
Durgotsav – சென்னையில் ஜொலிக்கும் வங்காளக் கிராமப்புறம் | SMCA
“ஷரதோத்சவ்” எனும் இலையுதிர்காலத் திருவிழாவைச் சென்னையில் 47 ஆவது ஆண்டாகக் கொண்டாடுகிறது SMCA. நந்தனத்திலுள்ள மந்திரா கார்டனஸில், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை இவ்விழா கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, முதல்முறையாகக் கிராமப்புற வங்காளம் போலவே வடிவமைக்கப்பட்ட குடில்களுக்கு மத்தியில் நவராத்திரியைச் சென்னையில் கொண்டாடுகின்றனர். சக்தியின் தேவி – துர்கா மாதாவை வணங்கித் தொடங்கப் பெறும் இந்த விழா, இசைக் கச்சேரிகள், புகழ்பெற்ற கலைஞர்களின் மேடை அரங்கேற்றங்கள், உணவுத் திருவிழா, பல்வேறு போட்டிகள், குலுக்கல் முறை பரிசுகள் என பிரம்மாண்டமாய் ஐந்து நாட்கள் நிகழ்கின்றன. பல்வேறு சிறப்புமிக்க வணிக அரங்குகளும் நிறுவப்பட்டுள்ளன.
SMCA - நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அன்னதானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவைச் சிறப்பாக வழங்கி வழங்குகி...