Shadow

Tag: Team Aim

“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம்

“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம்

சினிமா, திரைச் செய்தி
சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத். T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை” ஆகும். மேலும் இப்படத்தில் கஸ்தூரி, K.R.விஜயா, R.N.R.மனோகர், பாவா லக்‌ஷ்மணன், சேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே. ராஜன், “இது ஒரு நல்ல படம் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறைய செலவு செய்திருக்கிறார்கள். இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக ...
மாமன்னன் விமர்சனம்

மாமன்னன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மக...
பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கண் பார்வைக் குறைபாடுள்ள நாயகனுக்கு, தன் குடும்ப உறவைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொலையாளி யார், கொலையாளியை எப்படிக் கண்டுபிடித்தார், குடும்ப உறவுக்கும் கொலையாளிக்கும் என்ன பகை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை. படத்தின் ஆரம்பக் காட்சியில் ஆட்டோவில் பயணம் செய்யும் விக்ரம் பிரபு நடுரோட்டில் பைக் பஞ்சர் ஆனதால் தவித்துக் கொண்டிருக்கும் ஓர் இளம் கணவன் மனைவிக்கு லிஃப்ட் கொடுத்து உதவுகிறார். ஆட்டோவில் ஏறும் அந்த இளம்பெண்ணோ விக்ரம் பிரபுவை மயக்கமடையச் செய்ய முயற்சி செய்கிறார். ‘ஏன்?’ என்கின்ற விறுவிறுப்போடு படம் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் திரைக்கதையைச் சுவாரசியமாக்குகின்றன. ஒரு கட்டத்தில் அவர்கள் குறி வைப்பது விக்ரம் பிரபுவையா இல்லை அவரது வீட்டில் உள்ளவர்களையா என்கின்ற குழப்பம் வரும் போ...
தலைநகரம் 2 விமர்சனம்

தலைநகரம் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைநகரம் சென்னையை மூன்று ரெளடிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மூவருக்குமே தான் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையை ஆள வேண்டும் என்பது ஆசை. இதனால் ஒருவரையொருவர் போட்டுத் தள்ளத் துடிக்கின்றனர். அதே நேரம் பழைய ரெளடியான ‘ரைட்டு’, ‘இந்தக் கத்தி, இரத்தம் இதெல்லாம் வேண்டாம்’ என்று ஒதுங்கி, மாலிக் பாய் (தம்பி இராமையா) உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். ஆனால் காலமும் சூழலும் ரைட்டைத் தன் கையில் மீண்டும் கத்தி தூக்க வைக்க, ஒட்டு மொத்த சென்னையும் அவன் கட்டுப்பாட்டில் வருகிறது. அது எப்படி என்பதைச் சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறது தலைநகரம் 2. படத்தின் மிகப் பெரிய பலமே அந்த மூன்று ரெளடிகளும், அவர்களின் பின்கதையும் தான். நஞ்சப்பா, வம்சி, மாறன் என மூன்று ரெளடிகள். இந்த மூன்று ரெளடிகளுக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திர வடிவமைப்பு. நஞ்சப்பா 5 - 6 இளம் ரெளடிகளை வைத்துக் கொண்டு தொழில்...
அழகிய கண்ணே விமர்சனம்

அழகிய கண்ணே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை எழுதிக் கொடுத்து கரெக்ட் செய்து காதலிக்க தொடங்கியவுடன் சரி இது காதல் கதைதான் என்று தீர்மானித்திற்குத் தள்ளியது படம். இடையில், அறிமுக நாயகன் லியோ சிவகுமார் இயக்குநர்களுக்கு கடிதமாக எழுதித் தள்ளி இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகப் போகிறேன் என்று சென்னை கிளம்புகிறான். லியோ சிவகுமார், திண்டுக்கல் லியோனியின் மகனாவார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். அங்குப் போனது...
சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்

சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்

OTT, சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய கோர்ட் டிராமாவான "சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai)" திரைப்படத்தை, ஜூன் 7 முதல் உள்ளூர் மொழிகளில் காணலாம். இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் படைப்பான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படத்தை சமீபத்தில் வெளியிட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், P.C. சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வை எண்ணிக்கையில் சாதனை படைத்தது. ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்காக இப்படத்தை வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறத...
இந்தியாவின் முதல் தபால் மனிதன் – ‘ஹர்ஹாரா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

இந்தியாவின் முதல் தபால் மனிதன் – ‘ஹர்ஹாரா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

சினிமா, திரைத் துளி
கலர்ஃபுல் பீட்டா மூவ்மென்ட் (Kalorful Beta Movement) தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரைத் தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார். நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன், இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வி1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் ஓர் அருமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்காலத்தில் டிஜிட்டல் வசதி...
இண்டியானா ஜோன்ஸின் கடைசிப் பாகம்

இண்டியானா ஜோன்ஸின் கடைசிப் பாகம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான படத்தொடரின் இறுதிப் பாகமான ‘இன்ஸ்டால்மென்ட்டான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ படம், அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகிறது. புகழ்பெற்ற ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் திரும்புகிறார். பெரிய திரையில் அதிரடியான சாகசத்தைக் காணத் தயாராகுங்கள்.The man, the myth, the legend. Harrison Ford is back in and as #IndianaJones for one final adventure.#IndianaJones and the Dial of Destiny releases only in cinemas June 29 in English, Hindi, Tamil & Telugu. pic.twitter.com/a7sHCwD9xy — Walt Disney Studios India (@DisneyStudiosIN) June 2, 2023This is what you've been waiting for India! Brace yourselves for one last adve...
காட்டேஜ் – மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்

காட்டேஜ் – மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
எவொலூஷன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ப்ளூபெர்ரி ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டிவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “காட்டேஜ்”. நான்கு கதாபாத்திரங்களோடு, காட்டேஜ் பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் த்ரில் பயணமாக் அமையும் ‘காட்டேஜ்’. ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன், அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி த்ரில்லர் தான் காட்டேஜ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஊட்டியின் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் ஊட்டியில் 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. இயக்குநர்கள் சதீஷ் ...
விடுதலை பாகம் 1-100 மில்லியன் பார்வை நிமிடங்கள்

விடுதலை பாகம் 1-100 மில்லியன் பார்வை நிமிடங்கள்

OTT, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான ”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதிக்குமளவு, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 28, ஜீ5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்துவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான 'விடுதலை பாகம் 1' சமூகத்திற்கு அவசியமான படைப்பாகவும், ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாகவும் அமைந்துள்ளது. இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன்...
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு, பாரையில் வீடு, நீண்டக்கரா

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு, பாரையில் வீடு, நீண்டக்கரா

OTT, Web Series, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு, பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது.விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதலியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால் மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு க்ளூ, ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு, பாரையில் வீடு, நீண...
டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

Movie Posters, அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் "டபுள் இஸ்மார்ட்". மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர் இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாகம் முதல் பாகத்தைக் காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோ...
ஜூன் 2 வெளியாகிறது ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’

ஜூன் 2 வெளியாகிறது ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’

சினிமா, திரைத் துளி
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்தப் படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2 ஆம் தேதி அன்று வெளியாகிறது. இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் வித்தியாசமான தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்; வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்; வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார...
இராவண கோட்டம் விமர்சனம்

இராவண கோட்டம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘மதயானைக் கூட்டம் (2013)’ படம் தந்த அனுபவத்தைப் பத்தாண்டுகளாகியும் மறக்க முடியாதளவு மிக நேர்த்தியாக நேட்டிவிட்டியுடன் இயக்கியிருந்தார் விக்ரம் சுகுமாரன். அந்தப் படம், ஹிந்தியில் ‘ராவன்பூர்’ என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பிற்காகச் சினிமா ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் மிக நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, ஒருவழியாக அவரது அடுத்த படைப்பான “இராவண கோட்டம்” திரையரங்கை எட்டிவிட்டது. ஏனாதி எனும் கிராமம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 16 கிராமங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நல்லவர் போஸ். அந்தக் கோட்டத்திலேயே, நல்லது கெட்டது அறிந்த ஒரே ஆள். அந்த ஏரியா சமஉ (MLA) கூட போஸைப் பார்த்தால் பம்முவார். போஸ், ஊர் ஒற்றுமையைக் காப்பாற்ற உயிரையும் கொடுப்பார்; ஊர் ஒற்றுமைக்குப் பாதகமென்றால் உயிரையும் எடுப்பார். ஆளுங்கட்சி...
இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கண்ணன் ரவி க்ரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் இளவரசு, “இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள். விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராகப் பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப் பெரிய வாழ்த்துகள். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்குத் தெரியும். தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான காரணங்களையும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர். ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கண்டிப்பாக இந்தப்...