Shadow

இது புதிது

எண்ணித்துணிக விமர்சனம்

எண்ணித்துணிக விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு நகைக்கடைக் கொள்ளையில் மூன்று பேர் கொல்லப்பட, நாயகன் கொள்ளைக்காரர்களைத் தேடி அவர்கள் முன் நிற்கத் துணிகிறான். குற்றவாளிகளைத் தப்ப விடாமல் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பதை மீறி நாயகனிடம் ஒரு சாகச உணர்வு தொற்றிக் கொள்கிறது. ‘அவங்க முன்னாடி போய் நிற்கணும்’ என்ற தீர்மானத்துடன் உள்ளார். அப்பொழுது போலீஸ்? ஐடியில் வேலை செய்யும் நாயகன் அளவிற்குக் கூட விசாரணையை மேற்கொள்ளாமல் சுதாரிப்பின்றி உள்ளனர். அதிலும் அமைச்சர் ஒருவர், போலீஸுக்குப் பயங்கர குடைச்சல் தருகிறார். அமைச்சராக வைபவின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். முதல் பாதியில், காலில் வெந்நீர் ஊற்றியது போல் ஓர் அவஸ்தையோடு வருபவர், இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கிறார். அவரது ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும், தனது ஸ்க்ரீன் பிரசென்ஸால் மற்ற இருவரை விடத் தனித்துத் தெரிகிறார். கொள்ளைச் சம்பவத்தில் தன் கணவனை இழ...
பொய்க்கால் குதிரை விமர்சனம்

பொய்க்கால் குதிரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதிரவன் எனும் மையக் கதாபாத்திரத்திற்கு, ஒரு விபத்தில் முட்டி வரை இடது கால் போய்விடுகிறது. அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. தலைப்பு, அந்தச் செயற்கைக் காலைக் குறிக்கிறதே அன்றி, பொய்க்கால் குதிரை ஆட்டம் எனும் கலைக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. ஒரு தந்தை தன் மகளின் உயிரைக் காப்பதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார். அதனால் ஒரு கோடீஸ்வரியின் மகளைக் கடத்தி, தனது மகள் மகிழ்க்கு ஆப்ரேஷன் செய்யலாம் என முடிவெடுக்கிறார் கதிரவன். அவர் கடத்தும் முன், வேறு எவராலேயே அச்சிறுமி கடத்தப்பட, பழி கதிரவன் மேல் விழுகிறது. இரண்டு சிறுமிகளும் கதியும் என்னானது, கதிரவன் அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. ஒரு பெரும் நிறுவனத்தைக் கட்டியாளும் கோடீஸ்வரி ருத்ராவாக வரலட்சுமி சரத்குமார்க்கு மிடுக்கான கதாபாத்திரம். கதையோடு பொருந்தி வரும் பாத்திரம். அவர் சமயத்துக்குத் தக்கவாறு எ...
குலுகுலு விமர்சனம்

குலுகுலு விமர்சனம்

இசை விமர்சனம், இது புதிது, சினிமா
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படைப்பு. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட ஜானராகவே தன் படங்களைக் கொடுத்து வருகிறார். இம்முறை, மிகவும் மாறுபட்ட நகைச்சுவைப் படத்தை இயக்கி அசத்தியுள்ளார். அமேசான காடுகளில் வசிக்கும் ஓர் இனக்குழுவில் பிறந்த மாரியோ, பல நாடுகள் பயணித்து, பதிமூன்று மொழிகள் கற்று தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கை முழுவதும் பயணமும், அதனால பலவற்றைப் பற்றிய ஞானத்தினையுடைய மாரியோ, அனைத்தும் தெரிந்தவர் என்ற பெயரில் கூகுள் என அழைக்கப்படுகிறார். அதுவும் மழுவி குலுபாய் என்றும் அழைக்கப்படுகிறார். யாரெந்த உதவி கேட்டாலும் செய்யக் கூடியவரான குலுபாயிடம், கடத்தப்படும் தன் நண்பனைக் கண்டுபிடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பிரான்ஸில் இருந்து வரும் மதில்டா எனும் இளம்பெண்ணை, அவளது அண்ணன்மார் இருவர் கொலை செய்யத் துரத்துகின்றனர். தன் தம்பியை விடுவிக்க, க...
விக்ராந்த் ரோணா விமர்சனம்

விக்ராந்த் ரோணா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கும்மிருட்டில் நடக்கும் அமானுஷ்யமான மிஸ்ட்ரி த்ரில்லர் படம். கமரோட்டு எனும் ஊரில் காவல்துறை அதிகாரி இறந்து விட, புது அதிகாரியாக விக்ராந்த் ரோணா வருகிறார். அடுத்தடுத்து 16 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதன் மர்மத்தைத் துப்பு துலக்குகிறார் விக்ராந்த். படத்தின் முடிவில், முடிச்சுகள் அவிழும் வரையிலுமே ஒரு குழப்பமும், சின்ன அமானுஷ்யமும் நிலுவுகிறது. முப்பரிமாண (3டி) படமாக எடுக்கப்பட்டிருப்பதால், பகல் காட்சிகளும் கூட இருள் படர்ந்ததாகவே தெரிகிறது. படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை அது அளித்தாலும், முழுப் படத்தையும் இருட்டிலேயே பார்க்கும் உணர்வு சலிப்பை ஏற்படுத்துகிறது (9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு கோளாறான 3டி கண்ணாடி கிடைத்தால் அவரது நிலைமை இன்னும் மோசம்). சுருட்டு பிடித்துக் கொண்டே இருக்கும் கிச்சா சுதீப், அலட்சியமான கம்பீரத்துடன் விசாரணையைத் தொடங்குகிறார். ஆனால், மரணங்கள் தொடர்ந்தவண்ண...