32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 24 / 34
செய்திகள் வரிசை (பக்கம் 24)
சூரகன் – பெண்ணைக் காப்பாற்றி பிரச்சனையில் சிக்குபவன் இது புதிது

சூரகன் – பெண்ணைக் காப்பாற்றி பிரச்சனையில் சிக்குபவன்

3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வழக்குரைஞரும் தயாரிப்பாளரும் நாயகனுமான கார்த்திகேயன், “சூரகன் ட்ரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்தப் படத்தில் வேலை […]

22/11/2023 Dinesh R
அவள் பெயர் ரஜ்னி – காளிதாஸ் ஜெயராமின் த்ரில்லர் படம் இது புதிது

அவள் பெயர் ரஜ்னி – காளிதாஸ் ஜெயராமின் த்ரில்லர் படம்

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். நடிகர் அஸ்வின் குமார், “விடாமுயற்சிக்கு ஒரு உதாரணம் இந்தத் திரைப்படம். அவ்வளவு உழைத்துள்ளோம். பைலிங்குவலாக இரண்டு மொழிகளில் பெரிய உழைப்பில், இப்படத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார். நடிகர் ரமேஷ் கண்ணா S, “சின்ன படங்கள் தயாரிப்பது வெளியிடுவது இந்தக் காலத்தில் […]

18/11/2023 Dinesh R
தி மார்வெல்ஸ் விமர்சனம் அயல் சினிமா

தி மார்வெல்ஸ் விமர்சனம்

லிட்டில் வுட்ஸ் (2018), கேண்டிமேன் (2021) ஆகிய படங்களை இயக்கிய நியா டகோஸ்டாவின் மூன்றாவது படம், ‘தி மார்வெல்ஸ்’ ஆகும். நியா, மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் முதல் கறுப்பினப் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றாற்போல், படத்தில் மூன்று பெண் சூப்பர் ஹீரோக்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம். சூப்பர் ஹீரோ படமென்றால், ஒரு பலமான சூப்பர் வில்லன் வேண்டும். ஆனால் அதி சூப்பர் வில்லனான தானோஸைத் தடுக்க, அத்தனை சூப்பர் ஹீரோக்களும் இணைய வேண்டியதாகி இருந்தது. அவெஞ்சர்ஸ்: […]

12/11/2023 Dinesh R
ஜப்பான் விமர்சனம் இது புதிது

ஜப்பான் விமர்சனம்

கடந்த வருடத்தின் தீபாவளி வெற்றியாளரான ‘சர்தார்’ படத்தின் நாயகனான கார்த்தியின் படமென்பதாலும், குக்கூ, ஜோக்கர் முதலிய படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜுமுருகனின் படமென்பதாலும், ஜப்பான் மீதோர் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இருநூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள், ராயல் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டுத் திருடப்பட்டுவிடுகின்றன. முதற்கட்ட விசாரணையில், கொள்ளை நடந்த பாங்கினைக் கொண்டு, கொள்ளையடித்தது ஜப்பான் என உறுதி செய்கின்றது காவல்துறை. ஜெகஜால கில்லாடியான ஜப்பானைக் காவல்துறையால் பிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. கங்காதரராக ஜித்தன் […]

10/11/2023 Dinesh R
ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம் OTT

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’, ‘அகண்டா‘ முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் ‘ஹமாம்’ சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு […]

05/11/2023 Dinesh R
கூழாங்கல் விமர்சனம் OTT

கூழாங்கல் விமர்சனம்

வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர். பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் […]

05/11/2023 Dinesh R
“இந்திய வரலாற்றைச் சொல்லும் உலக சினிமா” – சீயான் விக்ரம் | தங்கலான் இது புதிது

“இந்திய வரலாற்றைச் சொல்லும் உலக சினிமா” – சீயான் விக்ரம் | தங்கலான்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், “எனக்கு மிக முக்கியமான, வித்தியாசமான படம் […]

01/11/2023 Dinesh R
எழுத்தாளர்களை மதிக்கும் பா. ரஞ்சித் | தங்கலான் இது புதிது

எழுத்தாளர்களை மதிக்கும் பா. ரஞ்சித் | தங்கலான்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. படத்தொகுப்பாளர் R.K. செல்வா, “என் கரியரில் இது மிக […]

01/11/2023 Dinesh R
“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான் இது புதிது

“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித், “டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என […]

01/11/2023 Dinesh R
விக்ரமுக்காக, சூர்யா தொடங்கிய ஸ்டுடியோ | தங்கலான் இது புதிது

விக்ரமுக்காக, சூர்யா தொடங்கிய ஸ்டுடியோ | தங்கலான்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, […]

01/11/2023 Dinesh R
‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும் இது புதிது

‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

“வாழ்த்துகள் (2008) படம் தோல்வி அடைந்ததற்கு என்னுடைய திமிர்த்தனம்தான் காரணம். என் தாய்மொழி தமிழிலேயே எல்லா உரையாடலும் எழுதணும்னு நினைச்சேன். அதுக்கு வருத்தப்படுறேன். இந்த இனத்தில் பிறந்ததற்கு, பெருமையடையுறேன். அதே சமயம் சிறுமையும் அடையுறேன். ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வேண்டிய இடத்தில் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ எனச் சொல்வது நெருடலாக இருக்குன்னு விமர்சனம் எழுதுறாங்க. காசி அண்ணனிடம் சொன்னேன். அன்பைக் கூட தாய்மொழியில் பரிமாறிக் கொள்ளாத ஓர் இனம் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்று கேட்டார். தமிழர்களுக்குத் […]

26/10/2023 Dinesh R
பாட்னர் விமர்சனம் இது புதிது

பாட்னர் விமர்சனம்

பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, […]

29/08/2023 Inbaaraja
King of Kotha விமர்சனம் இது புதிது

King of Kotha விமர்சனம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் (1996) காலகட்டத்தில் கோதா என்னும் ஊரைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சில கூட்டங்களுக்கு இடையேயான யுத்தமும், ஒட்டு மொத்த கூட்டத்தையும் துடைத்துத் தூக்கிப் போட நினைக்கும் காக்கிச் சட்டைகளின் காய் நகர்த்துதலுக்கும் இடையேயான அன்பும் நட்பும் காதலும் ஏமாற்றமும் துரோகமும் வயோதிகமும் இரத்தமும், இதனோடு பெண்களின் அரசியலையும் உள்ளடக்கியது தான் ‘கிங் ஆஃப் கோதா’வின் கதை. கோதா என்னும் ஊர் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதான கார்ட்டூன் கதை சொல்லலுடன் […]

25/08/2023 Dinesh R
அடியே விமர்சனம் இது புதிது

அடியே விமர்சனம்

பள்ளிக்காலத்தில் தன்னோடு பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்ல எத்தனிக்கும் நாயகனின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக திசை மாறிப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து விரக்தியின் உச்சத்தில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணியும் தருணத்தில் நாயகி இன்னும் தன் நினைவுகளோடு இருப்பது தெரிய வர, தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக நினைக்கும் நாயகன், நாயகியைச் சந்தித்து தன் காதலை சொல்ல முனைகிறான். அதற்கு இடையில் நடக்கும் குழப்பங்களை மீறி நாயகனின் காதல் வெற்றி பெற்றதா என்கின்ற […]

25/08/2023 Dinesh R