Shadow

Tag: யுவராஜ்

நவீன கால இளைஞர்களின் காதல் கதையில் அனஸ்வரா ராஜன் – அபிஷன் ஜீவிந்த்

நவீன கால இளைஞர்களின் காதல் கதையில் அனஸ்வரா ராஜன் – அபிஷன் ஜீவிந்த்

சினிமா, திரைச் செய்தி
சியோன் ஃபிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இப்படத்தில் நாயகனாகக...
Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல்

Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ரசிகர்களைப் பரவசப்படுத்தும் வகையிலும், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெளியான மகா அவதார் நரசிம்மா முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய 'மகாஅவதார் நரசிம்மா' இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் இப்படம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். மகாஅவதார் நரசிம்மா பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், புராணக் கதைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான கதை சொல்லல் பாணியின் மூலம், இந்திய சினிமாவை மறு வரையறை செய்வதில் புகழ்பெற்ற ஹோம்பாலே ஃபிலிம்ஸ் ...
அனிருத்தின் Hukum – முன்னுதாரணமாகும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

அனிருத்தின் Hukum – முன்னுதாரணமாகும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

சமூகம்
'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத், ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காகத் தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி (Marg Swarnabhoomi) எனும் இடத்தில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு, பார்க்கிங் என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்...
Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக்

Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக்

Songs, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமனேனி, டி. ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய்' படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 'ஹனுமான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா, 'சூப்பர் யோதா'வாக நடிக்கும் இந்தப் படத்தைக் கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தை முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' பாடலுக்கான ப்...
மகா அவதார் நரசிம்மா விமர்சனம் | Mahavatar Narasimha review

மகா அவதார் நரசிம்மா விமர்சனம் | Mahavatar Narasimha review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அழகான பிரகலாதன். அவரை மிக அழகாக வடிவமைத்து, பார்வையாளர்களைக் கொள்ளை கொள்ளுமளவு சிறப்பாக அனிமேட் செய்துள்ளனர். தமிழ் டப்பிங்கையும் மெனக்கெட்டு நேர்த்தியாகச் செய்துள்ளனர். பிரகலாதனது உறுதியான பக்தியும், கருணை பொழியும் வதனமும் காண்போரைக் வசீகரித்து விடுகிறது. விஷ்ணுவின் அவதாரம் பின்தங்கி, பக்த பிரகலாதன் வானளவு உயர்ந்து நிற்கிறார். 'அடியாரைப் போற்றுதல்' என்பதே வைணவத்தின் முக்கியமான அம்சம். அதைப் படம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளது. காஷ்யபரும் திதியும் கூடும் நேரத்தில் இருந்து படம் தொடங்குகிறது. ஹிந்துத் தொன்மத்தின் தொடக்கமே, ரிஷி காஷியபர் மற்றும் அவர் மணந்த தக்‌ஷனின் பதிமூன்று மகள்களிலிருந்தே விஸ்தாரனப்படுக்கிறது. திதியின் மகனான ஹிரண்யாக்‌ஷன், பூமாதேவியைக் கார்போதகக் கடலில் ஒளித்து வைத்துவிடுகிறார். விஷ்ணு, வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்‌ஷனைக் கொன்று பூமாதேவியை மீட்கிறார். தன் தம்பியைக் கொன்ற வ...
மாரீசன் விமர்சனம் | Maareesan review

மாரீசன் விமர்சனம் | Maareesan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாரீசன் என்பது ராமாயணத்தில் வரும் பொன்னிற மாயமானைக் குறிக்கிறது. எப்படி மாரீசன் ராமனை ஏமாற்றித் தன் மாயத்தில் விழ வைக்கிறாரோ, அப்படி வேலாயுதம் பிள்ளையை ஏமாற்றி அவரது பணத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார் சிறையிலிருந்து விடுதலையாகும் தயாளன். மாரீசனின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. படத்தின் நாயகன், வேலாயுதம் பிள்ளையாக நடித்துள்ள வடிவேலு தான். திரையில் அவரது பெயர்தான் முதலில் வருகிறது. வடிவேலுவின் குணசித்திர நடிப்பை, மாமன்னனில் மாரி செல்வராஜ் அழகாக வெளிக் கொண்டு வந்திருப்பார். நடிப்புப் பேரரக்கனான ஃபகத் ஃபாசிலையும், வடிவேலுவையும் முழுப் படத்திலும் காட்சிகளில் ஒன்றாகக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும் என்ற புள்ளியில்தான் மாரீசன் தொடங்கியதாக இயக்குநர் சுதிஷ் சங்கர் கூறியுள்ளார். அவர்கள் சந்திக்கும் புள்ளியில் தொடங்கும் சுவாரசியம், இடையில் கொஞ்சம் திகட்டுமளவு மெல்ல நிதா...
ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi

ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
குளோபல் ஸ்டார் ராம்சரண் நடித்து வரும் 'பெடி (Peddi)’ படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான 'பெடி (Peddi)’ திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்தத் திரைப்படம், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் நாடு முழுவதும் அனைத்து மொழிகளிலும் பெரும் உ...
காந்தாரா: சாப்டர் 1 – மேக்கிங் வீடியோ | Kantara

காந்தாரா: சாப்டர் 1 – மேக்கிங் வீடியோ | Kantara

Teaser, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
'ராஜ குமாரா' , 'கே.ஜி.எஃப்.', 'சலார்', 'காந்தாரா' போன்ற சாதனை படைத்த படங்களுக்குப் பின்னால் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று 'காந்தாரா: சேப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌ இது மூன்று வருட படக்குழுவின் உழைப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது. படத்தின் பின்னணியில் உள்ள காவியத்தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை இந்த வீடியோ வழங்குகிறது.படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்திருப்பதால், இ...
Chi Pae Thu – சுயாதீன இசைப்பாடல்

Chi Pae Thu – சுயாதீன இசைப்பாடல்

Songs, காணொளிகள்
சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசைக்கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரையிசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டண்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டண்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டண்ட் இசைக் கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்தப் புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடல...
காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எ.ம் கார்த்திக், 'சிங்கம்' ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமா...
Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்

Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்

சினிமா, திரைத் துளி
குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.காமெடி நடிகராக பிரபலமான 'ஃப்ராங்க்ஸ்டர்' ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கரும், ஃப்ராங்க்ஸ்டர் ராகுலும் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் ...
கவின் – பிரியங்கா மோகன் | Think Studios

கவின் – பிரியங்கா மோகன் | Think Studios

சினிமா, திரைத் துளி
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின், பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்தத் திரைப்படத்தை, திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்களும், படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் கவினும், பிரியங்கா மோகனும் முதன்ம...
மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

Trailer, காணொளிகள், சினிமா
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியுள்ள 'மாரீசன்' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, 'ஃபைவ் ஸ்டார்' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார். கிராமியப் பின்னணிய...
“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage

“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage

சினிமா, திரைச் செய்தி
அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், லவ் மேரேஜ் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இயக்குநர் சண்முக பிரியன், ''இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும் அன்பும், எனக்குக் குழந்தை பிறந்த போது கிடைத்த சந்தோஷத்தை விட அதிகம். முதல் படமாக குடும்பப் படத்தை இயக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அக்காவைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக வரும் ஒருவர் த...
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90'ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின்முடிவு. கலகலப்பான படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் 90'ஸ் கிட்களுக்கே உரித்தான சோதனை நாயகன் ராமைப் போட்டு வாட்டுகிறது. ராமின் வேதனை பொறுக்காமல் அம்பிகாவின் தங்கை ராதா, ராமின் மீது காத...