Tag: ஐஸ்வர்யா ராஜேஷ்

“டிரைவர் ஜமுனா: வாலாஜாபாத் டூ ஈசிஆர்” – இயக்குநர் கின்ஸ்லின்
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்தத் திரைப்படத்தை வத்திக்குச்சி படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எ...

“டிரைவர் ஜமுனா: டூப் போடாமல் கார் சாகசக்காட்சி” – ஐஸ்வர்யா ராஜேஷ்
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்தத் திரைப்படத்தை வத்திக்குச்சி படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ''நீ...

சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்
தமிழில் வெளிவரும் அமேசான் ப்ரைமின் முதல் வெப் சீரிஸ் இது. புஷ்கர் - காயத்ரி இணை எழுதிய இத்தொடரை, பிரம்மாவும் அனுசரணும் இயக்கியுள்ளனர். குற்றம் கடிதல், மகளிர் மட்டும் இயக்கிய பிரம்மா, முதல் நான்கு அத்தியாயங்களையும், கடைசி நான்கு அத்தியாயங்களை இயக்குநர் அனு சரணும் இயக்கியுள்ளனர்.
மலைகள் சூழ்ந்த சாம்பலூர் எனும் சின்ன ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவி நிலா கடத்தப்படுகிறாள். அந்த வழக்கை விசாரிக்கும் சக்கரை எனும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் திருப்பமாக அமைகிறது. சக்கரையாக மிகத் திறம்பட நடித்துள்ளார் கதிர். இந்தத் தொடரின் நாயகன் இவரே! சின்னச் சின்ன முக பாவனைகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸாக நடித்துள்ள ஷ்ரேயா ரெட்டி தான் தொடரின் நாயகி. இன்ஸ்பெக்டராக அவர் காட்டும் கம்பீரமும், ஓர் அம்மாவாக அவர் இளகும் இடமும் என கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொ...

மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.
'மோகன்தாஸ்' படத்தைக் 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளா...

க/பெ. ரணசிங்கம் விமர்சனம்
கால சக்கரம் போல் அரசு இயந்திரமும் சுழன்று கொண்டே இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாதகால சக்கரம் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாது; மனிதர்களால் இயக்கப்படும் அரசு இயந்திரமோ ஆட்களுக்குத் தக்கவாறு தன் ஓட்டத்தை மாற்றிக் கொள்ளும். புகழ்மிகு நடிகை ஸ்ரீதேவியின் உடல் ராஜ மரியாதையோடு கொண்டு வர உதவ இயங்கும் அரசு இயந்திரம், ரணசிங்கத்தின் இறந்த உடலைக் கொண்டு வர இல்லாத நொறுநாட்டியமெல்லாம் பேசுகிறது.
அரசு இயந்திரம் சாமானியனுக்குக் காட்டும் முகமும், அதிகாரத்திற்கும் பணத்திற்கும் காட்டும் முகமும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைப் போன்றது. இப்படம், அதைத் தோலுரித்துக் காட்டுகிறது.
இது அரசுடனான அரியநாச்சியின் தனிப்பட்ட போராட்டம். ஆனால் படத்தின் தலைப்பில் இருந்தே ரணசிங்கத்தின் ஆதிக்கம்தான். எவரையும் நம்பி வாழ முடியாது எனத் துணிந்து போராடத் தொடங்கும் அரியநாச்சி, கணவனின் சட்டையை அணிந்தே போராடுகிறார். இ...

வானம் கொட்டட்டும் விமர்சனம்
தேனி மாவட்டத்தில் பாசமான அண்ணன் தம்பி பாலாஜி சக்திவேலும், சரத்குமாரும். ஒரு உள்ளூர் தேர்தல் பிரச்சனையில் பாலாஜி சக்திவேலை வெட்ட, அண்ணனுக்காக எதிராளிகளை வெட்டிவிட்டு 20 வருடங்கள் சிறைக்குச் செல்கிறார் சரத்குமார்.
ராதிகா தனி ஆளாக இருந்து விக்ரம் பிரபுவையும், ஐஸ்வர்யா ராஜேஷையும் வளர்க்கிறார்.
விக்ரம் பிரபு கோயம்பேடு மார்கெட்டில் வாழைக்காய் மண்டி வைக்கிறார். 20 வருடங்கள் கழித்துச் சிறையில் இருந்து வரும் சரத்குமாரை விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும் வெறுக்கிறார்கள். இதே நேரம் சரத்குமாரால் இறந்து போனவரின் மகன் நந்தா, சரத்குமாரைக் கொலை செய்யத் துரத்துகிறான்.
கடைசியில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் சரத்குமாரை ஏற்றுக் கொண்டார்களா, நந்தா சரத்குமாரைப் பழி வாங்கினாரா என்பதுதான் கதை.
தேனியின் அழகை கேமராவில் அழகாகக் காட்டியுள்ளனர். அந்த வாழைத் தோட்டம் மிக அழகு.
இப்படத்தில் சரத்குமாரும், ...

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்
ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான்.
சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி மாறுகின்றான் என்பதுதான் படத்தின் கதை.
நடிகர் பட்டாளம் நிரம்பிய திருவிழா கோலமாக உள்ளது படத்தின் முதற்பாதி. இன்னார் இன்னின்ன சொந்தங்கள் எனச் சொல்லி முடிப்பதற்கே முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் பாண்டிராஜ். கதையின் ஊடாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த முயலாமல், அதைப் பாட்டாகவே பா...

மெய் விமர்சனம்
மெய் - உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுவதை மையப்படுத்திய மெடிக்கல் க்ரைம் வகை படம்.
அமெரிக்க மருத்துவரான அபினவ், தாயின் இழப்பை மறக்க இந்தியா வருகிறார். சென்னையில் நடக்கும் உடலுறுப்புக் குற்றக் குழுவின் வலையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.
நாயகனான நிக்கி சுந்தரம், டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப்பேரன் ஆவார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிக்கி சுந்தரம், முறையாகத் தமிழும் நடிப்பும் பயின்று இப்படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கான டெய்லர்-மேட் படமாகத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.ஏ.பாஸ்கரன். கதைக்கு அவர் பொருந்தினாலும், அவரது நடிப்பு படத்திற்குக் கொஞ்சம் பின்னடைவே! ஓர் அந்நியத்தன்மையை அவரது தோற்றம் ஏற்படுத்துகிறது.
தன் மகளைக் காணாமல் தேடித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சார்லி இயல்பாக நடித்துள்ள...

கனா விமர்சனம்
மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் 'கனா'க்கள் திரை கண்டுள்ளது.
"விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க" என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை.
விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை.
கெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ஆண...

வடசென்னை விமர்சனம்
அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை.
இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், 'நிலம் எங்கள் உரிமை' என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் படத்தில் இழையோடும் அரசியலின் வீரியம் புரியும். அமீரின் பாத்திரம் தெறி!
வெற்றிமாறன், மேக்கிங்கிலும் கதைசொல்லும் பாணியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து அசத்தியுள்ளார். ஒரு நேர்க்கோட்டுக் கதையை, பல அத்தியாயங்களாகப் பிரித்து, மூன்று கதாபாத்திரங்களுக்குள் உள்ள தொடர்பாகத...

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்
தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர்.
கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, 'மணிரத்னம் இஸ் பேக்டா (backda)' என்ற பரவச குரல்களைக்...

லக்ஷ்மி விமர்சனம்
பிரபுதேவாவைக் கொண்டு ஒரு நடனப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்ற சிறு பொறி லக்ஷ்மியாக வளர்ந்துள்ளது.
லக்ஷ்மி எனும் சிறுமிக்கு நடனம் என்றால் உயிர். எங்கும் எப்பவும் நடனம். தனது அம்மாவிற்குத் தெரியாமல், மும்பையில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்து கொள்கிறாள். லக்ஷ்மியின் கனவு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் கதாநாயகியாக சிறுமி தித்யா. பேருந்து நிறுத்தத்தில், சாலையில், குளியலறையில், பள்ளியில், பேருந்தில், டீக்கடையில் (Cafe'teria) என ஆடிக் கொண்டே இருக்கிறார். தெய்வத்திருமகளில் சாரா, தியாவில் வெரோனிகா என அவர் ஆடிஷனில் தேர்வாகும் சிறுவர்கள் அனைவரும் உள்ளத்தைக் கவர்பவர்கள். தித்யாவும் தனது நடனத்தால் கவர்கிறார். அவரது முகம் வடக்கத்தைய சாடையாக இருப்பதாலும், அழுத்தமற்ற திரைக்கதையாலும், 'நம்ம பொண்ணு' என்ற உணர்வு எழவில்லை. லக்ஷ்மி போட்டியில் ஜெயித்து விடுவாள் என்பது உள்ளங்கை நெல்லிக்...

லக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா
ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் 'லக்ஷ்மி'. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்குச் சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
"லக்ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யா தான் என்னை அழைத்து, 'நீ இந்தப் படம் பண்ணனும்' என்று சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த குழந்தைகள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்" என்றார் நடிகை ஷோஃபியா.
இசையமைப்பாளர் சாம் C.S."இதுவரை நிறைய ஹாரர், த்ரில்லர், மாஸ் திரைப்படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறேன். முதன் முறையாக ஒரு ...

புது மெட்ரோ ரயிலு – கீர்த்தி சுரேஷ்
‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்தப் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். சாமி படத்தில் அவரின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஆனால் என்னுடைய ஸ்டைலில் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்கத் தயங்கினேன். ஆனால் இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதனால் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தைப் பார்த்து வியந்து அவரின் ரசிகையாகிவிட்டேன். இந்தப் படத்தில் நடைபெற்ற பல சுவராசியமான சம்பவங்களை படத்தின் வெற்றிவிழாவில் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இயக்குநர் ஹரியுடன் பணியாற்றும் போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இ...


