Shadow

Tag: Bigg Boss

பிக் பாஸ்: 3 நாள் 62 – ‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு!’ – கவின் & லாஸ் மைண்ட்-வாய்ஸ்

பிக் பாஸ்: 3 நாள் 62 – ‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு!’ – கவின் & லாஸ் மைண்ட்-வாய்ஸ்

பிக் பாஸ்
60 கேமராக்கள் என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில், 60 ஸ்கிரீனுடன் தோன்றினார் கமல். பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. கமலே சொன்னது போல் இத்தனை கேமராவில் இருந்தும் ஒரு மணி நேரத்துக்கான ஃபூட்டேஜ் எடுத்து, தேவையானது, தேவையில்லாதது எனப் பிரித்து, எடிட் பண்றதெல்லாம் சரியான வேலையாக இருக்கும். அதற்கே ஒரு பெரிய டீம் தேவை. ஆனால் அதில்லாமல் சட்ட வல்லுநர்கள், மனநல மருத்துவர்கள், சமூக அக்கறையாளர்கள் என இன்னொரு டீம் இருக்காம். எதை காண்பிக்க வேண்டும், எது வேண்டாம் என இவங்க எல்லோரும் சேர்ந்து தான் முடிவு செய்வதாகச் சொன்னார். வெள்ளிக்கிழமை பாட்டு போட்டும் யாரும் பெரிதாக எழுந்திரிக்கவில்லை. காபி சாப்பிட்டு பார்த்தால், மீரா மாதிரி யோகா பண்ணிக் கொண்டிருந்தார் கஸ். சோபாவில் உட்கார்ந்து தான் யோகா செய்வார்களா? சீன் போட்டாலும் அதில் கொஞ்சமாச்சும் மூளையை உபயோகிக்க வேண்டாமா? பாய்ஸ் டீம் அதைக் கலாய்த்துக் கொண்டிருக...
பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன்

பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன்

பிக் பாஸ்
புதுப்பேட்டை படத்தில் இருந்து, ‘வர்றியா வர்றியா’ பாடலுடன் தொடங்கியது நாள். சாண்டியின் தயவில் பாய்ஸ் டீம் பட்டையை கிளப்பினார்கள். காலை உணவுக்கு கெலாக்ஸ் மாதிரி ஏதோ பண்ணிருப்பார்கள் போல். அதை வைத்து எல்லோரும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தனர். சாப்பிட முடியாத அளவுக்கு செய்த புண்ணியவதி யாரு என்று தெரியவில்லை. வேறு யாராவது இருந்தால் இதை வைத்தே ஒரு பஞ்சாயத்து கிளம்பியிருக்கும். க்ளீனிங் டீமில் இருந்த தர்ஷனை சீண்டிக் கொண்டிருந்தார் ஷெரின். தர்ஷனும் சும்மா கலாய்த்துக் கொண்டிருந்தார். தர்ஷன் சொடக்கு போட்டுக் கூப்பிட்டதில் டென்சனாகி விட்டார் டார்லிங். சேரன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அடுத்த கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது. போட்டியாளார்களை மீதி இருக்கிறவர்கள் சேர்ந்து கேப்டனைத் தேர்ந்தெடுக்கின்ற மாதிரியான கேம். ஒரு பவுலில் இருந்து சீட்டு எடுக்கவேண்டும். யார் பேர் அதிகம் வருகின்றதோ அவர...
பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

பிக் பாஸ்
கோமாளி பாடலுடன் தொடங்கியது நாள். மொக்கை கதை சொல்வது தான் டாஸ்க்காம். கஸ்தூரி மொக்கை பண்றேன் பேர்வழி என ஷெரினை அழவைக்க, மற்ற எல்லோருமே டென்ஷன் ஆனார்கள். நேற்று, தர்ஷனிடம் சொன்ன மாதிரி கவினைக் கூப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் சேரன். எதற்கு இவருக்கு இந்த வேலை எனத் தோன்றியது. ஏனெனில் இவர் என்ன சொல்வார், அதை அவர்கள் எப்படி எடுத்துப்பார்கள் எனத் தெரியவில்லை. இருக்கின்ற பிரச்சினையில் புதிதாக வேற வரவேண்டுமா என்று யோசனை போனது. ஆனால் சேரன் அந்தச் சூழ்நிலையை ஹேண்டில் செய்த விதம் அற்புதம். நிதானமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, இவர் நமக்கு அட்வைஸ் செய்கிறார் என்ற உணர்வே வராமல், ஒரு உரையாடலாகக் கொண்டு போன விதம் அட்டகாசம். அவரே சொன்ன மாதிரி ரொம்ப நாளா பேச வேண்டுமென நினைத்து, முன் தயாரிப்போடு பேசியது தான். ஆனாலும் கவின் - சாக்‌ஷி பிரச்சினை பெரிதாகும் போது, அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையாக கையாண்டிருக்கலா...
பிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது

பிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது

பிக் பாஸ்
'சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை' பாடலோடு ஆரம்பித்தது நாள். முதல் டாஸ்க், தர்ஷன் விலங்குகள் போல் மிமிக்ரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும். ‘காலங்கார்த்தால எந்திரிச்சு நாய் மாதிரி கத்திட்டு இருக்கியே?’ என நம் வீட்டில் கேட்பார்கள் இல்லையா? அதை அங்கே லைவ்வாக காட்டிக் கொண்டிருந்தார். எல்லோரும் விதவிதமாகக் கத்திக் கொண்டு இருந்தனர். கஸ்தூரி, சேரன் இரண்டு பேரும் ஓரளவுக்கு நன்றாகச் செய்தனர். சேரன் மிமிக்ரி செய்யும் போது கவினின் எதிர்வினையை யாரேனும் கவனித்தீர்களா? சாண்டி மேல சாய்ந்து கொண்டு, தனக்கு இது பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாக உடல்மொழியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். நண்பர்களுக்கு இடையிய் இதைச் செய்யும் போது எந்த பிரச்சினையும் இல்லை. அப்போதைக்குத் திட்டிவிடலாம், இல்ல செல்லமாக உதைத்து விட்டுப் போகலாம், இல்ல திரும்ப ஒரு சந்தர்ப்பத்தில் பழிவாங்கிவிடலாம். ஆனால் தனக்கு இது பிடிக்கவில்லை ...
பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

பிக் பாஸ்
'தினமும் அடிஷனல் ஷீட் வாங்கி அனாலிஸிஸ் எழுதறேனே, ஒரு நாள் பிரேக் குடுங்க' என நான் கதறினது யாருக்குக் கேட்டதோ இல்லையோ, பிக் பாஸ்க்குக் கேட்டிருக்கும் போல! ஒளிபரப்பினாங்க பாருங்க ஒரு மொக்கை எபிசோட்டை!! 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' பாடலுடன் தொடங்கியது நாள். அது என்ன மாதிரியான சிச்சுவேஷனுக்கு இருக்கற பாட்டு, அதைக் கொண்டு வந்து இங்கே போடவேண்டுமா? ஆனால் இந்த ஸ்கெட்ச் யாருக்கென்று தான் தெரியவில்லை. எல்லோரும் கிண்டர்கார்டன் குழந்தைகளாக மாறி ஒரு ஸ்கூல் டாஸ்க் ஆரம்பித்தது. பஸ்ஸர் அடித்ததிலிருந்து எல்லோரும் கதபாத்திரமாகவே மாறிவிட்டனர். சாண்டி, தர்ஷன், லாஸ், ஷெரின் 4 பேருமே நல்ல பெர்ஃபாமன்ஸ். சேரன் தான் பிரின்சிபல். உடம்பு சரியில்லையோ என்னவோ, ரொம்ப சோர்வாக இருந்தார். மேலும், இன்று என்ன ஏழரை நடக்கப் போகுதோ என்கிற பீதி அவர் கண்களில் தெரிந்தது. அவருக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை. ...
பிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை

பிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை

பிக் பாஸ்
நேற்றிரவு கவின் லாஸ் பேசினதை மறுபடியும் போட்டுக் காண்பித்தது, எங்களை வெறியேற்ற தானே பிக்பாஸ்? அதுல இருந்து தான் ஆரம்பித்தது. ஊர்வசி ஊர்வசி பாடலுடன் தொடங்கியது நாள். ஷெரின் நன்றாக நடனமாடினார். கேப்டன் ஆன குதூகலமாக இருக்கும் போல. காலை உணவைத் தட்டில் வைத்துவிட்டு, லாஸ் வரவேண்டுமென காத்துக் கொண்டிருந்தார் சேரன். வெளியே கவின், சாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம், 'அவர் வெயிட் பண்றாரு போய்ச் சாப்பிடு' எனச் சொல்லியும் போகவில்லை லாஸ். கடைசியில் லாஸ் வந்ததுக்குப் பின் தான் சாப்பிட்டார். கவினும் லாஸும் பேசிக் கொள்வதைப் பார்த்து, இது நட்பு மட்டும் தானென யாராலாவது சொல்ல முடியுமா? சாக்‌ஷி சொன்னது போல் Los is blushing. அதாவது பழைய படத்தில் வர மாதிரி கன்னம் சிவந்து, கண்கள் படபடவென அடித்துக் கொண்டு பேசுவாங்களே, அந்த மாதிரி காட்சி எல்லாம் வந்து போகிறது. உங்களுக்கும் இஷ்க் இஷ்க்னு என்று தான் கேட்கி...
பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ்
நேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தார். காலர் ஆஃப் தி வீக் லாஸ்க்கு. ‘டான்ஸ் ஆடாமல் பேச மாட்டீங்களா? டிவில நியூஸ் வாசிக்கும் போது இப்படித்தான் ஆடிட்டே படிப்பீங்களா?’ எனக் கேட்டார். ‘நியூஸ் படிக்கிற நேரம் போக நான் இப்படித்தான் இருப்பேன்’ எனச் சொன்னார் லாஸ். அடுத்து பசங்க டீம் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டித்தவர், ‘இடத்தை மாத்தலேன்னா அந்த அடையாளம் தான் கிடைக்கும்’ எனப் பயமுறுத்தி, ‘மாத்திக்கறேன்’ எனச் சொல்ல வைத்தார். “சேரப்பா, ஏன் வேறப்பா ஆனாரு?” என சேரனிடம் முதலில் கேட்டார். நியாயமாக லாஸிடம் தான் கேட்கவேண்டும். “எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. அவங்க கொஞ்சம் விலகிப் போயிருக்காங்க. திரும்பி வருவாங்க” என விளக்கம் கொடுத்தார். லாஸ் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் சொன்னார். சேரனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாராம். ‘னால் சேரன் தான் நேர்ம...
பிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை!

பிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை!

பிக் பாஸ்
நம் நிஜ வாழ்க்கையில் சூழ்நிலைகள் தான் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அந்தத் தருணத்தில் எப்படி ரியாக்ட் செய்கின்றோமோ அதுக்கேற்ற மாதிரி தான் விளைவுகளும் இருக்கும். ஒருத்தன் நல்லவனாகறதுக்கும், கெட்டவனாகறதுக்கும் நடுவில் ஒரு சின்ன கோடு தான் இருக்கு. பிக் பாஸ் வீடும் அப்படித்தான். இங்கே இந்த மாதிரி சூழ்நிலைகள் வரலாம் எனத் தெரிந்து தான் அங்கே போகின்றனர். அப்படி ஒரு மொமென்ட்ல தான் தர்ஷன் ஹீரோவானார். 'என்னடா இது இந்த வனிதா இப்படிப் பேசுறார்? ஒருத்தர் கூட கேக்க மாட்டேங்கறாங்களே?' என ஒரு காமன் மேனுக்கான எதிர்பார்ப்பைத் தர்ஷன் பூர்த்தி செய்தார். நன்றாக யோசித்துப் பார்த்தோம் என்றால் அந்தச் சூழ்நிலை, அந்த வாய்ப்பு அங்கே இருந்த எல்லோருக்கும் இருந்தது. அன்று யார் பேசியிருந்தாலும் ஹீரோவாகிருக்க முடியும். ஆனால் எல்லோரும் தயங்கி தான் நின்றனர். அது தானாக அமைந்த சூழ்நிலை தான். சில சமயம் உருவாக்கப்பட்ட சில சூ...
பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

பிக் பாஸ்
‘மானாமதுரை மாமரக் கிளையிலே’ பாடலுடன் தொடங்கியது. ஆரம்பெல்லாம் நன்றாகத்தான் இருக்கு, ஆனால் ஃபினிஷிங் சரியில்லியேப்பா உங்களிடம். ‘நேத்து சொல்லாம தூங்க போய்ட்டீங்களே!’ என சேரனிடம் கேட்டாங்க லாஸ். “என் பொண்ணு எங்கிட்ட பேசாம இருக்கும் போது நான் சொல்லாம போனதுல தப்பில்லையே! நீ பேசறதுக்கு வரவும் மாட்டேங்கற. டைமும் கொடுக்க மாட்டேங்கற. பேசலாம், நிறைய பேசலாம்” எனச் சொல்லிவிட்டுப் போனார் சேரன். இதை அப்படியே பாய்ஸ் டீமிடம் சொன்னார் லாஸ். “உங்க அப்பா, ச்சேச்சே சேரன் சார் எனக்கும் குட்மார்னிங் சார்னு சொன்னாரு” என கவினும் சொன்னார். “சோ, அப்பான்னு கூப்பிட்டதுக்கே லாஸ் இப்ப வருத்தப்படறாங்க போல!” என அந்தப் பக்கம் வனிதாவிடம் ரிப்போர்ட் செய்தார் சேரன். “உங்கிட்ட கொஞ்சம் பேசணும் தம்பி” என தர்ஷனிடம் சொல்லும் சேரன், கொஞ்ச நேரத்தில் பேசவும் செய்தார். கொஞ்ச நேரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது பார்த்...
பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ்
விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே தானே பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நேற்று வனிதா பேசினது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, அபிராமிக்கு நிறைய குழப்பங்கள். 'நாம தப்பு பண்ணிட்டோமோ?' என சந்தேகம். அபியைப் பொறுத்தவரைக்கும் இது விளையாட்டாக ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். வந்த முதல் நாளே கவினிடம் தன் காதலைச் சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூட இதை மறைக்கவில்லை. கவின் அபிக்கு வெளியில் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இருந்திருக்கு. ஒரு கிரஷ். ஆக ஒரு எக்சைட்மென்ட்டில் ஆரம்பித்தது, கவின் விலகி போன உடனே காற்று போன பலூன் மாதிரி ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் அபியை ரிஜக்ட் பண்ணின கவின், சாக்‌ஷி பக்கம் சாய்கிறான். ஆக, சாதரணமாக ஒருவரிடம் இருக்கிற ஈகோ அபிக்கும் எட்டிப் பார்க்கிறது. 'நீ என்னை ரிஜக்ட் பண்ணின இல்ல? உன் முன்னாடியே நான் ஒருத்தனை லவ் பண்ணி காட்டறேன...
பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

பிக் பாஸ்
'யாரடி நீ மோகினி' பாடலுடன் தொடங்கியது நாள். கஸ்தூரி கெட்ட ஆட்டம் போட்டார். காலங்கார்த்தாலேயே இப்படி. கடவுளே! கடவுளே! மன்னராட்சியில் குறைகளைக் களைவதற்குத் தர்பார் கூடியது. புதியதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்காரரைப் போல் தன் ஆட்சியில் கிடைத்த பலன்களைப் பட்டியிலிட்டுக் கொண்டிருந்தார். மன்னரும் அமைச்சரும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வருவதே இல்லை என்று மன்னரின் மீதே பிராது கொடுத்தனர் மக்கள். விரைவில் குறை தீர்க்கப்படும் என்று உறுதி கொடுத்தார் மன்னர். கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்பில் கூட ஸ்கோர் செய்வதால் தான் சாண்டியை எல்லோருக்கும் பிடிக்குது. இன்னிக்கும் மன்னர் வேஷத்துக்கு இருக்கின்ற ப்ராபர்ட்டீஸை வைத்து, ஒரு அட்டகாசமான அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணிருந்தார். ஹாட்ஸ் ஆப் சாண்டி & டீம். காலையிலேயே முகின் மூட் அவுட்டாக இருந்தார். அபியிடம் பேசவில்லை போல. சாப்பிட வந்த போதும் ஒரு வார்த்தையில் பதில...
பிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்?’

பிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்?’

பிக் பாஸ்
ஆர்பாட்டமில்லாத கமலின் என்ட்ரியோடு டொடங்கியது. தன் ட்ரேட் மார்க் அறிமுக உரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்குக் கூட்டிச் சென்றார். மேயாத மான் பாடலுடன் தொடங்கிய நாளில் அந்தப் பாட்டுக்கு ஆடச்சொன்னால், எல்ல்/ஓரும் அவங்க பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். சாண்டி எழுந்து வந்து ஸ்டெப் சொல்லிக் கொடுக்கும் போது பாட்டே முடிந்து விட்டிருந்தது. ஷெரினின் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சாக்ஷி அவரை டார்ச்சர் பண்ணியுள்ளார். அதை வருத்தத்டுடன் பதிவு பண்ணினார் ஷெரின். ‘ஆனால், சாக்ஷியே, இந்த நாளை உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ, நாளைக்கே நீ வெளியே போனாலும், முதல் ஆளா கண்ணீர் விடறதும், உண்மையா வருத்தப்படறதும் ஷெரின் மட்டும் தான். இதை நீ உணரும் போது ஷெரின் உன் பக்கத்துல இருக்க மாட்டார்’ என என் மைன்ட் வாய்ஸை இங்கே பதிந்து கொள்கிறேன். சேரன் சாக்ஷிக்காகப் பேசினார். இருந்தும் தலைவி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இந்த...
பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

பிக் பாஸ்
‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள். கஸ்தூரி வில்லுப்பாட்டு பாடுவாராம். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் நாராசமாக இருந்தது. பேரில் "வின்" வைத்திருக்கிற கவினுக்கு "லாஸ்" தான் பிடிக்குதென லைன் எழுதிக் கொடுத்தது யாருய்யா? சட்டு புட்டுன்னு முடிந்தால் தவலையென இருந்தது. கவினிடம் விசாரணை நடந்தது. ‘நாலு பொண்ணுகளை ஒரே நேரத்துல லவ் பண்றது காமெடியா உனக்கு?’ எனச் சிரித்துக் கொண்டே ஊசி குத்திக் கொண்டிருந்தார் கஸ்தூரி. ‘இதே விஷயத்தை ஒரு பொண்ணு செஞ்சிருந்தா உனக்குக் காமெடியா இருந்திருக்குமா?’ எனக் கஸ்தூரி கேட்ட பொழுது, கவினுக்கு மூஞ்சியே இல்லை. முடிந்து போன விஷயத்தை மறுபடியும் கிளறிக் கொண்டே இருக்கிறார். கூடிய சீக்கிரம் வெடிக்கும். கேப்டனுக்கான டாஸ்க். ஒரு பெரிய கேன்வாஸில், 3 பேரும் கலர் பெயின்ட் அடிக்கவேண்டும். எந்த கலர் பெயின்ட் அதிகமாக இருக்கோ அவங்க தான் வின்னர். ஆரம்பத்தில் சேரன் ...
பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.!

பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.!

பிக் பாஸ்
‘வரான் பாரு வேட்டைக்காரன்’ பாட்டு போட்டு எழுப்பி விட்டனர். உண்மையில் இது கஸ்தூரிக்கான இன்ட்ரோ பாடலாம். நாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். தர்ஷன் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார். கவின் முட்டைகோஸ் நறுக்கிக் கொண்டிருந்தார். அது என்ன சைஸில் வேணும் என மதுமிதா சீன் போட்டுக் கொண்டிருந்தார். கவினும், சாண்டியும் சிம்புவின் குரலில் பேசிக் கொண்டிருந்தனர். சிம்பு படம் ட்ராப் ஆனது அதுக்குள் அங்கே தெரிந்திருக்கும் போல. படம் ட்ராப் ஆனாலும் ட்ரெண்டிங்கில் இருக்க சிம்புவால் தான் முடியும். சிம்பு வாய்ஸில், சாண்டியை விட கவின் தான் நல்லா பேசறார். இப்பொழுது விஷயம் என்னவெனில் மதுமிதாவைத் தவிர யாருக்குமே சமைக்கத் தெரியாது. வனிதா, சரவணன், ரேஷ்மா தான் இப்ப வரைக்கும் மெயின் குக்கிங். ரேஷ்மாவும் சரவணனும் ஒரே வாரத்தில் போனதால் இப்ப சாப்பாட்டுக்குத் தவிக்கின்றனர். மதுவுக்கும் ஓரளவுக்கு தான் சம...
பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

பிக் பாஸ்
நேற்று சரவணன் போனதுக்கு வீடே அழுது கொண்டிருந்ததது. ஆனால் இன்று அதோட சுவடே இல்லாமல் எல்லோரும் ஜாலியாக இருந்தனர். இந்த சோஷியல் மீடியா உலகத்தில் சோகமாக இருக்கிறதுக்கோ துக்கப்படறதுக்கோ கூட இடமே இல்லை. ஏனெனில் எல்லா உணர்ச்சிகளும் சடுதியில் மாறிவிடும். நமக்கு ஆதர்சமாக விளங்கிய நபர் இறந்த செய்தியைப் படித்துவிட்டு சோகமாக ஸ்க்ரோல் செய்தால், அடுத்த பதிவே ஒரு மீம் வந்து சிரிக்க வைத்துவிடும். இந்தக் கலவையான உணர்வுகள் தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது. இழவு வீட்டில் கூட, சாவை விசாரித்துவிட்டு வெளியே வருபவர் ஃபோனை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதைப் பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிற பழக்கங்கள் சோஷியல் மீடியாவினால் பாதிக்கப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. நமது எந்த ஓர் உணர்வுக்கும், அது துக்கமோ, சந்தோஷமோ அதற்கான ஆயுள் ரொம்பக் க...