Shadow

Tag: ஜானகிராமன் நா

பூதத்தாழ்வார் – எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் நிறைந்தான்

பூதத்தாழ்வார் – எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் நிறைந்தான்

ஆன்‌மிகம், இது புதிது
என் மனதுக்குள் இருக்கும் நாராயணனே இந்த பிரபஞ்சமாகவும் வியாபித்து இருக்கிறார். முதலாழ்வார்கள் மூவராவர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் 7 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சமகாலத்தவர்கள். பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லபுரத்திலும், பேயாழ்வார் மயிலாப்பூரிலும் அவதரித்தவர்கள். இவர்களின் தாய் தந்தையர் பற்றிய குறிப்பு இல்லை. மூவருமே குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதல் மூன்று திருவந்தாதிகளை இவர்கள் படைத்தார்கள். ஆழமான தத்துவம், பக்தி நெறி மற்றும் இனிய தமிழால் இறைமையைப் போற்றியவர்கள். இவர்கள் மூவரையும் திருக்கோவிலுரில் இறைவன் இணைத்தார். அதன் பிறகு மூவரும் இணைந்தே பல திவ்விய தேசங்களுக்குச் சென்று பெருமானைப் பாடி மங்களாசாசனம் செய்தனர். திருக்கோவிலுரில், ஓரிரவு ஒரு வீட்டின் சிறு திண்ணையில் பொய்கையாழ்வார் ப...
பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

ஆன்‌மிகம், இது புதிது
ஒரு சாட்சியாக, பூமி, கடல், சூரியன் என அனைத்துமாக இருப்பது அவனே! முன்னொரு காலத்தில் ஒருநாள், திவ்விய பிரபந்த விளைநிலம் என்று சொல்லப்படும் திருக்கோவலூருக்குப் பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வாராகத் திகழும் பொய்கையாழ்வார் சென்றார். இரவு நேரமாகிவிட்டதால் ஓர் இல்லத்தின் முன்னிருந்த சிறிய திண்ணையில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும், “எனக்கு இடமுண்டோ?” என்று கேட்டார். ‘இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்’ என்று பொய்கையாழ்வார் எழுந்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க ‘இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், நீரும் வாரும்’ என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஆழ்வார்கள் கோஷ்டிய...
திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆன்‌மிகம், இது புதிது
நீ எனக்குள் தான் இருக்கிறாய் என்று அறிந்த பின், என் மனதுக்குள் என்றும் நீங்காமல் நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அருளுகின்றாய் முன்பொரு காலத்தில் திருமழிசையில், ஒரு முனிவர் தம்பதிக்குக் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் கைகளும் கால்களும் அசைவற்ற நிலையில் இருந்ததால் அக்குழந்தையை ஒரு பொது இடத்தில் அக்குழந்தையின் பெற்றோர் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அவ்வழியே வந்த கூடை செய்து விற்றுப் பிழைக்கும் தம்பதி, இந்தக் குழந்தையை ஆசையாக எடுத்தனர். அக்குழந்தையின் கை கால்கள் நன்கு அசைந்தது. இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால், இக்குழந்தையையே தமது குழந்தையாக எண்ணி வளர்த்து வந்தனர். அடுத்த சில வருடங்களில் கூடை பின்னும் தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. அவர்களின் குழந்தைக்குக் "கனிக்கண்ணன்" என்று பெயரிட்டு வளர்த்தனர். இவர்களின் வளர்ப்புக் குழந்தை பின்னாளில் ஞானமும் பக்தியும் நிரம்பிய த...
நம்மாழ்வார் – உளனெனில் உளன்

நம்மாழ்வார் – உளனெனில் உளன்

ஆன்‌மிகம்
இறைவன் இருக்கிறான் என்றால் இருக்கிறான். இல்லை என்றால் இல்லை. இருந்தும் இல்லாமலும் பரவியிருக்கும் பரம்பொருளே பெருமான் . பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் மிகவும் சிறப்பு மிக்கவர். அவர், நமக்கான ஆழ்வார் என்பதால் “நம்மாழ்வார் (நம்ம ஆழ்வார்)” என அன்போடு அழைக்கப்படுகிறார். திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள 4000 பாசுரங்களில் அதிக பாசுரங்கள் நம்மாழ்வாருடையது தான். மொத்தம் 1295 பாசுரங்கள் அருளியுள்ளார். திவ்வியப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பிறர் பாடக் கேட்டுப் பிறகு தான் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுக்க ஆரம்பித்தார். நம்மாழ்வார் இல்லையென்றால் திவ்வியப் பிரபந்தமே இல்லை. பன்னிரண்டு ஆழ்வார்களில் பத்து பேர் திருமாலைப் பற்றி மட்டும் தான் பாடியிருக்கின்றனர். ஆண்டாள், திருமாலையும் பாடி, பிற ஆழ்வார்களின் பெருமையையும் பாடி சிறப்பு சேர்த்தார். ஆனால் மதுரகவியாழ்வார், திரு...
Light shop (2024) – Korean, JioHotstar

Light shop (2024) – Korean, JioHotstar

OTT, Web Series, இது புதிது
தமிழ்நாட்டை விட சின்ன நிலப்பரப்பும், குறைவான மக்கள்தொகையும் கொண்ட தென்கொரியா, அதன் படைப்பாக்கத்தில் உலகை ஆள்கிறது. கொரியத் திரைப்படங்கள், இணைய தொடர்கள் ஹாலிவுட்டுக்கு இணையான புகழ்பெற்றவை. பல கொரியத் திரைப்படங்கள் தரத்தில், புதுமையான கதைக்களத்தில் ஹாலிவுட்டையே மிஞ்சி நிற்பவை. அப்படி ஒரு இணைய தொடர் தான் லைட் ஷாப். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடர் மிகவும் சிக்கலான கதைக்களத்தைக் கொண்டது. நான்-லீனியர் திரைக்கதை மேலும் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. ஆனாலும் கொஞ்சம் பொறுமையோடு பார்த்தால் நிச்சயம் மிகச் சிறப்பான, நிறைவான அனுபவத்தை வழங்கும். இந்தத் தொடரின் தாக்கம், பார்த்து முடித்த பல நாட்களுக்கு நீடிக்கும். அவ்வளவு கனம் மிகுந்த தொடர். கொரியர்கள் எந்த வகை ஜானர் படமென்றாலும் அதில் எமோஷனை, சென்ட்டிமென்ட்டைக் கலந்து விடுவார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் நம்மை அழக் கூட வைத்துவிடுவார்கள். அது அவர்...
பாதாள உலகம் – லட்சியவாதம் எனும் போதை | Paatal Lok 2

பாதாள உலகம் – லட்சியவாதம் எனும் போதை | Paatal Lok 2

OTT, Web Series, இது புதிது
பணம், புகழ், அதிகாரம் இவற்றுக்கு ஆசைப்படாத, தான் நம்பும் நேர்மையும் கொள்கையுமே முக்கியம் என்று செயல்பட்டு, பிரச்சனைகளில் மாட்டி இழப்புகளைச் சந்தித்தாலும், அதை ஏற்றுக்கொண்டு தனது வழியிலேயே வாழ்வதற்கு போதை தருவது எதுவாக இருக்கும்? குடும்பத்திலும் நிம்மதி இருக்காது, நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மதித்தாலும், பிழைக்கத் தெரியாதவன் என்று கிண்டல் அடிப்பார்கள். ஆனாலும் உண்மை ஒன்றுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் இலட்சியவாத மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை கதைநாயகராக வைத்து வெளிவந்த ஹிந்தி சீரிஸ் "பாதாள் லோக் (பாதாள உலகம்)" ஆகும். பொதுவாக ஹிந்தி சீரிஸ்களில் முதல் பாகம் வெற்றி பெற்றதும் அடுத்த பாகத்தைத் திணித்து எடுப்பார்கள். சேக்ரட் கேம்ஸ், மிர்ஸாபூர், பஞ்சாயத் போன்றவை அப்படித் தான் அமைந்தன. அதனால் பாதாள் லோக் சீரிசின் இரண்டாம் சீஸன் வெளிவந்திருக்கிறது என்று அறிந்தும் அதைப் பார்ப...
Bramayugam விமர்சனம்

Bramayugam விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கேரளத்தில் நாட்டார் கதைகள், தமிழின் தொன்மையைப் போலவே மிகப் பிரபலமானதாகும். 18 ஆம் நூற்றாண்டில், கேரளத்தில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) என்பவர். மக்களிடையே பேசப்பட்ட நாட்டார் கதைகள் அனைத்தையும் ஐதீயமாலா (Aithihyamala) என்ற தொகுப்பாகக் கொண்டுவந்தார். எட்டு பாகங்களில் சுமார் 126 கதைகள், இந்தத் தொகுப்பில் இருக்கிறது. இன்றைக்கும் இந்தத் தொகுப்பு கேரளாவில் மிகப் பிரபலமானவை. இந்தக் கதைகள் அனைத்தும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் சம்பவங்கள், மந்திரவாதிகள் மற்றும் பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்து செல்வங்களைக் காக்கும் அழகு மிக்க பெண்கள், யோகக்கலை, மன்னர்கள் மற்றும் களரிப்பயிற்று வல்லுநர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யானைப்பாகன்கள் மற்றும் தந்திர நிபுணர்கள் என பலத்தரப்பட்ட மனிதர்கள் பற்றி அமைந்துள்ளன. இந்தக் கதைகளில் ஒன்றாக குஞ்சாமோன் போற்றி எனும் மந்திரவாதி பற்றிய கதையும் ...
The Platform விமர்சனம்

The Platform விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடந்த பத்து ஆண்டுகளில் நான் பார்த்த படங்களிலேயே, என்னை மிகவும் பாதித்த, யோசிக்க வைத்த மிக முக்கியமான திரைப்படம் இது. இந்த ஸ்பானிய மொழி திரைப்படம், நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது. ஸ்பான்டேனியஸ் சாலிடாரிட்டி, அதாவது, பிரச்சனையின் போது மக்கள் இயல்பாகவே ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து போராடுகிறார்களா அல்லது விட்டுக் கொடுக்கிறார்களா இல்லையா என்பதை அறிவதற்காக நடத்தப்படும் மிக அபாயகரமான சோதனை தான் இப்படத்தின் களம். இது தவிர, இந்தப் படம், மக்களாட்சித் தன்மையில் அதிகாரத்தில் இருப்பவருக்கும், அவருக்குக் கீழே அவனை நம்பி பிழைப்பு நடத்தும் எளிய மனிதனுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் யோசிக்க வைக்கிறது. முந்நூறு அறைகளைக் கொண்ட செங்குத்து அபார்ட்மென்ட்டில், ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் இருப்பார்கள். அந்த அறைக்கு நடுவில், மேலே முதல் அறையில் இருந்து கீழிருக்கும் 300க்கும் மேற்பட்ட அறைகளுக்குச் செல்லும் ம...
லீலா (2016) விமர்சனம்

லீலா (2016) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக எடுப்பது சாதாரண விஷயமன்று. பெரும்பாலும் இலக்கியம், படைப்பாளியின் கட்டுக்கடங்காச் சுதந்திரத்தையும், எல்லையற்ற கற்பனையையும் சார்ந்து இருக்கக்கூடியது. மேலும் அங்கு ஆல்-இன்-ஆல் படைப்பாளி மட்டுமே க்ரியேட்டராக இருக்கிறார். ஆனால் திரைப்படம் சமூகம், சென்சார், காட்சிப்படுத்தும் வலி, பட்ஜெட் என பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நூற்றுக்கணக்கான மனிதர்களின் கூட்டுச் செயற்பாட்டுடன் இயங்கும் பெருஞ்செயல். இதனாலேயே இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்குவது பெரும்பாலும் தோல்வியில் முடிந்திருக்கிறது. கேரள எழுத்தாளர் உண்ணி. ஆர் அவர்கள் எழுதிய சிறுகதை தான் லீலா. ஒருவகையில் இந்தக் கதையை மனித மனதின் அறம், சமூக ஒழுக்கம் குறித்த சர்ரியலிச விமர்சனம் என்றும் கொள்ளலாம். காட்சிப்படுத்துவதற்கு மிகவும் சிக்கலான கதையைத் திரைப்படமாக எடுக்கத் துணிந்ததற்கே கேரளத் திரைத்துறையின் முக்கிய இயக்குனர...
The Insult (2017) விமர்சனம்

The Insult (2017) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
“மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்பது எழுத்தாளர் ஜி.நாகராஜனுடைய புகழ்பெற்ற வாசகம். யாராவது சாலையில் விழுந்து கடுமையான காயம்பட்டால், “நல்ல அடி" என்போம் இல்லையா? அது போல 'மகத்தான சல்லிப்பயல்' என்கிறார். நம் எல்லோருடைய மனதிலும் ஈகோ எனும் பெட்ரோலில் தோய்ந்த பஞ்சுப்பொதி ஈரத்துடனே இருக்கிறது. அந்த பெட்ரோல் பஞ்சுப்பொதி பற்றிக்கொண்டு எரிய அவமானம் அல்லது புறக்கணிப்பு எனும் சிறு-தீப்பொறி கூடத் தேவையில்லை, அந்த தீப்பொறியின் வெம்மையே கூடப் போதுமானதாக இருக்கிறது. அப்படிப் பற்றும் தீ, தன்னையும் எரித்து, சுற்றியிருப்பவரையும் கருகச் செய்கிறது. அப்படிப்பட்ட ஈகோவால் தானும் கஷ்டப்பட்டு, சுற்றி இருப்பவர்களையும் சங்கடமாக்கும் இரண்டு நபர்களைப் பற்றிய லெபானியப் படமே The Insult (2017). இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட அய்யப்பனும் கோஷியும் ஞாபகம் வருவதைத் தவிர்க்...
Babel (2006) விமர்சனம்

Babel (2006) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
புகழ் பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர்,அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு (Alejandro Iñárritu) தயாரித்து, இயக்கிய திரைப்படம். இதே இயக்குநர், “மரணம்” என்ற தீமை மையமாக கொண்டு இயக்கிய 'அமரோஸ் ஃபெரோஸ்', '21 கிராம்ஸ்' ஆகிய படங்களின் தொடர்ச்சி ட்ரையாலஜியாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. பேபல் படம் ஹைப்பர்-லிங்க் திரைக்கதையைக் கொண்டது. அதாவது, சம்மந்தமே இல்லாத நாலைந்து கிளைக் கதைகளை க்ளைமாக்ஸில் ஏதோ ஒரு வகையில் லிங்க் செய்து ஒற்றைக்கதையாக மாற்றும் திரைக்கதை வடிவத்தை ஹைப்பர்-லிங்க் என்பார்கள். போன வருடம் தமிழில் வந்த சூப்பர் டீலக்ஸ் போல! திரைப்படம், பைபிளில் கூறப்படும் ஒரு நாட்டார் கதையுடன் துவங்குகிறது. முன்பெல்லாம் மனிதர்கள் உலகம் முழுக்க ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்தனர். நோவாவின் வழித் தோன்றலான பாபிலோன் என்பவர் கடவுள் வாழும் சொர்க்கத்துக்கு மனிதர்கள் எல்லாரும் போவதற்காகப் பூமியிலிருந்து வானத்...
Untraceable (2008) விமர்சனம்

Untraceable (2008) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடந்த ஒரு வாரம் பத்து நாட்களாக, ஃபேஸ்புக்கில் பெரியாரியம், பெண்ணியம், பாலியல் சுதந்திரம் குறித்து இரண்டு முற்போக்கு குழுக்கள் விவாதம் செய்து வருகின்றன. பரஸ்பரம் குற்றம் சாட்டியும் வருகின்றன. சில அந்தரங்கப் பேச்சுகள், வீடியோக்கள் என விவாதம் தனிப்பட்ட தாக்குதலைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த இரண்டு குழு பற்றியும் எனக்குப் பெரிய அக்கறை இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் தந்தை பெரியாரைத் தனது துணைக்குக் கூப்பிட்டுக் கொள்கிறார்கள். அது தான் வருத்தம். பாவம் பெரியார். இந்த இரண்டு குழுவைச் சார்ந்தவர்கள் இதற்கு முன்பும் பெண்ணியம், சுதந்திரம், பகுத்தறிவு என பல தலைப்புகளில் மிகச் சிறப்பான பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் கவனிக்கப்படாத அந்தப் பதிவுகளை விட, பெண்ணுடல், ஆபாசப் பேச்சு என பதிவுகள் வந்ததும் அங்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும் பின்னூட்டங்களும் குவிந்து வருகிறது. அங்கு லைக், ...
தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'திருட்டுப்பொருளும் சாட்சியும்' என்பதே தலைப்பின் பொருள். ஆங்கிலத்தில், Angle in Details என்று சொல்லுவார்கள். மிக எளிமையான விஷயத்தைக் காட்சிப்படுத்துவது, அதனைப் புரிந்துகொள்வதில் விரிவாக ஆழம் செல்லச் செல்ல தெய்வீகம் வெளிப்படுகிறது. எளிமையே பிரம்மாண்டம். அதனைக் காணவும் மற்றவருக்கு அதே அனுபவத்தைக் கடத்தவும் சற்றே பெரிய கண்கள் தேவைப்படுகிறது. அது தனிக் கலை. இந்தக் கலை பெரும்பாலான கேரள திரைப்படக் கலைஞர்களுக்குப் பிறப்பிலேயே வாய்த்திருக்கிறது எனலாம். மிக மிக எளிமையான கதையை கூட மனதில் நீங்காமல் இருப்பது போல காட்சிப்படுத்துவதில் கில்லாடிகள். ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் திலீஷ் போத்தன் எடுத்த, 'மகேஷின்டே பிரதிகாரம்' என்ற படம் மிக நன்றாக ஓடியது (தமிழில் கூட அப்படம், உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் நிமிர் ஆக மறு உருவாக்கம் செய்யப்பட்டது). அதே இயக்குநர் ஃபஹத்துடன் இணைந்து, 'தொண்டிமுதலும் த்ரிக்சா...
The Sum of All Fears விமர்சனம்

The Sum of All Fears விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜேக் ரையன் என்பவர் ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல ஒரு சாகசகார ஸ்பெஷல் ஏஜென்ட் கதாபாத்திரம். டாம் க்ளென்ஸி எனும் எழுத்தாளர் படைத்த கற்பனை கதாபாத்திரம் இது. கதைப்படி, ஜேக் ரையன், அமெரிக்காவின் உளவுத்துறையில் டேட்டா அனலிஸ்ட்டாக வேலை செய்பவன். உலகெங்கும் நடக்கும் அசாதாரணச் செயற்பாடுகளைக் கண்காணித்து அது குறித்து அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அளிக்கும் வேலை. ஆனால், இவனுக்கு டெரரான ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அமெரிக்காவின் மெரைன் (கடல் சார்ந்த) ராணுவத்தில் பணியாற்றி, விபத்தால் முதுகுதண்டு உடைந்து குணமான பிறகு மிலிட்டரி அனலிஸ்ட்டாக மாறியவன். இந்தக் கதாபாத்திரத்தை வைத்து டாம் க்னென்ஸி பல கதைகள் எழுதியிருக்கிறார். அனைத்தும் பெரிய ஹிட். இந்தக் கதைகள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. அந்த சீரிஸில், 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் "த சம் ஆஃப் ஆல் ஃபியர்ஸ்". வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல், பொல...
எவரு விமர்சனம்

எவரு விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இன்ட்டரொகேஷன் அடிப்படையில் அமைந்த நல்ல க்ரைம் த்ரில்லர். நாலு வருஷத்துக்கு முன்னாடி வெளிவந்த The Invisible Guest எனும் ஸ்பானியப் படத்தின் தெலுங்குப் பதிப்பு. எல்லாப் பதில்களும் கேள்விக்கு உட்படுத்தப்படும் (All answers shall be questioned) என்பது தான் இந்தப் படத்தின் டேக் லைன். போன வருடத்தில் தெலுங்கில் வெளிவந்த மிகச் சிறந்த படம் என்ற விருதைப் பெற்ற திரைப்படம்.  சமீரா மிகப்பெரிய தொழிலதிபர். அவர்  கோத்தகிரியில் ஒரு ரிசார்ட்டில் டிஎஸ்பி அஷோக் தன்னைக் கற்பழித்ததால் அவனைச் சுட்டுக் கொல்கிறாள். எல்லா எவிடென்ஸும் அஷோக் தவறானவன் என்றே கூறுகிறது. இதனால் போலீஸின் இமேஜ் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் அஷோக் குற்றவாளி அல்ல என நிரூபிப்பது போலீஸ் டிபார்ட்மென்டுக்கு அவசியமாகிறது. அதற்காக மிகத் திறமையான வக்கீல் ஒருவரை வழக்காட நியமிக்கிறது போலீஸ். அவர் சாட்சியங்களைத் தனக்குத் தக...