Shadow

திரை விமர்சனம்

Dr. 56 விமர்சனம்

Dr. 56 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அம்பத்தாறு நிமிடங்களுக்கு ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டால் இறந்துவிடக்கூடிய நபரொருவர், ஒரு விஞ்ஞானியையும் இரண்டு மருத்துவர்களையும் கொன்ற குற்றத்திற்காக்க் கைது செய்யப்படுகிறார். அவர் யார், அவருக்கும் அந்தக் கொலைகளுக்கும் தொடர்பு என்பதே படத்தின் கதை. அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி நடித்துள்ளார். மிடுக்கான நடை, அலட்சியமான பார்வை என்று புறத்தோற்றத்தில் அசத்தலான அதிகாரியாக உள்ளார். கிடைக்கும் துப்புகளை ஒருவரைச் சட்டென கைதும் செய்துவிடுகிறார். ஆனால், உண்மையான குற்றவாளியோ, வழக்கிற்கு உதவுவது போல் ப்ரியாமணியிடம் குற்றத்தைப் பற்றி ஒப்பிக்கிறார். ‘சாவதற்கு முன் உண்மைகளை சி.பி.ஐ. அதிகாரி அறிந்து கொள்ளட்டுமே!’ என்ற நல்லெண்ண அடிப்படையில் வில்லன் செயல்படுவது திரைக்கதைக்கு வேட்டு வைக்கும் காரியம். குற்றங்களை மூடி மறைப்பதோடு மட்டுமல்லாமல், சிபிஐ அதிகாரியையே கொல்ல...
குருமூர்த்தி விமர்சனம்

குருமூர்த்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார். ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓர்...
விட்னெஸ் விமர்சனம்

விட்னெஸ் விமர்சனம்

OTT, OTT Movie Review, திரை விமர்சனம்
பொதுச் சமூகத்தின் பரவலான கவனத்தைப் பெறாத ஒரு பெரும் சமூக அவலத்திற்கு, பார்வையாளர்களைச் சாட்சியாக்கியுள்ளார் இயக்குநர் தீபக். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையும், அதனால் நிகழும் மரணங்களும் இன்றும் நிகழ்கின்றன. அதுவும் எத்துணை நயமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் அப்பணி சுமத்தப்படுகிறது என உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் தீபக். கல்லூரி மாணவனான பார்த்திபனைக் கட்டாயப்படுத்தி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிச் சுத்தம் செய்ய வைக்கின்றனர். விஷ வாயு தாக்கி அவன் இறந்துவிட, அக்கொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைகின்றனர் அந்த அப்பார்ட்மென்ட் வாசிகளும், கான்ட்ராக்டரும். தொழிற்சங்கத் தலைவரான பெத்துராஜின் தூண்டுதலில், பார்த்திபனின் அம்மா இந்திராணி, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென நீதிமன்றத்தை அணுகுகிறார். என்ன தீர்ப்பு வருகிறது என்பதே படத்தின் முடிவு. ...
DSP விமர்சனம்

DSP விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
DSP ஆகவேண்டுமென்பது, நாயகி அன்னபூரணியின்  கனவு. ஆனால், முட்டை ரவியால் கொல்லப்படக்கூடாதென ஊரை விட்டு ஓடும் வாஸ்கோடகாமா, துணைக் காவல் கண்காணிபாளராகி (DSP) விடுகிறார். அதற்குள் முட்டை ரவி, சட்டமன்ற உறுப்பினராகிவிடுகிறார். துகாக-விடம் சிக்கிய சமஉ-வின் கதி என்னவென்பதுதான் படத்தின் கதை. மாஸான என்ட்ரியும், அதை உறுதிப்படுத்தும் சண்டைக் காட்சியும் முடிந்ததும், தான் யார் என்ற பூர்வாங்கத்தைச் சொல்லத் தொடங்குகிறார் நாயகனான விஜய் சேதுபதி. குடும்பம், கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழித்தல், தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தல், மொட்டை மாடியில் குடிப்பது, நாயகியைச் சந்திப்பது, முட்டை ரவியை அடித்து வம்பைத் தேடிக் கொள்வதென முதற்பாதியைச் சவ்வாக இழுத்துவிடுகிறார் இயக்குநர் பொன்ராம். எவ்வளவு நேரம் தான் விஜய் சேதுபதியே ஒப்பேற்றிச் சமாளிப்பாரென அவரது உதவிக்கு, இரண்டாம் பாதியில் பால் பண்ணை முதலாளி மாப்பிள்ளை விநா...
கட்டா குஸ்தி விமர்சனம்

கட்டா குஸ்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கட்டா குஸ்தி என்பது கேரளாவின் பிரத்தியேக வகை மல்யுத்தமாகும். அக்கலையில் நிபுணத்துவம் பெற்ற கீர்த்திக்கு, மல்யுத்த வீராங்கனை என்பதால் மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராவிடம், கீர்த்தி ஒரு மல்யுத்த வீராங்கனை என்பதை மறைத்துக் கல்யாணம் செய்து வைக்கிறார் கீர்த்தியின் சித்தப்பா கணேசன். கீர்த்தி பற்றிய உண்மை தெரிந்ததும் ஏற்படும் குழப்பமும் தெளிவும்தான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி நகைச்சுவைக் காட்சிகள் மிகச் சிறப்பாக உள்ளன. கணவன் குறித்து நாயகியிடம் பெண்கள் கூறம் போதும், மனைவி குறித்து நாயகனிடம் கருணாஸ் கூறும் போதும், திரையரங்கில் சிரிப்பொலியைக் கேட்க முடிகிறது. இயக்குநர் செல்லா அய்யாவிற்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. வசனத்தில் வரும் 'சின்னம்மா'வைக் கருணாஸைக் கலாய்த்திருப்பது ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில், சினிமா சுதந்திரத்தைக் கையிலெடுத்து, ஈகோவில...
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, திரை விமர்சனம்
சுழல் தொடரின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் நிறுவனமான வால்வாட்ச்சர் ஃப்லிம்ஸ் சார்பாக புஷ்கர் - காயத்ரி தயாரித்திருக்கும் தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் தெளிவான உண்மையும் கிடைக்காமல், அவளைப் பற்றி மர்மங்களும் வதந்திகளும் மட்டுமே நிலவுவதால், காவல்துறை அவ்வழக்கை மூடி விடுகிறது. ஆனாலும் உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அல்லாடுகிறார் துணை ஆய்வாளர் விவேக். வெலோனியைக் கொன்றது யாரென விவேக் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் தொடரின் கதை. த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் மெதுவாக நகருகிறது. இது த்ரில்லர் படம் என்பதை விட, வெலோனியின் அகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் துணை ஆய்வாளர் விவேக்கின் அகப்பயணம் என்றே சொல்லவேண்டும். எழுத்தாளர் நாசர், ஒரு நாவலே எழுதி விடுகிறார். விவேக்கோ, ...
பவுடர் விமர்சனம்

பவுடர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பவுடர் என்பதைக் குறியீடான தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. பவுடர் போட்ட முகங்களுக்கும், அசலான முகங்களுக்கும் உள்ள வேறுபாடினைக் காட்ட முயற்சி செய்துள்ளார். படத்தின் நாயகன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் பவுடர். கொரோனாக் காலகட்டத்தில் மிக எளிமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்தில், ஓர் இரவில் நடக்கும் கதையாகப் படத்தை எடுத்துள்ளார். தாதா 87 படத்தில், இரண்டாம் பாத...
காந்தாரா – மனக்குழப்பமும், வாழ்வின் தரிசனமும்

காந்தாரா – மனக்குழப்பமும், வாழ்வின் தரிசனமும்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு தயக்கத்துடன் இருக்கும் நாயகன் (Hesitant hero) வகை கதைகளில், நாயகன் தனக்கு விதிக்கப்பட்ட பொறுப்பை/பதவியை, அதுவும் எளிதாக அவனுக்குக் கிடைக்கக் கூடிய சூழலில், அதன் பிரம்மாண்டத்தின் மீதான ஒவ்வாமை அல்லது பயம் காரணமாகத் தவிர்த்து ஓடுவான். அதன் நேர் எதிர் முனையான கொண்டாட்டத்தின் மீதோ அல்லது இதை மொத்தமாக மறுதலிக்கும் வேறு தொழிலின் மீதோ அல்லது பிரியமான வேறு வாழ்க்கை மீதோ விருப்பு கொண்டு, அவ்வோரமாக ஒதுங்கிப் போக நினைப்பான். ஆனால் காலம் அவனைச் சூழலுக்குள் தள்ளிவிடும். எதைக் கண்டு உள்ளூர பயந்து விலகினானோ, அதிலேயே காப்பானாக வந்து நிற்கச் செய்யும். தேவர் மகனில் கமல் இப்படி நிலசுவன்தார் கால மதிப்பீடுகளைத் தாங்கி நிற்கும் தனது கிராம வாழ்வை வெறுத்து நகரத்தை முழுதாக நேசிப்பார். நகர மதிப்பீடுகளைச் சுவிகரித்து கொண்டதன் அடையாளமாக வேறு கலாச்சாரக் காதலியும், கார்பரேட் பாணி ஓட்டலுமென நவீனமாக தன் வாழ்வைத் திட...
ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வஞ்சகர் உலகம் எனும் படத்தை இயக்கிய மனோஜ் பீதா, ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ எனும் தெலுங்குப் படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். இரயில்வே பாதையின் ஓரமாகக் கிடைக்கும் அநாமதேய பிணங்களின் பின்னணியில் நிகழும் பகீர் குற்றங்களை டிடெக்டிவான ஏஜென்ட் கண்ணாயிரம் அவிழ்ப்பதுதான் படத்தின் கதை. சந்தானத்தை டிடெக்டிவாக அறிமுகப்படுத்தும் காட்சியே படுபயங்கர சொதப்பல். அங்கு தொடங்கும் சொதப்பலைப் படமெங்கும் பல காட்சிகளில் தொடர்கின்றன. தந்தையின் முதல் மனைவி வாரிசுகளுடன் சொத்துப் பிரச்சனை என ஊரில் தங்குபவர், ஒரு காரைப் பார்த்து அதை எந்தக் கேள்வியுமின்றி ஓட்டிக் கொண்டு வருகிறார். அது அவர் உபயோகித்த காரா அல்லது பாகப்பிரிவனையில் அவருக்காக ஒதுக்கப்பட்ட காரா என்பதிலெல்லாம் தெளிவில்லை. காட்சிகளின் நகர்விலுள்ள இத்தகைய தெளிவின்மைதான் படத்தின் மிகப் பெரும் மைனஸ். டைட்டில் கார்ட் போடும் பொழுது வரும் அனிமேஷன் ரசிக்க...
பட்டத்து அரசன் விமர்சனம்

பட்டத்து அரசன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓர் அணியாக ஒரு குடும்பம், கபடி ஆட்டங்களில் பங்குபெறும் ஒற்றை வரிச்செய்தியைப் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சற்குணம். தனது ஊருக்காக நாப்பது வருடங்களாகக் கபடி ஆடி, ஊருக்கு மிகப் பெரும் பெருமையைச் சேர்த்தவர் பொத்தாரி. ஊரின் கபடிக் குழுவிற்கு அவரது பெயரை வைப்பதோடு, அவருக்குச் சிலையும் வைத்துக் கொண்டாடுகின்றனர் ஊர்மக்கள். அரசர்குளத்திற்கு எதிரான ஒரு போட்டியில், பொத்தாரியின் பேரன் பணம் வாங்கிவிட்டதாக ஊர்மக்களை நம்ப வைக்கிறான் பொறாமையில் பொங்கும் சக ஆட்டக்காரன் ஒருவன். அதனால் சுடுகாட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொத்தாரியின் குடும்பத்திற்குக் காலகாலமாகக் கிடைக்கும் முதல் மரியாதை மறுக்கப்படுகிறது. ஊராரின் அலட்சியத்தையும் தூற்றுதலையும் பொறுக்காத பொத்தாரியின் இரண்டாம் தாரத்துப் பேரன், ஊர்மக்கள் ஓர் அணியாகவும், பொத்தாரி குடும்பத்து ஆண்கள் ஓர் அணியாகவும் மோதிப் பார்க்கலாம் என அறைகூவல் விடுக்கிற...
காரி விமர்சனம்

காரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் என்ற கிராம மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த ஒரு கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். ரியலிஸ்டிக்கான மேக்கிங்கால் படத்தையும் நெருக்கமாக உணர முடிகிறது. குதிரை ஜாக்கியான சசிகுமார் சென்னையில் தன் தந்தை ஆடுகளம் நரேனோடு வசிக்கிறார். ஆடுகளம் நரேன் சிறு உயிர்களையும் தன் உயிரென நேசிக்கக் கூடியவர். சசிகுமார் வாழ்வையும் சமூகத்தையும் ஏனோதானோ என ஏற்பவர். சசிகுமாரின் சொந்தக் கிராமமான காரியூரில் கருப்பசாமியின் திருவிழாவை நடத்த வேண்டிய ஒரு சூழல் வருகிறது. அதை நடத்த சசிகுமாரின் வருகை தேவையாக இருப்பதால் ஊர் சசிகுமாரை நாடுகிறது. சசிகுமாருக்கும் ஊருக்குச் செல்வதற்கான ஒரு எமோஷ்னல் காரணம் அமைய, சசிகுமார் ஊருக்குச் சென்று தன் ஊரின் வேரை எப்படிக் காக்கிறார் என்பது காரியின் திரைக்கதை. மிகையில்லாத நடிப்பு தான் சசிகுமாரின் பலம். சரியான ஜாக்கி இல்லையென்றால் குதிரை தறி...
நான் மிருகமாய் மாற விமர்சனம்

நான் மிருகமாய் மாற விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர் தேவராஜனைக் கூலிப்படையினரிடம் இருந்து காப்பாற்றுகின்றான் பூமிநாதனின் தம்பி. தேவராஜனைக் கொல்ல முடியாத ஆத்திரத்தில், பூமிநாதனின் தம்பியைக் கொன்றுவிடுகின்றனர் கூலிப்படையினர். சட்டத்தை நம்பாமல், தன் கைகளாலேயே கூலிப்படையினரைக் கொன்று விடுகிறார் பூமிநாதன். பூமிநாதனின் குடும்பத்தைக் கொன்று விடுவதாக அச்சுறுத்துகிறான் தாஸ் எனும் கூலிப்படைத் தலைவன். பூமிநாதனின் குடும்பம் பிழைக்க வேண்டுமென்றால், தேவராஜனைக் கொலை செய்யும்படி பூமிநாதனை நெருக்குகிறான் தாஸ். தன் குடும்பத்திற்காக மிருகமாய் மாறும் பூமிநாதன் எப்படி தாஸிடமிருந்து காப்பாற்றுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. கொலைகளும், ரத்தத் தெறிப்புகளுமாக உள்ளது படம். கதையிலுள்ள வன்முறையை விட, காட்சிகளாக விரியும்போது வன்முறை தாண்டமாடியுள்ளது. வன்முறையையும், ரத்தத்தெறிப்புகளையும் நம்பியே இயக்குநர் சத்யசிவா படம் எடுத்துள்ளது போல் தெரிகிறது. முதற்பாதி...
கலகத்தலைவன் விமர்சனம்

கலகத்தலைவன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வஜ்ரா எனும் பன்னாட்டுப் பெருநிறுவனத்தின் ரகசியங்கள் கசிந்தவண்ணம் உள்ளன. தகவல் கசிவின் பின்னணியில் யார் உள்ளார்கள் என துப்பறிய, அர்ஜுன் எனும் வேட்டையாளைக் களம் இறக்குகிறது வஜ்ரா நிறுவனம். அர்ஜுன் ஒவ்வொரு நூலாகப் பிடித்து திருமாறனிடம் வந்து சேருகிறான். யார் இந்த திருமாறன், ஏன் வஜ்ராவை அழிக்க அவன் போராடுகிறான் என்பதே படத்தின் சுவாரசியமான கதை. வழமை போல் மகிழ் திருமேனியின் மாயம் செய்யும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது. எட்டு வருடத் திட்டமிடலுக்கான நோக்கம், ஒரு பழி வாங்கும் கதையெனக் கடைசியில் சுருக்கியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், படம், அரசு நிறுவனங்கள் தனியார்மயமாவதன் ஆபத்துகள் குறித்தும், அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் வேலையின்மை குறித்தும் நுணக்கமான விவரணைகளை அளிக்கிறது. அப்படி ஒரு பெரும் பொருளாதாரக் குற்றத்தைப் படம் அம்பலப்படுத்தப் போகிறதோ என்ற தோற்றத்தை எழுப்பி, தனிமனித இ...
யூகி விமர்சனம்

யூகி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு மிஸ்ஸிங் கேஸை அடிப்படையாக வைத்து, அதோடு சிற்சில எமோஷ்னல் விசயங்களையும் தூவிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் துவக்கத்திலே கயல் ஆனந்தி காணமால் போனதிற்கான விசாரணை துவங்குகிறது. அடுத்த காட்சி ஜான்விஜய் கொலை செய்யப்படுகிறார். இவை சம்பந்தமான விசாரணைகளும் விபரிப்புகளும் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் மாலை போட்ட கெட்டப்போடு நட்டி விசாரணைகளை நடத்துகிறார். மறுபுறம் டிடெக்டிவான நரேன், கதிரோடு இணைந்து விசாரிக்கிறார். இந்த மூன்று விசாரணைகளின் பின்னணியிலும் ஒரே விசயம் தான் பின்னப்பட்டிருக்கிறது. மேலும் இவர்கள் மூவரில் ஒருவரே இதைச் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. அது யார் என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது டிடெக்டிவ் ஆபிசராக நரேன் பொருத்தமான உடல்மொழியை வெளிப்படுத்தி அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நட்டி நடிப்பில் இயல்புத்தன்மை மிஸ்ஸிங். ஒருவேளை அவரது கேரக்டரின் வடிவம...
செஞ்சி விமர்சனம்

செஞ்சி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓர் ஓலைச்சுவடியில் கிடைக்கும் துப்பினைக் கொண்டு, மூவர் குழு ஒன்று, புதையலைத் தேடிச் செல்கிறது. செஞ்சியில் தொடங்கும் அந்தப் பயணம், மதுரை (கல் மலை), ராஜபாளையத்திலுள்ள இதய வடிவப்பாறை, தென்காசி எனப் பயணித்து கேரளாவின் கல்லார் (Kallar) மலைப்பகுதியில் முடிகிறது. புதையல் வேட்டையை மையமாகக் கொண்ட தமிழ்ப்படங்கள் அரிது. கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம். கதையை எழுதிப் படத்தைத் தயாரித்து இயக்கியதோடு நடித்தும் உள்ளார் கணேஷ் சந்திரசேகர். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது. பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோஃபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். அங்கே நிலவறையில் பழைய புராதனக் கலைப்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கே ஏதோ ஓர் அமானுஷ்யத்தை உணரும் சோஃபியா, ஓர் ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதைத் தொல்பொருள் ஆராய்ச்...