32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 139 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 139)
நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் சினிமா

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான். சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி […]

29/09/2019 Dinesh R
ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம் அயல் சினிமா

ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்

பழி வாங்கும் வெறியில், இறுதி ரத்தத்தைத் தாராளமாகச் சிந்த விட்டுள்ளார் ரேம்போ. அதீத வன்முறைக் காட்சிகள் உள்ளதால், A சான்றிததழ் அளித்துள்ளனர். ரேம்போவின் தோழி மரியாவின் பேத்தியான கேப்ரியல், பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மெக்சிகோ கடத்தல் குழுவினரிடம் சிக்கிக் கொள்கிறார். கேப்ரியலைக் காப்பாற்ற மெக்சிகோ செல்கிறார் ரேம்போ. அந்தக் குழுவிடம் இருந்து கஷ்டப்பட்டு மீட்டு வருகையில், ஓவர்-டோஸாக போதை மருந்து செலுத்தப்பட்டதால் வழியிலேயே கேப்ரியல் இறந்துவிடுகிறார். பழி வாங்கும் வெறியில் சிவக்கும் ரேம்போ, மெக்சிகோ […]

21/09/2019 Dinesh R
காப்பான் விமர்சனம் சினிமா

காப்பான் விமர்சனம்

கதிர் எனும் கதிரவன், இந்திய அரசாங்கத்தைக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒற்றேவல் புரியும் ரகசிய இராணுவ வீரர். அவரைத் தனது பெர்சனல் பாடிகார்டாக, ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப் (SPG) அதிகாரியாக நியமித்துக் கொள்கிறார் பிரதமர் சந்திரகாந்த் வர்மா. பிரதமரைக் கொல்லும் நடக்கும் சதிகளில் இருந்து கதிர், சந்திரகாந்தைக் காப்பாற்றிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அயன் படத்தில், படைப்பாற்றல் மிக்கக் கடத்தல்காரராகவும்; மாற்றான் படத்தில், தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை அழிப்பவராகவும்; இப்படத்தில், நாாட்டின் பிரதமரைக் […]

21/09/2019 Dinesh R
சூப்பர் டூப்பர் திரைப்படம் சினிமா

சூப்பர் டூப்பர் திரைப்படம்

சூப்பர் என்பது விலை மதிப்புமிக்க போதைப் பொருள் ஒன்றின் பெயர். டூப்பர் என்பது, ஏமாற்றுக்காரனான தன்னைத் தானே நாயகன் அழைத்துக் கொள்ளும் ஒரு பட்டப்பெயர். நிழலுலகத்து மைக்கேலிற்குச் சொந்தமான சூப்பர், டூப்பரிடம் சிக்கிக் கொள்கிறது. மைக்கேல் சூப்பருக்காக டூப்பரைத் துரத்த, டூப்பர் மைக்கேலிடம் இருந்து தப்பித்து, பின் சூப்பர் டூப்பர் அவதாரமெடுத்து, மைக்கேலைத் தன் வழியிலிருந்து அகற்றுவதுதான் படத்தின் கதை. கோமாளி படத்தில் மனநல மருத்துவராக நடித்திருக்கும் சாரா, இப்படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். நாயகனின் மாமாவாக […]

20/09/2019 Dinesh R
ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம் சினிமா

ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

ஒரு கொலை வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மாசிலாமணி. அவ்விசாரணையும், அது சம்பந்தமான முழு நீள உரையாடலும் தான் படம். ஒருவரைச் சுற்றி மட்டுமே நடக்கும் கதையில்லை இது. ஒரு சுவாரசியமான த்ரில்லரில், மற்ற கதாபாத்திரங்களை வெறும் குரல்களாக்கி, மாசிலாமணியாக நடித்திருக்கும் பார்த்திபனை மட்டுமே கேமரா காட்டுகிறது. முழுப் படத்திலும், ஒரு முகம் மட்டுமே திரையில் காட்டப்பட்டாலும், படத்தின் சுவாரசியம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் பார்த்திபன். படத்தின் கால அளவு 105 நிமிடங்கள் […]

20/09/2019 Dinesh R
அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு சினிமா

அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு

காதல் அம்பு எனும் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பேசிய நடிகர் ஆரி, “இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும். இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று […]

16/09/2019 Dinesh R
உலகக் கோப்பையைத் திருடும் கூட்டம் சினிமா

உலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்

டூ மூவி பஃப் எனும் நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம். இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது. இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர், “கிரிக்கெட் உலகக் கோப்பையைத் திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான். அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவத்தைப் பார்க்கிறேன் என்றால், இதில் எல்லாக் காட்சிகளும் இதுவரை யாரும் […]

16/09/2019 Dinesh R
ஒங்கள போடணும் சார் விமர்சனம் சினிமா

ஒங்கள போடணும் சார் விமர்சனம்

ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பாதிப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ஏக மனதாகச் சேர்ந்து அந்த இயக்குநரைப் பார்த்து என்னவெல்லாம் சொல்லக்கூடும்? அவற்றில் ஒன்றாக இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. பாடலாசிரியர் முருகன் மந்திரத்தின் குரலில், டைட்டில் கிரெடிட் வரும் பொழுது சொல்லப்படும் கதை சுவாரசியத்தைத் தூண்டுகிறது. அங்கிருந்து ‘ஒரு கோடி ஒரு பேய்’ என்றொரு ரியாலிட்டி ஷோவிற்குள் ஜாலியாய்ப் (!?) போகும் முதற்பாதி படம், இரண்டாம் பாதியில் சீரியசான பழிவாங்கல் கதையாக மாறுகிறது. படத்தின் ஆறுதல்களில் ஒன்று அல்லது […]

13/09/2019 Dinesh R
புன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம் சினிமா

புன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்

கதையின் பிரதான பாத்திரம் ஏற்று ஏராளமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர, அந்த முன்வரிசை முகங்கள் தவிர பிற முகங்கள் மனதில் பதிவதில்லை. அதற்கடுத்த இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் காலதாமதமாகவே பார்வையாளர் மனதில் பதிவார்கள். மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம் பெரும்பாலும் வணிகப் படங்களில் அவர்கள் முகம் நமக்குள் பதிய முகாந்திரம் இல்லாமல் போகிறது. இப்படி மூன்றாவது வட்டத்திலிருந்து இரண்டாவது வட்டத்திற்குப் போராடும் நடிகர்களில் ஒருவர் தான் ஜி.எம்.சுந்தர். இவர் தமிழ்நாடு […]

13/09/2019 Dinesh R
கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம் சினிமா

கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்

தமிழ் சினிமாவில் தரமான படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன் தயாரிக்கும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். இந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமத்துரை, ’96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை […]

13/09/2019 Dinesh R
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் சினிமா

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

மேயாத மான், மெர்க்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படத்தில், தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க, அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் […]

13/09/2019 Dinesh R
நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிய மகன் அம்ரீஷ் சினிமா

நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிய மகன் அம்ரீஷ்

கலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா, திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமல் ஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் […]

10/09/2019 Dinesh R
தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல் சினிமா

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

தமிழ்த் திரைப்பட உலகின் பவழ விழா ஆண்டு 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அக்டோபர் 31, 1931 இல், தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது. அன்றிலிருந்து, தமிழ் சினிமாவில் முதன் முதலாக நிகழ்ந்த சிறப்புகளைத் தொகுத்து, ‘தமிழ் சினிமாவின் முதல்வர்கள்’ என்ற புத்தகத்தை 2006 இல் எழுதியுள்ளார் திரைப்படப் பத்திரிகை தொடர்பாளரான பெரு.துளசி பழனிவேல். மொத்தம் 28 சிறப்புமிகு படங்களைப் பற்றிச் சுருக்கமாக தந்துள்ளார். இப்புத்தகம், திரைப்படப் பிரியர்களுக்கான ஒரு பொக்கிஷச் சேமிப்பு. காதலையும், […]

09/09/2019 Dinesh R
ஜாம்பி விமர்சனம் சினிமா

ஜாம்பி விமர்சனம்

விஷமேற்றப்படும் கோழியைச் சமைத்துச் சாப்பிட்டதால் சிலர் ஜாம்பி ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து நாயகியும், ஐவரைக் கொண்ட நண்பர்கள் குழுவும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. பறவைக் கோணத்தில், ஒற்றையடி பாதை கொண்ட நிலப்பரப்பில் ஒரு வாகணம் செல்வதைக் காட்டுகின்றனர். இப்படியாகப் படத்தின் தொடம்கம் செமயாக உள்ளது. அவ்வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் கோழி, உணவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தயாராகிறது என மிக ப்ரொஃபஷ்னல் படமாகத் தொடங்குகிறது. பின் திரையில் கொட்டை எழுத்தில் கேரக்டர் பெயரைப் போட்டு கதாபாத்திரங்களைத் […]

07/09/2019 Dinesh R
சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம் சினிமா

சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

சித்தார்த் ட்ராஃபிக் போலீஸாக நடிக்கிறார் என்பதால், சிக்னல் கம்பத்தில் ஒளிரும் மூன்று வண்ணங்களை, நில், கவனி, செல் என்ற நேரடி குறியீட்டுத் தலைப்பாகக் கொள்ளலாம். உட்பொருளாக, மாமன் மச்சானுக்குள்ளான மோதலைச் சிவப்பாகவும், சமாதானம் ஆவதை மங்கலக்கரத்தைக் குறிக்கும் மஞ்சளாகவும், ஒன்று சேருவதைச் செழுமையின் நிறமான பச்சையோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். படத்தின் முதற்பாதி அசரடிக்கிறது. காரணம் குழந்தைகள். பெற்றோரை இழந்த ஒரு பள்ளிச் சிறுவன் தன் அக்காவின் வகுப்புக்குச் சென்று, அக்காவின் வகுப்பு ஆசிரியையிடம், ‘பூனைக்கு நான் […]

07/09/2019 Dinesh R