லை; அவனுக்கு இறப்பும் நேருவதில்லை. உடல்களை மட்டும் மாயவன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். ஆனால், இது கூடு விட்டு கூடு பாயும் கதையில்லை. தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் முதல் படமிது. நேரத்தை வளர்க்காமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடுகிறார். அதுவும் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே, ஒரு கொலைச் சம்பவத்தைப் போலீஸ் அதிகாரி ஒருவர் பார்க்க நேரிடுகிறது எனச் சுவாரசியமான ஒரு காட்சியினை வைத்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலும், இசையமைப்பாளர் ஜிப்ரானும், அந்த விறுவிறுப்பைக் கடைசி வரை தக்க வைக்க உதவியுள்ளனர...
திருட்டுப்பயலே – 2 விமர்சனம்

திருட்டுப்பயலே – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அவன் இவன் ரகசியத்தை, இவன் அவன் அந்தரங்கத்தை என ஒருவரை ஒருவர் தொழில்நுட்பத்தின் உதவிக் கொண்டு உளவு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவனா, இவனா, வல்லவன் எவனோ அவனே வெல்வான் என்பதுதான் படத்தின் கதை. உளவுத்துறைப் பிரிவைச் சேர்ந்த ஒட்டு கேட்கும் காவல்துறை அதிகாரி செல்வமாக பாபி சிம்ஹா நன்றாக நடித்துள்ளார். அவரொரு காட்சியில், தன் அம்மாவின் கையைப் பிடித்தவாறு, "தொழில்நுட்பம் கொல்லுதும்மா" என்பார். அது தான் படத்தின் மையச் சரடு. நம்மைச் சுற்றிச் சுற்றி ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் செவிகளுடனும் இருக்கும் தொழில்நுட்பத்தில் இருந்து ஓடவோ ஒளியவோ முடியாது என்பதுதான் படம் அச்சுறுத்தும் உண்மை. கூடவே வாழ்ந்தாலும், தன் மனைவி அகல் விளக்கின் ரசனைகள் பற்றி பாபி சிம்ஹாவிற்குப் பெரிதாய்த் தெரிவதில்லை. ஆனால், அகல்விளக்கிற்கு ஃபேஸ்புக்கில் நண்பராய் இருக்கும் பால்கி எனும் பாலகிருஷ்ணனுக்கு எல்லாம் தெரிகிறது. அகல்விளக்காய...
தீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம்

தீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஹிந்தியில் தான் 'ஜூலி 2'. தமிழ் டப்பிங்கில், இயக்குநரின் பெயரோடு சேர்ந்தே தலைப்பிடப்பட்டுள்ளது. ஜூலி என்ற நடிகையின் அகச் சிக்கல்களைப் பேசுவதுதான் படத்தின் கதையாக இருந்திருக்க வேண்டும். ராய் லக்‌ஷ்மியின் பாலிவுட் அறிமுகம் மிக எரோடிக்காக (Erotic) அமைந்துள்ளது. படத்தில் கதை என்ற ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என்ற போதிலும், அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத திரைக்கதை, ராய் லக்‌ஷ்மியின் உடலையே மொய்த்துக் கொண்டிருக்கிறது. கதைக்கான துகிலுரிப்பாக இல்லாமல், துகிலுரிப்பிற்காகவே இப்படமென்ற இயக்குநர் தீபக் ஷிவ்தசானியின் தெளிவு திடுக்கிட வைக்கிறது. தனது தெளிவிற்கு நியாயம் கற்பித்துள்ளார் என்ற ரீதியில் மட்டும் அவரைப் பாராட்டலாம். நல்ல நடிகையாக எவ்வித சமரசத்துக்கும் உட்படாமல் இருக்க முயன்று, அதிலிருந்து வழுவி, தொப்புத் தொப்பென்று பிராவை நழுவ விட்டு, தன் உடலை மூலதனமாக்கி பிரபல நடிகை ஆகி விடுகிறார...
கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

சமூகம், சினிமா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டால், அதில் கிடைக்கும் பரிசுத்தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தைக் கொண்டு அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியிலனைத்து வசதிகளையும் கொண்ட நவீன நூலகம் கட்டுவதாகாறிவித்தார். உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் சினேகனின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சினேகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறுவதற்காகப் பல்வேறு தொண்டு அமைப்புகளும், திரைப்படத் துறையினரும், தொழிலதிபர்களும் முன் வரத் தயாராக உள்லனர். அதில் முதல் நபராக நடன இயக்குநரும் நடிகரும் சமூக ஆர்வலருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள், ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாக சினேகனின் சினேகம் செயலகத்தின் "மக்கள் நூலக"ப் பணிகளுக்காக வழங்கியுள்ளார். இவரின் முழுஒத்துழைப்போடு, சினேகனின் லட்சியம...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, 'சோட்டா ராஜ்' எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின்  ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை  இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந்த...