
பிக் பாஸ் 3: நாள் 92 | கவினை ஏன் யூத்களுக்குப் பிடிக்கிறது?
கவினை இத்தனை பேர் வெறுக்கிறதுக்கு காரணம் தான் என்ன? இந்த சீசன் ஆரம்பித்த முதல் சில வாரங்கள் கடந்ததுக்கு அப்புறம் கவின்-சாண்டி கூட்டணி தான் செம்ம ஹிட். பாடல் வரிகளை மாற்றிப் போட்டுப் பாடி, செம்ம ஜாலியாக இருந்தார். பார்க்கிறதுக்கும் நல்லாருந்தது. அதற்கப்புறம் தான் சாக்ஷியோட ஒரு லவ் எபிசோட் ஓடியது. அப்பவும் யாரும் வெறுக்கவில்லை. அதெப்படி ஒரே வாரத்தில் காதல் வருமெனக் கேட்டவர்கள் கூட, அந்த எபிசோட்ஸை என்ஜாய் பண்ணிருப்பார்கள். அப்புறம் தான் பாய்ஸ் டீம் உருவானது. அப்பவும், தினசரி அத்தியாயத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்ட்ரே பாய்ஸ் டீம் தான். ஒரு பக்கம் சாண்டி அல்டிமேட் எண்டர்னெயினராக இருக்க, இன்னொரு பக்கம், எவிக்சன் வந்தா பாட்டு பாடி அனுப்பி ஜாலி பண்ணிட்டு இருந்தார்கள்.
அதற்கப்புறம் தான் கவின் பாதையில் லாஸ்லியா வருகிறார். சாக்ஷி கூட ஒரு ட்ராக் ஓடிக்கொண்டு இருக்கும் போதே, இந்தப் பக்கம் லாஸ் கூட இன்னொரு ட்ராக...