32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 25 / 34
செய்திகள் வரிசை (பக்கம் 25)
வான் மூன்று விமர்சனம் இது புதிது

வான் மூன்று விமர்சனம்

வான் மூன்று. கவித்துவமான தலைப்பு. படத்தின் தலைப்பே கதையை சொல்கிறது.  காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு யுவன் யுவதி பார்க்கும் ஒரு வானம்,  40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், இந்த இணை பார்க்கும் இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து […]

08/08/2023 Inbaaraja
சான்றிதழ் விமர்சனம் இது புதிது

சான்றிதழ் விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருக்கும் கருவறை கிராமத்திற்கு சிறந்த கிராமத்திற்கான மத்திய அரசின் விருது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட, ஊர்மக்கள் அந்த விருதை ஜனாதிபதியே இங்கு வந்து தங்களுக்கு வழங்கவேண்டும், இல்லையென்றால் விருதைப் புறக்கணிப்போம் என்று கூறுகின்றனர். அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த மந்திரி காரணமே இல்லாமல், ‘என்னையே எதிர்க்கிறீர்களா? இருங்க உங்களைப் பழிவாங்குகிறேன்’ என்று வெளியேறி எந்த ஆணியையும் புடுங்காமல் இருக்க, காரணமேயில்லாமல் அவரின் கரை வேஷ்டி பிடுங்கப்பட, காரணமேயில்லாமல் […]

04/08/2023 Dinesh R
LGM விமர்சனம் இசை விமர்சனம்

LGM விமர்சனம்

தங்களுக்குள் காதல் ஒத்துவருமா என்று தெரிந்து கொள்ள 2 வருட அக்ரிமென்ட், கல்யாணம் செய்து மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ்வது ஒத்து வருமா என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ட்ரிப். இது தான் LGM இன் கதை. இந்தியக் கிரிக்கெட்டின் இன்றைய அடையாளமாகவும், சென்னையின் தவிர்க்கமுடியாத அடையாளமாகவும் மாறி இருக்கும் தல தோனியின் தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தோனியின் மனைவி ஷாக்ஷி தோனி தயாரித்திருக்கும் திரைப்படம் LGM என்பதால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. […]

28/07/2023 Dinesh R
டைனோசர்ஸ் விமர்சனம் இது புதிது

டைனோசர்ஸ் விமர்சனம்

படத்தின் பெயரைப் போலவே படக்கதையும் மிகப் பெரியது. ஒரு வரிக்குள் இதன் கதையை அடக்கவே முடியாது. டைனோசர்ஸ் எப்படி ஒரு புரியாத புதிரோ அப்படித்தான் டைனோசர்ஸ் (Die No Sirs) படத்தின் கதையும். நாயகன் மண்ணு-விற்கு ஒரு கதை, துரைக்கு ஒரு கதை, சாலயார்-க்கு ஒரு கதை, கிளியப்பனுக்கு ஒரு கதை, நாயகன் மண்ணுவின் அண்ணனுக்கு ஒரு கதை, நாயகி தீபாவுக்கு ஒரு கதை, மத்தியச் சிறையில் இருந்து வெளியான கைதிக்கு ஒரு கதை, இது போதாதென்று […]

26/07/2023 Dinesh R
எக்கோ விமர்சனம் இது புதிது

எக்கோ விமர்சனம்

நம்மிலிருந்து புறப்படும் ஒலிகள் சில நேரம் சென்று தேங்கவோ, பதுங்கவோ, கரைந்து போகவோ வழியின்றி வெற்றிடத்தில் பட்டு மீண்டும் நம்மிடமே திரும்பி வரும். அந்த எதிரொலியை ஆங்கிலத்தில் எக்கோ என்கிறோம். முதல் வாக்கியத்தில் இருக்கும் ஒலிகள் என்கின்ற வார்த்தையை எடுத்துவிட்டு வினைகள் என்று வார்த்தையை நிரப்பி அதே வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படித்தால் அது தான் இந்த எக்கோ படத்தின் ஒன்லைன். புதுமணத் தம்பதியாக தங்கள் மணவாழ்க்கையைத் துவங்கவிருக்கும் ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி இணைக்கு அதிர்ச்சி […]

21/07/2023 Dinesh R
கொலை விமர்சனம் இது புதிது

கொலை விமர்சனம்

விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை. பிரபல மாடலும் பாடகியுமான லைலா என்னும் பெண் பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அவளை கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தான் இந்தக் கொலை. இயக்குநர் பாலாஜி K. குமாரின் முந்தைய படமான ‘விடியும் முன்’ திரைப்படமே […]

21/07/2023 Dinesh R
பால் டப்பா பாடிய ‘மை நேம் இஸ் ஜான்’ இது புதிது

பால் டப்பா பாடிய ‘மை நேம் இஸ் ஜான்’

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் ‘மை நேம் இஸ் ஜான்’ பெப்பி பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்! கௌதம் வாசுதேவ் மேனனும், ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சியான்’ விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு மனம்’ இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வெற்றியைப் பெற்ற பிறகு, படக்குழு அவர்களின் இரண்டாவது […]

19/07/2023 Dinesh R
“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி இது புதிது

“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி

உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விஜய் ஆண்டனி. நடிகர் விஜய் ஆண்டனி, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா […]

19/07/2023 Dinesh R
கொலை – புலனாய்வு அதிகாரியாக ரித்திகா சிங் இது புதிது

கொலை – புலனாய்வு அதிகாரியாக ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங் தேர்ந்தெடுத்து நடித்து வரக் கூடியப் படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங், அவரது அடுத்து வெளியாக இருக்கும் ‘கொலை’ படம் குறித்து உற்சாகமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 21, 2023) வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங், “தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான […]

19/07/2023 Dinesh R
பாபா பிளாக் ஷீப் விமர்சனம் இது புதிது

பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

புட் சட்னி யூ-டியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகனும், ப்ளாக் ஷீப் யூ-டியூப் சேனல் குழுவினர் மொத்த பேரும் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாலோ என்னவோ மொத்த படமும் ஒரு யூ-டியூப் வீடியோ பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது. இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பது தான் பத்தின்ட கரு. ஆனால் இந்தக் கருத்தை சொல்வதற்கான கதையோ, திரைக்கதையோ […]

15/07/2023 Dinesh R
மாவீரன் விமர்சனம் இது புதிது

மாவீரன் விமர்சனம்

மண்டேலா என்னும் மகத்தான க்ளாசிக் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படம். டான், ப்ரின்ஸ் என தரை லோக்கல் அளவிற்கு காக்டெயில் கமர்ஷியல் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என இவர்கள் இருவரின் இணைவையும் ஒட்டு மொத்த திரையுலகு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ்நாடே உற்றுப் பார்த்தது. படம் மாஸாக வருமா, க்ளாஸாக வருமா என இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தான் மாவீரன். ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு சூப்பர் ஹீரோ […]

15/07/2023 Dinesh R
“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின் இது புதிது

“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’ ஆகும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் மற்றும் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த […]

11/07/2023 Dinesh R
இன்சிடியஸ்: தி ரெட் டோர் விமர்சனம் அயல் சினிமா

இன்சிடியஸ்: தி ரெட் டோர் விமர்சனம்

இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம். இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன. ஐந்தாவது பாகமான இப்படம், 2011 இலும், 2013 இலும் வெளிவந்த முதலிரண்டு படங்களின் தொடர்ச்சியாகும். டால்டன் லாம்பேர்ட் எனும் சிறுவனுக்கு இயற்கையாகவே தன் ஸ்தூல உடலில் (Physical body) இருந்து சூட்சும உடலைப் (Astral body) பிரித்து, சூட்சுமப் பயணம் (Astral projection) வல்லமை இருக்கும். அப்படி அவன் தனது 10 ஆவது வயதில் […]

09/07/2023 Dinesh R
Infinity விமர்சனம் இது புதிது

Infinity விமர்சனம்

முதல் காட்சியில் ஒரு பெண் எரித்து கொல்லப்படுகிறாள். அவளின் பெற்றோர் புகார் அளிக்க இரு நாட்கள் கழித்து வர, அந்த இனிய நன்நாளில் மேலும் இரண்டு கொலைகள் விழுவதோடு, இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார். வேறு வழியின்றி இந்த வழக்கு இரண்டே நாளில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ-ஆக வரும் நட்டி முதல்பாதி முழுக்க ஜீப்பில் சுற்றுவதும், கீழ்நிலை அதிகாரியா அல்லது பணியாளா என்று கூடத் தெரியாத ஒரு கதாபாத்திரத்திற்கு கட்டளைகள் பிறப்பிப்பதுமாக இருந்துவிட்டு, படத்தின் […]

07/07/2023 Dinesh R
ராயர் பரம்பரை விமர்சனம் இது புதிது

ராயர் பரம்பரை விமர்சனம்

பரம்பரை பரம்பரையாக நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான் ராயர் பரம்பரை திரைப்படத்தின் கதை. ஒரு முனையில் காதல் பிடிக்காத அப்பா, க மறுமுனையில் காதலிக்கும் மகள், சண்டை, பிரச்சனை, இறுதியில் சுபம். இதுதான் ராயர் பரம்பரை. பரம்பரைக்கே பழக்கப்பட்ட கதையாக இருப்பது ஒன்றும் ஆகப் பெரிய தவறில்லை. ஆனால் அந்தக் கதை சுவாரசியமும் இல்லாமல், உணர்வோடும் ஒன்றாமல், சிரிக்கவும் வைக்காமல் அலைக்கழிப்பதைத் தவிர்த்திருக்கவேண்டும். கதை வலுவில்லாமல் இருக்கும் போது, அதன் திரைக்கதையாவது வலுவாக நின்று கதையைத் […]

07/07/2023 Dinesh R