Shadow

Tag: விஷால்

ரத்னம் விமர்சனம்

ரத்னம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம். வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் இருக்கிறார். சமுத்திரக்கனியும் ரத்னமாகிய விஷாலை ரத்னம் போல் பொத்திப் பாதுகாக்கிறார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசப் பிணைப்பு என்பதற்கு ஒரு பின்கதை. திருத்தணியில் இருந்து வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்ததும் வழக்கமான ஹீரோக்கள் உருகுவது போல் விஷாலும் உருகுகிறார். அவர் ஏன் அப்படி உருகுகிறார் என்பதற்குப...
குறைந்த செலவில் நிறைந்த தரத்தைத் திரையுலகிற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸின்  நோக்கம் – இயக்குநர் ஹரி

குறைந்த செலவில் நிறைந்த தரத்தைத் திரையுலகிற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸின் நோக்கம் – இயக்குநர் ஹரி

சினிமா, திரைத் துளி
கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள...
மார்க் ஆண்டனி விமர்சனம்

மார்க் ஆண்டனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை. ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ சென்று தன்னையே பார்க்கும்.  ஆனால் தொடர்புகளை ஏற்படுத்த முயலாது, வெறும் சம்பவங்களை மட்டும் மாற்றும். அதாவது டைம் டிராவல் செய்து வந்திருக்கும் நான், எதிர்காலத்தில் இருக்கும் என்னையோ அல்லது இறந்த காலத்தில் இருக்கும் என்னையோ பார்க்கும் போது நான் சென்று என்னுடன் பேச முற்படமாட்டேன்.  ஏனென்றால் அந்த கால டைம...
லத்தி விமர்சனம்

லத்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கான்ஸ்டபிள் முருகானந்தம், ஹாலிவுட் ஹீரோவிற்கு இணையாக ஒரு மிஷனைக் கையிலெடுத்துச் சாதித்து முடிக்கிறார். சஸ்பெண்டில் இருக்கும் முருகானந்தத்திற்கு, அவரது லத்தி சார்ஜ் திறமைக்காக மீண்டும் வேலை கிடைக்கிறது. ‘இனி லத்தியால் யாரையும் அடிப்பதில்லை’ எனத் தீர்மானிக்கும் முருகானந்தம், அதன் பின் சுமார் நூற்றைம்பது பேரை அடி வெளுக்கிறார். சரியாகச் சொல்வதனால், என்கவுன்ட்டர் செய்வதை ஹீரோயிசமாகக் கருதும் கோலிவுட்டின் சூப்பர் காப்பாகவே மாறிவிடுகிறார். நர்ஸ் கவிதாவாக வரும் சுனைனாவின் தேர்ந்த நடிப்பால், படத்தின் முதற்பாதி அழகாகிறது. நன்றாக நடிக்கும் அவரை உபயோகித்துக் கொள்ள தமிழ் சினிமா காட்டிவரும் சுணக்கம் துரதிர்ஷ்டவசமானது. முருகானந்தத்தின் மகன் ராசுவாக மாஸ்டர் லிரிஷ் ராகவ் நன்றாக நடித்துள்ளார். ஒரு பெண், வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள். அதைச் செய்தது யாரென மர்மமாகவே இருக்க, விஷால் அதைக் கண்டுபிடிக்...
ஆக்‌ஷன் விமர்சனம்

ஆக்‌ஷன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிற்குத் தகுந்தாற்போல் படம் முழுவதும் விஷாலின் முழு நீள ஆக்‌ஷன் மட்டுமே! சுநதர்.சி படங்களின் வழக்கமான கலகலப்பை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும். தேர்தலில் நின்று முதல்வராக வேண்டிய அண்ணனையும், தனது காதலியையும் கொன்றவர்களைத் தேடி லண்டன், இஸ்தான்புல், அங்கிருந்து தரை மார்க்கமாகப் பாகிஸ்தான் வரை சென்று பழி தீர்க்கிறார் இந்திய ராணுவத்தின் கர்னலான சுபாஷ். படம் தொடங்கியதுமே, 'அட!' போட வைக்குமளவு டட்லியின் ஒளிப்பதிவில் இஸ்தான்புலின் நிலப்பரப்பு ஈர்க்கிறது. விஷால் யாரை ஏன் அடிக்கிறார் என்று தெரியாவிட்டாலும், இஸ்தான்புல்லின் குன்றுகளாலான ஏரியாவும், அந்த அடுக்கி வைத்தாற்போல் இருக்கும் குடியிருப்புகளும், மர்டர் மிஸ்ட்ரி போல் தொடங்கும் படம் நாயகனின் புஜபல பராக்கிரமத்தை மட்டுமே நம்பிப் பயணிக்கிறது. படத்தின் முக்கியமான திருப்பங்களை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் கடந்துள்ளது மிகக் கடியாக உ...
அயோக்யா விமர்சனம்

அயோக்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2015 ஆம் ஆண்டு, வக்கந்தம் வம்சியால் எழுதப்பட்டு, பூரி ஜெகன்னாதரால் இயக்கப்பட்ட 'டெம்பர்' என்ற தெலுங்குப் படத்தின் உத்தியோகபூர்வ மறு உருவாக்கம் இப்படம். பணமே சகல அதிகாரங்களையும் தருமென்பதையும், காவல்துறையில் சேர்ந்தால் அப்பணத்தை சுலபமாக அடையலாம் என்பதையும் சிறு வயதிலேயே கண்டுணர்கிறான் யாருமற்ற அநாதை சிறுவனான கர்ணன். காவல்துறையில் சேருவதை லட்சியமாக்கி, கொண்ட லட்சியத்தின் படி போலீஸாகவும் ஆகி, அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்து சகல வழிகளிலும் பணத்தை அடைகிறான். அத்தகைய அயோக்கியனை சமயச்சந்தர்ப்பம் யோக்கியனாக மாற்றுவதுதான் படத்தின் கதை. செய்வது அயோக்கியத்தனம் என்றாலும், மட்டு மரியாதை குறையும் பட்சத்தில், சுர்ரெனக் கோபம் சூடாய் மண்டையில் ஏறி தன்முனைப்பு உசுப்பிவிடப்பட்டு தன்னிலை மறந்துவிடுவான் கர்ணன். ஜூனியர் என்.டி.ஆர் அளவு விஷால் தன்னிலை மறக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அப்படியாகும் பட்சத்தி...
KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
தென்னியாவில், கோலிவுட், டாலிவுட், மாலிவுட் போல் சாண்டல்வுட் தனது பிராந்தியத்தைத் தாண்டிப் பெரிதும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. விதிவிலக்கான சில படங்களைத் தவிர்டத்து, சாண்டல்வுட் தத்தித் தத்தியே நடை பழகி வந்தது. தற்போது, கன்னடத் திரையுலகமும் தனது பிராந்தியத்தை விட்டுத் தாவிப் பாயத் தொடங்கியுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தாலே அது தெரியும். கே.ஜி.எஃப் (KGF) என்பது கோலார் கோல்ட் ஃபீல்ட் (கோலார் தங்க வயல்) என்பதன் சுருக்கமாகும். அக்டோபரில் வெளியான, வில்லன் எனும் கன்னடத் திரைப்படம் தான் இதுவரை வெளியான கன்னட படங்களிலேயே அதிக பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டது. அதனுடைய பட்ஜெட் சுமார் 45 கோடி ஆகும். டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள கே.ஜி.எஃப் அந்தச் சாதனையை முறியடிக்கவுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 90 கோடியாகும். எப்படிப் பாலிவுட்டில், 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’...
சண்டக்கோழி 2 விமர்சனம்

சண்டக்கோழி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2005 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சண்டக்கோழி. சண்டைக்கு முந்தி நிற்கும் ஆளெனத் தலைப்பைப் பொருள் கொள்ளலாம். ஒரு கொலையால், வேட்டைக் கருப்புக் கோவிலின் திருவிழா ஏழு வருடங்களாக நடைபெறாமல் தடைப்படுகிறது. மீண்டும் அத்திருவிழா நடைபெற்றால், அன்பு எனும் இளைஞனைத் திருவிழாவில் வைத்துக் கொல்ல, வரலக்‌ஷ்மி குடும்பத்தினர் காத்திருகின்றனர். அன்புவையும் காப்பாற்றி, திருவிழாவையும் எப்படி ராஜ்கிரணும் விஷாலும் நடத்துகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு மீரா ஜாஸ்மின் மிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்துக் கொண்டு, கீர்த்தி சுரேஷை மீரா ஜாஸ்மின் ஆக்கிடப் படாதபாடு பட்டுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் தூக்கி வீசிடுவேன் என்ற மதமதப்போடே வளைய வருகிறார் விஷால். எப்படியும் அனைவரையும் துவம்சம் செய்துவிடுவார் என்று ரசிகர்களுக்குத் தெரியாதா? அதைச் சுவாரசியமாகச் சொல்லவேண்டாமா?...
இரும்புத் திரை விமர்சனம்

இரும்புத் திரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிலிட்டரி ஆஃபீஸரான விஷாலுக்கு வங்கியில் பெர்ஸனல் லோன் தர மறுக்க, ஒரு ஏஜென்ட் போலி ஆவணங்கள் மூலம் பிசினஸ் லோன் வாங்கித் தருகிறான். தங்கையின் கல்யாணத்திற்காக வாங்கின அப்பணம், நூதன முறையில் திருடப்படுகிறது. போலி ஆவணங்கள் காட்டி வாங்கப்பட்டதால் போலிஸிலும் புகார் அளிக்க முடியாத பட்சத்தில், சோல்ஜரான விஷால் எப்படித் தான் இழந்த பணத்தை மீட்கிறார் என்பதே படத்தின் கதை. டிஜிட்டல் இந்தியா என ஆசை காட்டுகிறது மோடி அரசாங்கம். அது நிராசையில் தான் முடியுமென மரண பயத்தைக் காட்டியுள்ளார் அறிமுக இயக்குநர் மித்ரன். மிலிட்டரி ஆஃபீசர் பாத்திரத்திற்கு அழகாய்ப் பொருந்துகிறார் விஷால். ஆனாலும், மறைந்திருந்து செயல்படும் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கைப் பின் தொடர, சைக்காட்ரிஸ்டான சமந்தாவை அனுப்புவது எல்லாம் ரொம்பவே தமாஷாக உள்ளது. சாமானிய மக்களின் ஆசையைத் தூண்டி, போலி ஆவணங்களை வங்கிக்குக் கொடுக்க வைத்தே அப்பணத்தை அபகரிக்...
துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சிறுவனின் செல்ல நாய் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இறக்கிறது. அச்சிறுவன் இணையத்தில் ஒரு துப்பறிவாளரைத் தேடி, நாயைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி தன் சேமிப்பான என்னூத்தி சொச்சம் ரூபாயைத் தனியார் துப்பறிவாளரிடம் தருகிறான். அந்த வழக்கு, துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. முகமூடி படத்தின் ஹேங் ஓவர் முழுவதுமாக இயக்குநர் மிஷ்கினுக்கு விலகியதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நாயகனும் சூப்பர் ஹீரோ. சகலகலா வல்லவன். தொழிற்முறை (!?) கொலைக்காரர்கள் எனச் சொல்லப்படுகிறவர்கள், நாயகனைச் சைனீஸ் ரெஸ்டாரன்ட்டிற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்து, கத்தியை அவர் மீது வீசிக் கொல்ல முனைகின்றனர். அனைவரையும் அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாமல் தெறிக்க விடுகிறார் (நாயகன் சீனர்களைத் துவம்சம் செய்யும் அக்காட்சி பக்தாஸைப் பரவசப்படுத்தும் என்பதில் நோ டவுட்). ஆர்த...
நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

சினிமா, திரைத் துளி
தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் "நாளை நமதே" படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது....
விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

சினிமா, திரைச் செய்தி
‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும் கார்த்தியும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். சத்ரியன் முதலிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் K.சுபாஷ், இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இரட்டை எழுத்தாளர்களான சுபா வசனமெழுதுகின்றனர். இப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தனது ஐந்தாவது படமாகத் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயையமைக்கிறார். இரண்டு நாயகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் நடித்துப் பெரும்புகழ் ஈட்டிய ஹிந்திப் படமான “ஷோலே” போல் இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநரான பிரபுதேவா, “கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்பது நிறமில்லை. அஹிம்சைக்கும் வன்முறைக்கும் நடக்கின்ற போராட்டத்தைக் குறிக்கின்றது” என்றார். படத்தில் ஒரே கதாநாயகி தான். வனமகன் படத்தில் அறிமுகமாகும் சாயிஷா சைகல் தான் கார்த்திக்கிற்கு ஜோடியாக நட...
கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொஞ்சமே கொஞ்சம் கூட யதார்த்தம் வந்து விடக் கூடாதென மிகவும் கவனமுடன் படத்தை எடுத்துள்ளனர். நாயகன் யாரென்பது சஸ்பென்ஸ். முக்கால் வாசி படத்திற்குப் பின் தான் ஓப்பன் செய்கிறார்கள். அந்த சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும்தான். நாயகன் யாரென விசாரிக்காமல் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு உதவி செய்கிறார் சூரி; தமன்னாவோ காதலிக்கவே செய்கிறார். 'எல்லா லவ்விலும் ஒரு பொய் இருக்கும்; உன் பொய்ல லவ்விருக்கு' என காரணமும் கண்டுபிடிக்கிறார். டெபுடி கமிஷ்னராக வருகிறார் ஜெகபதி பாபு. மிக சீரியசான முகத்தோடு படத்தில் காமெடி செய்கிறார். நாயகன் யார், என்ன செய்கிறான் என விசாரிக்கிறேன் என்று சொல்லி பெரிய ரவுடிகளை வைத்துக் கடத்தி அடிக்கிறார். 'பணம் தருகிறோம். ஓடிடு' என போலீஸ் மிரட்டுகிறது. அதற்கு மசியாத நாயகனை நல்லவனென அங்கீகரித்து, மாப்பிள்ளையாக ஏற்கிறார் ஜெகபதி பாபு. விஷால் யார், ...
கதகளி விமர்சனம்

கதகளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடலூர் மீனவர்களின் தலைவன் தம்பாவைக் கொன்ற பழி, அமுதவேல் மீது வந்து சேருகிறது. அந்தப் பழியால் அமுதவேலின் குடும்பத்திற்கு என்ன நேர்கிறதென்றும், அதிலிருந்து மீள அமுதவேல் எப்படி கதகளி ஆடுகிறான் என்பதும் தான் படத்தின் கதை. 'கதகளி ஆடுதல்' - சக்தியையோ வலிமையையோ நிரூபித்தல் என்று தலைப்பினை பொருள் கொள்ளலாம். வழக்கமான நாயகன், நாயகி, வில்லன் தான் எனினும் பாண்டிராஜின் திரைக்கதையில் படம் சுவாரசியம் பெறுகிறது. குறிப்பாக, இன்ஸ்பெக்டர் சரவண வடிவேலாக நடித்திருக்கும் ஸ்ரீஜித் ரவியின் ஆர்ப்பாட்டமற்ற குயக்தி அதிரச் செய்கிறது. அதிகாரம் தவறான நபரின் கையில் கிடைத்தால் என்னாகுமென அழுத்தமாகப் பதிந்துள்ளார் பாண்டிராஜ். பசங்க – 2 ஏற்படுத்திய தாக்கம் மறையும் முன், முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையில் கையெடுத்து அற்புதமான த்ரில்லரைக் கொடுத்துள்ளார். ஹிப்-ஹாப் தமிழாவின் பின்னணி இசை அதற்கு உதவுகிறது. அமுதவேலாக விஷால். சண்...