Shadow

Tag: உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் விமர்சனம்

மாமன்னன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ...
சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை, நடிகரும், தமிழ்த் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவ...
மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகரும் தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் க்ளாப் அடித்துத் துவக்கி வைத்தார். தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் ...
கலகத்தலைவன் விமர்சனம்

கலகத்தலைவன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வஜ்ரா எனும் பன்னாட்டுப் பெருநிறுவனத்தின் ரகசியங்கள் கசிந்தவண்ணம் உள்ளன. தகவல் கசிவின் பின்னணியில் யார் உள்ளார்கள் என துப்பறிய, அர்ஜுன் எனும் வேட்டையாளைக் களம் இறக்குகிறது வஜ்ரா நிறுவனம். அர்ஜுன் ஒவ்வொரு நூலாகப் பிடித்து திருமாறனிடம் வந்து சேருகிறான். யார் இந்த திருமாறன், ஏன் வஜ்ராவை அழிக்க அவன் போராடுகிறான் என்பதே படத்தின் சுவாரசியமான கதை. வழமை போல் மகிழ் திருமேனியின் மாயம் செய்யும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது. எட்டு வருடத் திட்டமிடலுக்கான நோக்கம், ஒரு பழி வாங்கும் கதையெனக் கடைசியில் சுருக்கியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், படம், அரசு நிறுவனங்கள் தனியார்மயமாவதன் ஆபத்துகள் குறித்தும், அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் வேலையின்மை குறித்தும் நுணக்கமான விவரணைகளை அளிக்கிறது. அப்படி ஒரு பெரும் பொருளாதாரக் குற்றத்தைப் படம் அம்பலப்படுத்தப் போகிறதோ என்ற தோற்றத்தை எழுப்பி, தனிமனித...
“இந்திக்கு எஸ்; இந்தித் திணிப்புக்கு மட்டுமே நோ” – உதயநிதி ஸ்டாலின் | லால் சிங் சத்தா

“இந்திக்கு எஸ்; இந்தித் திணிப்புக்கு மட்டுமே நோ” – உதயநிதி ஸ்டாலின் | லால் சிங் சத்தா

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ஆமிர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. ஆமிர்கான் ப்ரொடக்ஷன்ஸ், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் ஆமிர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். ஃபாரஸ்ட் கம்ப் எனும் ஆங்கிலப் படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது...
பேப்பர் ராக்கெட் – ட்ரைலர் வெளியீட்டு விழா

பேப்பர் ராக்கெட் – ட்ரைலர் வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது. மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்தத் தொடர் உருவாகியுள்ளது. கடையிறுதி நோயால் (Terminal disease) பாதிக்கப்பட்ட நால்வர்கள் இணைந்து மேற்கோள்ளும் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர் இது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் ட்ரைலர் வெளியீட்டு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இயக்குநர் கிருத்திகா உதயநிதி, “பேப்பர் ராக்கெட் என் இதயத்திற்கு நெருக்கமான தொடர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளது. படக்குழுவில் இணைந்த சினிமாவின் பெரிய நட்சத்திரங்களுடன், இந்த பேப்...
நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், மேயாத மான் படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. ஜூலை 29 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு, ஜூலை 22 அன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “நான் வேலை பார்த்த படங்களில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்தப் படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனது இண்டிபெண்ட...
“விக்ரம்: 100% அளிக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட்” – அஜய் ஞானமுத்து | கோப்ரா

“விக்ரம்: 100% அளிக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட்” – அஜய் ஞானமுத்து | கோப்ரா

சினிமா, திரைச் செய்தி
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடையச் செய்தனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து, “நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி அவர்களிடமிருந்து தான், முதன் முதலில் ஊதியம் பெற்றேன். தற்போது ‘கோப்ரா’ படத்தை அவர் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நாயகனான சீயான் விக்ரம் அவர்களைச் சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாகக் கேட்டார். படப்பிடிப்புத் தளத்தில் நா...
நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

சினிமா, திரைச் செய்தி
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் & பேவியூ ப்ராஜெக்ட்ஸுடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தைச் சாடும் ஓர் அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 ஆவது நாளைப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர். முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பரிசுகள் அளி...
நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆர்டிகள் 15 எனும் ஹிந்திப் படத்தைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு, மிக நேர்த்தியாக மூலத்தின் சாரம் குறையாமல் கொடுத்துள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜா. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் என்றில்லாமல், சில காட்சிகளைத் தவிர்த்தும், உதயநிதி ஸ்டாலினின் அரசியலுக்கு பலம் சேர்க்கும் காட்சிகளைச் சேர்த்தும், நெஞ்சுக்கு நீதியைத் தூக்கி நிலைநிறுத்தியுள்ளனர். விஜயராகவன் ஐ.பி.எஸ்., பொள்ளாச்சி வட்டத்திலுள்ள கிராமப்பகுதிக்கு மாற்றலாகி வருகிறார். இரண்டு தலித் சிறுமிகளைக் கொன்று மரத்தில் தூக்கில் போட்டுத் தொங்க விட, அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார் விஜயராகவன். அரசியல் செல்வாக்குள்ள மனிதர்களின் குறுக்கீடுகளைத் தாண்டி, எப்படிக் குரலற்றவர்களுக்கு விஜயராகவன் நீதி வாங்கித் தருகிறார் என்பதே படத்தின் கதை. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஐயராக சுரேஷ் சக்கரவர்த்தி கலக்கியுள்ளார். அவரது போலியான பணிவும், அச்சுறுத்தும் நயவஞ்ச...
கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

சமூகம், சினிமா, மற்றவை
கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார். ஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் குழுவிடம் பேசி தேதிகளை மாற்றும்படி கேட்டுள்ளார். ஆக, இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினும், இப்படம் ஆஃபிஷியலாக 'கொடியன்குளம் கலவரம்' பற்றிய வரலாற்றுப்படம் தானென்று பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில், கொடியன்குளத்தின் மீது, சசிகலாவினுடைய நேரடி கட்டளைக்கிணங்க நிகழ்ந்த அரச பயங்கரவாதத் தாக்குதலை, காவல்து...
சைக்கோ விமர்சனம்

சைக்கோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கண் பார்வையற்ற காதலனின் கண் எதிரே அவரது காதலி, சைக்கோ கொலைகாரனால் கடத்தப்படுகிறார். காதலியை மீட்க நாயகன் போராடி எழுவது தான் இப்படத்தின் கதை. படத்தின் முதல் ஜீவன் இளையராஜா தான். அவரின் இசை இன்றி இப்படத்தோடு நிச்சயம் ஒன்ற முடியாது என்பது உறுதி. அடுத்து ரன்வீரின் அட்டகாசமான ஒளிப்பதிவு. இவை இரண்டும் தான் சைக்கோவின் கடவுள்கள். பெண்களின் தலையை வெட்டும் வித்தியாச சைக்கோ, கண்பார்வையற்ற ஹீரோ, வீல்சேரில் அமர்ந்தும் சிங்கமாக கர்ஜிக்கும் கதையின் நாயகி, ஒரே ஆடையில் ஒரே அறையில் தேங்கிக்கிடக்கும் கதாநாயகி, எந்தத் துக்கத்திலும் பாட்டுப் பாடும் காவல் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிஷ்கினின் தனித்துவ வார்ப்பு. ஆனால் யாருடைய கதாபாத்திரமும் வலிமையாக எழுதப்படவில்லை. அதனால் அவர்களுக்கு நேரும் சுக துக்கங்களில் நம்மால் பங்கெடுக்க முடியவில்லை. இது, சைக்கோவில் உள்ள ஆகப்பெரும் பிரச்சனை. முன்பாதி மெதுவாகச்...
கண்ணே கலைமானே விமர்சனம்

கண்ணே கலைமானே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து, அதே பாணியிலான கதையைக் கையிலெடுத்துள்ளார் சீனு ராமசாமி. இம்முறை இன்னும் மென்மையான கிராமத்து டோனில். சோழவந்தான் வள்ளலான கமலக்கண்ணனுக்கு, வங்கி மேலாளரான பாரதி மீது காதல் எழுகிறது. அக்காதலுக்குக் கமலக்கண்ணனின் அப்பத்தா அழகம்மாள் சிவப்புக் கொடி காட்ட, கமலக்கண்ணனுடைய செயற்பாடுகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. புது மேலாளரை பூமாலையுடன் வரவேற்கும் வினோத வழக்கம் கொண்ட வங்கியாக உள்ளது மதுரா கிராம வங்கி. அவ்வங்கியின் மேலாளர் பாரதியாக தமன்னா நடித்துள்ளார். இது அவரது 50வது படம். தர்மதுரையிலும் சரி, இப்படத்திலும் சரி, கவர்ச்சிக்காக என நேர்ந்து விடாமல் தமன்னாவைக் கதையின் நாயகியாக சீனு ராமசாமி படைத்துள்ளார். படத்தலைப்பில் வரும் கலைமான் தமன்னாவையே குறிக்கும். தமன்னாக்கு இருக்கும் அழுத்தமான பாத்திரம் கூடக் கமலக்கண்ணனாக நடித்திருக்கும் உதயநிதிக்கு இல்லை. அதனாலே என்னவோ,...
“கமலகண்ணனாகிய நான்..” – கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின்

“கமலகண்ணனாகிய நான்..” – கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின்

சினிமா, திரைச் செய்தி
"இதற்கு முன்பு, என் பல படங்களின் பல பத்திரிகையாளர் சந்திப்பில், 'இது ஒரு நல்ல படம்' என மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லியிருக்கேன். ஆனால் இன்று இது ஒரு நல்ல படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவருக்கும் நான் நன்றியைக் கூறுகிறேன். ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர், கலை இயக்கநர் என ஒவ்வொருவரும் மிகச் சிறந்த விஷயங்களை அளித்திருக்கிறார்கள். என் குழந்தை பருவ தோழியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வசுந்தரா நடித்திருக்கிறார், மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறை சீனு ராமசாமி சார் படங்களில் தமன்னா நடிக்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் பெண்களைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். பாரதி கதாபாத்தி...
கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
பிப்ரவரி 22ஆம் தேதி, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான 'கண்ணை நம்பாதே' பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியது. சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்தை "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் மு.மாறன் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் தனது முதல் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திலேயே தனது திறமைகளைக் காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்தப் படத்தில் தற்போது க்ரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். "என் முதல் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர...