Shadow

Tag: ஜீவா

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறுவயதில் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யப் போகும் போது இல்லாத தன்னம்பிக்கை முடி திருத்தம் செய்து முந்நூற்று அறுபது டிகிரி கண்ணாடிகளில் நம்மையும் திருத்தப்பட்ட நம் தலையையும் பார்த்து,, “ச்சே நாம கூட நல்லாதான்டே இருக்கோம்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வெளியேறும் போது தன்மானம் தாறுமாறாக ஏறியிருக்கும். நம்மை இப்படி அழகாக்கி அனுப்பிய சலூன் கடைக்காரர் மீது மரியாதை கலந்த அபிமானமும்,  அதே சீப்பு தான் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் இவர் சீவுவது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்கின்ற கேள்வியோடு வீடு திரும்புவோம். இந்த அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும்  முடி திருத்துநராக வரும் லால் இருவருக்கும் இடையே நடக்கிறது. மேற்சொன்னபடி அப்படியே நடக்காமல் அறிமுகம் வேறு ஒரு புதிய திணுசில் ரசிக்கும்படியே நடக...
வரலாறு முக்கியம் விமர்சனம்

வரலாறு முக்கியம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கேரளப் பெண்ணைக் காதலித்து மணம் முடிப்பதை வரலாறென்றும், அது பதியப்படுவது முக்கியமென்றும் கருதி ஒரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராஜன். யமுனா, ஜமுனா என்ற கேரளத்துச் சகோதரிகள், கார்த்திக்கின் தெருவிற்குக் குடி வருகின்றனர். தங்கை ஜமுனா கார்த்திக்கைக் காதலிக்க, கார்த்திக்கோ ஜமுனாவை விட அழகாக இருப்பதாக நினைக்கும் யமுனாவைக் காதலிக்கத் தொடங்குகிறான். அக்கேரளத்துப் பெண்களின் அப்பாவிற்கு, மகள்களை துபாய் வாழ் மணமகனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆசை. அவரது எதிர்ப்பை மீறி, கார்த்திக் தன் காதலில் எப்படி வாகை சூடுகிறான் என்பதே படத்தின் கதை. நாயகனை யூ-ட்யூபராகக் காட்டினாலும், வேலை வெட்டியில்லாதவர் கணக்கிலேயே அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் போல் வைக்க வேண்டியுள்ளது. அழகான பெண்ணைக் கண்டதும் காதல், பின் அவள் ஒத்துக் கொள்ளும்வரை இடைவிடாது துரத்திக் கொண்டே இருப்பதென இயக்குநர் ராஜேஷின் எஸ்.எம்.எஸ். ...
ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா

ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா

Others, OTT, காணொளிகள், திரைத் துளி
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரைத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவிகித பிரத்தியேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதளத் தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனைத் துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.  இந்த விளை...
கொரில்லா விமர்சனம்

கொரில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை நன்றாக உள்ளது. ஜீவா பேருந்துகளில் செய்யும் திருடு, போலி டாக்டராக அவர் வரும் காட்சிகள், இது அப்படியே நாயகியுடனான காதலாக மலரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. குரங்கு பொம்மை போட்டு அவர்கள் திருடச் செல்லும் காட்சிகள் கூடப் பெரிதும் பரபரப்பில்லாமல் நகர்கிறது. கொரில்லா பொம்மை மாஸ்க்கை ஜீவா கழட்டும் இடத்...
கீ விமர்சனம்

கீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கீ என்ற சொல்லிற்கு, 'எவ்வளவு நன்மைகள் உண்டோ அவ்வளவு தீமைகளும் உண்டு' என தொல்காப்பியத்தில் பொருளுள்ளதாக இயக்குநர் காளீஸ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கணினியில் நாம் பயன்படுத்தப்படும் கீ (Key)- க்கள் தான் நமது நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கிறது என்றும் தலைப்பிற்குப் பொருள் கூட்டுகிறார் இயக்குநர். இயக்குநர் காளீஸ், செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும், 100 திரைப்படத்தினைப் போலவே, கதைக்குள் நேரடியாகச் செல்லாமல் அலைபாய்கிறது. சைபர் க்ரைமை மையப்படுத்திய ஒரு த்ரில்லர் படம் எப்படித் தொடங்கக் கூடாது என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி. ஹீரோவின் அறிமுகம், நேரடியாகப் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பாட்ஷா வைரஸ் குறித்து அவர் விளக்கமளித்து, அதைக் கொண்டு எந்தப் பெண்ணுடன் டேட்டிங் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கிறார். பல ...
1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா

1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா

சினிமா, திரைத் துளி
எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் ஜீவா. “சங்கிலி புங்கிலி படமும், கலகலப்பு-2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்பச் சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90வது படமாக SGF 90 படத்தில் நானும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்க, படப்பிடிப்பு விறுவிறுப்பா போயிட்டிருக்கு. படத்தின் தலைப்பு கூடிய சீக்கிரம் சொல்வோம். ஜாலியான படமா இருக்கும்” என்றார் ஜீவா. மல்டி-ஸ்டார் படங்களை எப்படி செலக்ட் செய்றீங்க? “முதல்ல கதை. அதற்கப்புறம் கேரக்டர். இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன். நல்ல டீம் அமைஞ்சா நடிக்கத் தயாராயிடுவேன். அப்படி நடிச்சி ஹிட்டான படம் ...
கலகலப்பு – 2 விமர்சனம்

கலகலப்பு – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2012 இல் வெளிவந்து நகைச்சுவையில் கலக்கிய கலகலப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே ஒன்-லைனைக் கையிலெடுத்து உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. பணக்கஷ்டத்தில் இருக்கும் ஜெய், தங்களுக்குச் சொந்தமாகக் காசியில் ஒரு மேன்ஷன் இருப்பதை அறிந்து அதை விற்கச் செல்கிறார். லீசுக்கு எடுத்த முருகா மேன்ஷனைச் சிரமத்தில் நடத்தி வருகிறார் ஜீவா. தங்கள்  இருவரையுமே ஏமாற்றிய சிவாவைத் தேடிச் செல்கின்றனர் ஜெய்யும் ஜீவாவும். அவர்கள் ஏமாறிய பணம் அவங்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பிரதான ஜோடிகளான ஜீவா - கேத்தரீன் தெரசா, ஜெய் - நிக்கி கல்ராணி அறிமுகப் படலம் முடிந்து, காதல் அத்தியாயம் தொடங்கும் வரை வழக்கமான ஜோரில் போகும் படம், சிவாவின் அறிமுகத்திற்குப் பின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. சதீஷ், ரோபோ சங்கர், மனோ பாலா, சந்தான பாரதி, விடிவி கணேஷ், ஜார்ஜ், சிங்கமுத்து, யோகி பாபு, முனீஷ்காந்த் என...
சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாளிகை போன்ற வீட்டுக்குள் இருக்கும் பாசக்கார ஆவி, 'இது என்னோட வீடு' என அவ்வீட்டினை விலைக்கு வாங்கும் ஜீவாவையும் அவரது குடும்பத்தினரையும் உள்ளே விட மாட்டேங்கிறது. எப்படி ஆவியை ஜீவா விரட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. வழக்கமான பேய்க் கதை என்ற பொழுதிலும், இயக்குநர் ஐக் அழகாகச் சுவாரசியப்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, படம் தொடங்குவதற்கு முன், குடிப்பழக்கும் புகை பழக்கமும் உடம்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற வாசகத்தை 'நான் கடவுள்' ராஜேந்திரன் குரலில் கேட்கும் பொழுதே, படத்திற்கான மூடை செட் செய்து விடுகிறார். வாடகை வீட்டில் குடியிருப்போரின் வலியை அழகாகப் பதிவு செய்துள்ளனர். "வாடகை வீட்டில் இருப்பது ஜெயில் போல" என ராதிகா வலியுடன் சொல்வதில் இருந்து தான் படமே தொடங்குகிறது. நாயகனான ஜீவாவின் பெயர் போடுவதர்கு முன்பே 'டத்தோ' ராதாரவியின் பெயர் திரையில் தோன்றுகிறது. குடும்பம் என்றால் ஒற்றுமையாக...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக்...
திருநாள் விமர்சனம்

திருநாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா மீது காதல் மலர்கிறது. அக்காதல் வெளியில் தெரிய வர, அனைவருக்கும் குழப்பமும் சங்கடமும் மேலிடுகிறது. அவர்கள் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. தாதாவாக சரத் லோகிதஸ்வா மிரட்டியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றமும், கூரிய பார்வையும் கொண்ட அவர் தோன்றும் முதல் ஃப்ரேமில் இருந்தே மனிதன் அசத்துகிறார். அவருடன் ஃப்ரேமில் யார் தோன்றினாலும் பொலிவிழந்து போகின்றனர். இவர் சரீரத்தால் மிரட்டினால், கரடு முரடான சாரீரத்தாலும் பெரிய விழிகளாலும் அச்சுறுத்துகிறார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இவர் முன் மீசையை முறுக்கிக் கொண்டு வண்டியில் உட்காரும் 'நீயா? நானா?' கோபிநாத், ஃப்ரேமில் நானில்லை என்பது போல் பொலிவிழுந்து காணப்படுகிறார். திறமையான காவல்துறை அதிகாரி எனக் காட்ட திரைத்துறைக்குத் தெரிந்த ஒரே வழி "என்கவுன்ட்டர்" மட்டும் தான் போலும். கோபிநாதிற்குப் பொருந்தா...
போக்கிரி ராஜா விமர்சனம்

போக்கிரி ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'குழந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டதொரு ஜாலியான முயற்சி இந்தப் படம்' என்கிறார் படத்தைப் பற்றி இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. தாதாவான கூலிங் கிளாஸ் குணாவிற்கும், கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கும் சஞ்சீவிக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் போக்கிரி ராஜா படத்தின் கதை. யாமிருக்க பயமே படத்திற்குப் பிறகே பார்வையாளர்கள் மத்தியில் யோகிபாபு ஒரு சோலோ காமெடியனாக மனதில் பதிந்துவிட்டார். வடிவேலுவிற்குப் பிறகு, திரையில் பார்த்ததுமே மக்கள் சிரிக்கத் தொடங்குவது, யோகிபாபுவைப் பார்த்துத்தான். "எனக்கே விபூதி அடிக்கிறாயா?" என்று காக்கா முட்டையில் அவர் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்திலும் யோகிபாபு மனோபாலாவைப் பார்த்து, "பாம்பு மாத்திர, என்னாத்துக்கு நீ ஏமாத்துற?" என்ற அவர் கலாய்க்கும் போது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ஜீவாவையும், ஹன்சிகாவையும் சிபிராஜிடம் கோர்த்து விடும்...