Shadow

திரைச் செய்தி

லியோனா & லியோ பிக்சர்ஸ் – திரைத்துறைக்கு வரும் சிங்கங்கள்

லியோனா & லியோ பிக்சர்ஸ் – திரைத்துறைக்கு வரும் சிங்கங்கள்

சினிமா, திரைச் செய்தி
'லயோனா & லியோ பிக்சர்ஸ் (LIONA & LEO Pictures)' எனும் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் கோலிவுட்டில் உதயமாகிறது. பெண் சிங்கம் & ஆண் சிங்கம் என்ற அர்த்தம் கொண்ட ’லயோனா & லியோ பிக்சர்ஸ் (LIONA & LEO Pictures)' நிறுவனத்தின் அறிமுக விழா, நவம்பர் 25 அன்று, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாகக் கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனை படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார். தனிமனித எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றிச் சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக் கொண்டிருந்தவர் ...
ஆலன் – ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை

ஆலன் – ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை

சினிமா, திரைச் செய்தி
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட, தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர். சிவா, '' இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இ...
தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம் “தில் ராஜா” ஆகும். வருகிற 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய அம்ரீஷ், "தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் ப்ரோமோஷனுக்கு மாஸாகப் பாடல் கேட்டார்கள். ஹ்யூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள். ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ. வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார். அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய் ச...
சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

Movie Posters, கேலரி, சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அரண்மனை 4' படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் உருவாகிறது. தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ஸ் ஃபிலிம...
“எது நல்ல படம்?” – இயக்குநர் ஹெச். வினோத்

“எது நல்ல படம்?” – இயக்குநர் ஹெச். வினோத்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், "இயக்குநர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தைத் தொடங்கினார். அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்தப் படத்தைத் தொடங்கினார் என்பது எனக்குத் தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார். இந்தக் கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், 'சோப்புலிங்கம்' கேரக்...
நந்தன் | பிரமிப்பையும் அதிர்ச்சியையும் தந்த படம்

நந்தன் | பிரமிப்பையும் அதிர்ச்சியையும் தந்த படம்

சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது.நடிகை ஸ்ருதி பெரியசாமி, "ஒரு புதுமுகத்திற்கு இவ்வளவு பெரிய கேரக்டர் தருவது மிகப்பெரிய விசயம். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை எனக்குத் தந்தார் இயக்குநர் சரவணன் சார் திரைத்துறைக்கு வந்த பிறகு, இது மிகப்பெரிய இண்டஸ்ட்ரி, இதில் தினமும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. நான் இனிமேல் நாயகியாக நடிப்பேனா என்பது தெரியாது. ஆனால் என்றென்றைக்கும் இந்தத் திரைப்படம், என் மனதிற்கு நெருக்கமான ...
நந்தன் | மண்ணின் வேதனையைப் பதிவு செய்த சினிமா

நந்தன் | மண்ணின் வேதனையைப் பதிவு செய்த சினிமா

சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இந்தப் படத்திற்காக யோசித்து வைத்திருந்தார் இயக்குநர் இரா. சரவணன். அவரில்லாத பட்சத்தில், அவருக்கு நிகரான ஒருவர் வேண்டுமென ஒளிப்பதிவாளர் சரணை அணுகியுள்ளார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் சரண், " 'கிடாயின் கருணை மனு', 'விழித்திரு' திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். ...
“பாலாஜி சக்திவேல்தான் நாயகன்” – இயக்குநர் இரா. சரவணன் | நந்தன்

“பாலாஜி சக்திவேல்தான் நாயகன்” – இயக்குநர் இரா. சரவணன் | நந்தன்

சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் -  இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களை இயக்கிய இயக்குநர் இரா சரவணன், "சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை. இதுதான் எனக்கு முதல் மேடை. அண்ணன் சீமான் எப்போது இந்த நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டாரோ,  அப்போதே நந்தன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக ஆகிவிட்டது. அண்ணன் அவர் நண்பர்களோடு, குடும்பத்தோடு, இந்தத் திரைப்படத்தை பார்த்துப் பா...
“நந்தன்: வலியின் மொழி” – சீமான்

“நந்தன்: வலியின் மொழி” – சீமான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, "ஒரு நல்ல கதையை நாம் எழுதிவிட்டால் போதும், அதுவே அதனை உருவாக்கிக் கொள்ளும். நாம் யாரையாவது நினைத்து எழுதியிருப்போம். ஆனால் அது முடிவு செய்வதுதான். அப்படித்தான் சசிகுமார் இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் இந்த கதையில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் என்னையும் நடிக்கச் சொன்னார்கள். முதல் இரண்டு படங்களில், இரா. சரவணனுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை...
கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

சினிமா, திரைச் செய்தி
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்" ஆகும். மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர். சி, "என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார். அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. ...
தங்கலான் | வடமாநிலங்களிலும் வரவேற்பு

தங்கலான் | வடமாநிலங்களிலும் வரவேற்பு

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் ஆகும். ஜீவி பிரகாஷ் இசையில், கிஷோர்குமார் ஒளிப்பதிவில், மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது . தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ஆம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது. வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். வட இந்திய ஊடகங்கள் இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சியான் விக்ரம், பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு, ஜீவி பிரகாஷ் இசை என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர். இந்தியா ...
அத்வே – VFX பிரம்மாண்டத்தில் சுப்ரமண்யா

அத்வே – VFX பிரம்மாண்டத்தில் சுப்ரமண்யா

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி, அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் அசத்தலான ப்ரீ-லுக்கை வெளியிட்டுப் படத்தின் விளம்பரப் பணிகளைத் துவக்கியுள்ளது. இந்த போஸ்டர், திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகத்தின், ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது. போஸ்டரில் கதாநாயகன் ஒரு தீப்பந்தத்தைப் பிடித்தபடி, ஒரு புதிரான சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் இருப்பதைக் க...
மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின் ஆகும். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் உதய் K. மேத்தா, "ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜுன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா ...
Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) ஆகும். இப்படம் ஹைபர் லூப் வகைமையைச் சார்ந்த த்ரில்லராக உருவாகியுள்ளது. கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் கண்ணன், "படத்தில் எனக்கும் இயக்குநருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தன. எனக்கு சரியெனப்படுவது அவருக்கு தப்பு; அவருக்குத் தப்புன்னுபடுறது எனக்கு சரியா இருக்கும். இப்படியும் ஒன்னு எடுத்துக்கோங்க எனச் சொல்லி அவர் ந...
தங்கலான் | படக்குழுவினர்க்கு தடபுடல் விருந்தளித்தார் விக்ரம்

தங்கலான் | படக்குழுவினர்க்கு தடபுடல் விருந்தளித்தார் விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது தங்கலான் திரைப்படம். சியான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்துப் பாராட்டுகிறார்கள். இந்தத் தருணத்தில் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தின் வெற்றிக்காகப் படத்தில் கடினமாகப் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சியான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றி...