Shadow

Tag: யுவராஜ்

சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு

சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு

சினிமா, திரைச் செய்தி
நாச்சியார், சர்வம் தாளமயம் போன்ற படத்தில் வித்தியாசமன பாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்த ஜி.வி.பிரகஷ்க்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசை ஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாகக் கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற டோக்கி...
ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. விழாவில் பேசிய ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, "ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை ஃபைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸ்ட்க்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்" என்றார். நடிகை சச்சு, "கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். படம் பண்ணுவது சிவக்குமார் ஃபேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் ஆரம்பத்தில் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா ...
A1 விமர்சனம்

A1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக் காதலிக்கிறார். சரவணனோ லோக்கல் பையன். திவ்யாவின் அப்பாவோ இக்காதலை ஒத்துக் கொள்ளவில்லை. நாயகனின் நண்பர்கள் இணைந்து நாயகியின் தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். பின், சரவணன் - திவ்யா காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. என்ன தான் நகைச்சுவைப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது அடிப்படை விதி என்றாலும், காதல் வர இவ்வளவு மொக்கையான காரணத்தை வைத்திருக்கவேண்டாம் இயக்குநர் K.ஜான்சன். சண்டை போடும் ஐயங்கார் பையன் என்பதால் நாயகிக்கும்; முதல் முறை பார்த்ததுமே காதலைச் சொல்லி, அதை உறுதிபடுத்த உதட்டில் முத்தமே கொடுத்துவிடுவதால் நாயகனுக்கும் காதல் வந்துவிடுகிறதாம். ஷ்ஷ்ப்ப்பாஆஆ.. நாயகனின் தந்தை லோகுவாக எம்.எஸ்.பாஸ்கர் செமயாக நடித்துள்ளார். கதாபாத்திரங்களின் டைமிங் டயலாக்கால், காமெடியில் ஸ்கோர் செய்யும் படம் இது. ஆனால் தேர்ந்த நடிப்பையும், உடற்மொழ...
A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் ஜுலை 26 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி.செளத்ரி வெளியிடுகிறார். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், "சூது கவ்வும் படத்திற்குப் பிறகு எனக்கு மிகப் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் எப்பவாவது வரும். இந்தப் படமும் சமத்துவத்தை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்துக் கொண்டு மக்களை என்டெர்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப் படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப் படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப் படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்க...
கடாரம் கொண்டான் விமர்சனம்

கடாரம் கொண்டான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மலேஷியாவின் கேதா எனும் மாநிலத்தின் பண்டைய தமிழ்ப்பெயர் கடாரம் ஆகும். அந்த மாநிலத்தில், பரவலாக ஒரு கலவரத்தினை உருவாக்கும் அளவு செல்வாக்கு கொண்டவன் நாயகன் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். 2010 இல் வெளிவந்த 'ஆ பூ போர்தான்த் (À bout portant)' என்ற ஃப்ரென்ச் படத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியுள்ளார் தூங்கா வனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் ம செல்வா. 'ஆ பூ போர்தான்த்' என்றால் "மிக அருகில்" எனப் பொருள். இதே ஃப்ரெஞ்சு படத்தைத் தழுவி, நெட்ஃப்ளிக்ஸால் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்திற்கு 'பாயின்ட் பிளான்க்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என அதற்குப் பொருள். தமிழிலோ, நாயகன் துதி பாடும் தலைப்பாய் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிறைக்குச் சென்று, வெளியில் வந்து அமைதியாக வாழும் கே.கே.வை ஒரு கொலைவழக்கில் சிக்க வைத்துக் கொல்லப் பார்க்கிறான் வின்சென்ட். கே.கே. ...
கொரில்லா விமர்சனம்

கொரில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை நன்றாக உள்ளது. ஜீவா பேருந்துகளில் செய்யும் திருடு, போலி டாக்டராக அவர் வரும் காட்சிகள், இது அப்படியே நாயகியுடனான காதலாக மலரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. குரங்கு பொம்மை போட்டு அவர்கள் திருடச் செல்லும் காட்சிகள் கூடப் பெரிதும் பரபரப்பில்லாமல் நகர்கிறது. கொரில்லா பொம்மை மாஸ்க்கை ஜீவா கழட்டும் இடத்தி...
“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்

“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். "ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டே தொடங்கினோம். இந்தக் கம்பெனிக்கு ராஜ்கமல் என்று தான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்து தான் அதில் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவைக் கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்கியுள்ளாம். இந்தப் படத்தை விக்ரமிற்காகக் கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும். ‘யாருய்யா இந்த ஆளு? கண்டிப்பா நல்லா வருவான்’ என மீரா படம் பார்த்துச் சொன்னேன். அப்பொழுது விக்ரம் யாரென எனக்குத் தெரிய...
“சப்பாணியாக நடிக்க ஆசை” – ‘கடாரம் கொண்டான்’ விக்ரம்

“சப்பாணியாக நடிக்க ஆசை” – ‘கடாரம் கொண்டான்’ விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். கமல் ஹாசனின் தயாரிப்பில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்ட நடிகர் விக்ரம், "ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாவது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே படத்தை ரீமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில், நாசர் சாரின் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான கேரக்டர் பண்ணியிருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் ரொம...
கடாரம் கொண்டான் – ஜிப்ரானின் 25வது படம்

கடாரம் கொண்டான் – ஜிப்ரானின் 25வது படம்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். இது இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. "இது என்னோட 25 ஆவது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது, எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்ஃபெக்ட்டான ஆக்டர் அவர். அவர் படத்திற்கு ரீ ரெக்கார்டிங் பண்றது ரொம்ப இன்ட்ரெஸ்டிங்காக இருந்தது. ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி" என்றார். “நாங்கெல்லாம் உள்ளே வந்து திறமைகளை வளர்த்துக் கொண்டோம். ஜிப்ரான் திறமையானவராகத்தான் உள்ளேயே வந்தார். அதனால் தான் அவரை நாங்கள் எங்கள் நிறுவனத்தில் வளைத்துப் போட்டுக்கொண்டோம்” என்றார் கமல்....
மாணவி உதயகீர்த்திகாவின் கனவை நனவாக்கிய விஜய் சேதுபதி

மாணவி உதயகீர்த்திகாவின் கனவை நனவாக்கிய விஜய் சேதுபதி

சமூகம், சினிமா
தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் . தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% / 'A " கிரேடு). 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 'இஸ்ரோ" " சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் . தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி "Analog austronaut training centre" என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிக் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, எட்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது. மாணவியின் பறிச்சிக்காக...
யூஎஸ்ஏ நெட்வொர்க்ஸில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

யூஎஸ்ஏ நெட்வொர்க்ஸில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

சினிமா, திரைத் துளி
பாடகியும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஓர் புதிய சிகரத்தை எட்டியுள்ளார். யூஎஸ்ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் ட்ரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA-வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன ட்ரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ட்ரெட்ஸ்டோனில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக, திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர். இந்தத் தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி, நீரா பட்டேல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாபாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்துக் கொண்டே மறைமுகமாகக் கொலையா...
கதிர், சூரி கலந்த சர்பத்

கதிர், சூரி கலந்த சர்பத்

சினிமா, திரைத் துளி
7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்'. அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில், 'சர்பத்' படத்தின் நாயகனாகப் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா ஃபேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமிரா மேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசையமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்...
சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை

சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை

சினிமா, திரைத் துளி
பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் நிவாஸ் ஆதித்தன், "என்னுடைய ஃபிலிம் கேரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப் படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது” என்றார். டாக்டர் வித்யா, "23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப் படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் மேடம் எங்களை தன் ஃபேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதி மேடமும். இந்தப் படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள...
சிறகின் பயணம் டேக்-ஆஃப் ஆகியது

சிறகின் பயணம் டேக்-ஆஃப் ஆகியது

சினிமா, திரைத் துளி
ஒரு வரியிலே பெரு வலியைப் பெரும் மகிழ்வைக் கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், "தனிமைச் சிறகினிலே" என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி விட்டது. அந்தப் பறத்தலின் பயணம் அடுத்தக் கட்டத்தை அடையும் விதமாக படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அரோல் கரோலி இசைyaமைத்துள்ளார். படம் தாங்கி நிற்கும் கதைக்கு இசை உயிர் கொடுத்துள்ளது என்று தெரிகிறது. மெட்ராஸ், கபாலி, வடசெ...