Shadow

Tag: நிகில்

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும் நீளமான படம். மணமாகிவிட்ட வேம்பு, தனது கல்லூரிக் காதலனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இறந்து விடுகிறான்; பள்ளியைக் கட்டடித்து விட்டு பிட் படம் பார்க்கும் பள்ளி மாணவர்களின் ஒருவனது அம்மா அந்தப் படத்தில் தோன்றுகிறார்; வீட்டை விட்டு ஓடிப் போய்விட்ட தந்தையை முதல்முறையாகப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவன் முன் ஷில்பா வந்து இறங்குகிறாள்; தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சுனாமியில் சிக்கிய தன்னைக் காப்பாற்றிய ஒரு சிலையை ஆண்டவராக எண்ணி சதா பிரார்தித்துக் கொண்டிருக்கிறான் தனசேகர். இப்படி நான்கு கிளைக்கதைகளை ஒன்றிணைக்கும் தரமான கலகலப்பான அடலட் (A) மூவியாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. நீளத்தை மட்டும் கத்தரித்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடி சலிப்பு தட்டாமல், முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் ரசித்திருக்க இயலும். முக்கி...
அகவன் விமர்சனம்

அகவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அகவன் என்றால் உள்ளிருப்பவன் எனப் படத்தின் உபத்தலைப்பிலேயே விளக்கம் உள்ளது. ஏகனான சிவன், அனைத்து உயிரினங்களுள்ளும் அநேகனாய் உறைந்துள்ளான் என்பதே படத்தலைப்பின் பொருள். பெருவெள்ளம் ஏற்பட்ட காலத்தில், லிங்கோத்பவராய் உயர்ந்து நிற்கும் சிவனின் ஓவியத்தைக் கண்ட ராஜராஜ சோழனுக்கு ஓரெண்ணம் எழுகிறது. அதன் படி, ஒவ்வொரு கோயிலின் ராஜ கோபுரத்திலும் சில ரகசிய ஏற்பாடுகளை அமைக்கிறார். அதென்ன ரகசியம் என்பதும், அந்த ரகசியத்தை அறிந்து கொண்ட தீயவர்களின் சதித்திட்டம் எப்படிக் கலையப்படுகின்றது என்பதும்தான் படத்தின் கதை. தத்துவச் சாயலுடைய தலைப்பெனினும், படம் நல்லதொரு த்ரில்லராய் ஈர்க்கிறது. மூன்று பொண்டாட்டிக்காரராக வரும் தம்பி ராமய்யாவின் காட்சிகளைக் கத்தரித்து, படத்தின் நீளத்தைச் சுருக்கி, முழு நீள த்ரில்லராய்த் தொடக்கம் முதலே கொண்டு போயிருக்கலாம் இயக்குநர் APG. ஏழுமலை. சிராஸ்ரீ, நித்யா ஷெட்டி எனப் படத்தில் இரண...
கபிலவஸ்து விமர்சனம்

கபிலவஸ்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொதுக் கழிப்பறையில் பிறந்த முருகன், அங்கேயே வளர்ந்து வேலை செய்கிறான். அந்தக் கழிப்படத்தை ஒட்டி வாழும் நடைபாதை மனிதர்களைப் பற்றிப் படம் பேசுகிறது. கபிலவஸ்து என்பதைக் காரணப் பெயராகக் கொள்ளலாம். லும்பினியில் பிறந்த சித்தார்த்த கெளதமர், இளவரசனாக வளர்ந்தது கபிலவஸ்துவில்தான். புத்தா ஃப்லிம்ஸ் என்பது படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் என்பது உபத்தகவல். சொந்த நாட்டிலேயே, குடியுரிமை அடையாளம் ஏதுமற்று அகதிகளாக வாழும் நடைபாதை மக்கள் வாழுவதற்குப்படும் சிரமங்களைப் பதிந்துள்ளார் இயக்குநர் நேசம் முரளி. தெருவோரங்களில், சாலை ஓரங்களில் உண்டு, உறங்கி, மடிந்து போகும் மனிதர்களைப் பற்றியது கபிலவஸ்து படம். எந்தக் கணக்கெடுப்புக்கும் அடங்காததாலும், கேட்பாரற்ற நிலை இருப்பதாலும், வழக்குகளை முடிக்க போலீஸ்காரர்களால் பலிகடாவாக்கப்படுகிறார்கள். வீடற்ற ஃபிளாட்பாரவாசியிடம் தட்டிப் பறித்த 200 ரூபாயைத் திருப்பித் தர விர...
திருமணம் விமர்சனம்

திருமணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கல்யாணத்தில் சுலபமாக இழந்துவிடுவது நம் பெருமைகளில் ஒன்று. கையில் பணமில்லாவிட்டாலும், பணத்தை எப்படியேனும் புரட்டி வாழ்நாளைக் கடனாளியாகக் கழிக்க அஞ்சாத தற்கொலை மனோபாவம் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மிகவும் அரிதானவை. சேரன் முன் வைக்கும் திருத்தம், திருமண வைபவத்தில் அதீதமாக விரயமாகும் பொருளாதாரத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒன்றை மட்டுந்தான். தலைப்பில் தொனிக்கும் திருத்தங்'கள்' என்ற பன்மை விகுதி ஒரு சினிமாட்டிக் எக்ஸாகிரேஷன் தான். சமூகத்தின் மீதான சேரனின் அதீத காதல் அவரது கலையார்வத்தையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். பெரியண்ணன் பாவனையில், தலைப்பிலேயே 'திருத்தங்கள்' என்று தன் சமூக அக்கறையை அடக்கமாட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார். சேரன் பேசிக் கொண்டேயிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டாரிடம் விவாதத்தை முன் வைக்காமல், இதுதான் சரியெனத் தான் நம்பும் விஷயத்தை இடம் பொருள் ஏ...
தா தா 87 விமர்சனம்

தா தா 87 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தாதாவாக (Don) 87 வயது சாருஹாசனும், அவரது காதலி கீதாவாக 80 வயது சரோஜாவும் நடித்துள்ளனர். சரோஜா, கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சாருஹாசனை முன்னிறுத்தி இயக்குநர் விஜய் ஸ்ரீ, படத்திற்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்துக் குழப்பியுள்ளார். அந்தக் குழப்பம் படத்தின் முதற்பாதி முழுவதிலுமே கூடத் தொடர்கிறது. மஞ்சள் துண்டு (பாமக), நீலத்துண்டு (விசிக) எனத் தெளிவில்லாத அரசியல், அவர்களை இயக்கும் ஆண்டவரின் அண்ணனான தாதா சத்யா, அதை விரும்பாத எம்.எல்.ஏ. என முதற்பாதி பயணிக்கிறது. பிறகு, கவிதை போன்ற இரண்டாம் பாதி தொடங்குகிறது. ஜெனியாக நடித்திருக்கும் ஸ்ரீபல்லவி விஸ்வரூபமெடுக்கிறார். அவரது தந்தை ஜனா நாயுடுவாக ஜனகராஜ் நடித்துள்ளார். ஜனா மகள் ஜெனி என்பது குழப்பினாலும், மகள் விருப்பப்பட்ட பெயரை வைத்துக் கொள்ள அனுமதிக்கும் மிக்க உறுதுணையான அப்பாவாக நடித்துள்ளார் ஜனகராஜ். சாய் தீனாவை ஞாபகப்படுத்தும...
தடம் விமர்சனம்

தடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழிலும் கவினும் ஓருரு இரட்டையர்கள் (Identical twins). அவர்களில் ஒருவர் கொலையாளி என்பதற்கான புகைப்படத் துப்பு காவல்துறையினர்க்குக் கிடைக்கிறது. அவ்விரட்டையரில் கொலையாளி யாரென்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க படாதபாடுபடுகின்றனர். கொன்றது யார், ஏன் கொன்றார், அவர் அழிக்காமல் விட்ட தடம் எது என்பதன் தான் படத்தின் கதை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யத் தொடங்கும் முதல் ஃப்ரேமிலேயே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறார் மகிழ் திருமேனி. சிகரெட் பிடிக்கும் சேச்சி; பெண்களின் மார்புக்கச்சைக்கும், கொல்கத்தா ஹெளரா பாலத்துக்கும் ஒரே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது எனும் நாயகனின் இன்ஜினியரிங் மேஜிக் வசனம் எனப் படத்தின் முதல் 35 நிமிடங்களுக்குக் கதைக்குள் போகாமல் காட்சிகளாலும் பாடல்களாலும் மட்டுமே ரசிக்க வைக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தின் ரசனையான எடிட்டிங்கே அதற்குக் காரணம். ஒரு கொலை நடந்து, இர...
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – ஆசையாக மாறும் தேவைகள்

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – ஆசையாக மாறும் தேவைகள்

சினிமா, திரைத் துளி
பல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாகத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்". மாயவன் திரைப்படத்திற்குப் பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு. பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள்  (பக்ஸ்) , இயக்குநர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்கான எதிர்ப்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இப்படம் மார்ச் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கபடுகிறது. படக்குழு: >> தயாரிப்பு, இயக்கம் - சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்ம...
“இது சீமானின் பாட்டு!” – வைரமுத்து

“இது சீமானின் பாட்டு!” – வைரமுத்து

சினிமா, திரைத் துளி
சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 உம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது; அவன் திருந்துகிறான். அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. அந்த நேரத்தில் தொலைபேசியில் வந்த இயக்குநர் சீனுராமசாமியிடம் பேச்சோடு பேச்சாக அந்தப் பாடலைப் படித்துக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு, ‘ஆஹா.!’ என்ற சீனுராமசாமி, “இது என் கதைக்குத்தான் பொருந்தும். என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும்” என உறுதியாகக் கேட்டுள்ளார். “இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு; கொடுத்த வாக்க...
சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2006 ஆம் ஆண்டு, மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்தினைத் தயாரித்தவர்கள் “உலா” எனும் படத்தை ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கினார்கள். 2013 இல், படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’க்காக விளையாடிய ட்வெயின் பிராவோவை, ஒரு பாடல் காட்சிக்காக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. சாஜன் மாதவின் இசையில் ‘டல்மேனி டல்மேனி டகுல் காட்டுது’ என்ற பாடலிற்கு, வேட்டி கட்டிக் கொண்டு ட்வெயின் பிராவோ ஆடும் நடனம் நன்றாக இருக்கிறது. திரையில் உலா வர வாய்ப்புக் கிடைக்காமல் இத்தனை காலம் கிடப்பில் இருந்த படம், ‘சித்திரம் பேசுதடி 2’ ஆகப் பெயர் மாற்றம் பெற்றுத் திரையேறுகிறது. விதார்த், அஜ்மல், அஷோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன் என ஐந்து பிரதான பாத்திரங்கள். 48 மணி நேரத்தில், இந்த ஐந்து பேருக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் மையக்கரு. பிரதான பாத்திரங்கள் மட்டும...
கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ

கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ

சினிமா, திரைத் துளி
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் "தாதா 87" படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது, கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை, பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று நடைபெற்றது. வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. இப்படத்தை "தாதா 87" படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்குகிறார். இவர் கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம் இது. பல புதிய பரிமாணங்களுடன் உருவாகும் இப்படம், திரையரங்கில் வெளியாகும் போது இடைவேளையின்றி திரையிடப்படும் என்றும், படத்தின் முதல் காட்சி நடுஇரவு 12 மணிக்கு திரையிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்படத்தின் நடி...
சகா விமர்சனம்

சகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சகா என்றால் தோழன். பதின் பருவத்து இளம் குற்றவாளிகளின் நட்பை மையமாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர் முருகேஷ். சத்யாவும் கதிரும் நண்பர்கள். தெருவில் திரிந்த அவர்களை வளர்க்கும் திருநங்கையைக் கொன்றவனைக் கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைபடுகின்றனர். சிறையில் ஏற்படும் பகையும் நட்பும் அவர்களை எங்குக்கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை. ஷபீரின் இசையில், 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்ற பாடல் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரணும், ஆய்ராவும் அந்தப் பாடலில் மிக அழகாக உள்ளனர். ஆனால் அவர்களுக்குள்ளான காதல் நம்பும்படியாக இல்லை. ரெளடிகளிடம் இருந்து தப்பிக்கும் ஆய்ரா, தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளாமல், சரண் மீது காதல் வயப்படுகிறார். அதைச் சொல்லவும் செய்யாமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவ ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர் ஆரோஹ...
சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது. எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் ஹாஃப்-பாயிலை வாயில் வைக்கக் கொண்டு போகும் பொழுது யாராவது தட்டி விட்டால் மட்டும் பாட்ஷாவாக ருத்ர தாண்டவம் ஆடிடுவார். இந்த ஹாஃப்-பாயில் பலவீனம் சத்யமூர்த்தியை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. தொடக்கம் முதலே படம் நகைச்சுவையாகப் பயணித்தாலும், பெரும் தாதாவான சைக்கிள் ஷங்கரின் கைத...
உத்தரவு மகாராஜா விமர்சனம்

உத்தரவு மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரவியின் காதுக்குள், 'நிற்காமல் ஓடிக்கொண்டே இரு'க்கும்படி உத்தரவிடுகிறார் இரண்டாம் இராஜராஜச் சோழன். அந்த உத்தரவை ரவி மீறினால், செவிப்பறையை அலறச் செய்யும் பலமான ஒலி எழுந்து, ரவியை நிலைகுலையச் செய்துவிடும். மகாராஜாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர ரவிக்கு வேறு மார்க்கம் இல்லை. ஏன் அந்த ஒலி எழுகிறது, யார் அந்த ஒலியை எழுப்புகின்றனர், எப்படி அதிலிருந்து ரவி மீண்டான் என்பதுதான் படத்தின் கதை.  படத்தின் முதற்பாதியில், இரண்டாம் ராஜராஜச் சோழனும் அவனது வீரர்களும் குதிரையில் வருகின்றனர். அஸெல் மீடியாவின் 3டி கிராஃபிக்ஸில் அவை இயல்பாய்ப் பொருந்துகின்றன. ட்ரெய்லரிலேயே அந்த மங்கலான குதிரைகளைப் பார்க்கலாம். அவை படத்தில் அழகாகப் பொருந்தி, நாயகனின் காதில் கேட்கும் அமானுஷ்யக் குரல்களுக்கான நேர்த்தியான உருவங்களாக உள்ளன. அமெச்சூரான கிராஃபிக்ஸ் என்ற எண்ணம் எழாததற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்...