தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்
இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டத்தை செப்டம்பர் 13 அன்று வெளியிட்டது பிரைம் வீடியோ.
எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர், தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்திற்குச் செல்லும் மாநகரத்தைச் சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த இணைய தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் ...