32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1274 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 27 / 85
செய்திகள் வரிசை (பக்கம் 27)
அழகிய கண்ணே விமர்சனம் இது புதிது

அழகிய கண்ணே விமர்சனம்

ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை […]

21/06/2023 Dinesh R
தண்டட்டி விமர்சனம் இது புதிது

தண்டட்டி விமர்சனம்

தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை. […]

20/06/2023 Dinesh R
தி பிளாஷ் விமர்சனம் அயல் சினிமா

தி பிளாஷ் விமர்சனம்

டிசி (DC) என்றால் டார்க் காமிக்ஸ் என்றொரு பொதுவான அபிப்ராயம் உலகளாவில் நிலவியது. வொண்டர் வுமன் (2017), அக்வா மேன் (2018), ஷசாம் (2018) முதலிய படங்களின் மூலம் தங்களுக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் போல் கலகலப்பான கொண்டாட்டத்தை அளிக்கக்கூடிய படம் எடுக்க முடியும் என நிரூபித்தனர். ‘தி பிளாஷ்’ படமும் அத்தகைய கொண்டாட்டத்திற்கு உறுதியளிக்கிறது. பேரி ஆலன், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தனது சக்தியைப் பயன்படுத்தி கடந்த காலத்திற்குள் செல்லமுடியுமென தற்செயலாகக் கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்திற்குள் […]

19/06/2023 Dinesh R
பொம்மை விமர்சனம் இது புதிது

பொம்மை விமர்சனம்

Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை. ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, […]

17/06/2023 Dinesh R
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம் அயல் சினிமா

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம்

தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன ரோபாட்ஸ்க்கு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (உருமாறிகள்) எனப் பெயர். வாகனங்களாக உருவெடுக்கும் உருமாறிகளுக்குப் பெயர் ஆட்டோபாட்ஸ். இந்தப் படத்தொடரின், நாயகர்கள் இந்த ஆட்டோபாட்ஸே! இந்தப் பாகத்தில், உலகைக் காக்க ஆட்டோபாட்ஸ்களுடன் இணையும் புது உருமாறிகளாக மேக்ஸிமல்ஸ் அறிமுகமாகின்றனர். கொரில்லா, புலி, பறவை போன்ற மிருகங்களாக மாறும் ரோபாட்கள் அவை. கிரகங்களை உண்டு கொழிக்கும் இருள் கடவுளான யுனிக்ரான், மேக்ஸிமல்ஸின் கிரகத்தை அழித்து உண்கிறது. யுனிக்ரான் கையில், ‘ட்ரான்ஸ்வார்ப்’ எனும் நவீன […]

13/06/2023 Dinesh R
போர் தொழில் விமர்சனம் இது புதிது

போர் தொழில் விமர்சனம்

யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை. காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் […]

08/06/2023 Dinesh R
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம் இது புதிது

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

“என் படத்துல, ஒண்ணு, நாயகன் கத்திப் பேசணும். இல்லன்னா, கத்தியால பேசணும்.” – இயக்குநர் முத்தையா நீதி, நேர்மை, நியாயம். அதற்காக அடி, வெட்டு, குத்து என களத்தில் இறங்கி வெளுக்கிறார் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். நீதி, நேர்மைக்காக அடிக்கிறார் எனப் பார்த்தால், ரிஷி ரித்விக்கை அடித்துவிட்டு அவரது கூலிங் கிளாஸை எடுத்துக் கொள்கிறார். ‘என்னய்யா உன் நியாயம்?’ என யோசித்தால், ‘என்னை அடிச்சுட்டான்’ என ரிஷி ரித்விக்கும் அவரது அப்பாவை மறுபடியும் சண்டைக்கு அழைத்து […]

03/06/2023 Dinesh R
ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம் அயல் சினிமா

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்) பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் – மேன்களும், ஸ்பைடர் – வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும். இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை […]

03/06/2023 Dinesh R
ஏலியன்ஸ் 2042 விமர்சனம் அயல் சினிமா

ஏலியன்ஸ் 2042 விமர்சனம்

பூமியைத் தாக்கி, அழித்து, தண்ணீரை உறிஞ்சும் ஆக்ரோஷமான பவர் ஃபுல்லான வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து பூமியைக் காப்பாற்றுகிறது சீனப்படை. எத்தனை வருடம்தான் அமெரிக்கர்களே உலகைக் காப்பாற்றுவார்கள்? ‘ஏலியன்’ எனும் படத்தை 1979இல் ரிட்லி ஸ்காட் இயக்கியிருந்தார். அதன் அடுத்த பாகத்தை, அவதார் படப்புகழ் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1986 இல் ‘ஏலியன்ஸ்’ என்ற படத்தை எடுத்திருந்தார். ‘ஏலியன்ஸ் 3 (1992)’, ‘ஏலியன் ரீசரக்ஷன் (1997)’, ‘ப்ரோமிதியஸ் (2012)’, ‘ஏலியன் கோவெனன்ட் (2017)’ என படங்கள் வந்தன. அதில்லாமல், ‘ஏலியன் […]

27/05/2023 Dinesh R
தீராக்காதல் விமர்சனம் சினிமா

தீராக்காதல் விமர்சனம்

பிரிந்த காதல் என்பது ஒருவழிப்பாதை. அதில் திரும்ப முடியாது. அப்படியே முடிந்தாலும், ‘திரும்பக் கூடாது’ என்பதைப் பேசுகிறது தீராக்காதல் திரைப்படம். கொஞ்சம் விட்டுவிட்டு என்றாலும், இன்ப நிழலாடும் வீட்டிற்குள் திடீரென புயல் அடித்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புயலைச் சந்திக்கிறார் நாயகன் ஜெய். மனைவி ஷிவதா, மகள் ஆர்த்தி, நல்ல மரியாதையும் சம்பளமும் உள்ள வேலை என நிறைவான வாழ்வை வாழ்ந்து வருகிறார் ஜெய். அலுவலக வேலையாக ஒருமுறை ரயில் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் […]

27/05/2023 Dinesh R
ஃபாஸ்ட் X விமர்சனம் அயல் சினிமா

ஃபாஸ்ட் X விமர்சனம்

“குடும்பம் தான் எல்லாம்” எனும் இப்படத் தொடரில் வரும் வசனங்கள், மற்ற படங்களில் வரும் பாத்திரங்கள் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தந்தையின் மரணத்திற்காகப் பழிவாங்க நினைக்கும் வில்லன் டான்டே, ‘உனக்குக் குடும்பம்தானே எல்லாம்!’ என டொமினிக்கின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் திட்டங்கள் தீட்டுகிறார். அதற்காக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஏஜென்சி உதவி கேட்பதாக நம்ப வைத்து, ரோமில் நடக்கும் வெடி விபத்துக்கு டொமினிக்கின் குழுவைப் பொறுப்பாளியாக்கி விடுகிறார் டான்டே. ஏஜென்சி, டொமினிக்கையும் அவரது குழுவையும் […]

22/05/2023 Dinesh R
யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம் இது புதிது

யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

‘உலகிலுள்ள எல்லா ஊரும் நமது ஊரே; வையத்திலுள்ள அனைத்து மக்களும் நம் உறவினரே!’ என்ற ஒப்பற்ற தத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பிய கணியன் பூங்குன்றனாரின் மிகப் பிரபலமான புறநானூற்றுச் செய்யுளின் முதல் வரியைத் தலைப்பாக்கி, பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தனர் படக்குழு.  இலங்கையில் இருந்தால் சில்லுகளின் (குண்டுகள்) வெடிப்பால் எந்நேரமும் இறக்கலாம் என அஞ்சி நடிகர் ராஜேஷ் சிறுவனாக இருக்கும் விஜய்சேதுபதியை லண்டன் அனுப்புகிறார். செல்லும் வழியில் சோதனைச் சாவடியில் அகப்படுகிறான் சிறுவன். அந்தச் சிறுவன், விஜய் […]

19/05/2023 Dinesh R
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம் OTT

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் […]

18/05/2023 Dinesh R
ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம் விமர்சனம் அயல் சினிமா

ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம் விமர்சனம்

ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவை, ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிளிக்ஸ் டேக் ஆன் சீஸர் (1999)’, ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: மிஷன் க்ளியோபட்ரா (2002)’, ‘ஆஸ்டெரிக்ஸ் அட் தி ஓலிம்பிக் கேம்ஸ் (2008)’ & ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: காட் சேவ் பிரட்டானியா (2012)’ ஆகும். இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் […]

13/05/2023 Dinesh R
ஃபர்ஹானா விமர்சனம் இது புதிது

ஃபர்ஹானா விமர்சனம்

ஆஃபீஸ் ரூமில் இருந்து வகுப்பறைக்கு அறிக்கை வந்து, ஃபீஸ் கட்டாதவர்களின் பெயர் படிக்கப்பட்டுக் குற்றவாளிகள் போல் மாணவர்கள் எழுந்து நிற்க வைக்கப்படுவது என்பது மிகக் குரூரமான உளவியல் தாக்குதல். அத்தகைய தாக்குதல்களில் இருந்து தன் குழந்தைகளைப் பாதுகாக்க, ஃபர்ஹானா வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி., கொரோனா கால ஊரடங்குகள் என வாழ்க்கை, குறிப்பாக சிறு தொழிலில் ஈடுபட்டோரை நிலைகுலைய வைத்துள்ளது. அப்படி, செருப்புக் கடை வைத்துள்ள ஃபர்ஹானாவின் தந்தைக்கும் வருமானத்தில் இழப்பு நேரிடுகிறது. வங்கியின் பிபிஓ […]

13/05/2023 Dinesh R