32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 88 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 88)
டங்கி டிராப் 1 – ஐந்து நண்பர்கள் Movie Posters

டங்கி டிராப் 1 – ஐந்து நண்பர்கள்

உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘டங்கி டிராப் 1’, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் வகையில் சொல்கிறது. “டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களைத் தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். போஸ்டர்கள் ‘டங்கி’ படத்தின் கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளை நனவாக்க அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் […]

05/11/2023 Dinesh R
ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம் OTT

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’, ‘அகண்டா‘ முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் ‘ஹமாம்’ சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு […]

05/11/2023 Dinesh R
கூழாங்கல் விமர்சனம் OTT

கூழாங்கல் விமர்சனம்

வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர். பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் […]

05/11/2023 Dinesh R
”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம் சினிமா

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து […]

04/11/2023 Inbaaraja
டங்கி டிராப் 1 – மனதை வருடும் 4 நண்பர்களின் கதை சினிமா

டங்கி டிராப் 1 – மனதை வருடும் 4 நண்பர்களின் கதை

‘டங்கி டிராப் 1’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்துத் தளங்களிலும் 72 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதயம் வருடும் ஓர் அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்ட்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஓர் அழகான படைப்பாக இருக்கும். சோனு […]

03/11/2023 Dinesh R
பழங்குடிப் பெண்ணாக மாளவிகா மோகனன் | தங்கலான் சினிமா

பழங்குடிப் பெண்ணாக மாளவிகா மோகனன் | தங்கலான்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் […]

03/11/2023 Dinesh R
ராம்சரண் இன் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் (AMPAS)’ சினிமா

ராம்சரண் இன் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் (AMPAS)’

அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும், மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்’ குழுவில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் இணைந்திருக்கிறார். அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அண்மையில் புகழ்பெற்ற பான் இந்திய சூப்பர் ஸ்டாரான ராம்சரண், மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காகக் கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கார் […]

03/11/2023 Dinesh R
ஷாருக்கானின் ‘டங்கி டிராப் 1’ சினிமா

ஷாருக்கானின் ‘டங்கி டிராப் 1’

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார். தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான ‘டங்கி’ மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். இரண்டு மிகப் பெரும் திரைக்கலைஞர்களான ஷாருக் கான் மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணைகின்றனர். நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம். […]

02/11/2023 Dinesh R
சென்சாரில் ”60 – கட் கொடுத்தார்கள்” – ‘ரா ரா சரசுக்கு ராரா’ பட இயக்குநர் பேச்சு சினிமா

சென்சாரில் ”60 – கட் கொடுத்தார்கள்” – ‘ரா ரா சரசுக்கு ராரா’ பட இயக்குநர் பேச்சு

ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஏ. ஜெயலட்சுமி தயாரித்து, கேசவ் தெபுர் இயக்கியிருக்கும் திரைப்படம் “ரா ரா சரசுக்கு ரா ரா”. ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு பணிகளை கையாள, ஜி.கே.வி இசையமைத்துள்ளார். 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம்  வரும் நவம்பர் 3-ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி பேசும்போது, “தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே.ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக […]

02/11/2023 Inbaaraja
“இந்திய வரலாற்றைச் சொல்லும் உலக சினிமா” – சீயான் விக்ரம் | தங்கலான் இது புதிது

“இந்திய வரலாற்றைச் சொல்லும் உலக சினிமா” – சீயான் விக்ரம் | தங்கலான்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், “எனக்கு மிக முக்கியமான, வித்தியாசமான படம் […]

01/11/2023 Dinesh R
எழுத்தாளர்களை மதிக்கும் பா. ரஞ்சித் | தங்கலான் இது புதிது

எழுத்தாளர்களை மதிக்கும் பா. ரஞ்சித் | தங்கலான்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. படத்தொகுப்பாளர் R.K. செல்வா, “என் கரியரில் இது மிக […]

01/11/2023 Dinesh R
“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான் இது புதிது

“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித், “டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என […]

01/11/2023 Dinesh R
விக்ரமுக்காக, சூர்யா தொடங்கிய ஸ்டுடியோ | தங்கலான் இது புதிது

விக்ரமுக்காக, சூர்யா தொடங்கிய ஸ்டுடியோ | தங்கலான்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, […]

01/11/2023 Dinesh R
லைசென்ஸ் விமர்சனம் சினிமா

லைசென்ஸ் விமர்சனம்

அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “லைசென்ஸ்”.  சிறு வயது குழந்தை முதல் பல் போன பாட்டி வரை பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்படும் மோசமான சூழல் உழவும் இந்தக் காலகட்டத்தில்,  இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயன்றிருக்கும் அந்த முயற்சியினாலும் சிறப்பான நடிப்பினாலும் கவனம் ஈர்க்கிறது “லைசென்ஸ்” திரைப்படம். பள்ளிப்பருவத்தில் இருந்தே தனக்கோ, தன் சுற்றத்தாருக்கோ நடக்கும் பாலியல் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண்ணான […]

01/11/2023 Inbaaraja