32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைச் செய்தி

1062 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 65 / 71
செய்திகள் வரிசை (பக்கம் 65)
அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின் சினிமா

அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின்

அபியும் அனுவும் எனும் படத்தை தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சமயத்தில் இயக்கியுள்ளார் பி.ஆர்.விஜயலக்ஷ்மி. இவர் இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் மகளென்பது குறிப்பிடத்தக்கது. 1995இல், “பாட்டு பாடவா” எனும் படத்தை இயக்கியுள்ள பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கும் இரண்டாவது படம் ‘அபியும் அனுவும்’. ஆனால் விஜயலக்ஷ்மி, 1985 இல் வெளியான பாக்கியராஜின் ‘சின்னவீடு’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவே திரையுலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. “விஜயலக்ஷ்மி அவர்களின் படத்தில் வேலை செய்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ரொம்பவே வெளிப்படையாக பேசக்கூடிய இயக்குநர். படத்தில் […]

05/03/2018 Dinesh R
6 அத்தியாயம் எப்படியிருக்கு? சினிமா

6 அத்தியாயம் எப்படியிருக்கு?

இயக்குநர் பாரதிராஜா: தெளிவான சிந்தனை. சரியான திட்டமிடல், புதிய வகை கதை சொல்லல் என தமிழ்சினிமாவைப் புது தளத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த 6 அத்தியாயம். இயக்குநர் ஏ.வெங்கடேஷ்: ரொம்பவே வித்தியாசமான முயற்சி. 6 கதைகளின் முடிவும் ஆச்சரியபடுத்துகின்றன. நிச்சயம் வெற்றி பெறும். 6 இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் அறிவழகன்: இந்தப் படத்தில் கையாளப்பட்ட திரைக்கதை யுக்தி பார்வையாளர்களின் துடிப்பை இறுதிவரை பரபரப்பாகவே வைத்திருக்கும். அதுவே இதன் வெற்றி! இயக்குநர் ரவிகுமார்: இந்த ஒரே படத்தின் மூலம் […]

22/02/2018 Dinesh R
கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி சினிமா

கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தைப் […]

23/01/2018 Dinesh R
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 சினிமா

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 1 மூவிபஃப், 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்படப் போட்டியைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தக் குறும்படப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகை தந்த அனைத்து இளந்தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதைக்களம், புதுமையான கதை சொல்லல், திறமையான […]

21/01/2018 Dinesh R
உதயநிதியை நிமிர வைக்கும் படம் சினிமா

உதயநிதியை நிமிர வைக்கும் படம்

மூன் ஷாட் எண்டர்டெயின்மென்ட் சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். “ப்ரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்தப் படத்தில் […]

18/01/2018 Dinesh R
அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம் சினிமா

அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபு தேவாவின் பிரபு ஸ்டூடியோஸின் கூட்டுத் தயாரிப்பில், டி.இமான் இசையில், அருள்மூர்த்தி இயக்கும் அனிமேஷன் திரைப்படம் “கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ”. மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்.) புனைவு அனிமேஷன் கதாபாத்திரம் நடித்து வெளிவரவிருக்கும் இப்படத்தின் தலைப்பும் கதையும் எம்.ஜி.ஆருடையதேயாகும். இது எம்.ஜி.ஆரின் கனவுப் படம் என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர். பதிவிட்டிருந்தார். 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட […]

18/01/2018 Dinesh R
மன்சூர் அலி கானின் மாறுபட்ட வேடத்தில் சினிமா

மன்சூர் அலி கானின் மாறுபட்ட வேடத்தில்

“கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” எனும் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் 6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும், ‘மஸ்காரா’ அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]

10/01/2018 Dinesh R
ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம் சினிமா

ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம்

லக்கி ஸ்டார் எனும் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு. பேய்ப்படமான ‘ஆறாம் திணை’ படத்தின் நாயகனும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. பேய்களுக்கும் லாஜிக் உண்டு என்ற கருவோடு, முதல்முறையாகப் பேய்களுக்கு ஃப்ளாஷ்-பேக்கும் வைக்காமல் கதையைக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் ஈரோடு அருண்.சி. ‘ஆறாம் திணை’க்கு, பேயும் பேய் சார்ந்த இடமும் எனக் கேப்ஷன் அளித்துள்னர்.  கதையின் நாயகியாக […]

28/12/2017 Dinesh R
அருவி சுருங்கிய புள்ளி சினிமா

அருவி சுருங்கிய புள்ளி

அருவி படம் அற்புதமானதொரு உணர்வைத் தந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கும் சுதந்திரம் ஓர் இயக்குநருக்கு முழுமையாக உண்டு. ஆனால், அதன் ஊடாக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் விதைக்கும் விஷமத்தனம் ஆபத்தானது. அனைத்துமே கற்பனை என்ற டிஸ்க்ளெயிமர் போட்டு விட்டால், ஜீ டிவியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி தான் டார்கெட் என்ற உண்மையை மறைக்க இயலாது. ஒரு நிகழ்ச்சியைக் கலாய்ப்பது என்பது வேறு, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரைக் கேரக்டர் அசாஸினேட் […]

18/12/2017 Dinesh R
இப்படம் ஜெயிக்கும் சினிமா

இப்படம் ஜெயிக்கும்

‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, “முதல் முறையாக நான் உதய் கூட நடிக்கிறேன். புதுசா நடிக்க வர்றப்ப ஒரு பயம் இருந்திருக்கும். ஆனா இப்ப நல்லா நடிக்கிறார். மானிட்டர் பார்த்து, சரியா நடிச்சிருக்கேனே எனப் பார்த்து சரி பண்ணிக்கிறார். எனக்கு மானிட்டர் பார்க்கும் பழக்கமில்லை. ஏன்னா எண்பதுகளில் நாங்க நடிக்கிறப்ப மானிட்டரோ கேரவனோ இல்லை. நான் பஸ் ஓட்டணும் எனச் சொன்னாங்க. நான் ஏன் பஸ் ஓட்டணும்? டூப் போட்டு எடுத்துக்கலாம்லன்னு […]

02/11/2017 Dinesh R
இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம் சினிமா

இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தைக்கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சக்கரக்கட்டி படத்தை இயக்கிய அவரது இளைய மகன் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நாயகனாகவும், சோனாரிகாவும் அஷ்ரிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். அக்டோபர் 15 அன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையை ட்ரெயிலர் ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவும், VFX-உம் உள்ளதென மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‘இந்தப் படம் கண்டிப்பாகக் […]

15/10/2017 Dinesh R
சோலோ – டப்பிங் படம் இல்லை சினிமா

சோலோ – டப்பிங் படம் இல்லை

“இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய். இது நேரடி தமிழ்ப்படம் தான். இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அன்சன் பால் தான் காரணம். ரெமோ படத்தில் நடிக்கிறப்பத்தான் அவர் பழக்கம். ஒருநாள், ‘துல்கர ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார்; பிஜாய் இயக்கிறார்’ எனச் சொல்லிக் கூப்பிட்டார். நான் இதுவரை 40 படத்திலும் ஒரே மாதிரி தான் நடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படத்திலேயே நாலு டிஃபரன்ட் கெட்டப்ல செமயா […]

02/10/2017 Dinesh R
கன்னட இயக்குநரின் தமிழ்ப்படம் சினிமா

கன்னட இயக்குநரின் தமிழ்ப்படம்

சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும். பேய்க்கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் ஒன் லைன். கேட்காமலே கேட்கும் எனும் திரைப்படம் – டெக்னாலஜி பேய்படம். செல்ஃபோனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்ஃபோனுக்குச் செல்கிறது. ஹாரர் மூவியின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறார். செல்ஃபோனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் கொல்லும் அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறது. கதைக்கேற்ப டெக்னாலஜிகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை, […]

26/09/2017 Dinesh R
பேச்சுக்கு ஆங்கிலம் மூச்சுக்குத் தமிழ் – அமீர் சினிமா

பேச்சுக்கு ஆங்கிலம் மூச்சுக்குத் தமிழ் – அமீர்

இன்றைய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைப்பாடுகளைச் சொல்ல வரும் படம் பாடம். இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகையாகாது. இந்தியக் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாகத்தான் இந்தப் பாடம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக், நாயகியாக மோனா, முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குநர் நாகேந்திரன், R.N.R. மனோகர், நகைச்சுவை நடிகை மதுமிதா, […]

25/09/2017 Dinesh R
பள்ளியும் காதலும் சாதியும் சினிமா

பள்ளியும் காதலும் சாதியும்

வி.கே.பி.டி.கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிப்பில், வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். ‘கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலியின் சிறு வயது கேரக்டரிலும், ‘காதல் கசக்குதய்யா’ நாயகி வெண்பா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமைய்யா, பொன்வண்ணன், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், பருத்தி வீரன் சுஜாதா ஆகியோரும் நடித்துள்ளனர். நடிகர் நாசர் பேசும்போது, “இன்றையச் சமூகச் சூழலில் இன்னும் சாதீயத்தின் பிரம்பால் […]

17/09/2017 Dinesh R