Shadow

திரை விமர்சனம்

யசோதா விமர்சனம்

யசோதா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தங்கையின் மருத்துவச் சிகைச்சைக்காக, வாடகைத்தாயாகச் செல்கிறாள் யசோதா. உடனிருக்கும் வாடகைத்தாய்கள் திடீர் திடீரெனக் காணாமல் போக, அனுமதி மறுக்கப்பட்ட ஜோன் 2-க்குள் சென்று பல அதிர்ச்சிகரமான ரகசியங்களைப் பார்த்துவிடுகிறார். அது என்ன ரகசியம் என்பதும், அது அவருக்கு எத்தகைய ஆபத்தினைக் கொண்டு வருகிறது என்பதுதான் படத்தின் கதை. மருத்துவர் கெளதமாக உன்னி முகுந்தனும், மருத்துவர் மதுபாலாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். யூகிக்க முடிந்த திருப்பங்களுக்கே இவ்விரண்டு கதாபாத்திரங்களும் உதவியுள்ளனர். அவர்களது ஃப்ளாஷ்-பேக் கிளைக்கதை நன்றாக இருந்தாலும், சமந்தாவைக் கட்டிப் போட்டுவிட்டு பள்ளிக் குழந்தைகள் போல் ஒப்பிப்பது எல்லாம் திரைக்கதைக்கு இழுக்கு. தனிக்கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். நாயகிக்கான ஆக்ஷனைக் கதை தான் என்றாலும், யசோதா முழுத் திருப்தியை அளிக்கவில்லை. ஒரு ஹாலிவுட் நடிகையின் மரணம், இந்தியாவ...
மிரள் விமர்சனம்

மிரள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதற்பாதியில், கதைக்கான அடித்தளத்தை அமானுஷ்யமாக அமைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மிரள வைத்துள்ளார் இயக்குநர் M. சக்திவேல். பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு, அமானுஷ்யமான கனவுகள் துரத்தியவண்ணம் உள்ளன. அந்தக் கனவுகளில் இருந்து, தன் மனைவியை மீட்க வழி தெரியமல் தவிக்கிறார் பரத். 'குலதெய்வம் கோயிலுக்குப் போய் படையல் இட்டால் எல்லாம் சரியாகும்' என பரத்தின் மாமியார் மீரா கிருஷ்ணன் சொல்ல, பரத் தன் மனைவி மற்றும் மகனுடன் கிராமத்திற்குக் கிளம்புகிறார். கிராமத்தில் இருந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரும் வழியில், அத்துவானக் காட்டில் குடும்பத்துடன் சிக்கிக் கொள்கிறார். அவரைச் சூழ்ந்து நெருக்கும் அமானுஷ்ய இடரில் இருந்து பரத்தால், அவரது குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை. காட்சிகளுக்கு அளித்த கவனத்தை வசனத்திற்கு அளிக்கத் தவறியுள்ளனர். ஹாரர் படத்திற்கான க்ரிப்பிங்கான முதற்பாதியாக இல்ல...
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
முப்பது வயதிற்குள் தொழிலில் வெற்றியாளாரக மிளிர வேண்டுமென மிகவும் ஆர்க்னைஸ்டாக வாழ்கிறார் வக்கீல் முகுந்தன் உன்னி. வயது 36 ஆகிவிடுகிறது. தனக்கான வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்த வேலையும் போய் விட, மருத்துவமனையில் சுலபமாகப் பெரும்பணம் சம்பாதிக்கும் வக்கீல் ஒருவரைச் சந்திக்க நேரிடுகிறது. அது தான் நம்ம வழியும் என முகுந்தன் உன்னி எடுக்கும் விஸ்வரூபம்தான் படத்தின் கதை. அறமாவாது, கர்மாவாவது, தொழிலில் கொழிக்க எந்த எல்லைக்கும் செல்லும் மனிதனைப் பற்றிய கதை. Wow, he is brutally cold and bloody calculative with no empathy. இப்படி, எல்லாச் சூழலிலும் முகுந்தனின் மைண்ட்-வாய்ஸ் எதையாவது, யாரையாவது எடை போட்டுக் கொண்டே உள்ளது. அப்படியான அவரது மைண்ட்-வாய்ஸ், படத்தின் முழு நீள டார்க் காமெடிக்கு உத்திரவாதம் அளிக்கிறது. தமிழகத்தில் 40 திரையரங்குகளில் வெளியிட விருப்பப்பட்டும் 14 திரையரங்குகள் தான் கிடைத்...
பரோல் விமர்சனம்

பரோல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரண்டு மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கான படம் எனத் தொடங்குகிறது பரோல். அண்ணன் கரிகாலன் கொலைகாரனாக இருந்தும், அவன் மீது மட்டும் அம்மா ஆராயி மிகவும் பாசமாக இருக்கிறார் என்ற மனக்குறையுடன் இருக்கிறான் தம்பி கோவலன். ஆளுநரைப் பார்த்து, தன் மகன் கரிகாலனின் விடுதலைக்குக் கருணை மனு அளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஆராயி இறந்துவிடுகிறார். அண்ணனை வர வைக்காமல், அம்மாவின் இறுதிச் சடங்கைச் செய்துவிடலாமென நினைக்கிறான் கோவலன். கரிகாலனின் நண்பர்கள், பிணத்தை எடுக்க விட மாட்டோம் என பிரச்சனை செய்ய, வேறு வழியின்றி அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான் கோவலன். மிகவும் ஆபத்தான குற்றவாளி என அறியப்படும் கரிகாலனை பரோலில் எடுப்பது மிகச் சவாலான காரியமாக உள்ளது. கரிகாலனுக்கு பரோல் கிடைப்பதில் ஏற்படும் இடைஞ்சல்களைக் கோவலன் எப்படிச் சமாளித்து அழைத்து வருகின்றான் என திரைக்கதை பயணிக்கிறது.&nbs...
பனாரஸ் விமர்சனம்

பனாரஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
த்ரில்லர் கதை போல் துவங்கி, காதல் கதையாகப் பயணித்து டைம்லூப் கதையாக முடிகிறது பனாரஸ். ஹீரோ ஜையீத் கான் தன் பணக்காரத்தனத்தை சவால்களிலும் ஜாலி கேளிக்கைகளிலும் காட்டக்கூடியவர். அவர் தன் நண்பர்களின் சவால் ஒன்றை ஏற்று நாயகி சோனல் மான்டிரோவுடன் அவருக்குத் தெரியாமல் ஒரு புகைப்படம் எடுத்து விடுகிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் பரப்பப்படுகிறது. அதனால் மோனலுக்குச் சிக்கல்கள் எழ, அவர் படிப்பு எல்லாவற்றையும் துறந்து தன் உறவினர் வசிக்கும் காசிக்குச் செல்கிறார். குற்றவுணர்ச்சியில் விழும் நாயகன் மன்னிப்பு கேட்பதற்காக நாயகியைத் தேடிச் செல்கிறார். பாதிக்கதையில் டைம்லூப் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார். முதற்படம் என்ற சுவடு தெரியாமல் நடித்துள்ளார் ஜையீத்கான். எமோஷ்னல் காட்சிகளில் வருங்காலங்களில் நன்றாகத் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையை இப்படத்தில் கொடுத்துள்ளார். நாயகி சோனல் மான்டிரோ பார்ப்பதற்கு அழகாக இ...
லவ் டுடே விமர்சனம்

லவ் டுடே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்றைய காதல் என்பதை விட இன்றைய இளைஞர்கள் பற்றிய படம் என்பதே பொருத்தமாக இருக்கும். App(a) Lock என்ற தனது குறும்படத்தை முழு நீளத் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இன்றைய யூத்களின் பல்ஸைக் கச்சிதமாகப் பிடித்து, காமெடி, காதல், சென்டிமென்ட், எமோஷன் என கலந்து கட்டி எழுதி இயக்கி நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். காலதாமதமான (Belated) தீபாவளிக் கொண்டாட்டத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வந்துள்ளனர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். உத்தமன் பிரதீப்பும், நிகிதாவும் காதலிக்கின்றனர். நிகிதாவின் தந்தை வேணு சாஸ்திரி, காதலர்கள் இருவரின் மொபைல் ஃபோன்களையும் மாற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா என தெரிந்து கொள்ள ஒரு வினோதமான நிபந்தனை விதிக்கிறார். உத்தமனின் ஃபோன் நிகிதாவிடமும், நிகிதாவின் ஃபோன் உத்தமனிடமும் செல்ல திரைக்கதை சூடு பிடிக்கிறது. தனது முதற்படமான கோமாளியில் யோகிபாபுவைக் குணசி...
நித்தம் ஒரு வானம் விமர்சனம்

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையது வானம். அதுவே வானத்தின் தனித்த அழகிற்குக் காரணம். மனிதனின் வாழ்க்கையை அழகுப்படுத்துவதும் அவனது வாழ்வில் நிகழும் இத்தகைய மாற்றங்களே! ஆனால் மாற்றத்தை விரும்பாத மனமோ, அதற்கு பயந்து முடங்கி விடுகிறது. ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், வாழ்க்கையே முடங்கிவிட்டதாகக் கருதும் அர்ஜுன்க்கு வாழ்க்கையின் உண்மையான அழகையும், வாழ்வதற்கான உத்வேகத்தையும் அளிக்க இரண்டு கதைகள் சொல்கிறார் மருத்துவர் கிருஷ்ணவேணி. அந்தக் கதைகளின் ஊடாக அர்ஜுன் செய்யும் பயணமே படத்தின் கதை. மருத்துவர் கிருஷ்ணவேணியாக அபிராமி நடித்துள்ளார். மிகக் குறைவான காட்சிகளிலேயே தோன்றினாலும் நிறைவான ஸ்க்ரீன் பிரசென்ஸை அளித்துள்ளார். அர்ஜூனாக, இரண்டு கதைகளில் வரும் வீரா, பிரபா என மேலும் இரண்டு பாத்திரங்களில் தோன்றியுள்ளார். மூன்று கதாபாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டும் நேர்த்தியான நடிப்பைக் கொடு...
“டிரைவர் ஜமுனா: வாலாஜாபாத் டூ ஈசிஆர்” – இயக்குநர் கின்ஸ்லின்

“டிரைவர் ஜமுனா: வாலாஜாபாத் டூ ஈசிஆர்” – இயக்குநர் கின்ஸ்லின்

சினிமா, திரை விமர்சனம்
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்தத் திரைப்படத்தை வத்திக்குச்சி படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எ...
படவெட்டு விமர்சனம்

படவெட்டு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படவெட்டு (Battle) என்ற மலையாளச் சொல்லிற்குப் போராட்டம் எனப் பொருள் கொள்ளலாம். மலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மழை, காட்டுப்பன்றியுடன் போராடுகிறார்கள். அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி தனக்குள்ளேயே மிகப்பெரும் அகப்போராட்டத்தை நடத்துபவனாக இருக்கிறான். மேலும், தன்னுடனான அகப்போராட்ட்த்தில் இருந்து மீண்டு, அக்கிராமத்து நிலங்களை இலவசங்களால் ஆக்கிரமிக்க நினைக்கும் குய்யாலி எனும் அரசியல்வாதியின் அதிகாரத்தை எதிர்ப்பதோடு படம் முடிகிறது. மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனான ரவி, ‘மலூர் எக்ஸ்பிரஸ்’ எனப் புகழப்படுகிறான். ஒரு விபத்தில் அவன் கால் முறிந்து போக, அதோடு தன் வாழ்க்கையை முடிந்து விட்டதாக மனதிற்குள் புழுங்கிப் புழுங்கித் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். அவன் சிரிப்பதையே மறந்துவிட்டிருப்பதால், அவன் முகம் உறைந்து போனதுபோல் எப்பொழுதும் இறுகியே உள்ளது. அவனது முன்னாள் காதலியுடனான பார்வைப் பரிமாற்றங்கள்...
காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாரம் படத்திற்குத் திரைக்கதை எழுதிய ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள முதற்படம். ஆனால் சீரியசான படமாக இல்லாமல், ரொமெடி (ரொமாண்டிக் காமெடி) வகையைச் சேர்ந்த படமாகக் காலங்களில் அவள் வசந்தம் படத்தை இயக்கியுள்ளார் ராகவ். ராதேவிற்கு, ஷ்யாமின் மீது முதல் பார்வையிலேயே காதல் எழுகிறது. சினிமாவில் காணும் ரொமான்ஸைத் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென உன்னத லட்சியம் உடைய ஷ்யாம், ராதேவைக் கல்யாணம் செய்து கொள்கிறான். எல்லாப் பெண்ணுகளிடமும் ஒரே ரொமான்ஸ் பேட்டர்னை முயற்சி செய்யும் ஷ்யாமின் ரொமான்ஸ் பொய்யானது எனச் சுட்டிக் காட்டுகிறாள் ராதே. அவர்களுக்கு இடையேயான ஊடல் பிரியும் அளவு பெரிதாக, முடிவில் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. அறிமுக நாயகனான கெளஷிக் ராம், ஷ்யாம் கதாபாத்திரத்திற்கு மிக அழகாகப் பொருந்தியுள்ளார். படத்தில் சிரித்த முகத்துடனேயே வரும் ராதே பாத்திரத்தை ஏற்றிருக்கும் அஞ்சலி நாயருடன...
சர்தார் விமர்சனம்

சர்தார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மக்களுக்கு அலெர்ட் கொடுக்கும் ஒரு விஷயத்தை எடுத்து, அதை டீடெய்லாக அலசி அதில் கமர்ஷியல் சேர்த்து ஒரு பேக்கேஜிங்காக சர்தாரைக் கொடுத்துள்ளது மித்ரன் - கார்த்தி கூட்டணி. காவல்துறையில் பணியாற்றும் கார்த்தி ஓர் விளம்பரப்பிரியர். அவரது தந்தை சர்தார் ஒரு தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில், சர்தாரின் பெயரை வைத்து பல அரசியல் நடக்கிறது. மேலும் ஒரே நாடு ஒரே பைப்லைன் என தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் பயன்பாட்டு நீரையும் எடுத்துக் கொண்டு அதன் மூலமாக கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிறார் ஓர் அதிகார மட்ட வில்லன். அந்த வில்லனுக்கும் சர்தாருக்குமான லிங்கை லைலா ஓப்பன் செய்ய, கார்த்தி அதை ஃபாலோ செய்ய, அடுத்தடுத்து என்ன என்ற சுவாரசியத்துடன் பயணிக்கிறது படம் தான் ஏற்கும் வேடங்களுக்கு உடல்ரீதியாக நியாயத்தைச் செய்வதில் வல்லவர் கார்த்தி. இரு கதாபாத்திரங்களின் தன்மை ...
ப்ரின்ஸ் விமர்சனம்

ப்ரின்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழ்சினிமாவிற்கே பெரும் எனர்ஜி கொடுத்தபடம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர். அதன் பிறகு டான் படத்திலும் வசூல்வேட்டை ஆடினார் சிவகார்த்திகேயன். அடுத்து அவரது நடிப்பில், ப்ரின்ஸ் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு இருந்தது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே வைத்து எழுதப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை நிறைய படங்களாக வந்திருக்கிறது. இருப்பினும் திரைக்கதையை ரசிக்கும்படி உருவாக்கியுள்ளார் இயக்குநர் அனுதீப். கடலூர் மாவட்டம் தேவகோட்டை என்ற ஊரில் பள்ளியில் சோஷியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரு நல்ல ஆசிரியர் இல்லை என்பதை ஓரிரு காட்சிகளிலே கவனப்படுத்தி விடுகிறார்கள். சிவகார்த்திகேயன் வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியையாக வருகிறார் பிரிட்டிஷ் மரியா. இருவரும் காதலில் விழுகிறார்கள். இவர்கள் காதலுக்கு சத்யராஜின் எதிர்ப்போடு சேர்த்து மேலும் ...
வெந்து தணிந்தது காடு விமர்சனம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன்னைச் சுற்றி ஓர் அதிகார மையத்தை உருவாக்கிய எந்த ஒரு டானின் கதையை எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் ஒளிந்திருப்பது ஒரேயொரு விஷயம் தான். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட். அதாவது, தக்கண தப்பிப் பிழைக்கும். அதிலேயும் நாம் கேட்டறிந்த பெரும்பாலான டானின் கதைகள் அடிமட்டத்தில் இருந்து கிளர்ந்து மேலே வந்தவனின் கதைகளாகத்தான் இருக்கும். வாழ்க்கையால் விரட்டப்பட்டு, சுற்றத்தால் கைவிடப்பட்டு, இனி ஆவதற்கு ஏதும் இல்லை என்ற கணத்தில் கத்தியைத் தூக்கியவன் எடுத்த முதல் பலியில் இருந்தே ஆரம்பமாகி இருக்கும். அப்படித்தான் ஆரம்பமாகிறது இந்தக் கதையும். எவன் ஒருவனும் விரும்பி கத்தியைத் தொடுவதில்லை. அதைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை அவனைச் சுற்றி நிகழும் தருணங்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவனும் தொடுகிறான். அதற்காக அப்படித் தொட்டவன் அத்தனை பேரும் டான் ஆகிவிடுவதில்லை. டான் ஆனவன் எவனும் ரத்ததைப் பார்க்காமல் அந்த இடத்தி...
நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல், நெருக்கம், பாலினப்பண்பு முதலியவற்றை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டுவதில் வல்லவரான 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் (Gustav Glimt) -இன் மிகவும் புகழ்பெற்ற ஓவியமான The Kiss இலிருந்து படத்தின் ஃப்ரேம் தொடங்குகிறது. படத்தின் மையமும், காதல், நெருக்கம், பாலினப்பண்பு ஆகியவற்றைச் சுற்றியே! இனியனின் அறைச்சுவரில், 'தி கிஸ்' ஓவியமும், பின்னணியில், கறுப்பினப் பெண்மணியான நினா சிமோனின் (Nina Simone) பாடலும் ஒலிக்கிறது. பாடகியும், இசையமைப்பாளருமான நினா சிமோன் ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் கூட! அதாவது, இனியன் என்பவர் நவீனத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட முற்போக்காளன் என்றறியலாம். தனது இசையின் மூலமாகவும், பிரபல்யத்தின் மூலமாகவும், சமூக உரிமைகளுக்காகப் போராடிய நினா சிமோனோடு ஒப்பிட்டு, இளையராஜாவின் அரசியல் நிலைப்பாட்டின் மீது விமர்சனம் உள்ளவன் இனியன். அவனது காதலியான ரெனே, இனியனி...
கோப்ரா விமர்சனம்

கோப்ரா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
டார்கெட்டைக் குறி வைத்துவிட்டால், அதற்காக எவ்வாறாயினும் உருமாறி, கணித ஞானத்தைக் கொண்டு இலக்கைக் கச்சிதமாகத் தாக்கும் கான்ட்ராக்ட் கொலையாளிக்கு ‘கோப்ரா’ எனக் காரணப் பெயர் சூட்டப்படுகிறது. அதி ரகசியமாகச் செயற்படும் கோப்ராவின் திட்டங்கள் ஒரு ஹேக்கரால் இன்டர்போலுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. யார் அந்த ஹேக்கர், ஹேக்கருக்கும் கோப்ராவிற்கும் இடையே என்ன பிரச்சனை, ஹேக்கர் - கோப்ரா இருவரையும் ஏன் தொழிலதிபர் வேட்டையாட நினைக்கிறான் போன்ற கேள்விகளுக்கான பதிலே படத்தின் முடிவு. படத்தில் மூன்று கதாநாயகிகள். பாடல் காட்சிகளுக்கென்று நேர்ந்து விடப்படாமல், மூவருக்குமே பிரதான பாத்திரங்கள் கொடுத்து வியக்க வைத்துள்ளார் அஜய் ஞானமுத்து. ஹீரோயிசப் படமென்பதால் நாயகிகளை அழுத்தமாகக் கதையில் உபயோகிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. படத்தை சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்று கூட வகைமைப்படுத்தலாம். சதா சர்வகாலமும் மூளைக்கு...