Shadow

Tag: யுவராஜ்

“வில்லனாக நடிக்க ஆசை” – அசோக் செல்வன்

“வில்லனாக நடிக்க ஆசை” – அசோக் செல்வன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோகத் தளங்களில் அவரது படங்களுக்குத் தனித்த மதிப்பு இருக்கிறது. 'ஓ மை கடவுளே', 'மன்மத லீலை' என வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜாலியான உரையாடலை நிகழ்த்தினார். அசோக் செல்வன், "நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்...
ஹனு-மான் தேஜா சஜ்ஜா

ஹனு-மான் தேஜா சஜ்ஜா

இது புதிது
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண செளரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செடவில் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கிறது. இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பா...
‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

Songs, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
கர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் தயாராகியிருக்கும் படம் 'விஜயானந்த்' ஆகும். 'ட்ரங்க்' எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்குக் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். 'ஸ்கெட்ச்' படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். சுயசரிதை படைப்பாகத் த...
சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

சினிமா, திரைச் செய்தி
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழகத் தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி.கே.எம். தமிழ்குமரன், ''பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவி...
பனாரஸ் விமர்சனம்

பனாரஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
த்ரில்லர் கதை போல் துவங்கி, காதல் கதையாகப் பயணித்து டைம்லூப் கதையாக முடிகிறது பனாரஸ். ஹீரோ ஜையீத் கான் தன் பணக்காரத்தனத்தை சவால்களிலும் ஜாலி கேளிக்கைகளிலும் காட்டக்கூடியவர். அவர் தன் நண்பர்களின் சவால் ஒன்றை ஏற்று நாயகி சோனல் மான்டிரோவுடன் அவருக்குத் தெரியாமல் ஒரு புகைப்படம் எடுத்து விடுகிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் பரப்பப்படுகிறது. அதனால் மோனலுக்குச் சிக்கல்கள் எழ, அவர் படிப்பு எல்லாவற்றையும் துறந்து தன் உறவினர் வசிக்கும் காசிக்குச் செல்கிறார். குற்றவுணர்ச்சியில் விழும் நாயகன் மன்னிப்பு கேட்பதற்காக நாயகியைத் தேடிச் செல்கிறார். பாதிக்கதையில் டைம்லூப் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார். முதற்படம் என்ற சுவடு தெரியாமல் நடித்துள்ளார் ஜையீத்கான். எமோஷ்னல் காட்சிகளில் வருங்காலங்களில் நன்றாகத் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையை இப்படத்தில் கொடுத்துள்ளார். நாயகி சோனல் மான்டிரோ பார்ப்பதற்கு அழகாக இ...
நித்தம் ஒரு வானம் விமர்சனம்

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையது வானம். அதுவே வானத்தின் தனித்த அழகிற்குக் காரணம். மனிதனின் வாழ்க்கையை அழகுப்படுத்துவதும் அவனது வாழ்வில் நிகழும் இத்தகைய மாற்றங்களே! ஆனால் மாற்றத்தை விரும்பாத மனமோ, அதற்கு பயந்து முடங்கி விடுகிறது. ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், வாழ்க்கையே முடங்கிவிட்டதாகக் கருதும் அர்ஜுன்க்கு வாழ்க்கையின் உண்மையான அழகையும், வாழ்வதற்கான உத்வேகத்தையும் அளிக்க இரண்டு கதைகள் சொல்கிறார் மருத்துவர் கிருஷ்ணவேணி. அந்தக் கதைகளின் ஊடாக அர்ஜுன் செய்யும் பயணமே படத்தின் கதை. மருத்துவர் கிருஷ்ணவேணியாக அபிராமி நடித்துள்ளார். மிகக் குறைவான காட்சிகளிலேயே தோன்றினாலும் நிறைவான ஸ்க்ரீன் பிரசென்ஸை அளித்துள்ளார். அர்ஜூனாக, இரண்டு கதைகளில் வரும் வீரா, பிரபா என மேலும் இரண்டு பாத்திரங்களில் தோன்றியுள்ளார். மூன்று கதாபாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டும் நேர்த்தியான நடிப்பைக் கொடு...
“டிரைவர் ஜமுனா: வாலாஜாபாத் டூ ஈசிஆர்” – இயக்குநர் கின்ஸ்லின்

“டிரைவர் ஜமுனா: வாலாஜாபாத் டூ ஈசிஆர்” – இயக்குநர் கின்ஸ்லின்

சினிமா, திரை விமர்சனம்
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்தத் திரைப்படத்தை வத்திக்குச்சி படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எ...
“டிரைவர் ஜமுனா: டூப் போடாமல் கார் சாகசக்காட்சி” – ஐஸ்வர்யா ராஜேஷ்

“டிரைவர் ஜமுனா: டூப் போடாமல் கார் சாகசக்காட்சி” – ஐஸ்வர்யா ராஜேஷ்

இது புதிது
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்தத் திரைப்படத்தை வத்திக்குச்சி படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ''நீ...
ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

Movie Posters, Teaser, காணொளிகள், கேலரி, சினிமா, திரைத் துளி
'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'ஹரோம் ஹரா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தலைப்பிற்கான பிரத்தியேக காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, 'அக்டோபர் 31ஆம் தேதி அன...
நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ...
நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ...
படவெட்டு விமர்சனம்

படவெட்டு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படவெட்டு (Battle) என்ற மலையாளச் சொல்லிற்குப் போராட்டம் எனப் பொருள் கொள்ளலாம். மலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மழை, காட்டுப்பன்றியுடன் போராடுகிறார்கள். அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி தனக்குள்ளேயே மிகப்பெரும் அகப்போராட்டத்தை நடத்துபவனாக இருக்கிறான். மேலும், தன்னுடனான அகப்போராட்ட்த்தில் இருந்து மீண்டு, அக்கிராமத்து நிலங்களை இலவசங்களால் ஆக்கிரமிக்க நினைக்கும் குய்யாலி எனும் அரசியல்வாதியின் அதிகாரத்தை எதிர்ப்பதோடு படம் முடிகிறது. மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனான ரவி, ‘மலூர் எக்ஸ்பிரஸ்’ எனப் புகழப்படுகிறான். ஒரு விபத்தில் அவன் கால் முறிந்து போக, அதோடு தன் வாழ்க்கையை முடிந்து விட்டதாக மனதிற்குள் புழுங்கிப் புழுங்கித் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். அவன் சிரிப்பதையே மறந்துவிட்டிருப்பதால், அவன் முகம் உறைந்து போனதுபோல் எப்பொழுதும் இறுகியே உள்ளது. அவனது முன்னாள் காதலியுடனான பார்வைப் பரிமாற்றங்கள்...
நைட்ரோ ஸ்டார் சுதீர் பாபுவின் அதிரடி திரைப்படம்

நைட்ரோ ஸ்டார் சுதீர் பாபுவின் அதிரடி திரைப்படம்

சினிமா, திரைத் துளி
ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபுவின் 18 ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு வித்தியாசமான ஜானரிலான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைக்காக உடலமைப்பில் மாற்றங்களையும் செய்து நடிக்கிறார். அவரது அனைத்துப் படத்திலும், அவரின் உடல் மொழி மற்றும் தோற்றப்பொலிவில் மாறுபாட்டை நாம் காணலாம். அவரது அடுத்த பட்த்திற்கான அறிவிப்பு, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தெற்கு மும்பையைச் சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு கடி...
“காந்தாரா: இந்திய சினிமாவின் மகத்தான படைப்பு” – ரஜினி புகழாரம்

“காந்தாரா: இந்திய சினிமாவின் மகத்தான படைப்பு” – ரஜினி புகழாரம்

சினிமா, திரைத் துளி
“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். 'கே.ஜி.எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15 ஆம் தேதியன்று தமிழகத் திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரி...
காந்தாரா – 200 கோடி வசூலைத் தாண்டி

காந்தாரா – 200 கோடி வசூலைத் தாண்டி

சினிமா, திரைத் துளி
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா' தீபாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது. 'கே.ஜி.எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்திலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குக் காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15 ஆம் தேதியன்று தமிழகத் திரையரங்குகளில் 'காந்தாரா' படத்த...