Shadow

Tag: யுவராஜ்

மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்

மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்

சினிமா, திரைச் செய்தி
ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், "ஏன் சமைய...
உறியடி 2 விமர்சனம்

உறியடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2016 இல் வெளியான உறியடி மிக ஃப்ரெஷான அரசியல் படமாக ரசிகர்களைக் கவர்ந்தது. பிரித்தாளும் அரசியல்வாதிகள் Vs ஒற்றுமையான மாணவர்கள் என்பதாகப் படம் மறக்கவியலாததொரு அனுபவத்தை அளித்தது. இப்படமும் அப்படியே மனதில் தங்கும். போபால் விஷ வாயு கசிவைக் கண் முன் கொண்டு வந்து மிகப் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார். மக்களின் உயிரை மயிறுக்குச் சமானமாக நினைக்கும் கொழுத்த தொழிலதிபர்தான் படத்தின் வில்லன். மக்கள் ஏன் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகின்றனர், மக்களுக்கான அரசாங்கம் எப்படி தொழிலதிபருக்காகச் சேவகம் செய்கிறது என்ற குரூரமான யதார்த்தத்தையும் படம் சித்தரிக்கிறது. படம் தொட்டுள்ள களத்தின் தீவிரம் தாங்கமுடியாததாய் உள்ளது. ஆனால், முதற்பாகம் போல் திரைக்கதை அவ்வளவு இன்டென்சாக இல்லை. காரணம், முதற்படத்தில் விஷத்தைக் கக்கும் அரசியல்வாதிகள், கண்ணுக்குத் தெரியாமல் நம் அருகிலேயே உள்ளவர்களாக இருந்த...
உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

சினிமா, திரைச் செய்தி
2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், “இந்த படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது” என்றார். படத்தின் இயக்குநர் விஜய் குமார் பேசுகையில், “இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது; திறமை இருக்க வேண்டும்; டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைக் கோவிந்த...
ஆதி, ஹன்சிகாவின் ‘பாட்னர்’

ஆதி, ஹன்சிகாவின் ‘பாட்னர்’

சினிமா, திரைத் துளி
நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும். RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான "பாட்னர்" என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யு டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் 'மகா' நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் பார்ட்னர் படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் படத்தின் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், விடிவி கணேஷ், ஜா...
கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

சினிமா, திரைத் துளி
ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகள் மட்டுமன்று. உணர்வுபூர்வமான சில தருணங்களும் கூட! தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து ‘96 படத்தைத் தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார். தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகமே இந்த விருதை மிகவும் உணர்வுபூர்வமான விசயமாகக் கருதுகின்றனர். அதற்கான காரணமும் இருக்கிறது. அது 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான 'பிரமே புஸ்தகம்' என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாகக் காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார். ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்தப் ...
ஜூலை காற்றில் விமர்சனம்

ஜூலை காற்றில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னாலே உன்னாலே" படத்தில், 'ஜூன் போனா ஜூலை காற்றில்' என்ற பாடலை பா.விஜய் எழுதினார். ஜீவாவின் அப்படத்திற்கு, இந்தத் தலைப்பையும் அவர் ஓர் ஆப்ஷனாக வைத்திருந்தார். அவரது அசிஸ்டென்ட்டான KC.சுந்தரம், ஜீவாவிற்கு ட்ரிப்யூட் செய்யும் வண்ணம் தனது முதல் படத்திற்கு 'ஜூலை காற்றில்' எனத் தலைப்பிட்டுள்ளார். ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதலை, உறவுச்சிக்கலை மையமாகக் கொண்ட படமிது. படத்தை ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சுந்தரம். கடைசி அத்தியாயமான 'Moving on (கடந்து செல்லு) தான் படத்தின் சாரம். காதலில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மைண்ட் பிளாக்-கைக் காலகாலமான தமிழ்ப்பட நாயகர்கள் ஆழப் பதிந்து விட்டனர். ஓர் உறவில் இருந்து வெளியேறுவது என்பது மிகப் பெரிய குற்றமாகவே திரைப்படங்கள் சதா போதித்து வருகின்றன. சமூகம் ஒரு transition பீரியடில் உள்ளது. கணவன் இறந்தால் மன...
உறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு

உறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு

சினிமா, திரைத் துளி
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி 2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி, உறியடி 2 எடுப்பதற்கான காரணம் என்ன?" என்பதற்கு அழகான ஆழமான பதிலைச் சொல்லி இருக்கிறார். "இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம்" என்கிறார். மேலும், "எனக்குக் கம்யூனிசச் சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்பப் பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற ...
ஐபிசி 376

ஐபிசி 376

சினிமா, திரைத் துளி
ஐபிசி 376 - ஒரு த்ரில்லர் படம். வன்புணர்விற்கான தண்டனையைப் பற்றிக் குறிக்கும் சட்டப்பிரிவு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், நகைச்சுவை எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை. நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராஃபி பண்ணுகிறார். படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை. பெண்களை இழிவுப்படுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும். த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும். பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இ...
“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்

“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்

சினிமா, திரைச் செய்தி
ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் பேசுகையில், “எட்டு வயது இருக்கும் போது என்னுடைய தாயாரிடம் நான் இசையமைப்பாளராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். எங்கள் தாயாரின் அப்பா அதாவது தாத்தா ஒரு மிகப்பெரும் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். இந்தத் தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது பெயர் ஆர்.ஆர்.சந்திரன். சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. அதன் பிறகு வேறு ஒளிப்பதிவாளருடன் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் எனது தாத்தா ரத்தக்கண்ணீர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹரிச்சந்திரா, தாயின் மடியில், குபேரத் தீவு, தாய்க்கு பின் தாரம், கண்கள், இதயகீதம் போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்பத...
ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

சினிமா, திரைச் செய்தி
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே.சி.சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பேச்சுக்களை யூடியூப் சேனலில் பார்த்து வியந்திருக்கிறேன். படையப்பாவில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்த துணிச்சலே காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி அவர்கள் ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் திரைப்படத்துறைக்க...
90 ML விமர்சனம்

90 ML விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்துள்ள மிக முக்கியமான படம். இப்படியொரு படம் வருவது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. தண்ணியடிப்பது, தண்ணியடித்துவிட்டுக் காதலியிடம் காதலின் மாண்பையும் மகத்துவத்தையும் பிதற்றுவது, காதலியின் வீட்டிற்குச் சென்று கலாட்டா செய்வது, காதலியின் அப்பாவை ஒருமையில் பேசுவது, ஆற்றோரத்திலோ கடலோரத்திலோ 'பொண்ணுங்கள லவ் பண்ணக்கூடாது' என போதையில் நண்பர்களுக்குப் போதிப்பது என்பதெல்லாம் தமிழ்ப்பட நாயகர்கள் காலந்தோறும் கடைபிடித்து வரும் கலாச்சாரம். வாரத்துக்கு ஒரு படமாவது, பாரில் குத்துப்பாட்டு இல்லாமல் வருவதில்லை. சிகரெட் பிடிப்பது ஹீரோயிசம், தண்ணியடிப்பது ஆண்களின் பிறப்புரிமை என்பது சமூகத்தில் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், பெண்கள் குடித்தால் மட்டும் கலாச்சாரம் என்னாவது என்ற பதற்றம் ஆண்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. ஆண்கள் குடிப்பது தவறில்லை; பெண்க...
ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஆன்‌மிகம், சினிமா
உலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்மஸ்ரீ மேண்டலின் U.ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (ஃபிப்ரவரி 28) நினைவாக அவரது சிஷ்யனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்குப் பிடித்த கடவுளான அனுமனைப் போற்றும் அனுமன் சாலிசா பாடலை ஃப்யூஷனாக உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார். இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்களும் பாடியுள்ளார். மேலும் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U.ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U.ராஜேஷ் ஆகியோரும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளனர். இந்தப் பாடலை, ஃபிப்ரவரி 28 அன்று மாலை, சென்னையில் உள்ள மியூசிக் அகாடெமியில் நடைபற்ற 'தி கிரேட் மேண்டலின் ஷோ (The...
சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி

சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி

சமூகம்
நாளை நடைபெறும், இந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி. பங்குபெறும் ஆறு அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிஇன் உரிமையாளர்கள், கல்ஸ் குரூப் என்ற நிறுவனமும்,  ஸ்ரீ  ப்ராகரசிவ் புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனமும் ஆகும்.  ப்ரோ கைப்பந்து லீக் என்ற கைப்பந்து போட்டியை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தப் போட்டிக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளன. அந்த ஆறு அணிகளும் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லீக் போட்டிகளில் மோதுகின்றன. . சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மிகவும் திறமையான, இளமையான, அனுபவமிக்க வீரர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமும் பெற்றவர்கள். இவர்களுடன் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தன்னுடைய குழுவில்...
மாயன் – ஸ்டைலிஷான சிவன்

மாயன் – ஸ்டைலிஷான சிவன்

சினிமா, திரைச் செய்தி
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் படம் 'மாயன்'. டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI) என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்தத் தருணத்தில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். நான் விநாயகன் பக்தன், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல் அவரைப் பார்த்தவுடன் பிடித்தவிட்டது. அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்தப் படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பதில...
லண்டனில் நடந்த ஸ்ருதிஹாசனின் இசை நிகழ்ச்சி

லண்டனில் நடந்த ஸ்ருதிஹாசனின் இசை நிகழ்ச்சி

சினிமா, திரைத் துளி
தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசைப் பயணத்தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளார் நடிகையும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ஸ்ருதி ஹாசன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களைக் கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமீபத்தில் பாடினார். இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார். உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராகக் கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் "The Troubadour " எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புகழ்பெற்ற அரங்கு1954இல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது. தி நெட் (The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனி...