Shadow

Tag: Team Aim

Oh God Beautiful – டீசர்

Oh God Beautiful – டீசர்

Teaser, காணொளிகள்
பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படமான “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையான இந்தக் கதையில், ஃபேண்டஸி கலந்து ரசிகர்கள் சிரித்து மகிழும் வண்ணம் ஒரு அட்டகாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும். படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தும் விதமாக, நகைச்சுவை ததும்பிய அசத்தலான டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைச் சொல்க...
லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ படப்பிடிப்பு தொடங்கியது

லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ படப்பிடிப்பு தொடங்கியது

சினிமா, திரைச் செய்தி
லியோ சிவக்குமார், பிரிகடா நடிப்பில் நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய் (Delivery Boy)” ஆகும். அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குநரான நானி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்....
ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி | ஆர்.கே.செல்வமணி

ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி | ஆர்.கே.செல்வமணி

சினிமா, திரைத் துளி
பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் 'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர் மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கடந்த 8 ஆண்டுகளாகத் திறன்பட நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு கடந்த 8 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் மூலம் திரைத்துறையில் பணிபுரியும் விளிம்புநிலை ஊழியர்களுக்கு பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்று 09.02.2025...
2K லவ் ஸ்டோரி – இயக்குநர்கள் புகழாரம்

2K லவ் ஸ்டோரி – இயக்குநர்கள் புகழாரம்

சினிமா, திரைச் செய்தி
சிட்டி லைட் பிக்சர்ஸ், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’ ஆகும். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் செல்லா அய்யாவு, “இயக்குநர் சுசீந்திரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான களத்தில் கதை சொல்லுவார். இந்தப் படத்தில் 2K கிட்ஸ் பசங்களின் கதையைச் சொல்லி இருக்கிறார். இந்தக் கால இளைஞர்களின் வாழ்க்கையை, அவர்கள் ரிலேஷன்ஷிப்பை, அவர்கள் வாழ்க்கையை அணுகும் விதத்தை, அவர்கள் எப்படி சரியாக இருக்கிறார்கள் என்பதை, மிக அழகான கதையாகக் கோர்த்து, இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார். முந்தைய ஜெனரேஷன் இந்தத் தலைமுறையைப் பார்த்துத் தவறாக நினைப்பார்கள். ஆனால் அதெல்லாம் இ...
2K லவ் ஸ்டோரி | திட்டமிடலில் சாதித்துக் காட்டும் இயக்குநர் சுசீந்திரன்

2K லவ் ஸ்டோரி | திட்டமிடலில் சாதித்துக் காட்டும் இயக்குநர் சுசீந்திரன்

சினிமா, திரைச் செய்தி
சிட்டி லைட் பிக்சர்ஸ், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’ ஆகும். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், “சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இது எங்கள் முதற்படம். சுசீந்திரன் சார் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. சொன்னது போல 40 நாளில் இப்படத்தையே முடித்து விட்டார். ஜெகவீர் என் நண்பர் அவர் மூலம் தான் சுசி சார் அறிமுகம். 2கே ஜெனரேஷனை நெகட்டிவாகக் காட்டுகிறார்கள். ஆனால் சுசி சார் மிக அருமையாக இதைக் கையாண்டுள்ளார்” என்றார். இசையமைப்பாளர் இமான், “இந்தத் திரைப்படத்தை இன்று காலை பார்த்த அத்தனை முக்கியமான இயக்குநர்களுக்கும், அவர்களுடைய நேரத்தைச்...
வல்லான் விமர்சனம்

வல்லான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கட்டப்பாவ காணோம் படத்தின் இயக்குநர் மணி சேயோனின் இரண்டாவது படமிது. தொழிலதிபர் ஜோயல் கொடூரமான முறையில் கொல்லப்பட, அந்த வழக்கை ஏற்கும்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திவாகரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. திவாகர் ஏன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், காணாமல் போகும் அவரது காதலி ஆத்யாவிற்கும் இந்தக் கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என பல முடிச்சுகள் படத்தின் முடிவில் அவிழ்க்கப்படுகிறது. லப்பர் பந்து படத்தில், ஜாலி ஃப்ரெண்ட்ஸ் அணி கேப்டனாக நடித்திருந்த டிஎஸ்கே (TSK), இப்படத்தில் சுந்தர்.சி-க்குக் கீழ் பணிபுரியும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தொழிலதிபர் ஜோயலாகக் கமல் காமராஜ் நடித்துள்ளார். சுந்தர்.சியின் காதலி ஆத்யாவாக தன்யா ஹோப், ஜோயலின் மனைவியாக அபிராமி வெங்கடாசலம், அபிராமி வீட்டில் பணிபுரிபவராக சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால் இவர்களை விடப் படத்தின் ஓட்டத்திற்கு உ...
2K லவ் ஸ்டோரி – இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள்?

2K லவ் ஸ்டோரி – இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள்?

சினிமா, திரைச் செய்தி
சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன், “2கே கிட்ஸ் ஸ்டோரியில் நான் என்ன செய்கிறேன் எனக் கேட்காதீர்கள். எனக்கும் ஆச்சரியம் தான். சுசி சார் மிக அருமையாக இன்றைய தலைமுறை கதையைப் படமாக்கியுள்ளார். முதலிலேயே இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். சுசி சார் இந்தப் படத்தில் என்ன செய்கிறார் என ஆச்சரியமாக இருந்தது. சில மாதங்கள் கழித்து, இந்தப் படம் பார்க்க முடியுமா என்று கேட்டார். பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்றைய கால...
2K லவ் ஸ்டோரி – மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது

2K லவ் ஸ்டோரி – மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது

சினிமா, திரைச் செய்தி
சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, “சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப் பாடல்களும் நான் எழுதியுள்ளேன். ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த ட்ரெய்லர்” என்றார். நடிகை வினோதினி வைத்தியநாதன், “இ...
தருணம் விமர்சனம்

தருணம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேஜாவு இயக்குநரின் இரண்டாவது படமிது. பிரபல நடிகர்களைத் தேடிப் போகாமல், திறமையானவர்களுக்கு வாய்ப்பளித்து, சின்ன பட்ஜெட்க்குள் படம் செய்யவேண்டும் என்று தனக்குத் தானே வரித்துக் கொண்ட விதிக்கு உட்பட்டு இப்படத்தை இயக்கியுள்ளார். புகழ் (PUGAZH) & ஈடன் (EDEN) என்பவர்கள் Zhen ஸ்டுடியோஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர். எதிர்பாராத் தருணத்தில், திடீரென எழுந்த கோபாவேசத்தில் தலையில் ஒரு அடி அடிக்கப் போய், ரோஹித்தைக் கொலை செய்து விடுகிறாள் மீரா. மீராவிற்கு நிச்சயிக்கப்பட்ட CRPF அதிகாரியான அர்ஜுன், மீராவை எப்படிக் காப்பாற்றுகின்றான் என்பதே படத்தின் கதை. அர்ஜுனின் நண்பன் விஷ்வாவாக வரும் பால சரவணன் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆனால், வீட்டில் பிணம் இருக்கும்போது, பாலசரவணனை வைத்து நகைச்சுவை புரிந்தே ஆகவேண்டுமென தருணத்தைக் கவனத்தில் கொள்ளத் தவறவிடுகின்றனர் நாயகனும் நாயகியும். ஆனால், முதற்பாதியில் ஒரு...
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – Zee 5 இல் நேரலை

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – Zee 5 இல் நேரலை

இது புதிது, சமூகம்
இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்கிறது. இந்த ஆண்டு, ZEE 5, 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் மதிப்புமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது. ZEE 5 தளம், ஜல்லிகட்டு முழு நிகழ்வையும் பிரத்தியேகமாக நேரலை ஸ்ட்ரீம் செய்கிறது. உலகளாவிய பார்வையாளர்கள் தமிழரின் வீர விளையாட்டைக் காண முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ZEE 5 ஆனது ₹49 மாதாந்திர சந்தா பேக்கை வழங்குகிறது.ZEE 5 இன் தலைமை வணிக அதிகாரியும், ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு அதிகாரியுமான சிவக்குமார் சின்னசாமி, “ZEE 5 இல், நமது பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டை வடிவமைக்கும் மரபுகள் மற்று...
என் இனிய Agathiya Game App – ஜீவா | ராஷி கண்ணா | பா.விஜய்

என் இனிய Agathiya Game App – ஜீவா | ராஷி கண்ணா | பா.விஜய்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், "அகத்தியா" படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாகட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்தக் கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு, படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த கேம் ஆப் வடிவமைப்பி...
கேம் சேஞ்சர் விமர்சனம்

கேம் சேஞ்சர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஊழலுக்கு எதிரான நாயகன் எனும் ஷங்கரின் பழைய விளையாட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அடித்து ஆடியுள்ளார் ராம் சரண். கெட்டதைக் கண்டால் கோபத்தில் பொங்கி எழும் ராம் நந்தனின் சீற்றத்தை ஆரோக்கியமான முறையில் மடைமாற்றி சமூகத்துக்கு நல்லது செய்யச் சொல்கிறாள் அவனது காதலி தீபிகா. படித்து ஐ.பி.எஸ். ஆகி, தொடர் முயற்சியில் ஐ.ஏ.எஸ். ஆகி கலெக்டராகி விடுகிறார் ராம். இறப்பதற்கு முன், ராம் நந்தனை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் ஆந்திர முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தி. முதல்வர் கனவில் இருக்கும் சத்யமூர்த்தியின் வளர்ப்பு மகன் பொப்பிலி மோபிதேவி, ராமை 'பாலிட்ரிக்ஸ்' செய்து கட்சியை விட்டு நீக்கி விடுகிறார். ராம் நந்தன் தேர்தல் ஆணையராகி விடுகிறார். இப்படி, காட்சிகள் கதையின் வேகத்தை விட துரிதமாக மாறிக் கொண்டே இருக்கிறது. முதல்வன் படத்தில், ஒருநாள் முதவராக அர்ஜுன் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், ஐ...
மெட்ராஸ்காரன் விமர்சனம்

மெட்ராஸ்காரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திருமணத்திற்கு முன் தினம், ஒரு கர்ப்பினி பெண் மீது காரை மோதி விடுகிறான் நாயகன். ஊரே அவனுக்கெதிராகத் திரண்டு விடுகிறது. அவ்விபத்தினால், கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை இறந்து பிறக்க, ஐம்பதாயிரம் அபராதமும், இரண்டு வருடம் சிறைத் தண்டனையும் பெறுகிறான். அக்குழந்தையின் மரணத்திற்கு, தான் காரணமில்லை எனத் தெரிய வர, உண்மையைக் கண்டறியப் புறப்படுகிறான் நாயகன். நாயகன், உண்மையைக் கண்டுபிடித்து தன் குற்றவுணர்வில் இருந்து மீள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. இப்படத்திற்கு, 'மெட்ராஸ்காரன்' எனத் தலைப்பிட நிச்சயம் ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். கதையின் களம் புதுக்கோட்டை, கதாமாந்தர்களோ அம்மண்ணின் மைந்தர்கள். நாயகன், சென்னையில் வேலை பார்ப்பதாலும், அவன் சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கார் வைத்திருப்பதாலும், அவனை மெட்ராஸ்காரன் என அழைக்கின்றனர். சொந்த ஊர் மெச்சும்படி தன் கல்யாணத்தை நடத்தவேண்டுமென்ற லட்சியம் கொ...
மெட்ராஸ்காரன் – பொங்கல் கொண்டாட்டத்திற்கான படம்

மெட்ராஸ்காரன் – பொங்கல் கொண்டாட்டத்திற்கான படம்

சினிமா, திரைச் செய்தி
SR ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாகி இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதைப் பரபரப்பான திரைக்கதையாகப் படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ். இசையமைத்துள்ளார். இந்த பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக, வரும் 2025 ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்...
அகத்தியா – டீசர் | ஜீவா | அர்ஜுன் | ராஷி கண்ணா

அகத்தியா – டீசர் | ஜீவா | அர்ஜுன் | ராஷி கண்ணா

Teaser, காணொளிகள், சினிமா
‘அகத்தியா’ படத்தின் டீசர் இன்று வெளியானது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகளும், முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையும், ஓர் அற்புதமான ஃபேண்டஸி திகில் த்ரில்லர் படத்திற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது.  ‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற ஈர்ப்பான கதைக்கருவுடன், அதிநவீன CGI-உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில் த்ரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகம் படைக்கப்பட்டிருக்கும் “அகத்தியா” படத்தினைப் புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். நடிகர் ஜீவா, "ஒரு ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள் என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் அது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இப்படைப்பில் கண்டிப்பா...