Shadow

Tag: யோகி பாபு

மாவீரன் விமர்சனம்

மாவீரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மண்டேலா என்னும் மகத்தான க்ளாசிக் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படம். டான், ப்ரின்ஸ் என தரை லோக்கல் அளவிற்கு காக்டெயில் கமர்ஷியல் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என இவர்கள் இருவரின் இணைவையும் ஒட்டு மொத்த திரையுலகு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ்நாடே உற்றுப் பார்த்தது. படம் மாஸாக வருமா, க்ளாஸாக வருமா என இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தான் மாவீரன். ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படமாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படம் இல்லை. ஏனென்றால் சூப்பர் ஹீரோ செய்யும் எந்தவொரு செயலையும் மாவீரன் செய்வதில்லை. நம்மூர் ஹீரோக்கள் செய்யும் வேலையைத் தான் செய்கிறார். ஏதோ குரல் கேட்கிறது குரல் கேட்கிறது என்று டிரைலரில் வருவதை வைத்துப் பார்த்தால் ஒரு வேளை உளவியல் சம்பந்தமான திரைப்படமாக இருக்குமோ என்...
“லெஜண்ட் வெற்றி நிச்சயம்” – அன்புச்செழியன்

“லெஜண்ட் வெற்றி நிச்சயம்” – அன்புச்செழியன்

சினிமா, திரைத் துளி
லெஜண்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், 'மொசலோ மொசலு' பாடல் 14 மில்லியன் மற்றும் 'வாடிவாசல்' பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களைத் தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி.என்.அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தைப் பார்த்ததும், "என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டி, "நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும்" எனக் கூறி அதி...
டாக்டர் விமர்சனம்

டாக்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நோயாளிகளைக் காப்பாற்ற அறுவை சிகிச்சைக்காகக் கத்தியைப் பிடிக்கும் மருத்துவர், ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்ள நேருகிறது. தன்னை வேண்டாம் என்ற நிராகரித்த பெண்ணின் வீட்டில் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. அந்த வீட்டிற்கு சிவகார்த்திகேயன் உதவச் செல்கிறார். ஆனால் கடத்தப்பட்டிருப்பது ஒரு குழந்தை அல்ல பற்பல எனத் தெரிய வருகிறது. அவர்களை எல்லாம் சிவா எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை. ஸ்மார்ட்டான சிவகார்த்தியன், துளியும் அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். மறந்தும் கூட பன்ச் வசனம் வைக்கவில்லை. சிறப்பு. பிரியங்கா அருள்மோகன் அழகோ அழகு. அவரையும் சரியாகக் கதைக்குள் பொருத்தி இருப்பதால் அவர் கொஞ்சமே நடித்தாலும் நன்றாகவே இருக்கிறது. கிங்ஸ்லியும் யோகிபாபுவும், டாக்டர் படத்தின் திரைக்கதைக்கு அனுபவம் வாய்ந்த செவிலியர்களாக இருந்து படத்தைக் காப்பாற்றுகிறார்கள். வினய் நடிப்பும் சரி அவரது மே...
டிக்கிலோனா விமர்சனம்

டிக்கிலோனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அம்பாஸிடர் கார் டிக்கியில் இருந்து படம் தொடங்குகிறது. ஷங்கரின் 'ஜென்டில் மேன்' உலகத்திற்கு அளித்த indoor game களில் ஒன்று 'டிக்கிலோனா'. இந்தப் படமும், சில விளையாட்டுகளை (!?) அடிப்படையாகக் கொண்டதே என்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என படக்குழு தீர்மானித்திருக்கலாம். 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா; நயன்தாராக்கு த்ரிஷாவே மேல்' என்பது தான் படத்தின் ஒன்லைன். எதிர்பார்ப்புகள் பொய்த்து விரக்தியான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு கால இயந்திரம் (Time machine) கிடைத்து, தனது கடந்த காலத்தை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்? டிக்கிலோனா படத்தின் கதை அது தான். தன் மணவாழ்க்கையை மாற்றிக் கொண்டால் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறும் என காலப்பயணம் மேற்கொள்கின்றான் மணி. காலப்பயணக் (Time travel) கதையை நகைச்சுவையுடன் சொல்ல முற்பட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி. சந்தானம் மிக ஸ்லிமாக ஸ்மார்ட்டாக உள்ளார...
நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான். சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி மாறுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. நடிகர் பட்டாளம் நிரம்பிய திருவிழா கோலமாக உள்ளது படத்தின் முதற்பாதி. இன்னார் இன்னின்ன சொந்தங்கள் எனச் சொல்லி முடிப்பதற்கே முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் பாண்டிராஜ். கதையின் ஊடாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த முயலாமல், அதைப் பாட்டாகவே பா...
ஜாம்பி விமர்சனம்

ஜாம்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஷமேற்றப்படும் கோழியைச் சமைத்துச் சாப்பிட்டதால் சிலர் ஜாம்பி ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து நாயகியும், ஐவரைக் கொண்ட நண்பர்கள் குழுவும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. பறவைக் கோணத்தில், ஒற்றையடி பாதை கொண்ட நிலப்பரப்பில் ஒரு வாகணம் செல்வதைக் காட்டுகின்றனர். இப்படியாகப் படத்தின் தொடம்கம் செமயாக உள்ளது. அவ்வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் கோழி, உணவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தயாராகிறது என மிக ப்ரொஃபஷ்னல் படமாகத் தொடங்குகிறது. பின் திரையில் கொட்டை எழுத்தில் கேரக்டர் பெயரைப் போட்டு கதாபாத்திரங்களைத் தொன்மையான முறையில் அறிமுகம் செய்கின்றனர். அங்கிருந்து டாஸ்மாக். டாஸ்மாக்கில் இருந்து மரக்காணத்தில் ஒரு லாட்ஜ். மட்டையாகி அக்கதாபாத்திரங்கள் விழித்தால் சுற்றிலும் வாயில் ரத்தம் வடிய சுற்றிக் கொண்டிருக்கும் ஜாம்பிகள். ஆனால், இந்தக் கட்டத்திற்குள் வருவதற்குள் ஒருவழியாக்கி விட...
டாணா – தமிழகத்தின் செல்லக்குரல்

டாணா – தமிழகத்தின் செல்லக்குரல்

சினிமா, திரைத் துளி
வித்தியாசமாக, அதே சமயம் தனக்கேற்றது போன்ற கதைகளைத் தெர்ந்தேடுத்து நடித்து வருகிறார் வைபவ். ஜூலை 22 அன்று வெளியான டாணா படத்தின் டீசரே அதற்குச் சான்று. போலீஸ் குடும்பத்தில் பிறந்த நாயகன் உணர்ச்சி வசப்பட்டால் அவனது குரல் பெண் குரலாக மாறிவிடும் எனும் வித்தியாசமான கதைக்களத்தைத் தொட்டுள்ளார் இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி. அதைச் சுட்டிக் காட்டும் வகையில், "இந்தக் குரலை வச்சிக்கிட்டு நீ பாடுன்னா, கிராண்ட் ஃபினாலே வரைக்கும் போகலாம். சின்னக்குயில் சித்ரா கிட்ட நான் பேசுறேன்" என்று டீசரில் யோகிபாபுவின் டைமிங் வசனம் அதகளம். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தயாரிப்பு நிறுவனம் - நோபல் மூவீஸ் ப்ரொடக்ஷன்ஸ் >> தயாரிப்பு - எம்.சி. கலைமாமணி & எம்.கே.லக்ஷ்மி கலைமாமணி >> எழுத்து, இயக்கம் - யுவராஜ் சுப்...
கொரில்லா விமர்சனம்

கொரில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை நன்றாக உள்ளது. ஜீவா பேருந்துகளில் செய்யும் திருடு, போலி டாக்டராக அவர் வரும் காட்சிகள், இது அப்படியே நாயகியுடனான காதலாக மலரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. குரங்கு பொம்மை போட்டு அவர்கள் திருடச் செல்லும் காட்சிகள் கூடப் பெரிதும் பரபரப்பில்லாமல் நகர்கிறது. கொரில்லா பொம்மை மாஸ்க்கை ஜீவா கழட்டும் இடத்தி...
கூர்கா விமர்சனம்

கூர்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள இப்படம், தமிழகமெங்கும் 300+ திரையரங்குகளில் யோகிபாபுவிற்குப் பிரம்மாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. ஜீவாவின் கொரில்லா உட்பட, இந்த வாரம் 5 படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு. பகதூர் பாபு செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அதில் பிணைக்கைதிகளாகச் சிக்கிக் கொள்ளும் மக்களை கூர்கா இனத்தவனான பகதூர் பாபு எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி அவ்வளவாகக் கவரவில்லை. ரவி மரியாவின் சத்தமான போலீஸ் ட்ரெயினிங்கும், அதில் யோகிபாபு ஓபி அடிப்பதும், கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பதுமென படம் இம்சையாய்த் தொடங்குகிற...
கூர்கா – லிப்ராவின் பிரம்மாண்ட வெளியீடு

கூர்கா – லிப்ராவின் பிரம்மாண்ட வெளியீடு

சினிமா, திரைத் துளி
'டார்லிங்', '100' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’. இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தைத் தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. முன்னணி நாயகர்கள் படங்களுக்கு நிகராக வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்ப...
தர்மபிரபு விமர்சினம்

தர்மபிரபு விமர்சினம்

சினிமா, திரை விமர்சனம்
  வாரிசு என்ற அடிப்படையில் தர்மராஜாவின் மகனான தர்மபிரபு, எமன் பதவிக்கு வருகிறார். ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போக, அவளோடு சேர்த்து ஒரு சாதி கட்சித் தலைவரையும் காப்பாற்றி விடுகிறார் எமன். அரக்கனான அந்தத் தலைவரை ஏழு நாளுக்குள் கொல்லவில்லை எனில் எமலோகத்தைக் கொளுத்தி விடுவேன் என சிவன் சொல்லிவிட, தர்மபிரபு எப்படி அந்த சாதிக்கட்சித் தலைவரின் உயிரை எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இயக்குநர் முத்துக்குமரன் தன்னை ஒரு தீவிர பெரியாரிஸ்ட் எனச் சொல்லிக் கொள்கிறார். நீதியின் காவலனான தர்மபிரபு, எமக்கோட்டைக்கு ஓர் இக்கட்டான சூழல் நேரும் பொழுது, பெரியார், அம்பேத்கர், நேதாஜி, காந்தி ஆகியோரைக் கூப்பிட்டு யோசனை கேட்கிறார். பெளத்தரான அம்பேத்கரும், நாத்திகவாதியான பெரியாரும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் பேசிய அரசியல் அனைத்தும் மிகப் பெரிய காமெடி என நிறுவப்படுகிறது. நால்வரும் தாங்கள் வரித்துக் ...
‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு

‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு

சினிமா, திரைத் துளி
R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள "கடல போட ஒரு பொண்ணு வேணும்" எனும் படம். இப்படத்தை வேகமாக எடுத்து முடித்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, "யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப் படம் காட்டும். யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப் பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார். கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும் ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு பிதுங்கும். முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப் படம் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெறும். அதற்கான எல்லாச் சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்" என்றார் இயக்...
100 விமர்சனம்

100 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ அடித்து உதைத்து அவர்களைச் சிறையில் அடைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிளிர வேண்டுமென்பது அதர்வாவின் லட்சியம். ஆனால், அவசர உதவி கோரி எண் 100-இற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் கண்காணிப்பு அறையில் அவரைப் பணிக்கு அமர்த்திவிடுகின்றனர். நேடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் முதற்பாதி தேவையில்லாத காட்சிகளால் அலைக்கழிக்கிறது. அதர்வாவின் தந்தையாக பருத்தி வீரன் சரவணன், அம்மாவாக நிரோஷா, காதலியாக ஹன்சிகா, நண்பராக 'எருமை சாணி' விஜய் ஆகியோர் கதைக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. தயாரிப்பாளரான ஆரா சினிமாஸ் மகேஷ், அன்வர் எனும் பாத்திரத்தில் அதர்வாவின் நண்பராக நடித்துள்ளனர். ஓர் அழகான பாத்திரத்திற்கு, கொஞ்சம் லெத்தார்ஜிக்கான உடற்மொழியாலும் நடிப்பாலும், போதுமான நியாயத்தைச் செய்யத் தவறிவிடுகிறார். மறைந்த நடிகர் சீனு மோகனின் கதாபாத்திர வார்...
எமதர்மராஜா யோகி பாபு

எமதர்மராஜா யோகி பாபு

சினிமா, திரைத் துளி
தர்மபிரபு படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக ரேகாவும், அப்பாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகை ரேகா, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர், ‘அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா?’ என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள்” என்றார். இயக்குநர் முத்துகுமரன் பேசும்போது, “நானும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போது நாங்கள் இருவரும் இந்தக் கதையைப் பற்றிப் பேசினோம். யாராவது தவறு செய்தால் தண்டனை கொடுப்பது எமதர்மன் தான...
குப்பத்து ராஜா விமர்சனம்

குப்பத்து ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எதற்கும் அலட்டிக் கொள்ளாத ராக்கெட் குப்பத்திற்கே ராஜாவாகச் சுற்றி வருகிறான். திடீரென ஒருநாள் அவன் தந்தை இறந்துவிட, ராஜா நிலைகுலைகிறான். அவனது தந்தையைக் கொன்றது யாரெனவும், அக்குப்பத்தில் நிகழும் அசாம்பாவிதங்களுக்கும் காரணம் எதுவென்பதும்தான் படத்தின் கதை. ஊர் நியாயம் என்ற கதாபாத்திரத்தில் G.V.பிரகாஷின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். மகனின் மீது பாசம் பொழிவதையும், குடிப்பதையும் தவிர வேறொன்றும் அறியாத மனிதர். அவரது மரணத்தில் இருந்துதான் படத்தின் கதை தொடங்குகிறது. படத்தின் முதற்பாதி முழுவதும் கதையே இல்லாமல், காதல், நண்பர்களுடன் ஜாலியாய் ஊர்ச் சுற்றுதல், குடி, கும்மாளம், குதூகலம் என்று காட்சிகள் விரிகிறது. முதற்பாதியின் கலகலப்பிற்கு யோகி பாபுவின் கவுன்ட்டர்கள் உதவுகின்றன. நாயகனால் வருங்காலம் என அழைக்கப்படும் கமலா கதாபாத்திரத்தில் பாலக் லால்வானி நடித்துள்ளார். நாயகனைத் தவிர வேறு யோசனைய...