Shadow

Tag: Team Aim

தி ஸ்மைல் மேன் விமர்சனம்

தி ஸ்மைல் மேன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சரத்குமாரின் 150 ஆவது படமாகுமிது. கொல்பவர்களின் மேலுதட்டையும், கீ்ழ் உதட்டையும் அறுத்து நீக்கி, அவர்களது பல்வரிசை தெரியும்படி முகத்தைச் சிதைத்து, பொது இடத்தில் வீசி விட்டுச் செல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அக்கொலைகாரனால் விபத்துக்குள்ளாகும் காவல்துறை அதிகாரியான சிதம்பரம் நெடுமாறன், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ‘தி ஸ்மைல் மேன்’ எனும் கொலைகாரனைப் பிடிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறார். யாரந்த ஸ்மைல் மேன், எப்படி அவன் சிக்கினான் என்பதுதான் படத்தின் முடிவு. மாலாக்கா கதாபாத்திரத்தின் மூலம் றெக்க (2016) படத்தைக் காப்பாற்றிய ஷிஜா ரோஸ், இப்படத்தில் புலனாய்வு செய்யும் அதிகாரி கீர்த்தனாவாகத் தோன்றியுள்ளார். கதைக்கோ, கதைக்குள் நடக்கும் புலனாய்வுக்கோ அவர் உதவாவிட்டாலும், அவரது இருப்பு (presence) படத்திற்கு அழகைச் சேர்த்துள்ளது. ராஜ்குமார் ஏற்றிருக்கும் பிச்சுமணி எனும் கதாபாத்திரம் நகைச்சுவைக்குக் கடைசி வ...
ஹாட்ஸ்டாரில் இந்தி ‘பாகீரா’ ஸ்ட்ரீமிங்

ஹாட்ஸ்டாரில் இந்தி ‘பாகீரா’ ஸ்ட்ரீமிங்

OTT, அயல் சினிமா, சினிமா
KGF, காந்தாரா மற்றும் சலார் போன்ற சினிமா மைல்கற்களை வழங்கியபின் ஹோம்பாலே பிலிம்ஸின் பாரம்பரியம் பாகீராவுடன் தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டவுடன் இப்படம் 2024 ஆண்டின் மிக அதிக வசூலைப் பெற்ற கன்னடப் படமாக மாறியது. இந்தச் சமூக காவலன் த்ரில்லர், உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்காகத் தனது உலகளாவிய டிஜிட்டல் பிரவேசத்தின் மூலம் ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து அரங்கேறவிருக்கிறது.டாக்டர் சூரியால் இயக்கப்பட்டு பிரஷாந்த் நீல்-ஆல் எழுதப்பட்ட பாகீரா படம், தங்கப்பதக்கம் வென்ற மற்றும் நீதித்துறையின் வரம்புகளினால் மனமயக்கமுற்று சமூகக் காவலராகும் IPS அதிகாரியான வேதாந்தின் (ஸ்ரீமுரளி) கதையைக் கூறுகிறது. வேதாந்த் பாகீராவின் முகமூடியை அணிந்த பின் அவர் மிக சக்தி வாய்ந்த வில்லனையும் (கருடா ராம்) அயராத ஒரு CBI அதிகாரியையும் (பிரகாஷ் ராய்) நீதிக்கான போர்க்களத்தில்...
அகத்தியா | ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில் – சாகச உலகம்

அகத்தியா | ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில் – சாகச உலகம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா"வாகும். ‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற ஈர்ப்பான கதைக்கருவுடன், அதிநவீன CGI-உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில் த்ரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகம் படைக்கப்பட்டிருக்கும் "அகத்தியா" படத்தினைப் புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவைத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என இப்படத்தின் டை...
தி ஸ்மைல் மேன் – சரத்குமாரின் 150 ஆவது படம்

தி ஸ்மைல் மேன் – சரத்குமாரின் 150 ஆவது படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் 150 ஆவது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள படம் “தி ஸ்மைல் மேன் (The Smile Man)" ஆகும். இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ், “எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 படங்களுக்கும் மேல் இருக்கும் திரை அனுபவம், அறிவு எங்களைத் திகைக்க செய்தது. ஷ்யாமுக்கும் எனக்குமான நட்பு தனித்துவமானது. எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம். கதை இருந்தால் தான் ...
பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்

பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ‘பரோஸ்’, திவரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர் பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். 'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் செய்துள்ளார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில் பேசிய வசனகர்த்தா ஆர் பி பாலா, “மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன். பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு ...
Parachute விமர்சனம்

Parachute விமர்சனம்

OTT, Web Series, இது புதிது, திரை விமர்சனம்
பாராசூட் என்பது டிவிஎஸ் XL இன் பெயர். தந்தையின் அடிக்கு மிகவும் பயப்படும் பதினொரு வயதாகும் சிறுவன் வருண், தன் ஏழு வயது தங்கை ருத்ராவை மகிழ்விக்க பாராசூட்டில் அவளை அழைத்துச் செல்கிறான். வண்டி காணாமல் போய்விடுகிறது. தந்தையின் கோபத்தை எதிர்கொள்ள அஞ்சி, பாராசூட்டை மீட்கும் முயற்சியில் இறங்கும் சிறுவர்கள் ஒரு பக்கம், பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள் மறுபக்கம் என தொடர் நல்லதொரு எமோஷ்னல் ஜர்னிக்கு உத்திரவாதம் அளித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான மூர்த்தி, பிலிப்ஸ் எனும் குடிகார கதாபாத்திரத்தில் வருகிறார். குறைவான திரை நேரத்திற்கே வந்தாலும் நிறைவாகத் தன் பங்கைச் செய்து கலகலப்புக்கு உதவியுள்ளார். மறுபடியும், சக மனிதர்கள் மீது அக்கறையுள்ள ஒரு டெம்ப்ளேட் கதாபாத்திரத்தில் பவா செல்லதுரை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் விறைப்பாக வந்து செல்கிறார். காளி வெங்கட்டிற்கு மீண்டுமொரு அட்டகாசமான குணசித்திர வேடம...
ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம்

ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம்

OTT, இது புதிது, சினிமா
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான் ‘பிரதர்’ திரைப்படம் ஜீ5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. கமர்ஷியல் காமெடிப் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் தற்போது ஜீ5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.இயக்குநர் ராஜேஷ் M, “பிரதர் திரைப்படம் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு. திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் தந்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஜெயம் ரவியை இயக்கியது மி...
கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்” ஆகும். இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ்ப் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கெனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட...
“பெண்குயின் டூ ஜீப்ரா” – இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்

“பெண்குயின் டூ ஜீப்ரா” – இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராகக் கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது ஜீப்ரா திரைப்படம். சென்னையில், பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர். தயாரிப்பாளர் தினேஷ், "பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக் கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப் படம் செய்துள்ளேன். இந்தப் படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது அவரிடம். இந்திய...
எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
லியோனாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே உமா சங்கர்க்குக் காதல் வந்து விடுகிறது. லியோனாவிற்கும் காதல் வந்துவிட, அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸும் ஊடலும்தான் படத்தின் கதை. மீண்டுமொரு ஸ்டாக்கிங் (Stalking) படமாக இருக்குமோ என்ற எண்ணம் எழும்போது, உமாசங்கர் லியோவிடம் காதலைச் சொல்லி விடுகிறார். 'எனக்கு இது செட்டாகாது' என லியோ சொன்னதும், உமா சங்கர் நாயகியைத் தொந்தரவு செய்யவில்லை. மிகவும் ஆசுவாசமாக இருந்தது. நாயகியும் சட்டென காதலை உணரத் தொடங்கிவிடுவதால், அடுத்த படம் 'ரொமான்ஸ்'-இற்குள் போகுமென நினைத்தால், கடைசி வரை அதுக்குள் போகவே இல்லை. க்யூட்டாக வைக்க வேண்டுமெனத் தலைப்பை மிஸ் லீடிங்காக வைத்துள்ளனர். புரிதலில் ஒரு சின்ன பிரச்சனை, தன்னிடம் பொய் சொல்லி விட்டான் என்ற நாயகியின் கோபம்தான் படத்தின் மைய ஓட்டம். 112 நிமிட கால அளவு கொண்ட படம். திருப்பமோ, சுவாரசியமோ இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் முதற்பா...
ஹிட்லர் விமர்சனம்

ஹிட்லர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படைவீரன் (2018), வானம் கொட்டட்டும் (2020) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் SA தனாவின் மூன்றாவது படம். 'வானம் கொட்டட்டும்' எனக் கதைக்குப் பொருந்தும் கவித்துவமான தலைப்பை வைத்தவர், இப்படத்திற்கு 'ஹிட்லர்' எனும் பொருந்தாத தலைப்பை வைத்திருக்கும் வாய்ப்புக் குறைவாகவுள்ளது. 'பிச்சைக்காரன்' எனும் எதிர் தலைப்பு ஈட்டிக் கொடுத்த வெற்றியினால் உந்தி, 'சைத்தான் (2016)', 'எமன் (2016)', 'திமிரு பிடிச்சவன் (2018)', 'கொலைகாரன் (2019)' என எதிர் தலைப்புகள் வைப்பதில் ஆர்வம் காட்டினார் விஜய் ஆண்டனி. அதன் தொடர்ச்சியாக 'ஹிட்லர்' எனும் தலைப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார் எனப் படுகிறது. மற்ற தலைப்புகளில் இல்லாத அரசியல் பிழைத்தனம் 'ஹிட்லர்' எனும் தலைப்பில் உள்ளது. நாயகனை ஹிட்லர் என அழைத்து, அம்மனிதகுல விரோதியை மகிமைப்படுத்துவது பெருங்குற்றத்தில் வரும். இயக்குநர், வில்லனின் சர்வாதிகாரத்தன போக்கைக் குறிக்கும் வி...
விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு

விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு

Teaser, காணொளிகள், சமூகம்
விஜய் டிவியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்குக் கோலாகலமாகத் துவங்குகிறது. சமீபத்தில் மிகப் புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8இன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி, “உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.., இந்த வாட்டி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் டேக் லைனைச் சொல்லி முடிக்கும் ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி களமிறங்குவது, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல புது ஆச்சரியங்களுடன், புதுப்பொலிவுடன் “பிக்பாஸ் சீசன் 8” பார்வையாளர...
Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்

Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்

OTT
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ரகு தாத்தா திரைப்படம், இந்தித் திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப் பேசும் படைப்பாகும். சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகுதாத்தா, ZEE5 இல், செப்டம்பர் 13 , 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது. ரகு தாத்தா தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் காணக் கிடைக்கும்.நடிகை கீர்த்தி சுரேஷ், “பெண் சுதந்திரத்தை நம்பும் கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ஜீ5 இல் காண உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது நாங்கள் எடுத்துக் கொண்ட கருவினைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்” என்றார். ஹோம்பாலே பி...
கோலி சோடா ரைசிங் | விஜய் மில்டன் | ட்ரெய்லர்

கோலி சோடா ரைசிங் | விஜய் மில்டன் | ட்ரெய்லர்

OTT, Web Series
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸினை, செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.புதிய சந்தையில் ஒரு டிரக்கில் உணவகத்தை அமைப்பதற்காகத் திரும்பும் நான்கு சிறுவர்களின் கதாபாத்திரங்களை ட்ரெய்லர் காட்டுகிறது. தற்போது புத்திசாலி இளைஞர்களாக வளர்ந்துள்ள சிறுவர்கள், இம்முறை வாடகை இடத்தில் வியாபாரம் செய்யாமல், சொந்தமாக ஒரு கடையை அமைக்கத் தீர்மானிக்கின்றனர். நடிகரும் இயக்குநருமான சேரன் முன்னாள் குற்றவாளியாகவும், நடிகர் ஷாம் ஒரு மோசமான குண்டர் கும்பலின் தலைவராகத் தோன்றுவதையும் இந்த டிரெய்லர் நமக்குக் காட்டுகிறது. இந்த பரபரப்பான தொடரில் குக் வித் கோமாளி புகழ் ஒரு கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ...
ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

Songs, அயல் சினிமா, காணொளிகள்
மார்டின் படத்தின் முதல் சிங்கிளான "ஜீவன் நீயே" பாடல் வெளியாகியுள்ளது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர், பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில் இப்பாடல் மனதை மயக்குகிறது.துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப் பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில் ...