Shadow

Tag: யுவராஜ்

தீயவர் குலை நடுங்க தர்மமே ஜெயிக்கும்

தீயவர் குலை நடுங்க தர்மமே ஜெயிக்கும்

சினிமா, திரைச் செய்தி
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க' ஆகும். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், எழுத்தாளர் அஜயன் பாலா, “தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ்த் தலைப்பு வைத்துள்ள இந்தக் குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரைத் திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்” என்றார். விசிக கட்சி துணை பொதுச் செயலாளர் திரு. வன்னியரசு, “கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போ...
பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்திய அணிக்குத் தேர்வான மணத்தி P. கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையைக் கருவாக எடுத்துக் கொண்டு தன்னோட வலிகளையும் ஏக்கங்களையும் இணைத்து பைசனை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். அவரது முந்தைய படங்கள் பேசிய அரசியலையும் கைவிடாமல், படத்தின் பின்னணியாக வெங்கடேச பண்ணையார் - பசுபதி பாண்டியன் பகையின் பின்னணியில், கபடியில் சாதிக்க நினைக்கும் கபடி வீரனின் சமூகச் சூழலையும் மனநிலையையும் பதிந்துள்ளார். கபடி என்றால் வனத்தி கிட்டான்க்கு உயிர். அவனது திறமையைக் கண்டு ஊக்குவித்துத் தொடர்ந்து விளையாட வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கந்தசாமி. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் சார்பில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட இடம் பிடிக்கிறார். கிட்டானின் இந்த சாதனைப் பயணம் எத்தகையது என்பதைப் பற்றிய படம்தான் பைசன் காளமாடன். கிட்டானின் குலதெய்வம் காளமாடன் ஆவார். சீறிப் பாயும் கிட்டானின் திறம்பட்ட விளையாட்டைச் ச...
பல்டி விமர்சனம்

பல்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மெட்ராஸ்காரன் படத்துக்குப் பிறகு ஷேன் நிகாம் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம் பல்டி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். சாந்தனு, செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் தான் சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். தமிழக, கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாவர். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கிறார்கள். அதே பகுதியில் விதவிதமான வட்டித் தொழில் செய்து வரும் மூன்று கேங்குகள் இடையே கடும் தொழில் போட்டி நிலவுகிறது. செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் பூர்ணிமா இந்த மூன்று கேங்குமே ஒருவரை ஒருவர் அழிக்கக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்த...
Baby Girl – நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்

Baby Girl – நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்

Movie Posters, அயல் சினிமா, கேலரி
மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும், அதிரடி த்ரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 5 அன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் த்ரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மையக் கதாப்பாத்திரமாக நிவின் பாலி உள்ளார். இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி & சஞ்சய் (Traffic) எழுதியுள்ளனர். மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் நிவின் பாலிக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ், சங்கீத பிரதாப் ஆகியோர் முக்க...
கூலி – செப்டம்பர் 11 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில்

கூலி – செப்டம்பர் 11 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில்

OTT, சினிமா, திரைத் துளி
லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய கூலி படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, செளபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரச்சிதா ராம், கண்ணா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் கூலி படத்தைத் தமிழ் மொழியில், மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளிலும், ப்ரைம் வீடியோவில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.விசாகப்பட்டினம் துறைமுகத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், முன்னாள் கூலியாக இருந்த தேவா (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்), தனது நண்பனின் சந்தேகத்திற்கிடமான மரணத்தை ஆராயும் போது கொடிய கடத்தல் கும்பலை எதிர்கொள்கிறார். அந்த விசாரணை அவரை ஒரு ரகசிய மின்சார நாற்காலி, புதைந்த உண்மைகள், உள்ளார்ந்த துரோகங்களை வெளிப்படுத்த...
அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து

அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
அன்போடு “ஸ்வீட்டி” என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, 'காட்டி' எனும் அதிரடியான ஆக்ஷன்-க்ரைம் டிராமாவில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில், காட்டி ட்ரைலர் குறித்துப் பட வெளியீட்டிற்கு முன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து, நீண்டநாள் இணை நட்சத்திரமும் நண்பருமான அனுஷ்கா ஷெட்டிக்கு இதயம் கனிந்த குறிப்பை எழுதியுள்ளார். அவர், “காட்டி ரிலீஸ் ட்ரைலர் ரொம்பத் தீவிரமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் ஸ்வீட்டி. முழுக் குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!” என்று கூறியுள்ளார். கிரிஷ் ஜகர்லாமுடி இயக்கியுள்ள காட்டி, நிஜத்தன்மை நிறைந்த பின்னணியில் நடைபெறும் சுவாரசியமான சினிமா அனுபவமாக அமைந்துள்ளது. அனுஷ்கா ஷெட்டியுடன், விக்ரம் பிரபு, சைதன்ய ராவ் மடாடி, ஜகபதி பாபு ஆகியோர...
லோகா: 10 நாட்களில் 100 கோடி வசூல்

லோகா: 10 நாட்களில் 100 கோடி வசூல்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த லோகா: சாப்டர் 1 - சந்திரா உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர். சென்னையிலும் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியைப் பக...
நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான 'நிஷாஞ்சி' படத்தின் அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஆக்ஷன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த ட்ரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதைச் சித்தரிக்கிறது. ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா, ரஞ்சன் சந்தேல் மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ, மோனிகா பன்வார், முகமது ஜீஷான் அய்யூப் மற்றும் குமுத் மிஸ்...
“மிராய்: எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா

“மிராய்: எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்” ஆகும். பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தேஜா சஜ்ஜா, "ஆக்‌ஷன், அட்வென்ட்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் - மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. AGS...
சிரஞ்சீவி – ஏன் அவர் மெகா ஸ்டார்?

சிரஞ்சீவி – ஏன் அவர் மெகா ஸ்டார்?

அயல் சினிமா
மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல் பலரையும் உருகச் செய்துள்ளது. தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார். அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும் உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்தச் செய்தி சிரஞ்சீவியின் காதுகளில் விழுந்தபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. முழுமனதுடன் தன் ரசிகையின் அன்பை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டார். சிரஞ்சீவி, ராஜேஸ்வரியை இதயம் நெகிழ்ந்த அன்புடன் வரவேற்றார். அவர் காட...
ரவி மோகன் ஸ்டியோஸ் – திறமைகளுக்குக் கதவு திறக்கப்படும்

ரவி மோகன் ஸ்டியோஸ் – திறமைகளுக்குக் கதவு திறக்கப்படும்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான ரவி மோகன், "இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் இயக்குநராகி விட்டேன். நான் இயக்குநரானால் யோகி வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான ப்ரோமோவும் எடுத்துவிட்டேன். இன்று என்னுடைய இரண்டு படங்களின் பூஜையும் ஒரே நேரத்தில் நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி. கார்த்தியும் நானும் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தாய்லாந்தில் சாலையில் அவ்வப்போது பேசிக்கொண்டே ...
“உங்க படத்தில் நடிக்கணும்” – சிவகார்த்திகேயன் டூ ரவி மோகன்

“உங்க படத்தில் நடிக்கணும்” – சிவகார்த்திகேயன் டூ ரவி மோகன்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், "தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவைத் திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சாரை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர். பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர். நாம் அவருடைய படங்களைப் பார்த்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல், நேற்று எனக்கு ஃபோன் செய்து, 'நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ' என்று நினைவுப்படுத்தினார். இங்கு வந்து பார்த்த பிறகு அவ...
“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ

“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். இயக்குநர் ராஜா மோகன், "ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது. அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது, அவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டிக் கொண்டிருந்த அவனை அண்ணாந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணாந்து பார்க்கிறேன். புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும். அது போல, 'இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?' என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து இப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குநரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குநராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது....
சாண்டல்வுட்: சிவண்ணாவுடன் இணையும் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் – வடேயார் மூவிஸ்

சாண்டல்வுட்: சிவண்ணாவுடன் இணையும் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் – வடேயார் மூவிஸ்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின்  புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும்  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா, ஹிமாச்சலப் பிரதேசம், மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான வடேயார் மூவிஸ் மற்றும் வெங்கட் க...
Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா

Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத்தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப்படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் வேஃபேரர் ஃபிலிம்ஸ்க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படத்தின் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை உடைத்து மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் சக்தியாகவே வேஃபேரர் ஃபிலிம்ஸ் மாறியுள்ளது. இப்படத்தின் முக்கிய சிறப்பாகத் திகழ்வது இயக்குநர் டொமினிக் அருண். இயக்குநராகவும் எழுத்தாளராகவும் அவர் வெளிப்படுத்திய கற்பனை மற்றும் கலைத்திறன் அனைவர...