Shadow

Tag: கார்த்தி

”சூது கவ்வும்” நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் புதிய படம்

”சூது கவ்வும்” நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் புதிய படம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூ...
நடிகர் கார்த்தி திறந்து வைத்த ‘லா வில்லா’  ரெஸார்ட் .

நடிகர் கார்த்தி திறந்து வைத்த ‘லா வில்லா’ ரெஸார்ட் .

சினிமா, திரைச் செய்தி
வேகமான உலகத்தில், அதிவேகமாக பயணிக்கும் மக்கள் இலைப்பாறுவதற்காக விடுமுறை நாட்களை கழிக்க, தேடிச் செல்லும் ரிசார்ட் போன்ற இடங்கள், ஆரவாரம் நிறைந்த, மன அமைதியை கெடுக்கும் இடங்களாக மாறி வரும் நிலையில், அமைதியான சூழல், அழகிய நிலப்பரப்பு, ஆரோக்கியமான உணவு, செயற்கைத்தனமற்ற இயற்கை வாழ்க்கை அனுபவத்தை அளிக்கும் ஒரு அருமையான வில்லா சென்னை அருகே திறக்கப்பட்டுள்ளது.இயற்கை அழகின் சரியான கலவையாகவும், கிராமத்து வாழ்க்கையின் அனுபவத்தை கொடுக்கும் ஒரு அமைதியான தளமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள ‘லா வில்லா’ (Laa Villa) மகாபலிபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள கடம்பாடி ஊரில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.வழக்கமான ரிசார்ட் மற்றும் வில்லாக்கள் போல் இல்லாமல், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வில்லாவில் மொத்தம் மூன்று காட்டேஜ்கள் உ...
ஜப்பான் விமர்சனம்

ஜப்பான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கடந்த வருடத்தின் தீபாவளி வெற்றியாளரான ‘சர்தார்’ படத்தின் நாயகனான கார்த்தியின் படமென்பதாலும், குக்கூ, ஜோக்கர் முதலிய படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜுமுருகனின் படமென்பதாலும், ஜப்பான் மீதோர் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இருநூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள், ராயல் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டுத் திருடப்பட்டுவிடுகின்றன. முதற்கட்ட விசாரணையில், கொள்ளை நடந்த பாங்கினைக் கொண்டு, கொள்ளையடித்தது ஜப்பான் என உறுதி செய்கின்றது காவல்துறை. ஜெகஜால கில்லாடியான ஜப்பானைக் காவல்துறையால் பிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. கங்காதரராக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். படத்தின் அசுவராசியத்திற்குக் காரணம், கங்காதரர் போல் முழுமை பெறாத கதாபாத்திரங்களே காரணமாகும். பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஜித்தன் ரமேஷைக் கூட சரியாகப் பயன்படுத்தாதது, திரைக்கதையின் பலவீனத்துக்கு அச்சாரம் இட்டுள்ளது. ‘அண்ணாமலை...
‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 'மார்கழி திங்கள்'  திரைப்படத்தின்  வாயிலாக  நடிகர்  மனோஜ் பாரதிராஜா இயக்குநராக  அறிமுகம்  ஆகிறார்.  இப்படத்தில்  மிகவும்  முக்கியமான  ஒரு கதாபாத்திரத்தில்  'இயக்குநர்  இமயம்'  பாரதிராஜா  நடிக்க,  ஷியாம் செல்வன்,  ரக்ஷனா,  நக்ஷா சரண்  முதன்மை  வேடங்களில்  நடிக்கின்றனர்.இப்படத்திற்காக  31 ஆண்டுகளுக்குப்  பிறகு  பாரதிராஜாவும்  இசைஞானி இளையராஜாவும்  இணைந்துள்ளனர்.  'மார்கழி  திங்கள்'  திரைப்படத்தின் டிரைலர்  மற்றும்  இசை  வெளியீட்டு  விழா  சென்னையில்  நேற்று நடைபெற்றது.  நிகழ்ச்சியின்  முக்கிய  அம்சங்கள்  வருமாறு:வரவேற்புரை வழங்கிய  சுசீந்திரன்  பேசியதாவது...இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை  ஒன்று  சேர்த்து  படம்  தயாரிப்பது  மிகவும் சந்தோஷமாக  உள்ளது....
பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் இருந்த வீரபாண்டியனின் தலையைக் கொய்த குற்றவுணர்ச்சியும் ஆதித்த கரிகாலனை என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. யானையின் மொழி அறிந்தவர் என அருண்மொழி வர்மனைப் பற்றி கல்கி புகழ்ந்திருப்பார். அதை விஷுவலாக, இடைவேளையின் பொழுது ஜெயம்ரவிக்கான மாஸ் சீனாக மாற்றியிருப்பார் மணிரத...
சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

சினிமா, திரைச் செய்தி
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழகத் தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி.கே.எம். தமிழ்குமரன், ''பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து கை...
சர்தார் விமர்சனம்

சர்தார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மக்களுக்கு அலெர்ட் கொடுக்கும் ஒரு விஷயத்தை எடுத்து, அதை டீடெய்லாக அலசி அதில் கமர்ஷியல் சேர்த்து ஒரு பேக்கேஜிங்காக சர்தாரைக் கொடுத்துள்ளது மித்ரன் - கார்த்தி கூட்டணி. காவல்துறையில் பணியாற்றும் கார்த்தி ஓர் விளம்பரப்பிரியர். அவரது தந்தை சர்தார் ஒரு தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில், சர்தாரின் பெயரை வைத்து பல அரசியல் நடக்கிறது. மேலும் ஒரே நாடு ஒரே பைப்லைன் என தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் பயன்பாட்டு நீரையும் எடுத்துக் கொண்டு அதன் மூலமாக கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிறார் ஓர் அதிகார மட்ட வில்லன். அந்த வில்லனுக்கும் சர்தாருக்குமான லிங்கை லைலா ஓப்பன் செய்ய, கார்த்தி அதை ஃபாலோ செய்ய, அடுத்தடுத்து என்ன என்ற சுவாரசியத்துடன் பயணிக்கிறது படம் தான் ஏற்கும் வேடங்களுக்கு உடல்ரீதியாக நியாயத்தைச் செய்வதில் வல்லவர் கார்த்தி. இரு கதாபாத்திரங்களின் தன்ம...
விருமன் விமர்சனம்

விருமன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஏழு வருடங்களிற்குப் பிறகு, கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் இயக்குநர் முத்தையா. அடித்து வெளுக்கும் நாயகன், குலச்சாமியாக ஒரு பெண் கதாபாத்திரம், தறிகெட்டு திரியும் வில்லன் என்ற தனது டெம்ப்ளட்டிற்குள் விருமனையும் அடைத்துள்ளார். தனது தாயின் மரணத்திற்குத் தந்தை முனியாண்டி தான் காரணமென்ற எண்ணம், சிறுவன் விருமனின் மனதிலே ஆழமாகப் பதிகிறது. சாகும் முன், விருமனிடம், பணத்தை விட உறவுகள் புடை சூழ வாழ்வதே சிறந்தது என தந்தைக்கு உணர்த்தும்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார் அவனது அம்மா முத்துலக்ஷ்மி. சுயநலத்தையும் அகங்காரத்தையும் ஆணவத்தையும் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் முனியாண்டியை விருமன் எப்படி தன் வழிக்குக் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தின் அச்சாணி என்றால் முனியாண்டியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ்தான். அவரது பாத்திர அமைப்பை இன்னும் ஸ்திரப்படுத்தியிருந்தால், தானாக விருமன...
“சூரியை ஓட விட்ட அதிதி” – கார்த்தி | விருமன்

“சூரியை ஓட விட்ட அதிதி” – கார்த்தி | விருமன்

இது புதிது
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் பேசிய விருமன் பட நாயகன் கார்த்தி, “இப்படத்தின் ட்ரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல் நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து நம் கலாச்சாரம் மாறி விட்டதோ? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? என்ற சந்தேகம் துவக்கத்தில் எங்களுக்குள் இருந்தது. ஏனென்றால், தற்போது கிராமத்தில்கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், இந்த ‘விருமன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ...
தம்பி விமர்சனம்

தம்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாபநாசம் படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். பாபநாசத்தைப் போலவே தம்பியும் ஒரு த்ரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கின்றது. கதை சொல்வதில் தனது த்ரில்லர் திறமையைக் கொட்டி இருக்கிறார் ஜீத்து. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே கொட்டியுள்ளார். கதைக்கு ட்விஸ்ட் என்பது சுவாரசியமாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்று வெறும் ட்விஸ்டாக மட்டுமே கொடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி? ஜீத்து, மலையாள வாசத்தோடு படத்தை எடுத்துள்ளார். கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆனால் அது மலையாளப் படமாகத்தான் நகருகிறது. தமிழில் பேசுவதாலேயே தமிழ்ப்படம் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால், ஒவ்வொரு காட்சிக்குமான அரேஞ்ச்மென்ட்ஸ் மலையாள மார்க்கமாகவே இருக்கிறது. ஒரு காட்சிக்குள் படிப்படியாகக் கதாபாத்திரங்களைக் கொண்டு வர இயக்கு...
கைதி விமர்சனம்

கைதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை மீட்க ஒரு குழு கமிஷ்ணர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறது; போதையூட்டப்பட்ட போலீஸ் உயரதிகாரிகளை லாரியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரியான பிஜோய், லாரி ஓட்டக்கூடிய டில்லி எனும் சிறையில் இருந்து விடுதலையான நபரின் உதவியை நாடுகிறார்; அந்த லாரியில் இருக்கும் 5 அதிகாரிகளை மட்டும் கொல்ல பல குழுக்கள் வட்டமிடுகின்றன. கதாநாயகி இல்லாத படம்; அதனால் டூயட்டும் இல்லை; ஓரிரவில் நடக்கும் கதை என வழக்கமான படத்திலிருந்து மிக ஃப்ரெஷான மேக்கிங்கில் கவர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், மீடியாவிற்குச் செய்தி கசிந்துவிடும் என அஞ்சி கமிஷ்ணர் ஆஃபீஸைப் பாதுகாக்க பேட்டலியனின் உதவியை நாட மாட்டேங்கிறார் பிஜோய் என கதை விட்டுள்ளதை ஏற்க முடியவில்லை. போலீஸ் என்ன சொல்லுகிறதோ அது தானே செய்தி? இரவில் எமர்ஜென்சிக்குப் பத்திருபது காவலர்களைக் கூட கமிஷ்ணர் ...
ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

சினிமா, திரைச் செய்தி
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே.சி.சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பேச்சுக்களை யூடியூப் சேனலில் பார்த்து வியந்திருக்கிறேன். படையப்பாவில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்த துணிச்சலே காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி அவர்கள் ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் திரைப்படத்துறைக...
தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சதுரங்க வேட்டை இயக்குநரின் அடுத்த படைப்பு என்ற ஆவல் ஒரு பக்கம் என்றால், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் போலீஸைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று எதிர்பார்ப்பு மறுபக்கம். இந்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் இயக்குநர் வினோத் நூறு சதவிகிதம் பூர்த்திச் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாக, நெடுஞ்சாலையில் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் நடக்கும் கொடூரமான கொலை, கொள்ளைகளைத் துப்புத் துலக்கி, அதற்குக் காரணமானவர்களை எப்படிக் கஷ்டப்பட்டு கொள்ளையர்களின் வேரைத் தீரன் திருமாறன் கலைகிறார் என்பதே படத்தின் கதை. ராஜஸ்தானின் பவேரியர்கள் செய்தது திருட்டில் வராது; வழிப்பறிக் கொலையில் வரும். ஐந்தல்லது ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டால் அது வழிப்பறி (Dacoity) ஆகும். பவேரியர்கள் கொடூரமாக அடித்துக் கொல்கிறார்கள் என்ற சித்தரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், அம்மனநிலைக்கான பின்புலத்...
விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

சினிமா, திரைச் செய்தி
‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும் கார்த்தியும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். சத்ரியன் முதலிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் K.சுபாஷ், இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இரட்டை எழுத்தாளர்களான சுபா வசனமெழுதுகின்றனர். இப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தனது ஐந்தாவது படமாகத் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயையமைக்கிறார். இரண்டு நாயகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் நடித்துப் பெரும்புகழ் ஈட்டிய ஹிந்திப் படமான “ஷோலே” போல் இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநரான பிரபுதேவா, “கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்பது நிறமில்லை. அஹிம்சைக்கும் வன்முறைக்கும் நடக்கின்ற போராட்டத்தைக் குறிக்கின்றது” என்றார். படத்தில் ஒரே கதாநாயகி தான். வனமகன் படத்தில் அறிமுகமாகும் சாயிஷா சைகல் தான் கார்த்திக்கிற்கு ஜோடியாக ...
காஷ்மோரா விமர்சனம்

காஷ்மோரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல பூதவித்தையின் பெயர் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அந்த வித்தை பிறவிலேயே கை கூடுவதால் நாயகனுக்கு அந்தப் பெயர் அவரது தந்தையால் சூட்டப்படுகிறது (காஷ்மோரா என்பது எவராலும் வெல்ல முடியாத ஒரு துர்தேவதை; அதை எழுப்பி ஏவி விட்டால் எதிரியை 21 நாளில் கொன்று விடும்; பில்லி, சூனியத்தை விட ஆபத்தான ஏவல் வித்தை காஷ்மோரா என்கிறார் 'துளசி தளம்' எனும் நாவலில் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்). சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்த்ரீலோலன் ராஜ்நாயக் சாபத்தினால் பைசாசமாய் ஒரு மாளிகையில் அடைப்பட்டுள்ளான். அந்த மாளிகைக்கு வரவழைக்கப்படுகிறான் பிறவிப் பேயோட்டியான காஷ்மோரா. யார் யாரை ஓட்டுகின்றனர் என்பதே படத்தின் கதை. படத்தின் ஓப்பனிங் காட்சி படு பிரமாதமாய் உள்ளது. ஒரு சீரியஸான படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே ஒரு பாடல் வருகிறது. அங்குத் தொட...