Shadow

Tag: Team Aim

ரிப்பப்பரி விமர்சனம்

ரிப்பப்பரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
RIP Up Bury எனும் ஆங்கிலச் சொற்களைத் தலைப்பாக்கியுள்ளனர். சமையல் சேனல் வைத்திருக்கும் யூட்யூபர் சத்யராஜிற்கு, நண்பர்கள் இருவருடன் ஊர் சுற்றி வருவதைப் பிரதானமாகக் கொண்டுள்ளார். அவரது வீடியோவில் கமென்ட் போடும் கோல்டன் ஃபிஷ் எனும் பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார் சத்யராஜ். அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து காதலில் வெற்றி பெறலாம் எனப் பார்த்தால், மாற்று ஜாதியில் காதலிக்கும் ஆண்களின் கழுத்தை அறுக்கும் சாதிவெறி பிடித்த பேய் ஒன்று அச்சுறுத்தலாக முளைக்கிறது. சத்யராஜ், அந்த சாதிவெறி பிடித்த சைக்கோ பேயை மீறிக் காதலில் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. படத்தின் தொடக்கமே மிரட்டலாக உள்ளது. ஊரை விட்டுக் காதலியுடன் ஓடத் துடிக்கும் காதலனின் தலையைக் கொய்து போஸ்ட் பாக்ஸில் போடுகிறது பேய். பால் கேனுக்குள், டூ-வீலர் பெட்ரோல் டேன்க்கில் எனக் கொல்பவர்களின் தலையைச் சாத்தியமே இல்லாத இடத்தில் எல்லாம் வைத்துவிட்...
இரும்பன் விமர்சனம்

இரும்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குறவர் இனத்தைச் சேர்ந்த ஆஃபீஸுக்கு, சமண மதத்தைச் சேர்ந்த மஹிமா மீது காதல் வந்துவிடுகிறது. அவர்கள் காதலைச் சேர்க்க பரதர் (மீனவ) இனத்தைச் சேர்ந்த பீட்டர், பிளேடுடனும் ஆஸ்பித்திரியுடனும் இணைந்து மஹிமாவைக் கடத்தி விடுகின்றனர். ஆஃபீஸின் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. அலுவலகத்தில் பிறந்ததால் ஆஃபீஸ் என்றும், மருத்துவமனையில் பிறந்ததால் ஆஸ்பித்திரி என்றும் பெயர் வைத்துவிடுகின்றனர். ஆஃபீஸாக ஜூனியர் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். எம்ஜியார் - ஜானகியின் வளர்ப்பு மகள் சுதாவின் மகனாவார். வலது தோள் பட்டையில் எம்ஜியாரைப் பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார். குறவர்களை அசூயையாகப் பார்க்கும் மக்களுக்கு மத்தியில், மஹிமா ஆஃபீஸை அன்புடன் பார்த்தவுடன், நாயகனுக்குக் காதல் வந்துவிடுகிறது. சமணத் துறவியாக மடத்தில் சேரும் மஹிமாவைக் கடத்திக் கடலுக்குக் கொண்ட...
மெமரீஸ் விமர்சனம்

மெமரீஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மிகச் சிக்கலான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என மெமரீஸ் படத்தைப் பற்றி படக்குழு விளம்பரப்படுத்தினர். அதற்கு ஏற்றாற்போலே அமைந்துள்ளது திரைக்கதை. பார்வையாளர்களின் அதீத கவனத்தைக் கோரும் ஒரு படம். பிரதான கதாபாத்திரத்தின் கோணத்திலேயே படம் பார்க்கப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு, இப்படம் சவாலானதாக இருக்கும். கதை மூன்றாக விரிகிறது, பிரதான கதாபாத்திரமான வெற்றி, ஒவ்வொரு உப கதையிலும் ஒவ்வொரு ரோலில் வருகிறார். முதல் கதையில், மருத்துவர் பெருமாளின் குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த நான்கு கொலைகளையும் செய்தது உதவி இயக்குநர் வெங்கி எனத் தெரிய வருகிறது. வெங்கிக்கோ, விபத்தில் ‘மெமரி லாஸ்’ ஏற்பட்டுவிட, மருத்துவர் அபிநவ் ராமானுஜத்தின் உதவியோடு, வெங்கியின் நினைவைத் தட்டியெழுப்பி, அவன் புரிந்த கொலைகளைப் பற்றி அவனையே வாக்குமூலம் செய்ய வைக்கின்றார். இரண்டாவது கதை, நான்கு கொலைகளையும் செய்தது வெங்கி அல்ல என எட்டு வருடங்...
பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் த்ரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா, “இந்தப் படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன். இப்போது அது நிறைவேறியுள்ளது. படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்த படம் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது” என்றார். நாயகி காயத்ரி, “எனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இயக...
மெமரீஸ் – மிகச் சிக்கலான சைக்கலாஜிக்கல் த்ரில்லர்

மெமரீஸ் – மிகச் சிக்கலான சைக்கலாஜிக்கல் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
ஷிஜு தமீன்’ஸ் ஃபிலிம் ஃபேக்டரி வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மெமரீஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ த்ரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச் செய்யும் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ்...
இன் கார் விமர்சனம்

இன் கார் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு நாளைக்கு இந்தியாவில் சுமார் 100 பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்ற புள்ளி விவரத்தினைச் சொல்கிறார் இயக்குநர் ஹர்ஷ் வர்தன். அதில் பல கடத்தல்கள் வெளியில் வருவதே இல்லை. அரை அடி தூரத்தில், பெண் போலீஸ் அமர்ந்திருக்கும்போது, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் சாக்ஷி குலாட்டி எனும் இளம்பெண்ணைக் கடத்தி விடுகின்றனர். பகலில் நடக்கும் ஒரு கடத்தலையே கூட, அது கடத்தல்தான் என மூளை உள்வாங்கிச் செயற்படும் முன் கார் சிட்டாய்ப் பறந்து விடுகிறது. சாலையில் வரும் ஒரு காரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி, காரைக் கடத்துகின்றனர் 3 கடத்தல்காரர்கள். அந்தக் கடத்தப்பட்ட காரிலே தான் சாக்ஷி குலாட்டி கடத்தப்படுகிறாள். பின் இருக்கையில், சாக்ஷி குலாட்டியின் இரு பக்கமும் கடத்தல்கார இளம்வயது சகோதரர்கள் இருவர், முன் இருக்கையில் அவரது மாமாவும் அமர்ந்துள்ளனர். படம், அதன் பின் காருக்குள்ளேயே நிகழ்க...
அரியவன் விமர்சனம்

அரியவன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘திருச்சிற்றம்பலம்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய மித்ரன் R. ஜவஹரின் படம். இப்படம், பொள்ளாச்சி பாலியல் வழக்கை நினைவுகூரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. காதல் எனும் போர்வையில், பெண்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்கள் சொல்லும் நபருடன் அப்பெண்கள் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும் என மிரட்டுகிறது ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று. மிரட்டப்பட்டும் அடிப்பணியாத பெண்களைக் கொலை செய்யவும் துணிகிறது அக்குழு. ஜெஸ்ஸி எனும் இளம்பெண், அக்குழுவால் பாதிக்கப்படும் பொழுது நாயகன் ஜீவா காப்பாற்றிவிடுகிறான். இதனால் கோபமுறும் வில்லன் துரைபாண்டி, ஜீவாவையும், அவன் காப்பாற்றும் பெண்களையும் பழிவாங்கத் துணிகிறான். அதிலிருந்து நாயகனும், பாதிக்கப்பட்ட பெண்களும் எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. நாயகியாக பிரணாளி கோக்ரே நடித்துள்ளார். பாடலுக்கும், நாயகனை வியக்கவும் மட்டுமே பய...
ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

சினிமா, திரைத் துளி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும், துருவா ச...
தேஜாவு இயக்குநருடன் இணையும் தர்புகா சிவா

தேஜாவு இயக்குநருடன் இணையும் தர்புகா சிவா

சினிமா, திரைத் துளி
தேஜாவு திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'கிடாரி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'முதல் நீ முடிவும் நீ' ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையைப் பதித்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்புகா சிவா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்று தயாரிப்பாளர் புகழ் தெரிவித்துள்ளார். இப்படத...
தக்ஸ் விமர்சனம்

தக்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஸ்வாதந்த்ரியம் அர்த்தராத்திரியில்’ எனும் மலையாளப் பட்த்தைத் தழுவி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிருந்தா. இரண்டாவது படத்திலேயே, சிறையிலிருந்து தப்பித்துச் செல்லும் ப்ரிஸன் ப்ரேக் (Prison Break) வகைமை படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்துள்ளார் பிருந்தா. ‘ஹே சினாமிகா’ எனும் அவரது முதற்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். பணத்தைத் திருடிய குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறான் சேது. தனது காதலியோடு ஆஸ்திரிலேயா செல்லத் திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறான். சிறையில் இருந்து தப்பித்து மீண்டும் காதலியோடு நாட்டை விட்டுச் செல்வதற்காகச் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றான். அதற்காகத் தனது சக அறைவாசிகளைச் சம்மதிக்க வைத்துத் தனது தப்பிக்கும் திட்டத்தை அரங்கேற்ற நினைக்கிறான். சிறை கண்கணிப்பாளர் ஆரோக்கியதாஸாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். சிறைக்கைதிகளைத் தனது கட்டு...
சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி’

சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி’

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இந்தப் படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்விழாவினில் பேசிய இயக்குநர் பேரரசு, “ஒரு நேர்த்திய...
இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை

இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்தக் கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அச்சந்திப்பில் பேசிய இயக்குநர் ஹர்ஷ் வர்தன், " 'இன் கார்' படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்து ...
உடன்பால் விமர்சனம்

உடன்பால் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம். பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், சகோதர - சகோதரி பந்தம், குயுக்தி, கடன் சிக்கல் என மனித மனங்களை ஆக்கிரமிக்கும் உணர்வுகளைக் கலகலப்பாகத் தொட்டுச் செல்கிறது படம். இந்தப் படத்தின் கதையை, விநாயகத்தின் குடும்பக்கதை என இரண்டு வார்த்தையில் சொல்லலாம். விநாயகமாக சார்லி நடித்துள்ளார். அவரது அனுபவத்திற்கு அசால்ட்டாய் ஸ்கோர் செய்யக்கூடிய பாத்திரத்தில்...
நடிகர் ஆதி – இயக்குநர் அறிவழகன் இணையும் ‘சப்தம்’ திரைப்படம்

நடிகர் ஆதி – இயக்குநர் அறிவழகன் இணையும் ‘சப்தம்’ திரைப்படம்

சினிமா, திரைத் துளி
தனது முதற்பட நாயகனான ஆதியை மீண்டும் நாயகனாக்கி, “சப்தம்” எனும் புதுப்படத்தை இயக்கித் தயாரிக்கிறார் இயக்குநர் அறிவழகன். ஆல்ஃபா ஃப்ரேம்ஸ் இயக்குநர் அறிவழகனும், 7ஜி ஃப்லிம்ஸ் சிவாவும் இணைந்து தயாரிக்க, டிசம்பர் 14 அன்று எளிமையான பூஜையுடன், சப்தம் படம் இனிதே துவங்கியது. ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் த்ரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். த்ரில்லர் படங்களைத் தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்...