Shadow

இது புதிது

மிஷன் இம்பாசிபிள்: ஆக்‌ஷன் ரெக்கோனிங்

மிஷன் இம்பாசிபிள்: ஆக்‌ஷன் ரெக்கோனிங்

இது புதிது
உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் க்ரூஸின் 'மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கோனிங்' படம் ஜூலை 14 ஆம் தேதி அன்று வெளியாகிறது. இந்தியாவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. பாராமெளன்ட் பிக்சர்ஸ், ஸ்கைடான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து டாம் க்ரூஸும் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.   இப்படத்தொடர், 1996 இல் தொடங்கி, அதன் 7 ஆவது பாகம் தற்போது 2023 இல் வெளியாகவுள்ளது. 'டெட் ரெக்கோனிங்' என்பது நகரும் பொருளின் இருப்பிடத்தை (Position) கணக்கீடு செய்யும் முறையைக் குறிக்கும் பதமாகும். முக்கியமாகக் கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் சொற்றொடராகும். இப்படத்தின் கதை, ப்ரூஸ் கெல்லரின் தொலைக்காட்சித் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் தொடர் படங்கள் எதுவுமே இதுவரை அக்ஷனில் ஏமாற்றியதில்லை. ட்ரெய்லரில் காணக்...
ஃபாஸ்ட் X விமர்சனம்

ஃபாஸ்ட் X விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“குடும்பம் தான் எல்லாம்” எனும் இப்படத் தொடரில் வரும் வசனங்கள், மற்ற படங்களில் வரும் பாத்திரங்கள் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தந்தையின் மரணத்திற்காகப் பழிவாங்க நினைக்கும் வில்லன் டான்டே, ‘உனக்குக் குடும்பம்தானே எல்லாம்!’ என டொமினிக்கின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் திட்டங்கள் தீட்டுகிறார். அதற்காக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஏஜென்சி உதவி கேட்பதாக நம்ப வைத்து, ரோமில் நடக்கும் வெடி விபத்துக்கு டொமினிக்கின் குழுவைப் பொறுப்பாளியாக்கி விடுகிறார் டான்டே. ஏஜென்சி, டொமினிக்கையும் அவரது குழுவையும் கைது செய்ய உலகம் முழுக்கத் தேட, டான்டேவைத் தேடிச் செல்கிறார் டொமினிக். டான்டேவிற்கு, டொமினிக்கின் மகன் லிட்டில் B இருக்கும் இடம் தெரிந்துவிட, அச்சிறுவனைக் கொல்ல விரைகிறார் டான்டே. டொமினிக்கால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. படம் முழுக...
யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'உலகிலுள்ள எல்லா ஊரும் நமது ஊரே; வையத்திலுள்ள அனைத்து மக்களும் நம் உறவினரே!' என்ற ஒப்பற்ற தத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பிய கணியன் பூங்குன்றனாரின் மிகப் பிரபலமான புறநானூற்றுச் செய்யுளின் முதல் வரியைத் தலைப்பாக்கி, பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தனர் படக்குழு.  இலங்கையில் இருந்தால் சில்லுகளின் (குண்டுகள்) வெடிப்பால் எந்நேரமும் இறக்கலாம் என அஞ்சி நடிகர் ராஜேஷ் சிறுவனாக இருக்கும் விஜய்சேதுபதியை லண்டன் அனுப்புகிறார். செல்லும் வழியில் சோதனைச் சாவடியில் அகப்படுகிறான் சிறுவன். அந்தச் சிறுவன், விஜய் சேதுபதியாக வளர்ந்து கொடைக்கானலில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு வருகிறார். அந்த தேவாலயத்துக்கு வரும் மேகா ஆகாஷோடு காதல் கொள்கிறார். தனது அடையாளத்தை மறைக்கிறார். இன்னொரு புறம் மகிழ் திருமேனி விஜய்சேதுபதியைக் கொல்ல வேண்டும் என அலைகிறார். இப்படி அலைபாயும் கதையின் இலக்கு என்ன என்பதை...
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான். பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஜெய்குமாருடன்  ஒன்றாக வளரும் நண்பர்கள், அவனது மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவ...
ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம் விமர்சனம்

ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவை, ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிளிக்ஸ் டேக் ஆன் சீஸர் (1999)’, ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: மிஷன் க்ளியோபட்ரா (2002)’, ‘ஆஸ்டெரிக்ஸ் அட் தி ஓலிம்பிக் கேம்ஸ் (2008)’ & ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: காட் சேவ் பிரட்டானியா (2012)’ ஆகும். இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம்’ எனும் ஐந்தாவது படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடிப் படமாக முதல்முறையாக இயற்றப்பட்டுள்ளது. தனது அம்மாவையும், தாய் நாட்டையும் காப்பாற்றித் தரும்படி, நீண்ட நெடிய பயணம் செய்து, ரோமப் பேரரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் ‘க...
ஃபர்ஹானா விமர்சனம்

ஃபர்ஹானா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஃபீஸ் ரூமில் இருந்து வகுப்பறைக்கு அறிக்கை வந்து, ஃபீஸ் கட்டாதவர்களின் பெயர் படிக்கப்பட்டுக் குற்றவாளிகள் போல் மாணவர்கள் எழுந்து நிற்க வைக்கப்படுவது என்பது மிகக் குரூரமான உளவியல் தாக்குதல். அத்தகைய தாக்குதல்களில் இருந்து தன் குழந்தைகளைப் பாதுகாக்க, ஃபர்ஹானா வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி., கொரோனா கால ஊரடங்குகள் என வாழ்க்கை, குறிப்பாக சிறு தொழிலில் ஈடுபட்டோரை நிலைகுலைய வைத்துள்ளது. அப்படி, செருப்புக் கடை வைத்துள்ள ஃபர்ஹானாவின் தந்தைக்கும் வருமானத்தில் இழப்பு நேரிடுகிறது. வங்கியின் பிபிஓ (BPO)-வில் வேலைக்குச் சேரும் ஃபர்ஹானாவிற்கு, ஓர் அவசரத் தேவைக்காகக் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கும் பொருட்டு, ஊக்கத்தொகை அதிகம் கிடைக்கும், அலுவலகத்திற்குள்ளேயே இயங்கும் வேறொரு பிரிவிற்குப் பணிக்குச் செல்கிறார் ஃபார்ஹானா. தனிமையில் வாடுபவர்கள் நட்பு...
இராவண கோட்டம் விமர்சனம்

இராவண கோட்டம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘மதயானைக் கூட்டம் (2013)’ படம் தந்த அனுபவத்தைப் பத்தாண்டுகளாகியும் மறக்க முடியாதளவு மிக நேர்த்தியாக நேட்டிவிட்டியுடன் இயக்கியிருந்தார் விக்ரம் சுகுமாரன். அந்தப் படம், ஹிந்தியில் ‘ராவன்பூர்’ என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பிற்காகச் சினிமா ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் மிக நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, ஒருவழியாக அவரது அடுத்த படைப்பான “இராவண கோட்டம்” திரையரங்கை எட்டிவிட்டது. ஏனாதி எனும் கிராமம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 16 கிராமங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நல்லவர் போஸ். அந்தக் கோட்டத்திலேயே, நல்லது கெட்டது அறிந்த ஒரே ஆள். அந்த ஏரியா சமஉ (MLA) கூட போஸைப் பார்த்தால் பம்முவார். போஸ், ஊர் ஒற்றுமையைக் காப்பாற்ற உயிரையும் கொடுப்பார்; ஊர் ஒற்றுமைக்குப் பாதகமென்றால் உயிரையும் எடுப்பார். ஆளுங்கட்சி...
குட் நைட் விமர்சனம்

குட் நைட் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாம் அன்றாடம் வாழ்வில் கடக்கும் தருணங்களை சிறந்த கலைப்படைப்பாக மாற்றும் சினிமாக்கள் மலையாளத்தில் தான் அடிக்கடி வரும் என்ற பிம்பத்தைத் தமிழ் சினிமா நொறுக்கத் துவங்கியுள்ளது. அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது குட்நைட் படம். படத்தின் கதைப்படி ஹீரோ மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அவரை அறியாமல் அவர் விடும் குறட்டைச் சத்தம் தன் வீட்டையும் தாண்டிக் கேட்கும் அளவிற்கு வலிமையுடையது. அந்தக் குறட்டைச் சத்தத்தால் அவரது அக/புற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை. எல்லா மனிதர்களோடும் நிச்சயமாக கனெக்ட் ஆகக் கூடிய கதை என்பதால் கதை மாந்தர்கள் அனைவருமே நமக்கு நெருக்கமாகி விடுகிறார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’ படத்தின் விஜய்சேதுபதியை சில இடங்களில் நினைவூட்டினாலும், அளவுக்கு அதிகமாகவே ரசிக்க வைக்கிறார் ஹீரோ மணிகண்டன். அவரது மச்சானாக வரும் ரமேஷ் தி...
சிறுவன் சாமுவேல் விமர்சனம்

சிறுவன் சாமுவேல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'முதல் கன்னியாகுமரி படம்' என்ற விளம்பரத்துடன், மே 12 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. குழந்தைகளின் அக உலகைப் பிரதிபலிக்கும் முதல் தமிழ்ப்படம் என்று கூட இப்படத்தை அடையாளப்படுத்தலாம்.   சிறுவன் சாமுவேல், ஒரு கிரிக்கெட் பேட் வாங்க ஆசைப்படுகிறான். அப்பா சவட்டி (மொத்தி) எடுக்க, சாமுவேல் மனம் நொறுங்குகிறது. ஐநூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட பந்தடிக்கும் மட்டை (Cricket bat) கிடைக்குமெனக் கேள்விப்படுகிறான். சாமம், தானம், பேதம் என்ற முதல் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றி, கார்டுகளைச் சேகரிக்க முயல்கிறான் சிறுவன் சாம். அவனது ஆசை பலித்து, அவனால் புது கிரிக்கெட் மட்டை வாங்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. பதினெட்டு நாளில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்திற்கு, லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் செய்துள்ளனர். வடக்கு கன்னியாகுமரியின் வட்டார வழக்கை 'டப் (Dub)' செய்வது கட...
இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கண்ணன் ரவி க்ரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் இளவரசு, “இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள். விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராகப் பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப் பெரிய வாழ்த்துகள். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்குத் தெரியும். தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான காரணங்களையும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர். ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கண்டிப்பாக இந்தப்...
“ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன்” – சாய் தரம் தேஜ்

“ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன்” – சாய் தரம் தேஜ்

இது புதிது
தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் 5 ஆம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'விரூபாக்‌ஷா’. இந்தத் திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ்ப் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ...
விரூபாக்‌ஷா – மிஸ்டிக் ஹாரர் த்ரில்லர்

விரூபாக்‌ஷா – மிஸ்டிக் ஹாரர் த்ரில்லர்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் 5 ஆம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'விரூபாக்‌ஷா’. இந்தத் திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ்ப் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ...
SISU விமர்சனம்

SISU விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதையின் களம் வடக்கு ஃபின்லாந்தில் லேப்லாந்து (Lapland) எனும் பகுதியில் நிகழ்கிறது. ஒரு ஃபின்லாந்து வீரன், 30 பேர் கொண்ட நாஜிப்படையை எதிர்கொள்கிறான். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன், இரண்டு விஷயங்கள் தெரிந்திருந்தால் படத்தைப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். முதலாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், 30 நவம்பர் 1939 முதல் 13 மார்ச் 1940 வரை, ரஷ்யாவைத் தனி ஆளாக எதிர்கொண்டது ஃபின்லாந்து. மூன்று மாதங்கள் நடந்த அப்போரின் பொழுது, குளிர் மைனஸ் 43° செல்ஷியஸில் வாட்டியதால், அப்போருக்கு ‘குளிர்காலப் போர் (Winter War)’ எனப் பெயரிடப்பட்டது. பின், இரண்டாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், ஃபின்லாந்தும் ஜெர்மனியும் தோளோடு தோள் சேர்ந்து, சோவியத் ரஷ்யாவை 1941 முதல் 1944 வரை எதிர்த்துப் போரிட்டது. செப்டம்பர் 1944 இல், ரஷ்யாவுடன் உடன்படிக்கை ஏற்பட்டு, ஜெர்மனியப் படைகளை ஃபின்லாந்து எல்லையை விட்டுத் துரத்தச் சம்மதிக்...
பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் இருந்த வீரபாண்டியனின் தலையைக் கொய்த குற்றவுணர்ச்சியும் ஆதித்த கரிகாலனை என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. யானையின் மொழி அறிந்தவர் என அருண்மொழி வர்மனைப் பற்றி கல்கி புகழ்ந்திருப்பார். அதை விஷுவலாக, இடைவேளையின் பொழுது ஜெயம்ரவிக்கான மாஸ் சீனாக மாற்றியிருப்பார் மணிரத்ன...
ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்

ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில், ஆஸ்கர் விருதினைப் பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண் - உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்தக் காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளி என்ற சாதனையும் படைத்திருக்கிறது. உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பதால் உலக நட்சத்திரமாக ஜொலிக்கும் ராம்சரண் மற்றும் அவரது அன்பும் அழகும் நிறைந்த மனைவி உபாசனா என இருவரும் வாழ்க்கையின் மிகச் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றான ஆஸ்கர் விருதிற்கு கலந்து கொள்ளும் தருணங்கள், இந்தக் காணொளியில் இடம் பிடித்திருக்கிறது. ஆஸ்கர் விருது நிகழ்வில் அவரது நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான 'நாட்டு நாட்டு..' எனும் பாடலுக்காக ஆஸ்கர் விருத...