Shadow

அயல் சினிமா

The Sum of All Fears விமர்சனம்

The Sum of All Fears விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜேக் ரையன் என்பவர் ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல ஒரு சாகசகார ஸ்பெஷல் ஏஜென்ட் கதாபாத்திரம். டாம் க்ளென்ஸி எனும் எழுத்தாளர் படைத்த கற்பனை கதாபாத்திரம் இது. கதைப்படி, ஜேக் ரையன், அமெரிக்காவின் உளவுத்துறையில் டேட்டா அனலிஸ்ட்டாக வேலை செய்பவன். உலகெங்கும் நடக்கும் அசாதாரணச் செயற்பாடுகளைக் கண்காணித்து அது குறித்து அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அளிக்கும் வேலை. ஆனால், இவனுக்கு டெரரான ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அமெரிக்காவின் மெரைன் (கடல் சார்ந்த) ராணுவத்தில் பணியாற்றி, விபத்தால் முதுகுதண்டு உடைந்து குணமான பிறகு மிலிட்டரி அனலிஸ்ட்டாக மாறியவன். இந்தக் கதாபாத்திரத்தை வைத்து டாம் க்னென்ஸி பல கதைகள் எழுதியிருக்கிறார். அனைத்தும் பெரிய ஹிட். இந்தக் கதைகள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. அந்த சீரிஸில், 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் "த சம் ஆஃப் ஆல் ஃபியர்ஸ்". வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல், பொல...
எவரு விமர்சனம்

எவரு விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இன்ட்டரொகேஷன் அடிப்படையில் அமைந்த நல்ல க்ரைம் த்ரில்லர். நாலு வருஷத்துக்கு முன்னாடி வெளிவந்த The Invisible Guest எனும் ஸ்பானியப் படத்தின் தெலுங்குப் பதிப்பு. எல்லாப் பதில்களும் கேள்விக்கு உட்படுத்தப்படும் (All answers shall be questioned) என்பது தான் இந்தப் படத்தின் டேக் லைன். போன வருடத்தில் தெலுங்கில் வெளிவந்த மிகச் சிறந்த படம் என்ற விருதைப் பெற்ற திரைப்படம்.  சமீரா மிகப்பெரிய தொழிலதிபர். அவர்  கோத்தகிரியில் ஒரு ரிசார்ட்டில் டிஎஸ்பி அஷோக் தன்னைக் கற்பழித்ததால் அவனைச் சுட்டுக் கொல்கிறாள். எல்லா எவிடென்ஸும் அஷோக் தவறானவன் என்றே கூறுகிறது. இதனால் போலீஸின் இமேஜ் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் அஷோக் குற்றவாளி அல்ல என நிரூபிப்பது போலீஸ் டிபார்ட்மென்டுக்கு அவசியமாகிறது. அதற்காக மிகத் திறமையான வக்கீல் ஒருவரை வழக்காட நியமிக்கிறது போலீஸ். அவர் சாட்சியங்களைத் தனக்குத் தக...
உண்ட – மலையாளப் பட விமர்சனம்

உண்ட – மலையாளப் பட விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
எங்கள் வீட்டில் எப்பொழுதும் அரைகிலோ வேர்கடலை இருக்கும். என் மனைவி வேர்கடலையை வறுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார். எனக்கு அவ்வப்பொழுது அதுதான் நொறுக்குத்தீனி. இப்பொழுது கொரோனாவால் லாக்-டவுன்க்கு ஆளான பிறகு வீட்டிலேயே இருப்பதால் வறுத்த வேர்கடலையை தினமும் ஒரு பிடி சாப்பிட்டு வந்தேன். திடீரென, வேர்கடலை தீர்ந்து போனது. எங்கள் ஏரியாவில் நான்கு நாட்களாக பல கடைகளில் கேட்டும் வேர்கடலை மட்டும் கிடைக்கவே இல்லை. இப்பொழுது சட்னி அரைக்கக்கூட வேர்கடலை கிடைக்கவில்லை. இது போல் தான் பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரியாது. குறைவாக இருக்கும் போது பார்த்துப் பார்த்துப் பயன்படுத்துவோம். குறைவாக இருக்கிறது என்பதே ஒரு வித பதற்றத்தை உண்டாக்கிவிடும். இது போன்ற இக்கட்டான தருணங்களில் குடும்பத்தில் ஒரு சாதாரணப் பொருள் இல்லையென்றாலே நாம் டென்ஷன் ஆகிவிடுகிறோம். ஒரு பொது காரியத்துக்காக வீட்டையும் ஊரையும் பிரிந...
ஜோசஃப் – விமர்சனம்

ஜோசஃப் – விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படம், கடந்த நான்கைந்து வருடங்களில் நான் பார்த்த மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் இரண்டு லேயர்கள் உள்ளன. ஒன்று க்ரைம் இன்வெஸ்டிகேஷன். மற்றொன்று மிக எமோஷனலான குடும்ப உறவுகள் மீதான சென்ட்டிமென்ட். இரண்டையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது ஜோசஃப். ஜோசஃப், ரிடையர்ட் போலீஸ் அதிகாரி. அவரது இன்வெஸ்டிகேஷன் திறமைக்காக அவரைத் தொடந்து போலீஸ் டிபார்ட்மென்ட் பயன்படுத்தி வருகிறது. முதல் காட்சியில் மிக அநாயாசமாக அந்த வயதான தம்பதியர் கொலையில் கொலைகாரன் யார் என துப்பறியும் காட்சியும் அதற்கான லாஜிக்கும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஜோஃசப்க்கு ஒரு தொந்தரவு செய்யும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அவர் போலீஸ் டிபார்ட்மென்ட்டில் சேருவதற்கு முன் அவரது ஊரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெண் வீட்டில், இவர் வேலை இல்லாதவர் என்பதால் இவருக்குப் பெண் தர மறுக்கிறார்கள்...
1982 – லெபனான் திரைப்படம்

1982 – லெபனான் திரைப்படம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜூன் 1982. விஸாம் எனும் பள்ளி மாணவன், எப்படியாவது தன் காதலை ஜோனாவிடம் சொல்லி விடவேண்டுமென நினைக்கின்றான். ஆனால், அச்சமயம் பலத்த வெடிச்சத்தம் கேட்கிறது. எல்லாமே தலைக்கீழாய் மாறுகிறது. லெபனான் இளைஞர்கள் இராணுவத்தில் பெருமளவு சேர, லெபனான் மண்ணில் இஸ்ரேலும் சிரியாவும் மோதிக் கொள்கின்றன. பெரும்பாலான போர் படங்கள், குறிப்பாக அமெரிக்கத் திரைப்படங்கள், தங்கள் படை எப்படி போரில் வெற்றி ஈட்டியது என்பது பற்றியதாகவே இருக்கும். ‘தி பியானிஸ்ட்’ போன்ற வெகு சில விதிவிலக்குகளும் உண்டு. இதற்கு மாறாக ஐரோப்பியத் திரைப்படங்களோ, போரினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினைப் பற்றித் தொடர்ந்து பேசி வருகின்றன. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடான லெபனானின் இயக்குநர்களும், போரின் பாதிப்பைப் பற்றிய உணர்ச்சிபூர்வமான படத்தை உருவாக்கி வருகிறார்கள். ‘கேப்பர்னாம் (Capernaum)’ என்ற அற்புதமான லெபனான் படம் ஒரு சிறந்த எடுத்து...
ட்ரான்ஸ் விமர்சனம்

ட்ரான்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
Trance என்றால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. போதையூட்டப்பட்ட மயக்கநிலை என்றும் சொல்லலாம். மனிதன் கண்டுபிடித்த லாகிரி வஸ்துக்களிலேயே, “மதம் (religion)” தான் பயங்கர வசீகரமானதும், மிகக் கொடியதானதும் ஆகும். மதம் பிடித்த மனிதனின் பைத்தியக்காரத்தனம் எந்த எல்லைக்கும் செல்லும். அவர்களது உலகமே தனி. நவீன அறிவியலை மண்டியிடச் செய்யும் விஞ்ஞானச் செறிவு நிறைந்தது எங்கள் மதநூல் என உன்மத்தம் கொள்ளவைக்கும். அத்தகைய மதத்தின் மீதான ஒருவனது நம்பிக்கை, தன்னைக் காக்க இறைவன் பிரசன்னம் ஆவான் என எதிரிலுள்ள ஆபத்தை உணராமல், எளிய தீர்வுகளை நோக்கி நகராமல் கட்டிப் போடும் விஷப்போதையைத் தரவல்லது. போதைக்கு அடிமையானவர்கள், கடவுளின் பெயரால் தங்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தருவது கற்பனைக்கெட்டாத அளவற்ற பணமும், அரசியலில் அசைக்க முடியாத அதிகாரமுமே! இதில், ட்ரான...
மது வடலாரா விமர்சனம்

மது வடலாரா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நாயகனும், நாயகனின் நண்பனும் ஒரு ஆன்லைன் டெலிவெரி கம்பனியில் டெலிவெரி பாய்ஸாக வேலை செய்கிறார்கள். நாயகனின் நண்பன் கேஷ் ஆன் டெலிவெரி பண்ணும்போது கஸ்டமர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நோட்டை மறைத்துவிட்டு, “சார் 500 ரூபாய் குறையுது, 100 ரூபாய் குறையுது” என ஏமாற்றிப் பணத்தை அபகரிப்பார். இதைப் பார்த்த நாயகனும் அதைப் போல முயற்சி செய்யப் போக, அவன் பல சிக்கல்களில் மாட்டுவதுதான் கதை. வித்தியாசமான மேக்கிங்கால் கவர்ந்துள்ளார் இயக்குநர். ஒரு கஸ்டமர். அதுவும் பாட்டி. அப்பாட்டியை ஏமாற்ற முயன்று, அப்பாட்டியிடம் மாட்டிக் கொள்கிறார் நாயகன். அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும்போது பாட்டி இறந்து விடுகிறார். பாட்டியின் பிணத்தை மறைக்க அந்த வீட்டுக்குள் போய், அது தேவையில்லாமல் பெருஞ்சிக்கலில் இழுத்துவிட்டு விடுகிறது. அதைச் சமாளிக்க முடியாமல் அவ்வீட்டிலேயே மயங்கிவிடும் நாயகன், மீண்டும் விழிக்கும் பொழுது, ரத்த...
அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்

அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என எழுத்தாளர் ஜி. நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணி நேரத் திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி, பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அனார்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ‘ட்ரைவிங் லைசென்ஸ்’ திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர். உண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் என்பது எப்படி எந்தெந்த வகையில் யார் யாருக்காகவெல்லாம் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் பூடகமாக உணர்த்திச் செல்கிறது என்பதனால்தான் இந்தத் திரைப்படம் முக்கியமானதாகிறது. பொதுவாக இந்தத் திரைப்படத்தை கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் தன்முனைப்பு போராட்டமாக மட்டுமே பலரும் அடையாளப்படுத்துகிறார்க...
பிளட்ஷாட் விமர்சனம்

பிளட்ஷாட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பிளட்ஷாட் என்பது வேலியன்ட் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு சூப்பர் ஹீரோவின் பெயர். ‘பிளட்ஷாட்’ எனும் பிராஜெக்ட்டை உருவாக்கும் RST நிறுவனம், இறந்துவிடும் ஒரு இராணுவ அதிகாரியான ரே கேரிசனுக்குச் செயற்கை உயிரூட்டி, உடலில் நேனைட்ஸ் (Nanites) –ஐச் செலுத்தி விடுகின்றனர். நேனைட்ஸ் அதி வேகத்தில் செயற்பட்டு, பழுதுபடும் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவல்லது. ஆனால், ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜியின் (RST) சி.ஈ.ஓ.வான டாக்டர் எமில் ஹார்டிங், பிளட்ஷாட்டை ஒரு ஆயுதமாக மட்டுமே உருவாக்குகிறார். மனதில் குமுறும் பழிவாங்கும் உணர்ச்சிதான், ஒரு மனிதனை உச்சபட்ச ஆயுதமாக மாற்றும் என்பதால், ரே-வின் மூளையில் ஒரு கதையை விஷுவலாகப் பதிக்கிறார். அதை உண்மையென நம்பும் பிளட்ஷாட், பழிவாங்கும் உணர்ச்சியில் கொதித்து, அவர் மூளையில் பதியப்பட்டிருக்கும் எதிராளியைத் தேடிக் கொல்கிறார். தான் உபயோகிக்கப்படுகிறோம் என ஒரு கட்டத்தில் ...
தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது 'தி இன்விசிபிள் மேன்' எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது. மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் தரும் டார்ச்சர். தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் ஆட்ரியன், தான் கண்டுபிடித்த மாயமாகும் உடையை அணிந்து கொண்டு, செசலியா காஸ் யாருடனெல்லாம் நெருக்கமாக இருக்கிறாளோ அவர்களிடம் இருந்தெல்லாம் பிரிக்கிறான். மனதளவில் அவளை முடக்கும் முயற்சியில், செசிலியாவின் சகோதரியையே கொன்று அந்தப் பழியையும் செசிலியா மீது போடுகிறான் ஆட்ரியன். கண்ணுக்குத் தெரியாத ஒரு...
கட்புலனாகாத சைக்கோ மனிதன்

கட்புலனாகாத சைக்கோ மனிதன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘தி இன்விசிபிள் மேன்’ எனும் அறிவியல் புனைவு நாவலை 1897 இல் எழுதினார் H.G.வெல்ஸ். அதை அடிப்படையாகக் கொண்டு, 1933 இல் ‘தி இன்விசிபிள் மேன்’ எனும் திரைப்படம் உருவானது. அதைத் தொடர்ந்து, 1940 இல் 'தி இன்விசிபிள் மேன் ரிட்டர்ன்ஸ்', 1951 இல் 'அபோட் அண்ட் காஸ்டெல்லோ மீட் தி இன்விசிபிள் மேன்', 1984 இல் சோவியட் படமான 'தி இன்விசிபிள் மேன்', 2000இல் வெளிவந்த 'ஹாலோ மேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, H.G.வெல்ஸின் நாவலைத் தழுவி, 'தி இன்விசிபிள் மேன் (2020)' படம் வ்ளியாகவுள்ளது. பணக்காரனும், அதிமேதாவி விஞ்ஞானியுமான ஆலிவர் ஜாக்ஸன் கோஹனின் வன்முறையைக் கையாளும் உறவில் இருந்து, ஓரிரவு தப்பிச் சென்று தலைமறைவாகிறார் செசிலியா காஸ். ஒருநாள் ஆலிவர் ஜாக்ஸன் கோஹன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது பெரும் சொத்து செசிலியா காஸ்க்குக் கிடைக்கும்படி உயில் எழுதி வைக்கிறான். அவன் இறந்துவிடவில்லை, அரூபமாய் மாறி தன்னை டார்ச்சர்...
ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட்

ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘பாராசைட் (Parasite)’ என்பது ஒட்டுண்ணியைக் குறிக்கும். மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரை ஒட்டுண்ணி என்பர். படத்தின் கருவை உணர்த்தும் குறியீட்டுப் பெயராக, ‘பாராசைட்’ எனும் தலைப்பினைக் கொள்ளலாம். இந்தக் கொரியன் படம் மொத்தமாக 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளியிருக்கிறது. அதுவும் சிறந்த படம், சிறந்த சர்வதேச படம் எனும் இரண்டு முக்கிய கேட்டகரியிலும் வென்றதால் வியத்தகு பாராட்டுகளையும், கடுமையான விமர்சனங்களையும் சம அளவில் சந்தித்து வருகிறது. ஆஸ்கார் விருதுகளில் லாபி அதிகம், அதே போல ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் வணிக நோக்கமும் விருதுக்கான தேர்வில் அழுத்தத்தினைக் கொடுக்கும். ஆசிய மார்கெட்டை ஹாலிவுட் பக்கம் திருப்பக் கூடுதல் கவனத்தை, சமீப வருடங்களில் ஆஸ்கார் விருதின் போது அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, ஆஸ்கார் விருதுகளைப் பெரிய அங்கீகரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்த விருதுகளைத் தாண்டி, உண்மையிலேயே ...
தி க்ரட்ஜ் விமர்சனம்

தி க்ரட்ஜ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘ஜு-ஆன்: தி க்ரட்ஜ்’ என 2002 இல் வெளிவந்த ஜப்பானியப் படத்தின் ரீமேக்காக, ஆங்கிலத்தில் ‘தி க்ரட்ஜ்’ எனும் படம் 2004 இல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ‘தி க்ரட்ஜ் 2 (2006)’, ‘தி க்ரட்ஜ் 3 (2009)’ ஆகிய படங்கள் வெளிவந்தன. ஜப்பானில் இருந்து ஒரு சாபத்தைத் தன்னோடு அமெரிக்கா கொண்டு வருகிறாள் நர்ஸ் ஃபியோனா லேண்டர்ஸ். இப்படத்தினை, 2004 இல் வெளிவந்த ‘தி க்ர்டஜ்’ படத்தின் இணைப்பாகமாகக் (sidequel) கொள்ளலாம். 2004 இல் லேண்டர்ஸ் குடும்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது.அதை விசாரிக்க வந்த போலீஸ்காரர் மீதும் சாபம் படிகிறது. பின், அந்த வீட்டை யார் யாரெல்லாம் மிதிக்கிறார்களோ அவர்கள் அனைவரின் மீதும் சாபம் படிகிறது. அப்படி, 44 எனும் இலக்கமிட்டு அந்த வீட்டிற்குச் சென்று, அதன் துர் அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சும் லோர்னா, காரில் தப்பித்துச் செல்ல முற்படுகையில் விபத்தில் எரிந்து போகிறாள். அவ்வூருக்கு 2006 இல் மாற்றலாகி...
டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்

டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
விக்டோரியன் காலகட்டத்தில் நடக்கும், டாக்டர் டூலிட்டிலின் பிரபலமான கதை, புதிய கதாபாத்திரங்களுடன் பெரிய திரையில் ஜனவரி 17, 2020 அன்று வெளியாகவுள்ளது. டூலிட்டில் என்னும் புனைவுக் கதைகளின் மிக உறுதியான கதாபாத்திரங்களின் ஒன்றாகவும், மிருகங்களுடன் பேசும் திறன் கொண்ட ஒரு மனிதனின் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர் நடித்துள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் அதே தினத்தில், டூலிட்டில் திரைப்படம் இந்தியாவிலும், ஆங்க்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் ரீமேக் இப்படம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகத் தனது மனைவியை இழந்த, துடிப்பான டாக்டர் ஜான் டூலிட்டில், பிரபலமான மருத்துவராகவும், குயின் விக்டோரியாவின் இங்கிலாந்தில் செயலாற்றும் ஒரு விலங்குகள் வல மருத்துவராகவும் திகழ்கிறார். மேலும், டூலிட்டர் மேனரின் உயரமான சுவர்களுக்குப் பின்னால் தனக்குப் பிடித...