Shadow

Tag: Dwayne Johnson

ஃபாஸ்ட் X விமர்சனம்

ஃபாஸ்ட் X விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“குடும்பம் தான் எல்லாம்” எனும் இப்படத் தொடரில் வரும் வசனங்கள், மற்ற படங்களில் வரும் பாத்திரங்கள் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தந்தையின் மரணத்திற்காகப் பழிவாங்க நினைக்கும் வில்லன் டான்டே, ‘உனக்குக் குடும்பம்தானே எல்லாம்!’ என டொமினிக்கின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் திட்டங்கள் தீட்டுகிறார். அதற்காக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஏஜென்சி உதவி கேட்பதாக நம்ப வைத்து, ரோமில் நடக்கும் வெடி விபத்துக்கு டொமினிக்கின் குழுவைப் பொறுப்பாளியாக்கி விடுகிறார் டான்டே. ஏஜென்சி, டொமினிக்கையும் அவரது குழுவையும் கைது செய்ய உலகம் முழுக்கத் தேட, டான்டேவைத் தேடிச் செல்கிறார் டொமினிக். டான்டேவிற்கு, டொமினிக்கின் மகன் லிட்டில் B இருக்கும் இடம் தெரிந்துவிட, அச்சிறுவனைக் கொல்ல விரைகிறார் டான்டே. டொமினிக்கால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. படம் முழுக...
ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகரும...
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம். ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும் களத்தில் குதித்து ஆக்ஷன் அதகளம் செய்கின்றனர். முக்கியமாக, க்ளைமேக்ஸில் சாமோ (Samoa) தீவுகளில் நடக்கும் சண்டை செம ஜாலியாகவும், சீட் நுனியில் அமரச் செய்யும் அற்புதமான ஆக்ஷனாகவும் உள்ளது. ஹெலிகாப்டரைப் பறக்க விடாமல், சங்கிலியால் பிணைத்து, ஒற்றுமையாகச் செயற்பட்டு வில்லனைக் கதி கலங்க வைக்கும் காட்சி அட...
உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா

உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் தொடர் படங்களின் மொத்த வசூல் 500 கோடி அமெரிக்க டாலர்கள். அதிக வசூல் செய்த தொடர் படங்களின் வரிசையில் 9 ஆம் இடத்தில் உள்ளது. 2015 இல், பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்துக்குத் தமிழகத் திரையரங்களில், அவரது அறிமுக காட்சிக்குக் கிடைத்த ஆரவார ட்ரிப்யூட்டே இத்தொடரின் புகழுக்குச் சான்று. வயது வரம்பின்றி எல்லா வயதினரும் பாரபட்சமின்றிக் கண்டு ரசிக்கத்தக்க ஆக்ஷன் காட்சிகள்தான் இத்தொடர்படங்களின் சிறப்பம்சம். சட்ட விரோதமான முறையில் பைக் மற்றும் கார் சேஸிங் நடத்தி அதை ஒரு சூதாட்டமாக மாற்றிவிடும் கும்பல் பற்றிய படமாகத் தொடங்கி, அடுத்தடுத்த தொடர்களில், சேஸிங் காட்சிகள் தவிர அதிரடி ஆக்ஷன் சம்பவங்களை ஒருங்கிணைத்து, உலவு பார்த்து பயங்கர சதிகளை முறியடிக்கும் பலம் மிக்க சூப்பர் ஹீரோக்கள் தொடராக (Franchise) ஆக ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் உருமாறிவிட்டன...
ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
225 மாடிகளைக் கொண்ட விண்ணைத் தொடும், ‘பேர்ள் (Pearl)’ எனும் கோபுர நகரமொன்றை ஹாங்காங்கில் நிர்மாணிக்கிறார் தொழிலதிபர் சாவ் லாங் ஜி. 3500 அடி உயரமான அந்தக் கோபுரத்தின் 96வது தளத்தில், ராக்கின் குடும்பம் மட்டும் தனியாக வசிக்கிறது. ராக், அந்தக் கோபுரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் காவலர் பொறுப்பை ஏற்கிறார். சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணி புரியும் கோரெஸ் போத்தா எனும் வில்லன், கோபுரத்திற்குள் புகுந்து, 96வது தளத்தில் தீ வைத்து, கோபுரத்தின் தானியங்கி தீயணைக்கும் பாதுகாப்பு வசதியையும் நிறுத்திவிடுகிறான். பிரம்மாண்டமான பேர்ள் நகரத்திற்குள் சிக்கிக் கொள்ளும் தன் குடும்பத்தை ராக் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. ட்வெயின் ஜான்சன் எனும் ராக்-கோடு, இயக்குநர் ராசன் மார்ஷல் தர்பர் இணையும் இரண்டாவது படமிது. சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் படத்தில், ஸ்டேண்ட்-அப...
ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காட்டுக்குள் ஜாலியான அட்வென்ச்சர் சஃபாரிக்கு உத்திரவாதம் அளிக்கிறது படம். பள்ளியில் நான்கு மாணவர்களை 'டெடன்ஷன்' செய்து அவர்களுக்கு ஓரறையைச் சுத்தம் செய்யும் பணியைத் தருகின்றனர். அங்குள்ள 'ஜுமான்ஜி' எனும் வீடியோ கேமை விளையாடி அதற்குள் உறிஞ்சப்படுகின்றனர் மாணவர்கள். ஜுமான்ஜி காட்டின் சாபத்தை அவர்கள் போக்கினால் தான் அந்தக் காட்டில் இருந்தும், விளையாட்டில் இருந்தும் வெளியேற முடியும். ஜுமான்ஜியின் சாபத்தை மாணவர்கள் எப்படிப் போக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மாணவர்கள் விளையாட்டுக்குள் போகும் பொழுது, வேறு உருவத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவதாரங்களில் காட்டுக்குள் விழுகின்றனர். அதில், மேக்கப் மற்றும் செல்ஃபி விரும்பியான பெத்தானி எனும் பள்ளி மாணவி, 'கர்வி ஜீனியஸ்' என்று அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து ஆணாக ஜுமான்ஜியில் உலா வருகிறார். அந்தக் கதாபாத்திரம், அதாவது நடு வயது ஆணின் உடம்புக்குள் பு...
ஜுமாஞ்சி – காட்டிற்கு வரவேற்கும் விளையாட்டு

ஜுமாஞ்சி – காட்டிற்கு வரவேற்கும் விளையாட்டு

அயல் சினிமா, திரைத் துளி
ஜோ ஜான்ஸ்டனின் நேர்த்தியான இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு ஜுமாஞ்சி எனும் திரைப்படம் வந்தது. அப்படத்தைப் பார்த்தவர்கள் யாரும் அந்தப் படம் தந்த அற்புதமான அனுபவத்தை மறந்திருக்க வாய்ப்பே இல்லை. போலீஸ் வாகனத்தை ஓட்டும் குரங்குகள், வீட்டுக்குள் வரும் வெள்ளம், சிங்கம், நெடுஞ்சாலையில் ஓடும் மிருகங்கள் என அந்தப் படம் பற்றி நினைத்தாலே ஓர் உற்சாகம் எழும். அதனால் தான் அப்படம் வசூலில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியிருந்தது. க்றிஸ் வேன் ஆல்ஸ்பர்க், 1981-ஆம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமது! அப்படம் வெளி வருவதற்கு சற்று முன்னர் இறந்து விட்ட அப்படத்தின் விசேஷக் காட்சிகளின் சிருஷ்டிகர்த்தா ஸ்டீஃபன் L. ப்ரைஸின் நினைவாக அப்படம் அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2005இல், ஏறக்குறைய அதே கதைக்களத்தில், ‘Zathura - A Space Adventure’ வெளியானது. 199...
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 'தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பமே அதகளமான கார் ரேஸில் தொடங்குகிறது. ரசிகர்கள், இந்தத் தொடர் படங்களில் இருந்து என்ன எதிர்பார்ப்பார்களோ அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் க்றிஸ் மார்கன். கதை, லாஜிக் எல்லாம் இரண்டாம் பட்சமே! ரோலர் கோஸ்டரில் இரண்டு சுற்று போய் வந்தது போன்ற உணர்வை தரக்கூடிய பொழுதுபோக்குச் சித்திரம். அதனால் தான் உலகளவில் வசூலில் ரெக்கார்ட் பிரேக் சாதனை புரிந்து வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்றாலே விர்ர்ரூம் எனச் சீறும் கலர் கலரான கார்கள் தானே ஞாபகம் வரும். இப்படத்தில் ஒரு படி மேலே சென்று, "கார் மழை"யைப் பொழிந்துள்ளார் இயக்குநர் கேரி க்ரே. விஷூவலால் வாயடைக்க வைக்கின்றனர். 'தெறி மாஸ்' என்ற பதம் இப்படத்திற்கு மிகப் பொருந்தும். வில்லனாய் உள்ளே வந்த ஜேஸன் ஸ்டாத்தமை, டொமினிக் டீமு...
சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம்

சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நட்பைக் கொண்டாடும் நகைச்சுவைத் திரைப்படம். 20 வருடங்களுக்குப் பின், ஃபேஸ்புக் மூலமாக தன் நண்பனைச் சந்திக்கிறான் கால்வின் ஜாய்னர். அடுத்த நாள் காலை சி.ஐ.ஏ. கால்வின் வீட்டு வாசலில் நிற்கிறது. அவன் சந்தித்த நண்பனான பாபி ஸ்டோன் ஒரு கொலை செய்து விட்டு, செயற்கைக் கோள் சம்பந்தமான குறியீட்டு இலக்கங்களை தீவிரவாதிகளிடம் விற்கப் பார்க்கும் மோசமான நபர் என சி.ஐ.ஏ.வால் கால்வினுக்குச் சொல்லப்படுகிறது. பாபியோ மீண்டும் கால்வினை அணுகி உதவி கேட்கிறான். கால்வின் சி.ஐ.ஏ. பக்கமா? நண்பன் பக்கமா? என்பதே படத்தின் கதை. கதை ஓர் ஆக்ஷன் படத்துக்கான கருவைக் கொண்டிருந்தாலும், நகைச்சுவையையே பிரதானமாகக் கொண்டுள்ளது. ஸ்டேண்ட்-அப் காமெடியனான கெவின் ஹார்ட், கால்வின் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தான் வாழும் வாழ்க்கை மீதுள்ள விரக்தியைக் காட்டுவதாகட்டும், நண்பனின் தொல்லை தாங்க முடியாமல் கழட்டி விடப் பார்ப்பதாக...