அயல் சினிமாஅயல் சினிமா
அயல் சினிமா
சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்
வில்லியம் கெரினும், பெரோ டோவாரும் வெடிமருந்தினைத் தேடி சீனா வருகிறார்கள். வழியில் வினோத மிருகத்தினால் அவர்கள் குழு தாக்கப்பட வில்லியமும் பெரோவும் மட்டும் உயிர் தப்புகின்றனர். 5500 மைல்கள் நீளம் கொண்ட சீனப் பெருஞ்சுவரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜெனரல் ஷாவ், உயிர் தப்பிய ஐரோப்பியர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார். தொடரும் சம்பவங்கள், வினோத மிருகங்களிற்கு எதிரான போரில் வில்லியமைத் தலைமை தாங்கச் செய்கிறது. வில்லியமாக ஹாலிவுட் நாயகன் மேட் டேமன் நடித்துள்ளார். ஆனால், […]

பலம் விமர்சனம்
காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் ‘திறமையுள்ள’ அல்லது ‘சாதித்து முடிக்கக் கூடிய’ எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், ‘பலம்’ என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் […]

பலம் காட்ட வரும் ஹ்ரிதிக் ரோஷன்
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான காபில் எனும் ஹிந்திப் படம் தமிழில், “பலம்” என்ற பெயரில் டப்பிங் செய்யப்படு வெளிவரவுள்ளது.. 31 வயதான பிண்ணனிக் குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவைத் தனது இல்லத்திலும் கழிக்கிறான். பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவைச் சந்திக்க நேர, அவள் மீது காதல் வயப்படுகிறான். ரோஹனின் […]

அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்
அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம் க்ரீட் என்றால் நம்பிக்கை. அசாசின்ஸ்க்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விருப்பம் போல் வாழுபவர்கள். சுதந்திர உணர்வோடு திரிபவர்கள். ஆனால், டெம்ப்ளர்ஸ்களோ அதீத ஒழுக்கக் கோட்பாடுகள் உடையவர்கள். மக்களின் சிந்தனையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உலகையே ஒழுக்கமாக மாற்றத் துடிப்பவர்கள். அப்பேராசை சாத்தியமாக அவர்களுக்கு அசாசின்களிடமுள்ள ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எனும் விதை தேவைப்படுகிறது. அதிலிருந்து தான் மனிதனின் முதல் ஒழுங்கீனச் செயல் பிறந்ததாகக் கருதுகிறார்கள். அவ்விதையை மட்டும் டெம்ப்ளர்ஸ்கள் அடைந்து விட்டால், […]

சிங் விமர்சனம்
பிக்சார் அனிமேஷன் படங்களில், கதை சொல்லும் முறையில் ஒரு மேஜிக் இருக்கும். பொம்மையோ, காரோ, ரோபோவோ, எலியோ, மீனோ என இப்படி எதுவாக இருந்தாலும், அதை உயிருள்ள கதாபாத்திரங்களாக நம்மை உணரச் செய்து விடுவார்கள். இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட், தனதுமினியன்ஸ் எனும் கதாபாத்திர உருவாக்கத்தால், வயது வித்தியாசமின்றி அத்தனை ரசிகர்களையும் தன் பால்கவர்ந்தவர்கள். அவர்கள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹிட்டான மினியன்ஸ் படத்திலேயே கூட, பிக்சார் ஏற்படுத்தும் மேஜிக் இல்லாமல் இருந்தது. ஆனால், “சிங் (SING) படத்தில் மாயம் செய்துள்ளனர் […]

அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்
சில நூற்றாண்டுகளாகவே, இரண்டு ரகசிய குழுக்கள் இடையே துவந்த யுத்தம் நடந்து வருகிறது. இன்றளவும் அது தொடர்வதாக நம்பப்படுகிறது. அசாசின்ஸ் என்ற குழுவிற்கும், டெம்ப்ளர்ஸ் என்ற குழுவுக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ கேம் தான் ‘அசாசின்ஸ் க்ரீட்’. அசாசின் என்றால் மதம் அல்லது அரசியல் காரணங்களுக்காக முக்கியமான நபரைக் குறி வைத்துக் கொலை செய்யும் கொலைக்காரர் எனப் பொருள். ‘அசாசின்’ என்ற வார்த்தை உருவாவதற்கே ‘ஹஷாஷின்’ என்ற வடக்குப் […]

சிங் – கோலாகலமான இசைப் போட்டி
மைக் என்கிற எலி, மீனாஎன்கிற யானை, ரோசிட்டா என்கிற பன்றி, ஜானி என்கிற கொரில்லா, ஆஷ் என்கிற முள்ளம்பன்றி ஆகிய ஐவரும் பங்கேற்க உள்ள இசைப் போட்டி அது. சிங் எனும் இந்த அனிமேஷன் இசைப்படத்திற்காக சுமார் 85 பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக “தி ஃபெயித் (The faith)” என்ற பாடல், கோல்டன் க்ளோப் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அடிநாதத்தோடு சம்பந்தமுள்ள பாடல் அது. கையிருப்பிலுள்ள 1000 டாலர்களைக் கொண்டு 100,000 […]

பலம் – ட்ரெய்லர்

அண்டர்வேர்ல்ட்: ப்ளட் வார்ஸ் – ட்ரெய்லர்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்
காலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் ஓர் அமெரிக்க நியூரோ சர்ஜன். மேற்கின் மேட்டிமையில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு திமிர் பிடித்த திறமைசாலி விஞ்ஞானி இவர். விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை […]

அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்?
‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம் (FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM)’ எனும் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தெலுங்கிலும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிப் பெரும்புகழை அடைந்த பெண் எழுத்தாளர் J. K. ரெளலிங்கின் கற்பனையில் இருந்து உதித்த மற்றொரு படமிது. அதை விட, திரைக்கதையாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் முதல் படமிது என்பது இப்படத்திற்கான கூடுதல் சிறப்பு. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை […]

ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்
நம்மால் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே முடியாத ஒரு கதையை, மிக நேர்த்தியான நகைச்சுவைப் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் ஷரோன் மக்வயர் (Sharon Maguire). ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் சீரிஸில் இது மூன்றாவது படம். முந்தைய பாகங்களைப் பார்க்கவிடினும் கூடப் பாதகமில்லை. இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கலகலப்பாக்கிவிடும். படத்தின் கதை அப்படி. 43 வயதாகும் ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் கர்ப்பமாகிறார். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை முன்னாள் காதலன் மார்க் டார்சியா அல்லது இசை விழாவில் சந்தித்த அந்நியனான […]

தி அக்கெளன்டன்ட் விமர்சனம்
மிக நிறைவானதொரு ஆக்ஷன் த்ரில்லர். க்றிஸ்டியன் வொல்ஃப் ஓர் ஆட்டிச சிறுவன். படம் முக்கியத்துவம் பெறுவது இந்தப் புள்ளியில்தான். அது மேலும் விசேஷமாவது, அதில் வரும் வித விதமான மனிதர்களால். “க்றிஸ்டியனை எங்களிடம் விட்டுப் போங்க. இந்தக் கோடையில் மட்டுமாவது.. பணம் எதுவும் வேண்டாம். இலவசமாக.. நாங்க அவனைப் பொறுப்பா கவனிச்சிக்கிறோம்” என்கிறார் ஹார்பர் நியூரோசயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். “இவர்கள் போன்றவர்களுக்கு, திடீர் சத்தமும் வெளிச்சமும் பாதுகாப்பற்ற உணர்வைத் தருவதால் கத்துறாங்க. ஸ்பெஷல் கிட்ஸைப் பார்த்துக் கொள்வது ஒரு […]

இன்ஃபர்நோ விமர்சனம்
‘டாவின்சி கோட்’ நாவல் மூலம் பெரும் புகழ் ஈட்டியவர் எழுத்தாளர் டான் ப்ரெளன். அதைப் படமாக இயக்குநர் ரோன் ஹாவர்ட் எடுத்த பொழுது, அப்படத்தை இந்தியாவில் வெளியிட கிறிஸ்துவ அமைப்புகள் 2006இல் தடை கோரியது. படத்தின் மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்பை அது ஒன்றே எகிறச் செய்து, தடை நீக்கப்பட்டதும் ‘அப்படி என்னத்தான் படத்தில் இருக்கு?’ எனத் திரையரங்கை நோக்கித் தள்ளியது. அந்த எதிர்பார்ப்பின் நீட்சி, படமாக்கப்பட்டுள்ள எழுத்தாளரின் மூன்றாவது நாவலான இன்ஃபர்நோ வரையிலுமே தொடர்வது குறிப்பிடத்தக்கது. குறியீட்டியலில் […]

