Shadow

Tag: சசிகுமார்

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

OTT, Web Series, சினிமா, திரை விமர்சனம்
முதல் முறையாகச் சசிகுமார் காவல்துறை அதிகாரியாகவும், ஓர் ஓடிடி தொடரில் நாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு நிலங்களைக் கையகப்படுத்தி எட்டு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை வைக்கிறது. அப்பொழுது அடிக்கல் நாட்டத் தோண்டும்பொழுது, மனித எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அந்த எலும்புக்கூடு யாருடையது என்ற விசாரிக்க துணை ஆய்வாளர் மூசா ராசா நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையின் முடிவால், 'முடக்கத்தான்' மணி என்பவர்க்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. ஆனால், மணி அந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டான் என நம்பும் மூசா ராசா மிகுந்த சிரமங்களுக்கு இடையில், அவ்வழக்கை மீண்டும் திறக்கிறார். மணியின் மீது மூசா ராசா வைத்த நம்பிக்கை பொய்த்ததா, வென்றதா என்பதே தொடரின் முடிவு. முந்தைய சீசன் போலவே கலகலப்பிற்கு உதவியுள்ளார், தேநீர் பிரியான துணை ஆய்வாளர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக...
“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல், வால்வாட்ச்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, ''இந்த இணைய தொடர் மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாகப் பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூ, 'ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதையைச் சொன்னவுடன் எங்களுக்குப் பிடித்தது. அதிலும் அந்தக் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலு...
“வதந்தி 2: உண்மையைத் தேடி” – சசிகுமார்

“வதந்தி 2: உண்மையைத் தேடி” – சசிகுமார்

OTT, Web Series
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள 'வதந்தி சீசன் 2 - தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி இணை தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக உருவாகியுள்ள வதந்தி சீசன் 2, ஆகஸ்ட் 7 அன்று வெளியாகிறது. மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேஸான் ப்ரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழு...
“மை லார்ட்: இது படம் கிடையாது; பெரும் பொறுப்பு” – ஷான் ரோல்டன்

“மை லார்ட்: இது படம் கிடையாது; பெரும் பொறுப்பு” – ஷான் ரோல்டன்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் 'மை லார்ட் (My Lord)' திரைப்படமாகும். பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் நன்றி நவில்தல் சந்திப்பில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வினில் பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், "சில படங்கள், நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம், நாம் அதை நன்றாகச் செய்யவேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது, ஒரு இசையமைப்பாளராகவும் சரி, ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு, இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜு முருகன் சார் ...
மை லார்ட் விமர்சனம் | My Lord review

மை லார்ட் விமர்சனம் | My Lord review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறலைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது மை லார்ட் திரைப்படம். உயிரோடு இருப்பவரை இறந்தவராகச் சித்தரித்து, ஒருவரது அடையாளத்தையே அழிக்க அதிகாரத்தால் முடியும் எனப் படம் அச்சுறுத்துகிறது. ஆனால் அந்த அச்சுறுத்தலை உணர்வுப்பூர்வமாகக் கொண்டு செல்லாமல், கொஞ்சம் நகைச்சுவை கலந்து படம் தர வேண்டிய தாக்கத்தை நீர்த்துப் போகவும் செய்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன். அதிகாரம் சாமானியனை எங்குக் கொண்டு தள்ளுகிறது என்பதும், அதை வள்ளலாரியத்தில் ஊறிய ஓர் அப்பாவி எப்படி எதிர்கொள்கின்றார் என்பதும் தான் படத்தின் அரசியலும் மையச்சரடும். உயிருடன் இருக்கும்போதே நாயகன் முத்துச்சிற்பிக்கு இறப்புச் சான்றிதழைப் பெற்று, அவரை நையப்புடைக்கிறார் கவுன்சிலர் நர்சிம். குறு பிராந்திய அதிகார பலம் பொருந்திய கவுன்சிலரைத் தேசிய அளவில் உச்ச அதிகாரம் கொண்ட ஒருவரின் துணையோடு சிறைக்கு அனுப்புகிறார் நாயகன். அனுப்ப...
மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

சினிமா, திரைத் துளி
சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்குப் பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி.ஆர்.பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற, நடனத்தை எம்.ஷெரீப்பும், சண்டைக் காட்சிகளை பி.சி. ஸ்டன்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார். இதனைத் தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபில...
ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம். திருப்பெரும்புதூரில், 1991 மே 21ஆம் தேதி அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்கள் என பல இலங்கைத் தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவோம் என சொல்லி அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கிறது காவல்துறை. குடும்பத்தினரும் அவர்களை விடுதலை செய்யக் கோரி மனு கொடுத்தும், போராட்டம் செய்தும் எதுவும் எடுபடவில்லை. அப்படியே 4 ஆண்டுகள் கழிய, வேலூர் கோட்டையில் இருந்து 43 பேர் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அத்திட்டம் அவர்களுக்குச்...
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்றுள்ளார். சூழ்நிலைகளைக் கிரகித்து உடன்நிகழ்வாக (Spontaneity) அவர் சொல்லும் பொய்களும், அழகான முக பாவங்களும் ரசிக்க வைக்கின்றன. யோகிபாபு உடன் வரும் காட்சிகளில் கூட கமலேஷ் ஜெகன் தான் ஸ்கோர் செய்கிறார். தர்மதாஸின் மூ...
Tourist Family | “சிம்ரன் ஹீரோயின்; நான் ஹீரோ” – சசிகுமார்

Tourist Family | “சிம்ரன் ஹீரோயின்; நான் ஹீரோ” – சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
சசிகுமார், சிம்ரன் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இவ்விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், ''இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளருக்கு முழுத் திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கி...
நந்தன் விமர்சனம்

நந்தன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆண்டை கோப்புலிங்கத்திற்குப் பரம விசுவாசியாக உள்ளார் கூழ்பானை என்றழைக்கப்படும் அம்பேத்குமார். ஆதலால், தனித்தொகுதியாக்கப்படும் வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குக் கூழ்பானையைத் தேர்வு செய்கிறார். தான் ஆட்டுவிக்கும் பாவையாகக் கூழ் பானை இருப்பான் என்ற நம்பிக்கை சிதையும் வண்ணம், தங்களுக்கென ஒரு தனிச் சுடுகாட்டைத் தன்னிச்சையாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுகிறார் அம்பேத்குமார். அதனால் கோபமுறும் கோப்புலிங்கத்தின் எதிர்வினையும், அதை அம்பேத்குமார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் முடிவு. தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களை, சமூகத்தில் ஆழ வேரூன்றிவிட்ட சாதியக் கட்டமைப்பு எப்படி நடத்துகிறது என்பதுதான் படத்தின் மையக்கரு. படத்தின் ஆகப் பெரிய பலவீனம் படத்தின் கதாபாத்திர வார்ப்புகளே ஆகும். என்ன சொல்லப் போகிறோம் என இயக்குநர் இரா. சரவணனுக்கு இருந்த தெளிவு, முதன்ம...
“எது நல்ல படம்?” – இயக்குநர் ஹெச். வினோத்

“எது நல்ல படம்?” – இயக்குநர் ஹெச். வினோத்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், "இயக்குநர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தைத் தொடங்கினார். அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்தப் படத்தைத் தொடங்கினார் என்பது எனக்குத் தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார். இந்தக் கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், 'சோப்புலிங்கம்' கேரக்...
“நல்ல மனசுக்காரன் சூரிக்காக” – சசிகுமார் | கருடன்

“நல்ல மனசுக்காரன் சூரிக்காக” – சசிகுமார் | கருடன்

சினிமா, திரைச் செய்தி
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாள...
அயோத்தி விமர்சனம்

அயோத்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறது ஒரு வட இந்திய குடும்பம். ராமேஸ்வரம் செல்லும் வழியில் விபத்துக்கு உள்ளாகி, அக்குடும்பத்தின் தலைவி ஜான்கி இறந்துவிடுகிறார். விடுமுறை தினமான தீபாவளியன்று மொழி புரியாத தேசத்தில் ஜான்கியின் கணவனும், மகளும், மகனும் அல்லாடுகின்றனர். ஜான்கியின் உடலினை வைத்துக் கொண்டு, அக்குடும்பம் எப்படி அல்லாடுகிறது என்பதுதான் படத்தின் கதை. மத அரசியல் பற்றிய படமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது படத்தின் தலைப்பு. ஆனால், படத்தின் கரு இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளது. ஒன்று, ஆணாதிக்கத்தையும், மத ரீதியான சடங்குகளில் அதீத பிடிப்புமுள்ள ஒரு மனிதரின் வறட்டுத்தனமான வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகிறது. இரண்டாவதாக, சாமானியனை அச்சுறுத்தும் அரசாங்க விதிகள். நெருங்கிய நபரின் மரணத்தின் பொழுது, கடைசிக் காரியங்களுக்கு உதவ ஆளில்லாமல் தனித்து விடப்படும் வேதனை மிகப் பெரியது...
சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை, நடிகரும், தமிழ்த் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவ...
காரி விமர்சனம்

காரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் என்ற கிராம மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த ஒரு கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். ரியலிஸ்டிக்கான மேக்கிங்கால் படத்தையும் நெருக்கமாக உணர முடிகிறது. குதிரை ஜாக்கியான சசிகுமார் சென்னையில் தன் தந்தை ஆடுகளம் நரேனோடு வசிக்கிறார். ஆடுகளம் நரேன் சிறு உயிர்களையும் தன் உயிரென நேசிக்கக் கூடியவர். சசிகுமார் வாழ்வையும் சமூகத்தையும் ஏனோதானோ என ஏற்பவர். சசிகுமாரின் சொந்தக் கிராமமான காரியூரில் கருப்பசாமியின் திருவிழாவை நடத்த வேண்டிய ஒரு சூழல் வருகிறது. அதை நடத்த சசிகுமாரின் வருகை தேவையாக இருப்பதால் ஊர் சசிகுமாரை நாடுகிறது. சசிகுமாருக்கும் ஊருக்குச் செல்வதற்கான ஒரு எமோஷ்னல் காரணம் அமைய, சசிகுமார் ஊருக்குச் சென்று தன் ஊரின் வேரை எப்படிக் காக்கிறார் என்பது காரியின் திரைக்கதை. மிகையில்லாத நடிப்பு தான் சசிகுமாரின் பலம். சரியான ஜாக்கி இல்லையென்றால் குதிரை தறி...