32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 29 / 34
செய்திகள் வரிசை (பக்கம் 29)
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம் இது புதிது

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

ஷங்கர் எனும் முரட்டு சிங்கிளிற்கும், சிம்ரன் எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் செயலிக்குமான ரிலேஷன்ஷிப்பைப் பற்றிப் பேசுகிறது படம். அத்தகைய பந்தம் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை. எந்திரன் படத்தில், சிட்டி ரோபாவிற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வரும், இங்கே மிர்ச்சி ஷிவா மீது உருவமற்ற செயலியான சிம்ரனிற்குக் காதல் வருகிறது. சிம்ரன் என்பது மொபைலில் இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒரு செயலியின் (App) பெயர். ஷங்கர் என்பவன் உணவினை டெலிவரி செய்யும் […]

24/02/2023 Dinesh R
சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி’ இது புதிது

சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி’

ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இந்தப் படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்தப் […]

21/02/2023 Dinesh R
இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை அயல் சினிமா

இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்தக் கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் […]

02/02/2023 Dinesh R
துணிவு விமர்சனம் இது புதிது

துணிவு விமர்சனம்

‘யுவர் வங்கி’க்குள் நுழைந்து துணிகர கொள்ளையில் ஈடுபடுகிறார் டார்க் டெவில் எனும் சர்வதேசக் குற்றவாளி. ஆனால் டெவிலின் நோக்கம், பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமன்று எனப் புரிந்து கொள்கிறார் டிஜிபி தயாளன். டார்க் டெவில் யார், அவரது நோக்கமென்ன என சுவாரசியமாகக் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத். பத்திரிகையாளர் மைபாவாக வரும் மோகனசுந்தரம் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை உதாசீனப்படுத்திவிட்டு, நொடியில் பத்து லட்சம் பணம் பார்க்கும் அவரது சந்தர்ப்பவாதத்தின் மூலமாக, மீடியாவின் இன்றைய […]

11/01/2023 Dinesh R
வாரிசு விமர்சனம் இது புதிது

வாரிசு விமர்சனம்

தொழிலதிபர் ராஜேந்திரன் பழனிச்சாமிக்கு, ஜெய், அஜய், விஜய் என மூன்று மகன்கள். தனது தொழில் வாரிசாக அவர் எந்த மகனை நியமிக்கப் போகிறார் என முடிவெடுக்கக் கதையில் எழு வருடமும், படத்தில் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறார் ராஜேந்திரன். ராஜேந்திரனின் மகுடம் அவரது இளைய மகன் விஜய் ராஜேந்திரனிடம் போகிறது. பிளவுப்படும் குடும்பத்தையும், ராஜேந்திரன் எழுப்பிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், விஜய் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு நாயகன் மாஸாகவோ, பாஸாகவோ […]

11/01/2023 Dinesh R
காலேஜ் ரோடு விமர்சனம் இது புதிது

காலேஜ் ரோடு விமர்சனம்

கல்வியென்பது நமது தேவையன்று; அது ஒவ்வொருவரின் உரிமை என்பதை கமர்ஷியலுடன் சொல்லியுள்ளது காலேஜ் ரோடு திரைப்படம். சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ள லிங்கேஷ், அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ், வங்கிக் கொள்ளைச் சம்பவங்களுடன் எப்படி தொடர்புப்படப்படுகிறார் என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணமென்ன என்பதையும், […]

31/12/2022 Dinesh R
உடன்பால் விமர்சனம் OTT

உடன்பால் விமர்சனம்

ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம். பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், […]

28/12/2022 Dinesh R
நெடுநீர் விமர்சனம் இது புதிது

நெடுநீர் விமர்சனம்

நெடுநீர் என்றால் கடல் எனப் பொருள்படும். கடலூரைக் கதைக்களமாகக் கொண்ட படம் என்பதால் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. கதையின் நிகழ்வும் கடலும், கடல் சார்ந்த பகுதிகளிலுமே நடக்கிறது. தனது தந்தையிடம் இருந்து சிறுமியான அமுதாவைக் காப்பாற்ற, அப்பாவைத் தாக்கிவிட்டு அமுதாவுடன் ஓடி விடுகிறான் சிறுவன் கருப்பசாமி. இருவரும் பிரிந்துவிட, இளைஞனாகும் கருப்பு பல குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான். பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளும் கருப்பைக் கொலை செய்ய, தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்படும் பொழுது, அமுதாவின் கண்களில் விழுகிறான். கொலைகாரனாக உருமாறி […]

25/12/2022 Dinesh R
பேய காணோம் விமர்சனம் இது புதிது

பேய காணோம் விமர்சனம்

படாதபாடுபட்டு ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, படமொன்றை இயக்கச் செல்கிறார் செல்வ அன்பரசன். அங்கே நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களால், அதுவரை எடுக்கப்பட்ட படம் அனைத்தும் வினோதமான முறையில் மறைந்துவிடுகிறது. காணாமல் போன ஒரு பேய்தான் அதற்கு காரணமான தெரிய வருகிறது. பேயைக் கண்டுபிடித்துப் படத்தை முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பேயாக மீரா மிதுன் நடித்துள்ளார். ஒப்பனை கலைஞருக்கு யார் மீது என்ன கோபமோ என்ற எண்ணத்தை எழுப்பும் வண்ணம், மீரா மிதுனிற்கான ஒப்பனை அமைந்துள்ளது. நாயகனாக […]

24/12/2022 Dinesh R
லத்தி விமர்சனம் இது புதிது

லத்தி விமர்சனம்

கான்ஸ்டபிள் முருகானந்தம், ஹாலிவுட் ஹீரோவிற்கு இணையாக ஒரு மிஷனைக் கையிலெடுத்துச் சாதித்து முடிக்கிறார். சஸ்பெண்டில் இருக்கும் முருகானந்தத்திற்கு, அவரது லத்தி சார்ஜ் திறமைக்காக மீண்டும் வேலை கிடைக்கிறது. ‘இனி லத்தியால் யாரையும் அடிப்பதில்லை’ எனத் தீர்மானிக்கும் முருகானந்தம், அதன் பின் சுமார் நூற்றைம்பது பேரை அடி வெளுக்கிறார். சரியாகச் சொல்வதனால், என்கவுன்ட்டர் செய்வதை ஹீரோயிசமாகக் கருதும் கோலிவுட்டின் சூப்பர் காப்பாகவே மாறிவிடுகிறார். நர்ஸ் கவிதாவாக வரும் சுனைனாவின் தேர்ந்த நடிப்பால், படத்தின் முதற்பாதி அழகாகிறது. நன்றாக நடிக்கும் […]

24/12/2022 Dinesh R
ஜாஸ்பர் விமர்சனம் இது புதிது

ஜாஸ்பர் விமர்சனம்

தமிழில் வந்திருக்கும் முதல் ஹிட்மேன் படமென பட நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளனர். அடிதடி என வாழும் ஜாஸ்பர், போலீஸ்க்கு உதவும் ஒரு ஹிட்மேனாக உருமாறி வேட்டையாடுகிறான். அவன் குடும்பத்தை இழந்ததும் அனைத்தையுன் விட்டுத் தலைமறைவாகி விடுகிறான். ஜாஸ்பர் கிழப்பருவம் எய்தி முதுமையை அடையும் தருவாயில் உள்ள பொழுது, அவனது பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் கடத்தப்படுகிறான். அந்த இளைஞனை மீட்க மீண்டும் ஹிட்மேனாக மாறுகிறான் ஜாஸ்பர். குடித்துக் குடித்து தன்னைச் சீரழித்துக் கொள்ளும் ஜாஸ்பரால், பக்கத்து வீட்டு இளைஞனைக் கண்டுபிடித்துக் […]

23/12/2022 Dinesh R
என்ஜாய் விமர்சனம் இது புதிது

என்ஜாய் விமர்சனம்

A சான்றிதழ் பெற்றுள்ள படம். கல்லூரி முடித்த மூன்று இளைஞர்களையும், கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளையும் சுற்றிப் படத்தின் கதை நடக்கிறது. இளைஞர்களின் வாலிப பொழுதுபோக்கு ஒரு பக்கம்; உடுத்தும் உடையாலும், உபயோகப்படுத்தப்படும் கம்மி விலை கைப்பேசியாலும் அல்ட்ரா மாடர்ன் பெண்களால் இளக்காரமாக நடத்தப்படும் மிடில் கிளாஸ் & மெரிட் மாணவிகளின் மன இறுக்கமும், அவர்களது ஆடம்பர வாழ்விற்கான ஏக்கமும் ஒரு பக்கம் என இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. முதற்பாதி படத்தின், தூக்கலான இரட்டை […]

22/12/2022 Dinesh R
கனெக்ட் விமர்சனம் இது புதிது

கனெக்ட் விமர்சனம்

மாயா, கேம் ஓவர் முதலிய படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள பேய்ப்படம். ரெளடி பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். ஆன்னாவின் தந்தையான மருத்துவர் ஜோசஃப், கொரோனா காலத்தில் இறந்து விட, தன் தந்தையுடன் பேசவேண்டுமென்ற ஆசையில் ஒயிஜா போர்டின் உதவியோடு, ஆவியுலகத்தைத் தொடர்பு செய்ய முயல்கிறார். அந்தத் தொடர்பை உருவாக்கும் முயற்சி தவறுதலாகி (Wrong connection), தீங்கு விளைவிக்கும் கடவுளுக்கெதிரான சாத்தான் ஆன்னாவின் உடலில் ‘கனெக்ட்’ ஆகி விடுகிறது. அந்த சாத்தான் தனியாக […]

22/12/2022 Dinesh R
கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம் இது புதிது

கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

சிலோன் வானொலியின் B.H.அப்துல் ஹமீது எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ எனும் நூல், டிசம்பர் 18 ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை JMR Events கவனித்துக் கொள்ள, நிகழ்ச்சியை வழங்கியது பிளாக் ஷீப் டிவி. […]

19/12/2022 Dinesh R
“மான் வேட்டை: ஸ்ரீகாந்த் தேவாவின் சிறப்பான இசை” – ரமேஷ் கண்ணா இது புதிது

“மான் வேட்டை: ஸ்ரீகாந்த் தேவாவின் சிறப்பான இசை” – ரமேஷ் கண்ணா

அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் “மான் வேட்டை” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 14 ஆம் தேதி அன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. நடிகர் ரமேஷ் கண்ணா, “இந்தப் படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் […]

16/12/2022 Dinesh R