Shadow

Tag: தனுஷ்

கர விமர்சனம் | Kara review

கர விமர்சனம் | Kara review

சினிமா, திரை விமர்சனம்
போர் தொழில் இயக்குநரின் இரண்டாவது படமென்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாக இருந்தது. 1990 காலகட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர் எழுத்தாளர் ஆல்ஃப்ரெட் பிரகாஷும், இயக்குநர் விக்னேஷ் ராஜாவும். அதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அது கதை சார்ந்த காரணமல்ல, லாஜிக் சார்ந்த காரணம். கதை, படத்தில் நேர்கோட்டில் இருந்தாலும், அதை இன்னும் நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய பொறுப்புடன், கதையைச் சிம்பிளாகச் சொல்ல முயற்சி செய்கிறோம். தனுஷ் தனது 16-ஆவது வயதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனது கிராமத்தில், தன் அப்பாவிடமிருந்து பணத்தைத் தெரியாமல் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார் (இவை காட்சிகளாக இல்லை), அதன்பின், தன் இளம் வயதில், திருச்சி அருகேயுள்ள திருவெறும்புதூரில் ஒரு எம்.எல்.ஏ வீட்டில் திருடுகிறார் தனுஷ். அந்தத் திருட்டில் மாட்டியும் விடுகிறார்....
தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
என்றுமே மென் சோக காதல் கதைகள், மனதைப் பாதிக்கும் காதல் கதைகள் தான் காலம் கடந்து நிற்கும். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மூன்று படங்களுமே காதல் கதைகள்தான். முந்தைய இரண்டு காதல் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றன. அந்தக் கூட்டணியின் மூன்றாவது படைப்பான “தேரே இஷ்க் மே” படத்தில், க்ரித்தி சனோன் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதைப்படி, தனுஷ் எப்போதும் கோபத்திலேயே இருக்கும் இளைஞன். வன்முறை அவன் வாழ்வில் ப்ர் அங்கமாகவே மாறிப் போயிருக்கிறது. க்ரித்தி சனோன், தனுஷ் படிக்கும் அதே பல்கலைக்கழகத்தில் சைக்காலஜியில் ஆய்வுக்கட்டுரை எழுதி வருகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாகப் பயணிக்கும் சூழல் வருகிறது. தனுஷ் க்ரித்தி மீது காதல் கொள்கிறார். க்ரித்திக்குக் காதல் இருந்தாலும் அவரின் கோபமும் வன்முறையும் பிடி...
இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பின் தனுஷ் இயக்கியிருக்கும் 4 ஆவது படம் “இட்லி கடை” ஆகும். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷூடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தேனி மாவட்டத்து சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இயற்கையான முறையில் நல்ல கைப்பக்குவத்துடன் சுவையான இட்லி சமைப்பவர் ராஜ்கிரண். அவரது மகன் தனுஷ் படிப்பை முடித்து வசதியாக வாழ வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார். பாங்காங்கில் தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்யும் தனுஷைச் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையில் திருமணத்திற்குச்...
MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ராஷ்மிகா மந்தனா நடிக்கும், கதாநாயகியை மையப்படுத்திய புதிய திரைப்படத்திற்கு "மைசா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் அட்டகாசமான ஆக்‌ஷன் அவதாரத்தை வெளிக்காட்டும்படி அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். இப்படத்தின் போஸ்டரைத் தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவபுடியும், தமிழில் தனுஷும், இந்தியில் விக்கி கௌஷலும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் சிவராஜ்குமாரும் ஆகியோர் போஸ்டர்களை வெளியிட்டனர்.மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு பாரம்பரிய புடவையில், பழங்கு...
குபேரா விமர்சனம் | Kuberaa Review

குபேரா விமர்சனம் | Kuberaa Review

சினிமா, திரை விமர்சனம்
திருப்பதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் தேவாவின் பெயரில் ஷெல் கம்பெனி தொடங்கப்பட்டுப் பத்தாயிரம் கோடி டெபாசிட் செய்யப்படுகிறது. அப்பணத்தை மீண்டும் அவரிடமிருந்து வில்லன் பெறுவதற்குள், தேவா உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்துவிடுகிறார். அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வில்லனிடமிருந்து பத்தாயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரன் தேவாவால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.ஒரு பொருளாதாரக் குற்றப் பின்னணியில் தொடங்கும் படம். அக்குற்றத்தைச் சாத்தியமாக்குவதற்கான செயற்முறை, சிறைப்பட்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரியில் இருந்து சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் வரை நீள்கிறது. மிக அழகாகப் படத்தின் முதற்பாதியில் இவற்றைக் கட்டமைக்கிறார் சேகர் கம்முலா.பெரும்கோடீஸ்வர வில்லன் நீரஜ் மித்ராவாக ஜிம் சார்ப் நடித்துள்ளார். அவரது பணக்காரத் தோரணையே, பார்வையாளர்களை அசெளகரியம் கொள...
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷின் இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படம். நிலாவைக் காதலிக்கிறான் பிரபு. நிலாவின் தந்தை கருணாகரனது கடைசி நாட்கள், அவர் ஆசைப்பட்டப்படி அமையவேண்டுமென நிலாவை விட்டுப் பிரிகிறான் பிரபு. பிரபு ஏன் பிரிந்தான் எனத் தெரியாமல் கோபம் கொள்ளும் நிலா, அவனுக்குத் தன் கல்யாண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். கோவாவில் நடக்கும் அத்திருமணத்திற்குச் செல்கிறான் பிரபு. அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. வழக்கமான காதல் கதை என தலைப்பிற்குக் கீழாகவே உபதலைப்பு போட்டுவிடுகின்றனர். முதற்பாதியும் அப்படியே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், கோவா சென்றடைந்த பின், படத்தின் கலகலப்பு அதிகமாகிறது. படத்தின் தொடக்கம் முதலே மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருந்தாலும், இரண்டாம் பாதியில் அதகளம் புரிகிறார். குடி, பார்ட்டி, காதல் என்பதைத் தாண்டி படத்தின் கதாபாத்திரங்கள் எதையுமே யோசிப்பதில்லை. ...
விடுதலை பாகம் 2 – 25 ஆவது நாள் நிறைவு | RS Infotainment

விடுதலை பாகம் 2 – 25 ஆவது நாள் நிறைவு | RS Infotainment

இது புதிது, சினிமா, திரைத் துளி
விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதால், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சியில் உள்ளது. “விடுதலை’’யின் ஆழமான திரைக்கதை, எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அரசியல் களத்தின் எதார்த்தத்தையும் தைரியமாகச் சித்தரித்துள்ளது. விடுதலை பாகம் 1, பாகம் 2 ஆகிய இரண்டிற்கும் பரவலான வரவேற்பும், உணர்வுப்பூர்வமான ஆதரவும் மக்களிடையே கிடைத்துள்ளதில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் பெருமிதமாக உணர்கிறது.“விடுதலை பாகம் 2 மிகவும் லாபகரமான படமாக எங்கள் நிறுவனத்திற்கு அமைந்ததில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் சினிமாவாக விடுதலை பாகம் 1 & 2 வழங்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தில் மீண்டும் ஒரு வெற்றிகரமான மைல்கல். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இயக்குநர் வெற்றி மாறன் அ...
ராயன் விமர்சனம்

ராயன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ச்சி மதிப்பீடும் வேண்டுமெனக் கருதி தொலைந்து போகிறார்கள். படம் தொடங்கி இடைவேளை வரை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கும் ராயன் சகோதரர்களின் வாழ்க்கை, அந்த வாழ்விடம், முத்துவேல்ராயனுக்கும் மேகலாவுக்கும் இடையேயான காதல் என முதற்பாதி கச்சிதமா...
“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் வெற்றிமாறன், “இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி. அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்தி...
ஒன்பது நாடுகளில் டிரெண்டிங்  ஆகும் “கேப்டன் மில்லர்”

ஒன்பது நாடுகளில் டிரெண்டிங் ஆகும் “கேப்டன் மில்லர்”

சினிமா, திரைச் செய்தி
அமேசான் ப்ரைம் தளத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களைக் கடந்தும், உலகளவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்" ஆகும். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நட...
கேப்டன் மில்லர் விமர்சனம் :

கேப்டன் மில்லர் விமர்சனம் :

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
’முன்னாடி நம்ம நாட்டுக்காரனுக்கு கீழ அடிமையா இருந்தோம்… இப்ப வெளிநாட்டுக்காரன் கீழ அடிமையா இருக்கோம்… யார் கீழ இருந்தா என்ன…? எல்லாம் அடிமைதான… இவன் என்னை செருப்பு போடாதங்குறான்… கோயிலுக்குள்ள வராதங்குறான்… அவன் என் காலுக்கு பூட்ஸ் குடுக்குறான்.. மருவாதியான வாழ்க்கை வாழணும்னு ஆசப்படுறேன்… நான் பட்டாளத்துக்கு போறேன்…” என்று ஆங்கிலேயரின் சிப்பாயாக பணிக்குச் சேரும் அனலீசன் என்கின்ர ஈசா, மில்லர் என்கின்ற பெயர் மாற்றத்துடன் துப்பாக்கி ஏந்த அவனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது. அதை செய்ய முடியாதவனாக மனம் மாறி சுதந்திரப் போராட்ட வீரர்களை நோக்கி பிடிக்க வேண்டிய துப்பாக்கியை வெள்ளையனின் ராணுவ வீரர்களை நோக்கியும் தளபதியையும் நோக்கியும் திருப்பினால்” என்ன நடக்கும் என்பதை கற்பனையாக பேசி இருக்கும் திரைப்படம் தான் “கேப்டன் மில்லர்”.இயக்குநர் அருண் மாதேஸ்வரனின்...
வாத்தி விமர்சனம்

வாத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சோழவரம் அரசுப்பள்ளிக்கு ஒப்புக்குச் சப்பாணியாக அனுப்பி வைக்கப்படுகிறார் கணித ஆசிரியர் பாலமுருகன். ப்ரோமஷனுக்காக ஆசைப்படும் பாலமுருகன், மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடத்திற்குத் தனது சாமர்த்தியத்தால் மாணவர்களை வர வைக்கிறார். பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எப்படி 45 மாணவர்களையும் பள்ளிப் படிப்பை முடிக்க வைக்கிறார் வாத்தி பாலமுருகன் என்பதே படத்தின் கதை. ஷா ராவும், ஹைப்பர் ஆதியும் நகைச்சுவைக்குச் சொற்பமாகவே உதவியுள்ளனர். அவர்களைப் பாதியிலேயே துண்டித்து அனுப்பி விட்டு தனுஷை மட்டுமே முழுமையாக நம்பிக் களமிறங்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் அட்லூரி. தன்னிகெல்லா பரணி, சாய்குமார் முதலிய நடிகர்களும் சாட்சிகளாக வந்து செல்கின்றனரே தவிர்த்து கதைக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத பாத்திரங்களிலேயே நடித்துள்ளனர். ஆசிரியை மீனாக்‌ஷியாக சம்யுக்தா நடித்துள்ளார். பண பலம் பொருந்திய கல்வித்தந்தையான வில்லனை எதிர்க்கு...
கலாட்டா கல்யாணம் விமர்சனம்

கலாட்டா கல்யாணம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தனுஷ் நடித்த ஹிந்தி டப்பிங் படம். பீஹார் செல்லும் மருத்துவர் விஸ்வநாத் ஐயருக்கு, ரின்கு எனும் பெண்ணுடன் கலாட்டா ஏதுமின்றிக் கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர் ரின்குவின் உறவினர்கள். அதன் பின் ரின்கு செய்யும் கலாட்டாவால், விஸ்வநாதினுடைய கல்யாணம் நிற்கிறது. விஸ்வநாதிற்கு ரின்கு மீது காதல் ஏற்பட, ரின்குவோ சஜ்ஜத் அலி கான் என்பவரைக் காதலிக்கிறாள். தன் மனைவி மீதான விஸ்வநாதின் காதல் வென்றதா, சஜ்ஜத் அலி கானுடனான ரின்குவின் கலாட்டா காதல் வென்றதா என்பதே படத்தின் கதை. மிகவும் கலர்ஃபுல்லான படம். எதையுமே சீரியஸாக அணுகாமல் ஓர் இளமைத் துள்ளலுடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. ரின்குவாக நடித்துள்ள சாரா அலி கான், படத்தின் இந்தத் துள்ளலான ஓட்டத்திற்கு உதவியுள்ளார். மணிரத்னம் பட நாயகிகளை ஞாபகப்படுத்துகிறார். மருத்துவர் விஸ்வநாத் ஐயராக தனுஷும், சர்க்கஸில் மேஜிக் செய்யும் சஜ்ஜத் ...
கர்ணன் விமர்சனம்

கர்ணன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"என்னத்துக்கு பழங்கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு? முன்பு இப்படியான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கும். இப்போ அப்படியில்லை தானே? அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன?" என்ற கேள்வியைக் கடக்காமல், இந்தப் படத்தைப் பார்க்கச் சுற்றம் சூழத் திரையரங்கிற்குச் செல்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்? நாம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் என்பதை நினைவுப்படுத்தி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவா? இல்லை. எதேச்சதிகாரம், காலனிய ஆட்சியின் அடக்குமுறை, சுதந்திரத் தாகம், சுதந்திரத்துக்காகப் போராடிய மக்களின் எழுச்சி, அவர்களின் வீரம் என சுதந்திர தினம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. முன்னோர் பெருமையைப் பழங்கதையாகப் புறக்கணிக்காமல், வாட்ஸ்-அப்பில் ஃபார்வேர்ட் செய்து மகிழ்ச்சியடையும் ஒரு சமூகத்திற்கு, முன்னோர்கள் அனுஷ்டித்த சமூக அநீதியைப் பற்றித் தெரிந்து ...
ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

சினிமா
'அசுரன்', 'சூரரைப் போற்று' என்று தொடரும் ஜீ.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளார். உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாகப் பதிப்பார். 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜீ.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு உறுதுணையாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்து 17 ஆம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜீ.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியி...