Shadow

திரை விமர்சனம்

தி லெஜண்ட் விமர்சனம்

தி லெஜண்ட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமென பல படங்களைச் சொன்னாலும், உள்ளபடிக்கு அது மிகச் சில படங்களுக்கே பொருந்தும். அதிலொன்று இப்படம். காரணம், லெஜண்ட் சரவணன். தனக்குத்தானே சூடிக் கொண்ட விருப்பப் பெயரைப் படத்தின் தலைப்பாகவும் பயன்படுத்தியுள்ளார். ஒரு மாஸ் படத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் உடைய படமாக வந்துள்ளது. காமெடி, சண்டை, சென்ட்டிமென்ட், சமூக அக்கறை என ஒன்றையும் தவற விட்டுவிடக் கூடாதென கவனமாகக் கதையைக் கோர்த்துள்ளனர் இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி. உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான சரவணன், தனது ஊர் மக்களுக்குப் பயன்படும்படி ஏதாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென பூஞ்சோலை கிராமத்திற்கு வருகிறார். வாத்து மேய்க்கும் கணிதப் பேராசிரியையான துளசி மீது கண்டதும் காதல் வருகிறது. சரவணின் நண்பன் சர்க்கரை நோயால் இறக்க, அதற்கு மருந்து கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் சரவணன். அதனால், சில தனிப்பட்ட இழப்புகளையும், பல சி...
ஜோதி விமர்சனம்

ஜோதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது படம். மேலும், படத்தின் முதல் ஏழு நிமிட வீடியோவையே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அருள்ஜோதி எனும் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, ஒரு மர்ம நபர் குழந்தையைக் கடத்திக் கொண்டு செல்கிறார். அந்தப் பெண்ணின் எதிர் வீட்டில், சக்தி சிவபாலன் எனும் காவல்துறை அதிகாரி வசிக்க, அவர் உடனே விசாரணையை மேற்கொள்கிறார். குழந்தை எப்படிக் கிடைத்தது, யார் கடத்தியது என்பதுதான் படத்தின் கதை. அருள்ஜோதியின் கணவர் அஷ்வினாக, ராட்சசனில் க்றிஸ்டோஃபராக அசத்திய நான் சரவணன் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. படத்திலேயே மிக மோசமான நடிப்பை வழங்கியிருப்பது இவர் மட்டுமே. எதிர் வீட்டுப் பெண்ணாகவும், காவல்துறை அதிகாரி சக்தி சிவபாலனின் மனைவி ஜானகியாக க்ரிஷா குரூப் நடித்த...
நதி விமர்சனம்

நதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மதுரை, சாதி, பதின் பருவத்துப் பையன்களின் கையில் சிறுவயதிலேயே கத்தி, கொலை செய்து வாழ்க்கையைத் தொலைக்கும் சுள்ளான்கள், கனவுகளோடு இருக்கும் இளைஞர்கள் என சசிகுமாரின் வாய்ஸ்-ஓவரில் கதை தொடங்குகிறது. ஷட்டில்காக் வீரனான சாம் ஜோன்ஸ்க்கும், கயல் ஆனந்திக்கும் காதல் மலருகிறது. அவர்களுக்கு இடையில், ஜாதியும் கெளரவமும் தன் கோர முகத்தைக் காட்ட, காதலர்களின் கதி என்னவென்பதே படத்தின் கதை. கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சசிகுமாரின் வாய்ஸ்-ஓவரில் மதுரையின் குற்றப்பின்னணி பற்றிச் சொல்வது; பின், இதுதான்ங்க காலேஜ், காலேஜ் வகுப்பறை எனக் காட்டி, அங்கு ஒரு பாடல் – நடனம் அமைத்து, கதைக்குள் செல்ல சுற்று வழியை எடுக்கும் பழமையான கதைசொல்லல் பாணி உபயோகிக்கப்பட்டுள்ளது. கதைக்களம் மதுரை என்பதால், அதன் தொன்மையை உணர்த்தும் குறியீடாக அந்தப் பாணியைப் பயன்படுத்தியிருப்பார் போல இயக்குநர் தாமரை செல்வன். சாம் ஜோன்ஸே படத்தைத் த...
தேஜாவு விமர்சனம்

தேஜாவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேஜாவு என்பது ஒரு ஃப்ரெஞ்ச் சொல். ஒரு நிகழ்வு, ஏற்கெனவே நிகழ்ந்தது போல் தோன்றினாலோ, அல்லது புதிதாய் ஓர் இடத்திற்குச் செல்லும்போது முன்பே அங்கு வந்திருப்பது போல் தோன்றினாலோ, அது தேஜாவு என அழைக்கப்படும். இப்படத்தில், ஒரு வருடத்திற்கு முன் நடந்த ஒரு கடத்தலை, மீண்டும் அதே போல் நிகழும்படி உருவாக்குகின்றனர். யார், ஏன், எதற்கு, எப்படி என்பதுதான் படத்தின் கதை. டிஜிபி மகள் பூஜா கடத்தப்படுகிறாள் என எழுத்தாளர் சுப்பிரமணி எழுதினால், அது அப்படியே நடக்கிறது. இவர் ஏதேனும் எழுதினாலே, அது அடுத்த நிமிடமே நிகழ்கிறது. ஒன்று, சுப்பிரமணி எழுதுவது தற்செயலாக இருக்கலாம்; அல்லது, தீர்க்கதரிசனாமாக (prophecy) இருக்கலாம்; இல்லையெனில், ஏதோ பித்தலாட்டமாக இருக்கலாம். குழம்பிப் போய் நிலை குலையும் டிஜிபி ஆஷோ பிரமோத், மகளைக் கண்டுபிடிக்க, விக்ரம் குமார் எனும் அண்டர்கவர் அதிகாரியை வரவழைக்கிறார். பூஜாவைக் கண்டுபிடிக்க விசாரண...
மஹாவீர்யர் விமர்சனம்

மஹாவீர்யர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஃபேண்டசி கோர்ட் ரூம் டிராமாவைத் தயாரித்துள்ளார் நிவின் பாலி. எம். முகுந்தனின் கதையைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அப்ரீட் ஷைன். அனுமார் சிலையைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அபூர்ணாநந்தா எனும் சாமியார் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இது படத்தின் முதற்பாதி. விக்கல் நிற்காத ஸ்ரீ ருத்ர மகாவீர அக்ரசேனா மஹாராஜா, அவரது தளபதி வீரபத்திரன், தளபதியால் கடத்தப்பட்ட தேவயானி ஆகியோரது வழக்கு தற்கால நீதிமன்றத்தில் நடக்கிறது. இது படத்தின் இரண்டாம் பாதி. வழக்கம் போல், மலையாள சினிமாவில் இருந்து மற்றுமோர் அற்புதமான பரீட்சார்த்த முயற்சி. பப்ளிக் ப்ராக்சிக்யூட்டராக லாலு அலெக்ஸும், நீதிபதி விரேந்திர குமாராக சித்திக்கும் நடித்துள்ளனர். கோர்ட் ரூம் டிராமா என்பதால்,படம் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கின்றனர் கதாபாத்திரங்கள். அதை அவர்களது அனுபவம் மிகுந்த நடிப்பாலும், முக பாவனைகளாலும் சுவாரசியப்படுத்து...
சிவி – 2 விமர்சனம்

சிவி – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஷட்டர் (2004) எனும் தாய்லாந்து படத்தை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு சிவி எனும் படத்தை, கே. சுந்தர் தயாரிப்பில், கே.ஆர்.செந்தில்நாதன் இயக்கினார். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து, Gonjiam: Haunted Asylum எனும் கொரியன் தொடரை மையப்படுத்தி சிவி - 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் கே.ஆர்.செந்தில்நாதன். ஆர் மாஸ் ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக லலிதா கஸ்தூரி கண்ணன், சிவி-2 திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். 'சிவி' படத்தில் பேய் செய்த கொலைகளையும், அக்கொலைகள் நிகழ்ந்த மூடப்பட்டிருக்கும் ஷைன் மருத்துவமனையில் நிலவும் அமானுஷ்யத்தையும் வெளிக்கொணர சில கல்லூரி மாணவர்கள் நெமிலிச்சேரி செல்கிறார்கள். யூ-ட்யூப்பில் லைவாக ஒளிபரப்பி, பார்வையாளர்களை அமானுஷ்யம் இருப்பதாக நம்ப வைத்து சம்பாதிப்பதுதான் அவர்களது திட்டம். ஆனால் சிவியின் முதல் பாகத்துப் பேயான நந்தினி மீண்டும் சார்ஜ் எடுத்துக் கொள்ள, மாணவர்களின் கதி என்னாகிறது என்பதுதான் பட...
தி வாரியர் விமர்சனம்

தி வாரியர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்கவேண்டுமென ஆசைப்பட்டவர் ராம். ஆனால், ராம் பொத்தினேனியாக தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருபது வருடக் காத்திருப்புக்குப் பிறகு, தமிழில், நாயகனாக அறிமுகமாகியுள்ளார் ராம். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்கான தொடக்கமாக இப்படம் அமையுமென எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவரான சத்யா, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாகி வருகிறார். மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரு எனும் ரெளடிக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளிக்கிறார் சத்யா. குரு, சத்யாவை நையப்புடைத்துத் தொங்க விட்டுவிடுகிறார். உயிர் பிழைக்கும் சத்யா, ஐபிஎஸ் அதிகாரியாக மதுரை வருகிறார். குருவின் சாம்ராஜ்ஜியம் நிர்மூலமாகிறது. கமர்ஷியல் ஃப்ளேவர்கள் இல்லாமல் படம், புஜ பல பராக்கிரமசாலியான குருவிற்கு...
நிலை மறந்தவன் விமர்சனம்

நிலை மறந்தவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Trance எனும் மலையாளப் படத்தைத் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என மொழிமாற்றி வெளியிட்டுள்ளனர். ட்ரான்ஸ் என்றால் பித்து நிலை எனச் சொல்லலாம். பித்து நிலையில், மனிதன் தன்னிலை மறந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. அப்படி மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்யும் ஒரு வியாபார யுக்தியை ஜீசஸின் பெயரால் உருவாக்குகின்றனர் வில்லன்கள். விட்டில் பூச்சிகளாய் அதில் தன்னிலை மறந்து விழும் மக்களைக் கொண்டு எப்படிக் கோடியில் புரளுகின்றனர் என்பதே படத்தின் கதை. ட்ரான்ஸ், அமேசான் ப்ரைமில் காணக் கிடைத்தாலும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிய திரையில் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முதல் முப்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு மலையாளப் படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. அதற்குப் பின்னான படம், கிறிஸ்துவ மதத்தை வியாபாரமாகப் பயன்படுத்துவோர்களின் முகமூடி கிழிபடுவதை ரசிக்கும் ...
மை டியர் பூதம் விமர்சனம்

மை டியர் பூதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளுக்கான படம். பிரபு தேவா பூதமாக நடிக்க, பூதத்தை விடுவிக்கும் சிறுவனாக அஷ்வந்த நடித்துள்ளான். அஷ்வந்திற்கு ஒரு விபத்தில் திக்குவாய் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் கிண்டல்களுக்கு உள்ளாகும் நிலையில், சமணர் மலை அருகில் ஒரு பொம்மையில் அடைப்பட்டு இருக்கும் சிலையில் இருந்து கர்கிமுகி எனும் பூதத்தை விடுவிக்கிறான். சாபம் பெற்று பொம்மையாய் மாறிய பூதம், விடுபட்டதிலிருந்து 48வது நாளில், அஷ்வந்த் மந்திரம் சொன்னால் மட்டுமே, பூதத்தால் தன் சொந்த கிரகத்திற்குச் செல்ல முடியும். ஆனால், பூதமே அந்த உதவியை அஷ்வந்திடம் கேட்கக் கூடாது. அஷ்வந்தாகச் செய்யவேண்டும். அதெப்படி சாத்தியமானது என்பதே படத்தின் கதை. குழந்தைகளைக் கவரும் வகையில் வி.எஃப்.எக்ஸில் அசத்தியுள்ளனர் A.M.T. மீடியா டெக். வீஸ்வரூபத்தில் இருக்கும் பூதம், சுவரிலுள்ள சோட்டா பீம் போஸ்டரில் இருந்து லட்டை எடுத்துச் சாப்பிடும் பூதம், டாம் & செர்ரி ...
இரவின் நிழல் விமர்சனம்

இரவின் நிழல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரவை விடவும், இரவின் நிழலை விடவும், அடர்த்தியான இருண்மையைக் கொண்டுள்ளது 'இரவின் நிழல்' திரைப்படம். "இது மென்மையான மனம் கொண்டோருக்கான படமில்லை" என மேக்கிங் வீடியோவில் எச்சரிக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 92 நிமிட கால அளவைக் கொண்ட படம் தொடங்குவதற்கு முன், 30 நிமிட மேக்கிங் வீடியோ போடுகிறார் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். உலகத்திலேயே முதல் முறையாக சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்ற முறையில் தமிழர்கள் எல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். புதிய முயற்சிக்கான தேடலோடு ஓடும் பார்த்திபன் இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். 💐 Start, Camera, Action, Hospital என்று உடல் அங்கங்களை உடைத்துக் கொள்ளும் ஜாக்கி சான், தன் படங்களின் முடிவில் ப்ளூப்பர்ஸை ஜாலியாக ரசிக்கும்படி வைத்திருப்பார். பிறகு, வெற்றி பெற்ற படத்தின் மேக்கிங் வீடியோவைத் தனியாக இணையத்தில் வெளியிடும் வழக்கம் வந்தது. எங்கும் எதிலும் எப்ப...
கார்கி விமர்சனம்

கார்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடும் இயக்குநர் கெளதம் ராமசந்திரன், கடைசி ஃப்ரேம் வரை நம் கவனம் கலையாமல் பார்த்துக் கொள்கிறார். இந்த வருடத்தின் மிகச் சிறப்பான படங்களில் ஒன்றாகக் கார்கி புகழடையும்.  பள்ளி ஆசிரியையான கார்கியின் தந்தையைக் காவல் துறை கைது செய்துவிடுகிறது. சிறுமி மீதான பாலியல் வன்முறை வழக்கு என்பதால், காவல்துறையினர் ரகசியமாகவும் கவனமாகவும் இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பெண் ஒருவரால், விஷயம் கசிந்து, கார்கியின் குடும்பம் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறது. தன் தந்தை குற்றமற்றவரென நிரூபிக்கத் தனியாளாகப் போராடுகிறார் கார்கி. ஈ மொய்ப்பது போல் சூழும் பத்திரிகையாளர்கள், தந்தையைச் சந்திக்க விடாத நுண்ணியமான அதிகார பலம், வேலையிழப்பு, அவமானம், சமூகத்தின் கோபம் என கார்கி எதிர்கொள்ளும் அனைத்துமே கனமானவை. உண்மையில், படத்தின் கனத்தைக் கூட்டுவது, ...
லட்கி – இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படம்

லட்கி – இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படம்

சினிமா, திரை விமர்சனம்
ஆர்ட்சீ மீடியா ப்ரொடக்‌ஷன் மற்றும் இந்தோ - சைனீஸ் கோ ப்ரொடக்‌ஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'லட்கி (Ladki)'. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் "பொண்ணு" என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ராம் கோபால் வர்மா, "இந்தப் படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்குப் பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே ப்ரூஸ் லீ, என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த ப...
பன்னிகுட்டி விமர்சனம்

பன்னிகுட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, விஜய் டிவி ராமர், பழைய ஜோக் தங்கதுரை, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன் ஆகியோரோடு ஓர் அழகான பன்னிகுட்டியும் நடித்துள்ளது. வேலையில்லா உத்ராவதிக்குத் தொட்டதெல்லாம் பிரச்சனையாகத் தெரிய, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்க பலமுறை முயல்கிறார். அவரை ஒருமுறை காப்பாற்றும் ப்ரூனே, கோடாங்கியிடம் அழைத்துச் செல்கிறார். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அவர் சொல்லும் பரிகாரத்தைச் செய்ததும், அவரது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்லது நடக்கிறது உத்ராவதிக்கு. மகிழ்ச்சியில் கோடாங்கிக்கு நன்றி சொல்ல வரும் வழியில், பன்னிக்குட்டி ஒன்றின் மீது மோதி விடுகிறார் உத்ராவதி. அப்பன்னிக்குட்டியின் மீது மீண்டும் வண்டியில் மோதினால்தான் நடக்கும் நல்லது தொடரும், இல்லையெனில் நிலைமை மேலும் மோசமாகிவிடும் எனச் சொல்லி விடுகிறார் கோடாங்கி. திட்டாணிக்குக் கல்யாணம் நடக்கவேண்டுமெனில், ராணி எனும்...
தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடவுள்களைக் கொல்லும் கோர், நிழல் உருவங்களை ஏவி புது ஆஸ்கார்டின் குழந்தைகளைக் கடத்தி விடுகிறான். நிழல் உலகில் சிறைப்பட்டிருக்கும் குழந்தைகளை தோர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்குப் பிறகு, மார்வெலின் படங்களில் அவர்களது மேஜிக் மிஸ்ஸாகிறது. மாயாஜாலங்களை மட்டுமே நம்பிக் களங்கமிறங்குவதை மார்வெல் என்டர்டெயின்மென்ட் தவிர்க்கவேண்டும். டிசி என்டர்டெயின்மென்டில் இருந்து கிறிஸ்டியன் பேலை மார்வெல் என்டர்டெயின்மென்டின் வில்லனாக வருகிறார். தானோஸ் போலொரு வில்லனுக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் புது வில்லன்கள் யாரும் அச்சுறுத்தவோ, ஈர்க்கவோ இல்லை. கிறிஸ்டியன் பேல் போலொரு நடிகரை வில்லனாக ரசிக்கத்தக்கும் வகையில் பயன்படுத்தாதது படத்தின் குறை. ‘தோர்: ரக்னோரக்’ படத்தை இயக்கிய டைக்கா வாட்டிட்டி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முயற்சி செய்திருந...
ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நம்பி நாராயணனுடைய வரலாற்றுப் படம் (Biopic) எடுக்கிறார்கள் எனும்போதே எனக்கு இயல்பாக ஆர்வம் எழுந்தது. 90களின் சமயத்தில்தான், இந்திய பத்திரிகைத் துறையில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் மையம் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் நடப்புலகின் புதிரான சம்பவங்களை அம்பலப்படுத்துவது அல்லவா பத்திரிகை தர்மம் என்று மிகவும் உணர்ச்சி மேலீட்டோடு கவனித்து வந்த பல வழக்குகளில் ஒன்று நம்பி நாராயணன் வழக்கு. பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது, அவர் மேலான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகாமல் சிபிஐ கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆனதெல்லாம் நடந்ததும், பத்திரிகைகள் அவர் மேல் கவிந்த வெளிச்சத்தை விலக்கிக் கொண்டுவிட்டன. பத்திரிகைகளால் அதிகம் கண்டுகொள்ளப்படாத அந்தக் காலகட்டத்திலும், நம்பி நாராயணன் தன் மீது அபாண்டமாகப் போடப்பட்ட தேசத்துரோக களங்கத்தைப் போக்கிக் கொள்ள தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருக்கிறார். உச்சநீதிமன்றம்...