பிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே!
தர்ஷன்
சனி மாலை வாக்கில் இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த போது முதலில் நம்பவே இல்லை. 'ச்சேச்சே, தர்ஷனாவது, எவிக்சனாவது!' என்று தான் . ஆனால் நேரமாக ஆக, எல்லா இடத்தில் இருந்தும் இந்தத் தகவல் வரவும், ரொம்பம் சோர்வாக இருந்தது.
எவ்வளவோ முயற்சி பண்ணியும், நேர்மையாய் இருந்தும், தகுதி இருந்தும், திறமை இருந்தும், நமக்குக் கிடைக்க வேண்டிய ஒரு வாய்ப்பு, கைநழுவிப் போகும் போது, 'என்னடா வாழ்க்கை இது?' எனத் தோன்றுமே, அப்படியொரு மனநிலை தான் நேற்று இருந்தது. இன்னொருத்தருக்கு வாய்ப்பு பறிபோனதற்காக வருத்தப்பட்டது, இதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்துள்ளதா எனத் தெரியவில்லை. நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு மனநிலை.
நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பிக்கும் போது, மனம் கொஞ்சம் சாதாரணமாகத் தான் இருந்தது. தெரிந்தது தானே எனக் கொஞ்சம் அசால்டாகத் தான் இருந்தேன். ரொம்ப ட்ராமா செய்யாமல் தர்ஷனை வெளியே கூட்டிக் கொண்டு வந்த கமல்...